தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடாகிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் கேபிள் டிவி மசோதா, இன்னோரு பக்கம் மிடாஸ் மதுபான ஆலை ரெய்டு, இன்னோர் பக்கம் கார்த்திக், விஜயகாந்த் போன்றோரின் பயணங்கள், பேச்சுகள், ம.தி.மு.கவின் வீர சவால்கள், ஜாதிக்கட்சிகளின் முழக்கங்கள்.
இன்னும் 3.5 மாதங்களே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஜெ.அரசோ கஜானா காலியானாலும் பரவாயில்லை என சலுகைகளையும் அறிக்கைகளையும் அள்ளி வீசுகிறது. எல்லாமே ‘என் அரசு’ – ‘நான் செய்தேன்’ என ஒருவரின் பிரதாபமே பெருமளவில் பேசப்படுகிறது. டீம் வொர்க் எனப்படும் பேச்சுக்கே இடமில்லை போல.
வரும் பதிவுகளில் நாளொரு தினமும் வரும் சில தலைப்புச் செய்திகளும், சில யூகங்களும், சில உள்குத்து விவகாரங்களும் இணைய வழிச் செய்திகள் மூலம் அறியத் தரலாம்.
தமிழ்மணம் புது திரட்டியில் பழைய பரபரப்பு இல்லை என்பதாலோ என்னவோ பல பதிவுகள் படிக்கப்படுகிறதா – கவனிக்கப்படுகிறதா – எத்தனை பேர் இந்த தேர்தல் பதிவுகளைப் படிக்கிறார்கள் அல்லது ஆர்வமுடன் கவனிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. என்ன மாதிரி அலசல்கள் அல்லது செய்திகள் வரவேற்கப்படும் என்பது போகப் போகத் தெரியுமென நினைக்கிறேன்.
தமிழக அரசியல் என்றாலே தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ம.க, மதிமுக, தேமுதிக இவர்களின் வீரப் பேச்சுகள் என களை கட்டும் என்றே நினைக்கிறேன்.
நேற்று CNN-IBN, Centre for the Study of Developing Societies மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இதில் தமிழகம் சம்பந்தப்பட்ட எந்த செய்தியும் இல்லை. டாப் 3/6 அல்லது கடைசி 3ல் கூட தமிழக அரசோ, முதல்வரோ இல்லை என்பது ஆச்சரியம். (சில மாதங்கள் முன்பு இந்தியா டுடே நடத்திய கணிப்பில் தமிழக அரசு /முதல்வர் கடைசி சில இடங்களில் இருந்த ஞாபகம்). சில நாட்கள் முன்பு லயோலா கல்லூரி கணிப்புகள் அதிமுகவுக்கு ஆதரவாக நிலை இருப்பதாக தெரிவித்தது. சென்ற முறை லயோலா கணிப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவாய் தெரிவித்தது.
பார்க்கலாம்.
State of the Nation survey by CNN-IBN
சிறந்த முதலமைச்சராக கணிப்பில் தேர்ந்தவர்கள்
1. நிதீஷ் குமார் (ஹனிமூன் பீரியட் என வர்ணித்தனர்) (பீஹார்)
2. புத்ததேவ் பட்டாசார்யா (மேற்கு வங்காளம்)
3. ஷீலா தீக்ஷித் (புதுடெல்லி)
4, 5, 6 இடங்கள்
பிஜு பட்நாயக் (ஒரிஸ்ஸா), ராஜசேகர் ரெட்டி (ஆந்திரம்), நரேந்திர மோடி (குஜராத்)
மோசமான முதல்வர்கள் பட்டியலில் – முலாயம் சிங் யாதவ் (உத்திர பிரதேசம்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), சிவராஜ் சிங் சௌஹான் (மத்திய பிரதேசம்).
– அலெக்ஸ் பாண்டியன்
24-ஜனவரி 2006











—-இந்தியா டுடே நடத்திய கணிப்பில் தமிழக அரசு /முதல்வர் கடைசி சில இடங்களில் இருந்த ஞாபகம்—
She was in the last spot in the India Today survey for Chief Ministers in 2004. That issue came in the early summer of 2005.
In the following survey for States’ Performance, she was generously appreciated and TN came within top 3 in most of the categories and was the #3 (need to check) on the cumulative marksheet.
I remember reading India Today mentioning something like ‘She has changed compared to the previous years in various aspects like receptability’. But, not sure whether that was in her interview special or in the State Analysis issue.
அடுத்த முதன்மந்திரியாக ஸ்டாலினை ஒப்புக் கொண்டால், கூட்டாட்சிக்குத் தயார் என்று திமுக சொல்லிவிட்டதாமே! அப்படியா?