தினமணி நாளிதழில் இருந்து:
1. தேர்தலில் வெளிப்படுமா மகளிர் சக்தி – வீர.ஜீவா பிரபாகரன்
தமிழகத்தில் தேர்தலுக்குத் தேர்தல் மகளிர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சட்டப்பேரவையில் மகளிர் எண்ணிக்கை இதுவரை 14 சதவீதத்தைத் தாண்டவில்லை.
நமது நாட்டில் நாடாளுமன்றத்தில் மகளிர் பங்கேற்பு பத்து சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.
தமிழகத்தில் 1991-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. அதிலும் பிற்பட்ட, ஆதிதிராவிட வகுப்புப் பெண்களின் அரசியல் பங்கேற்பு மிக, மிகக் குறைவாக உள்ளது.
பெண் உறுப்பினர்களையே தேர்வு செய்யாத மாவட்டங்கள்: நீலகிரி, பெரம்பலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த 5 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு பெண் உறுப்பினரைக் கூட தேர்வு செய்யவில்லை.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் போதிய பெண் உறுப்பினர்களை வேட்பாளர்களாக அறிவிக்காததும் மிக முக்கியமான காரணம்.
இம்முறை நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமே தேர்தலில் மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு அளிப்போம் என அறிவித்துள்ளது. இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்விஷயத்தில் மௌனமாக உள்ளன.
2. இதுவரை….10% கூட பெண்களுக்கு வாய்ப்பில்லை
தேர்தகளில் மொத்த வேட்பாளர்களில் பெண்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்துள்ளனர். மொத்த உள்ள 234 இடங்களில் ஒரே ஒரு தேர்தலில்தான் 10 சதவீதம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 1996-ம் ஆண்டில் மொத்தம் போட்டியிட்ட 5 ஆயிரத்து 17 வேட்பாளர்களில் 156 பேர் மட்டுமே பெண்கள். பெண்களுக்கு 10 சதவீதம் வாய்ப்புக் கொடுத்திருந்தால் கூட 500 பெண் வேட்பாளர்கள் இருந்திருக்க வேண்டும்.










