சின்னக்குத்தூசி பக்கம் :: 2006ல் யாருக்கு வெற்றி? – விகடன்.காம்
2006 தேர்தல் நடைபெற பத்து மாதங்கள் இருக்கும்போது எழுதப்பட்ட கட்டுரை. இன்றைய நிலையில்:
திமுக கூட்டணி: 51.6 – விஜயகாந்த் பாசக்கிளிகள்
அதிமுக கூட்டணி: 35.6 + விடுதலை சிறுத்தைகள்
1. 2004 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் சேர்ந்து வாங்கிய வாக்குகளின் மொத்த சதவீதம் 34.91 % ஆகும்
2. இதில் அ.தி.மு.க. மட்டுமே வாங்கிய வாக்குகள் 29.8 %
3. தி.மு.க. கூட்டணியில்
தி.மு.க. 24.6 %,
காங்கிரஸ் 14.4 %
பா.ம.க. 6.7% ,
ம.தி.மு.க. 5.8 %
சி.பி.ஐ. 3 %
சி.பி.எம். 2.9%
பா.ம.க. தவிர்த்த தி.மு.க. கூட்டணியின் பலம் 50.7 சதவிகிதமாக இருக்கும்.
தனித்தே போட்டியிடுவோம் என்று ஓங்கியடித்து சொல்லிக் கொண்டிருக்கிற பி.ஜே.பி. கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டாலும்.
அ.தி.மு.க. 29.8%
பி.ஜே.பி. 5.1%
ஆக மொத்தம் 41.6 சதவீதம்.
விஜயகாந்த் தொடங்கும் புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு லாபமா? தி.மு.க.வுக்கு லாபமா? யூகங்களும், கணிப்புகளும் அவரவர் ஆசைப்படி வந்து கொண்டேதானிருக்கும். அதனை யாரால் தடுக்க இயலும்?
எனது யூகம்: மூன்றாவது அணி ஆட்சி. ஆறு மாதம் வைக்கோ; ஆறு மாதம் பா.ம.க. காங்கிரஸ் ஆதரவு. (தமிழக காங்கிரஸின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருமகன் அன்புமணி ராமதாஸ். மத்தியில் மாறன் மந்திரியாக தொடரும் வரை திமுக-வும் இந்த ஏற்பாடைக் கண்டு கொள்ளாது.) வெளியில் இருந்து திமுக ஆதரவு.
பா.ம.க. – 25
ம.தி.மு.க. – 25
காங்கிரஸ் – 35
வி.சி. + கம்யூ. + இதர கட்சிகள் – 30
மைனாரிட்டி ஆட்சி – 115அதிமுக – 85~90
திமுக – 30~35மூன்றாவது அணி மாதிரி… இது ஒரு கனவு.











நான் ஓரு புதிய வரவு. தேன்கூடு மூலமாக “தமிழகத் தேர்தல் 2006” ல் இடப்படும் பதிவுகளை படித்து வருகிறேன்.
எனக்கு இந்த சதவிகித அலசல்களில் உடன்பாடு இல்லை. தி.மு.க, அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க பெற்ற ஓட்டுகள் மட்டுமே அந்தந்த கட்சியினரின் ஓட்டுகள். மற்ற எல்லா கட்சியினரும் ஏதாவது பெரிய கட்சியின் முதுகில் சவாரி செய்து பெற்ற ஓட்டுகளே. எனவே கணிசமான ஒரு பகுதியை கழித்து விட வேண்டும்.
மற்றும் இந்த சதவீதங்கள் ஓட்டு வங்கி மதிப்பீடு மட்டுமே ஆகும். இவை தொகுதி வெற்றியை முழுவதுமாக ஊர்ஜிதம் செய்யாது. ஓரு உதிரிக் கட்சியின் சேர்க்கை ஓட்டு எண்ணிக்கையை ‘top-up’ செய்து வெற்றி பெறச் செய்து விடும்.
இந்த உண்மையை எழுதும் பண்டிதர்கள் அறியாமல் இல்லை. இருப்பினும் என் கருத்தை தெரிவிக்க விரும்பினேன்.
நன்றி BalaBlooms.
—தொகுதி வெற்றியை முழுவதுமாக ஊர்ஜிதம் செய்யாது—
வாக்குகள் அதிகமாக வாங்கும் கட்சி தோற்றுப் போகலாம். அமெரிக்காவில் ஆல் கோர் தோற்றுப் போனது போல். ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் ஆதார வாக்காளர்கள் மாறுவதில்லை. எங்கள் வீட்டில் பலரும் காங்கிரஸுக்கே பல்லாண்டுகளாக வாக்களித்து வருகிறார்கள். எங்கள் எதிர்வீட்டுக்காரர் தீவிர திமுக அனுதாபி. என்னுடன் பதினெட்டை அடைந்த அவரின் மகன்/மகளும் திமுக-வுக்கே வாக்களிக்க ஆரம்பித்தனர்.
காங். திமுக-வுடன் உறவா/அதிமுக-வுடன் கூட்டா என்பதைப் பொறுத்து வாக்கு வங்கி வித்தியாசப்படும். எதிர்க்கட்சியா/ஆளுங்கட்சியா என்பதைப் பொறுத்து அதிருப்தி வாக்கு கூடும்/குறையும்.
கருத்துக் கணிப்புகள் வர ஆரம்பிக்கட்டும். கொஞ்சம் ஐடியா கிடைக்கும். இன்றைய நிலையில் ‘திமுக கூட்டணி ஆட்சி’ என்பது consensus போலத் தோன்றுகிறது.