Dubai Deal’s Collapse


தலையங்கம் | வர்த்தகரீதியில் செய்தி அலசல் | துபாய் நிறுவனத்துக்கு துறைமுகப் பொறுப்பை ஒப்படைக்க மறுப்பு (நியு யார்க் டைம்ஸ்)

முக்கியமான அமெரிக்கத் துறைமுகங்களில் இருந்து சரக்கை நிர்வகிக்கும் பணியை துபாய் நிறுவனத்துக்குத் தர அமெரிக்க அரசியல் மறுத்துள்ளது.

நண்பர்களுக்குக் கொடுக்க புஷ்ஷுக்கு விருப்பம்.

அமெரிக்கப் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்ள ரிபப்ளிகன் கட்சிக்கு ஆர்வம்.

கன்சர்வேடிவ்களை விட உயரிய முறையில் அமெரிக்க எல்லைகளின் ரட்சகனாக வெளிப்படுத்திக் கொள்ள டெமோக்ரடிக் கட்சிக்கு வாய்ப்பு.

இதே கொள்கைகள் சொவ்வறை நிரலிகளுக்கும் மேம்படுத்தப்பட்டால்…

  • கனடாவில் இருந்து வரும் ‘ப்ளாக்பெர்ரி’கள் வருகிறது. அவை நமது ரகசியங்களை வேவு பார்க்கலாம். குப்பையில் போடுவோம் போராட்டம்.
  • ஐ.பி.எம் திங்க்பேட் லெனோவாவின் சீனாவில் தயாராகிறது. கம்யூனிஸ நாட்டில் இருந்து தருவிப்பதால், உள்ளே பொதிந்திருக்கும் நுட்பம் ஆபத்தானது. கணினியை இனிமேல் அமெரிக்கா பயன்படுத்தாது.
  • ஜெர்மானியரின் SAP கொண்டு உற்பத்தி நிர்வகிக்கப்படுகிறது. அமெரிக்க கார் நிறுவனங்களான ஃபோர்ட், ஜி.எம்., பின் தங்குவதற்கு ஜெர்மனியே காரணம் என்னும் அறிவிப்பு.
  • பாகிஸ்தானில் இருந்து ஆடைகள் வருகிறது. நேனோ டெக்னாலஜியில் உடைகள் மூலம் இஸ்லாம் பரவும் அபாயம்.
  • இந்தியாவில் இருக்கும் சேவை மையங்கள் நமது பிரச்சினைகளைத் தீர்க்காமல் வளர்க்கவே முயற்சிக்கிறது. அமெரிக்காவை குழப்பத்தில் தள்ளி, கசாகூளமாக்கி விடும்.

    ஹ்ம்ம்ம்… சொல்ல முடியாது. அமெரிக்காவில் தேர்தல் வந்தால் நடந்தாலும் நடக்கலாம்.

    சில வாரங்கள் முன்பு ‘கார்டியன்’ வெளியிட்ட துபாய் குறித்த பருந்துப் பார்வை: The Guardian | Boom town


    | |

  • 3 responses to “Dubai Deal’s Collapse

    1. Unknown's avatar வெளிகண்ட நாதர்

      //இந்தியாவில் இருக்கும் சேவை மையங்கள் நமது பிரச்சினைகளைத் தீர்க்காமல் வளர்க்கவே முயற்சிக்கிறது. அமெரிக்காவை குழப்பத்தில் தள்ளி, கசாகூளமாக்கி விடும்.//
      நீங்க சொல்றது முற்றிலும் சரி. இதே கூத்த தான் மாகண தேர்தல்கள் சமயத்தில செஞ்சாங்க. அது illinousனு நினைக்கிறேன், TCS புடிச்ச contract ஒன்னு இப்படித்தான் திருப்பி புடிங்கிக்கிட்டாங்க. ஆக நீங்க சொன்னது நடக்கிற்தல ஒரு ஆச்சிரியமும் இல்ல!

    2. //பாகிஸ்தானில் இருந்து ஆடைகள் வருகிறது. நேனோ டெக்னாலஜியில் உடைகள் மூலம் இஸ்லாம் பரவும் அபாயம்.
      //
      100% இப்படிச் சொல்வதற்கு சாத்தியமிருக்கிறது. அரசியல், மதம்,பீதி கலந்த கிறுக்குத்தனம் என்ற அபரிமிதமான போதை கலவையில் அமெரிக்கா தள்ளாடுகிறது.

    3. புஷ் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் மத்திய கிழக்காசிய வளைகுடா நாடுகள் நம்ப வேண்டும்; ஆனால், அமெரிக்காவோ – அவர்களை நம்பகமானவர்களாக மதிக்க மாட்டார்கள்… ஹ்ம்ம்ம்

      பதில்களுக்கு __/\__

    Srimangai(K.Sudhakar) -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.