வாக்காளர் அடையாள அட்டை


தமிழகத்தில் இன்னமும் தீவிரமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

என் வீட்டில் வாக்காளர் பெயர் சரிபார்க்கும்போது அடையாள அட்டை வழங்குவது பற்றி தகவல் தெரிவிக்கப்படும் என்றுமட்டும் சொன்னார்கள்.

இப்பொழுது நடைமுறையில் இருப்பது – ஏதாவது புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை எடுத்துக்கொண்டுதான் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லமுடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க நான் சென்றபோது நானும் என் மனைவியும் வாகன ஓட்டுநர் அடையாள அட்டையைப் பயன்படுத்தினோம். பலரும் ரேஷன் கார்டுகளைக் கொண்டுவந்திருந்தனர். ஆனால் ஒரு கணவன் – மனைவி கூட்டணி கையில் எந்த அடையாள அட்டையையும் கொண்டுவரவில்லை.

வாக்குச்சாவடி அதிகாரிகள் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுத்தனர். ஆனால் கட்சி ஏஜெண்டுகள் அனைவருமே (கட்சி வித்தியாசமின்றி) அவர்கள் இருவரையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு கோரினர். குடும்பத் தலைவர் தான் இனி வீடுவரை சென்று அடையாள அட்டை எதையும் எடுத்துவர முடியாது என்று ‘பிகு’ செய்தார். ஆனால் நல்லவேளையாக வாக்குச்சாவடி அதிகாரிகள் அவருக்கு அனுமதி தரவில்லை. அவர் வாக்களிக்காமல் வீடு திரும்பினார்.

விதிகளை பொருட்படுத்தாமல்தான் நாம் நம் நாட்டை மோசமாக்கியிருக்கிறோம்.

அடுத்த நான்கு மாதங்களில் தேர்தல் ஆணையத்தால் அனைவருக்கும் அடையாள அட்டையைக் கொடுக்க முடியுமா?

நாடாளுமன்றத் தேர்தலின்போது அடையாள அட்டை வைத்திருந்த பலரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை. ஒருமுறை பெயர் வாக்காளர் பட்டியலில் வந்துவிட்டால் அத்துடன் வேலை முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்கக்கூடாது.

வாக்களிப்பது நமது உரிமை, அதைக் கேட்டுப்பெறுதல் வேண்டும்.

(பி.கு: தமிழ்நாடு, பாண்டிச்சேரியுடன் அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவையும் தேர்தலுக்குச் செல்கின்றனவாம்.)

3 responses to “வாக்காளர் அடையாள அட்டை

  1. Unknown's avatar சுதர்சன்.கோபால்

    வாக்களிப்பது நமது உரிமை, அதைக் கேட்டுப்பெறுதல் வேண்டும்.

    பத்ரி,சரியாய்ச் சொன்னீர்கள்.

    வாக்களிக்காதவர்கள் பட்டியலில் பெரும்பான்மையானவர்கள்,தகவல் தொழில்நுட்ப அலையடித்து பட்டணக் கரை சேர்ந்தவர்கள் தான்.

    அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.மக்களே, முதலில் உங்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று சரி பாருங்கள்.தமிழகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது
    தேடுபொறி வசதி .
    இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    விவரங்கள் சரியாக இல்லையெனில் சரி படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைக் காலம் கடக்கும் முன்பாகச் செய்து முடியுங்கள்.இதெற்கெல்லாம் மேலாகத் தேர்தல் நாளன்று உங்கள் வாக்குரிமையைப் பதிவு செய்யத் தவற வேண்டாம்.

  2. Unknown's avatar மாயவரத்தான்...

    பொத்தாம் பொதுவாக படித்தவர்கள் தான் வாக்குசாவடி பக்கம் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு சரியல்ல. படித்தவர்கள், படிக்காதவர்கள் விகிதாசாரத்தை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் படித்தவர்கள் எவ்வளவு பேர் வாக்களித்தார்கள், படிக்காதவர்கள் எவ்வளவு பேர் வாக்களித்தார்கள் என்று தான் ஆராய வேண்டுமே தவிர, கிராமப் பகுதிகளில் பதிவாகும் அதிக வாக்குகள் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, கிராமப்புறத்தில் இருப்பவர்கள் எல்லாம் படிக்காதவர்கள், நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்ற ஒரு குத்து மதிப்பான அனுமானத்தின் அடிப்படையில் தான் இப்படிப்பட்ட பேச்சுக்கள் நம் மத்தியில் எழுகின்றன.

    ஒரு தொகுதியில் ஆண்கள் எத்தனை பேர் வாக்களித்தார்கள், பெண்கள் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பதை வேண்டுமானால் சரியாக சொல்ல முடியும். ஆனால் படித்தவர்கள் எத்தனை பேர் வாக்களித்தார்கள், படிக்காதவர்கள் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பதனை எந்த அளவு கோலை வைத்து முடிவு பண்ணுவதாம்?

  3. பெரும்பாலும் மாயவரத்தான் அவர்களே படித்தவர்கள் தான் சோம்பேறித்தனமாக வாக்க வருவதில்லை வரிசையில் நிற்க வேண்டும் காலதாமதமாகும் என்று.
    இம்முறை அனைவருக்கும் தான் எபிக் கார்டு கொடுப்பதாக தேர்தால் அதிகாரி கூறியுள்ளார்.
    வாக்காளர் சரிபார்ப்பு முடிந்து விட்டது கிராமத்துமக்கள் வாக்களிக்க வருவார் ஆனால் வாக்களர் பட்டியலில் தங்கள் பெயரை சேற்க மாட்டார்கள் நகரத்தான் பெயரை சேற்பான் வாக்களிக்க வரமாட்டான் அன்று தான் அவருக்கு சொந்த வேலையிருக்கம் மனைவி மக்களுடம் டூர் போவார்
    இது தான் உண்மை நான் சொல்வது 10 விழுக்காடு நபர்களைத்தான் அனைவரையும் அல்ல ஏன்ன சட்டைக்கு நம்மவர்கள் வந்துவிடுவர்

மாயவரத்தான்... -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.