Daily Archives: செப்ரெம்பர் 9, 2005

1000 தாமரை மொத்துகளே

வதந்திகள் உடலுக்கு நல்லது என சொல்லவும் சிலர் இருக்கிறார்கள். தீநடத்தையை மூட்டை கட்டவும், நட்பை வளர்க்கவும், செய்திகளை சுற்றறிக்கை அனுப்பவும் கிசுகிசுக்கள் பயன்படுகிறது என்கிறார்கள்.

ப்ளாகர் அக்கவுண்ட் ஆரம்பித்து இரண்டாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆயிரம் பதிவுகளை எட்டிப் பிடித்தாச்சு. கிட்டத்தட்ட நூறாயிரம் தடவை பதிவுகள் பார்க்கப்பட்டிருக்கிறது. நானாக எழுதியது நூறாவது தேறும் (தேறுகிறதோ இல்லையோ… நிச்சயம் ‘இருக்கும்’ 🙂

ஒரு வாரம் விடுமுறை விட்டு எழுதியதில் எவ்வளவு fallacy, sophism, ஜல்லி, ஜட்கா, கிசுகிசு என்று எண்ணிப் பார்த்தேன். நேரம் போதவில்லை. இது சரிப்படாது என்று ‘பழைய குருடி; சுவற்றுக் கீரையை வழிச்சுப் போடு’ என்னும் கதையாய் திரும்பி வந்துவிட்டேன்.

எழுதுவது, படிப்பது, பகிர்ந்து கொள்வது, ஒப்பேற்றுவது எல்லாமே மஜாவாகத்தான் இருக்கிறது. ‘அரிப்பெடுத்தவன் கை’ என்று பாரா சொல்வதை ‘வலைப்பதிந்தவன் கீபோர்ட் போல’ என்று மாற்றிக் கொள்ளலாம்.

103 போட உதவியவர்கள் கிட்டத்தட்ட 102வது இருப்பார்கள்.

 • சுரதா பொங்குதமிழ் உருமாற்றி, ஈ-கலப்பை என்று கணினியில் தமிழை முன்னெடுத்து செல்பவர்கள்.
 • இணையத்து இணக்கங்களை வளர்த்த தினம் ஒரு கவிதை
 • தட்டி கொட்டி ஊக்கப்படுத்திய ராயர் காபி கிளப்
 • தோளில் கைபோட்டு எழுதும் ஆசையைத் தூண்டிய புத்தகப்புழு
 • கல்லூரி நட்பையொத்த மரத்தடி
 • ஆட்டோகிராப் அனுப்பினாலும் அன்புடன் வெளியிடும் திண்ணை
 • வாரயிறுதியானால் ஏதாவது எழுதவேண்டுமே என்று எண்ண வைக்கும் தமிழோவியம்
 • பல முயற்சிகளிலும் உறுதுணையாக திசைகள்
 • தினகரன், தினமலர், தினமணி என்று இலவசமாக தமிழகத்தை உலகெங்கும் தினமும் தரும் நாளேடுகள்
 • வெப் உலகம், தட்ஸ்தமிழ், உலகத்தமிழ், அம்பலம், ஆறாம்திணை, சிஃபி, பதிவுகள், தமிழ்.நெட் போன்ற அள்ள அள்ள சங்கதிகள் கொட்டி கிடக்கும் தளங்கள்
 • அலம்பல், அலட்டல் என்று பாகுபடுத்தாமல் ‘என் கடன் சேவையே’ என்று இடம் கொடுத்த ப்ளாகர்
 • எனக்கு சுட்டி கொடுத்து அகங்காரைத்தை வளர்த்த சக வலைப்பதிவர்கள்
 • வெங்கட், நா கண்ணன், சந்திரவதனா, நவன், காசி, மதி, பத்ரி என நீளும் தமிழ் வலைப்பதிவு முன்னோடிகள்
 • மன்ற மையத் தலைப்புகள்
 • நியு யார்க் டைம்ஸ், கார்டியன், ஹிந்து, ப்ராவ்தா போன்ற கருத்தேடுகள்
 • கல்யாணசுந்தரம், மதுரை திட்டம், அகத்தியம், தமிழ் உலகம் போன்ற கிடங்குகள்
 • தமிழ்சினிமா.காம், ரஜினி ஃபேன்ஸ், போன்ற பொழுதுபோக்கு தலங்கள்
 • லேஸிகீக், டீகட, மைக்ரோபெர்சுவேஷன், சிவக்ரசி, டேவ் பேரி, போயிங் போயிங், அமர்தீப் சிங் போன்ற வலைப்பதிவர்கள்
 • ஸ்லேட், தி வீக், இந்தியா டுடே, அவுட்லுக் போன்றவர்களின் இணையப் பதிப்புகள்
 • என்னை வாழவைக்கும் விகடன், குமுதம், கல்கி, நக்கீரன்
 • மூளை இருப்பதாக நினைக்க வைக்க கூகிள், யாஹூ கோர்வைகள்
 • அவ்வப்போது படித்து, கருத்து சொல்லாமல், சிரித்துவிட்டுப் போகும் மனைவி
 • ‘நீ கம்ப்யூட்டரில் என்ன பண்ணுறே’ என்று சீரியஸாக வினவும் மகள்

