திமுக கூட்டணி இடப்பங்கீடு முடிவு


பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்றுள்ளது. இன்று காலை முடிவான ஒப்பந்தத்தின்படி திமுக கூட்டணியின் (ஜனநாயக முற்போக்குக் கூட்டணி) இடங்கள் பின்வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகம் – 129
திமுக சின்னத்தில் முஸ்லிம் லீக் – 3
காங்கிரஸ் – 48
பாட்டாளி மக்கள் கட்சி – 31
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 13
இந்திய கம்யூனிஸ்ட் – 10
மொத்தம் = 234

காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் அதிகமாகவும், பாமகவுக்குக் குறைவாகவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுகவும் அதிகமாகவே தியாகம் செய்துள்ளது.

இந்தக் கூட்டணி நல்ல வலுவான கூட்டணி. நிச்சயம் வெற்றிவாய்ப்புகள் அதிகம் உள்ள கூட்டணி. இப்பொழுதைக்கு உள்ள ஒரே பிரச்னை இந்திய கம்யூனிஸ்டுகளின் அதிருப்தி. அதைச் சரிக்கட்டுவது பெரிய விஷயமல்ல.

இதற்கு மாறாக அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் + சில்லறைகள் கூட்டணி வெற்றிபெறுவது கஷ்டம்தான். ஆனால் போட்டி பல இடங்களிலும் கடுமையாக இருக்கும்.

7 responses to “திமுக கூட்டணி இடப்பங்கீடு முடிவு

  1. கூட்டணியிலிருந்து கழன்று கொண்டால் அன்புமணியின் மத்திய அமைச்சரவைப் பதவி பறி போகலாம் என்பதால், பா.ம.க கூட்டணியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாக சமீபத்திய துக்ளக் சொல்கிறது. இதனால், அதன் பேரம் பேசும் சக்தி குறைந்திருக்கலாம்.

    காங்கிரஸை விட குறைவான தொகுதிகள் என்பதில் ஆச்சரியம் இல்லை – இத்தனை குறைவான தொகுதிகள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    தி.மு.க 129 தொகுதிகள் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பது, நீங்கள் சொல்வது போல, பெரிய தியாகம்தான்.

    இந்தக் கூட்டணி ஜெயித்தால், மாநிலத்தில் கூட்டணி ஆட்சிதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று நினைக்கிறேன். நல்லதுதான்.

  2. இன்னைக்குப் பேசுற தியாக மனப்பான்மைய ஒரு வாரத்துக்கு முன்னாடி மூனே மூனு சீட்டு குடுத்துக் காட்டியிருந்தா இந்தக் கூட்டணி இன்னும் வலுவா இருந்திருக்கும். கருணாநிதியின் வார்த்தை ஜாலம் அறிந்ததே. அப்பொழுது எங்கே போயிற்று இந்த தியாக மனப்பாங்கு?

  3. Surprisingly, contrary to expectations, MK has given seats fairly, even we can say liberally. It seems he very well understood that only whole hearted ground work by all the parties will fetch him success. I feel, the extra seats by Congrss and PMK (?) will be the tough seats and they have to give their best. Can we say, MK got back the momentum he lost due to VaiKOs exit by this fair sharing?

  4. இதற்கு மாறாக அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் + சில்லறைகள் கூட்டணி வெற்றிபெறுவது கஷ்டம்தான். //

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்..

    பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  5. Unknown's avatar நாமக்கல் சிபி

    //தி.மு.க 129 தொகுதிகள் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பது, நீங்கள் சொல்வது போல, பெரிய தியாகம்தான். //

    இதில் தியாகம் எதுவுமில்லை நண்பரே!
    தி.மு.க் விற்கு கூட்டணி வியூகத்தைத் தவிர வேறு வழியில்லை. அதற்குக் கொடுக்கும் விலை. அவ்வளவே.

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

  6. >>>>திமுக – இந்தக் கூட்டணி நல்ல வலுவான ****கூட்டணி****
    >>>>அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் + ****சில்லறைகள்****

    உங்கள் சொல் பிரயோகம் பிரமிக்க வைக்கிறது! உங்கள் மனம் போல நடக்க பாபா அருள் புரியட்டும்!

    .:டைனோ:.

    obligatory music for your listening pleasure:


    வலுவான ****கூட்டணி**** ஜல்லிக்காக

  7. Hi

    Sorry for typing in English

    I am sure this is a colossal blunder by KArunanidhi -to allot so may seats to the cadresless Congress party in Tamil Nadu.This is absolutely disproportionate to their grassroot strength

    Its clear to me now that DMK is not going to achive majority on its own

    IN one to one fight with AIADMK ,DMK typically suffers

    AIADMK alliance is going to sweep this poll because of this blunder

    Probaly the Sun TV lobby in DMK represented by Marans WITH THEIR insatiable hunger for money might have prevailed over the stalin group .Maran’s position in centre is more important in protecting the business interest

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.