ரொம்ப நாள் கழித்து (மூன்று மாதமாவது இருக்கும்) சன் செய்திகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. DVR வந்தபிறகு சன் செய்திகளும் சீரியல்களும் பார்க்க முடிவதில்லை.
புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம் நடத்தும் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியை இடித்துத் தள்ளினார்கள். நூலகம், மாணவர் விடுதி, மருத்துவக் கல்லூரி வளாகங்கள் புல்டோசப்பட்டது. அறுபது கோடிக்கு மதிப்பிடப்படும் கட்டிடங்கள், ‘அண்ணாமலை‘ ரஜினியின் வீட்டை இடிப்பது போல் சர்வமும் நாசமாக்கப்பட்டது.
போன வாரம் பெய்த மழையில் கூவம் நதி பிரவாகமெடுத்து ஓடியதற்கு காரணமாக பலவற்றை முன்வைக்கிறார்கள்:
கூவம் நதிக்கரையில் அமைந்த ம.கோ.ரா. பல்கலையின் மூன்று கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தை வளைத்து வளர்ந்திருப்பதாக குற்றம் சாட்டி இடித்தும் முடிந்துவிட்டது.
கல்லூரி ஆரம்பிக்கையில் வகுப்புகள் மட்டுமே கொண்ட கட்டிடங்கள்தான் முதலில் எழுந்திருக்கும். பொறியியல் வருமானம் பெருக ஆரம்பித்தவுடன் நூலகம் தொடங்கப்பட்டிருக்கும். மேலும் வருவாயை ஈட்ட உபரியாக மருத்துவம் பயில்விக்கத் தொடங்குவார்கள். தொடர்ச்சியாக வரும் வெளியூர் மாணவர்களுக்காக விடுதி அமைக்கப்பட்டிருக்கும்.
இடப்பற்றாக்குறையால் நீர் வரத்தில்லாத கூவத்தின் தலையில் எம்ஜியார் பல்கலை விரிந்துவிட்டது. தொலநோக்கு இல்லாததை மட்டும் குற்றம் கூறாமல், ஆரம்ப நிலையில் அதிக விலை கொடுத்து பெரிய அளவில் நிலத்தை வாங்க முடியாததும் இவ்வித ‘வளர்ச்சி’க்கு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம்; ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தங்கக்கூடிய விடுதி ஆகியவற்றை காலி செய்ய 24 மணி நேரம் கெடு கொடுக்கப்பட்டது.
இந்த அகற்றலின் மூலம் நான்கு கிராமங்களின் சேதம் கட்டுக்குள் அடங்கும் என்கிறார்கள்.
இரு வருடங்களுக்கு முன்பே நேற்று இடிக்கப்பட்ட இடங்களை அகற்றிவிடுமாறு அரசாணை சென்றிருக்கிறது. 2003-இல் இருந்து ஒன்றுமே செய்யாமல் இருந்ததன் பலன் நேற்று இடிந்து விழுந்திருக்கிறது.
மிகவும் வருத்தமான நிகழ்வு.
ஆனால், இரும்புக் கரம் கொண்டு காருண்யம் பார்க்காமல், முதலியார் வாக்கு வங்கி கணக்குப் போடாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டு விடாமல் — நதியின் பாதையை சீரமைக்கும் ஜெயலலிதாவைப் பாராட்டலாம்.











அதே!
yes i agree
is it true? Unbelievable. Varunabagavan did it. Great.
-Rajan
இந்த முதல்வரைத் தவிர வேறு யாரும் இதை செய்திருக்க மாட்டார்கள். ஜெவை பாராட்டவும் விஷயம் கிடைத்திருக்கிறது.
ஜெயிக்கப் போவதில்லை என்று முடிவாகிவிட்டது. ‘புரட்சி தலைவி’ ஆக ப்ரொஜெக்ட் செய்து கொள்வோம் என்று முடிவெடுத்துட்டாரோ.
சிறுசேரி ஐடி பார்க் திட்டத்தில் பெருந்தொகை லஞ்சமாக கைமாறியிருப்பதாக திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது. சோளிங்கநல்லூர்/சிறுசேரி பக்கம் புதிய சாலை அமைத்தல், தொழில் நுட்ப பூங்காவில் முதலீடு செய்பவர்கள் நிலை, நிலம் வாங்கிப் போட்டவர்கள் நிலைதான் பரிதாபம்.
//இந்த முதல்வரைத் தவிர வேறு யாரும் இதை செய்திருக்க மாட்டார்கள். ஜெவை பாராட்டவும் விஷயம் கிடைத்திருக்கிறது. //
yes i agree
Yes, true, Nobody would’ve done, except jaya. Hats off to her guts !!!