  லிஸ்ட் போட்டாலே மறப்பது சகஜம். (தமிழ்மணம், வலைப்பூ போல) குறிப்பிடாமல் விட்டவர்கள் மேல் உரிமை அதிகம்.

  அனைவருக்கும் நன்றி!!!

  விடாது …. :-))


  தொட்டுக்க ஒரு நியுஸ் :: பெண்களை கேலி – கிண்டல் செய்து பாடல், வாலி – பா.விஜய் உள்பட சினிமா கவிஞர்கள் மீது திடீர் வழக்கு!

 • H1BEES

  கே டிவி போட்டதன் பயனாய் நான் விரும்பும் நிகழ்ச்சிகளில் ‘கல்லூரி கலாட்டா’ குறிப்பிடத்தக்கது.

  சிலகாலம் முன்பு வரை ‘தில்லானா தில்லானா‘வில் மேஜர் சுந்தர்ராஜனின் மகனால் அடக்கியாளப்பட்டு குழப்பமாய் தொக்குத்தவர், இந்த நிகழ்ச்சியில் இயல்பாக compere செய்கிறார். இழந்த கல்லூரி நாள்களுக்கு மீண்டும் ஃப்ளாஷ்பேக் போடவும் உதவுகிறது. புதிய திறமைகளைக் கண்டு வியக்கவும் முடிகிறது.

  நேற்று சாய்ராம் கல்லூரிக்கு சென்றிருந்தார். கணினி மாணவர்கள் கிண்டலடித்தார்கள். விசில் மூலமாகவே ஏ.ஆர் ரெஹ்மானையும் எம்.எஸ்.வி.யையும் கொண்டு வந்தார். கவிதை சொன்னார். இனிமையான குரலில் சினிமா மெலடிகள் பாடினார். பிளேடு இல்லாமல் பிளேடை வைத்து பிளேடு போட்டார். கூத்து கட்டினார். பேட்டி கொடுத்தார். மனம் திறந்தார்.

  வழக்கம் போல் சுவாரசியமாகச் சென்றது.

  கடைசியாக டிரம்ஸ், கிடார், புல்லாங்குழல் என்று மெல்லிசையாக ஒலித்தார்கள். இது போன்ற கூட்டமைப்பு கல்லூரிக்குப் பின் அமைவதில்லை. வேலை, பணம், குடும்பம் என்று உழல்வதும், உழல்வதில் இருந்து மாற்றுக்கு இலக்கியம், நட்பு, கேளிக்கை, தொண்டு என்று இருப்பதும் பழக்கமாகிப் போகிறது.

  விசில் அடித்து மெட்டு காட்டுபவர், பாடல் எழுதுபவர், அறுவை ஜோக் கடிப்பவர், பல்குரல் மன்னர், எழுத்தாளர் என கல்லூரி ஓய்வுகளில் விரும்பியதைத் தொடர நினைத்தால் தொடரலாம். ஆனால், வாஷிங்டனில் கிடார், பெங்களூரில் பாடகி, சியாட்டிலில் டிரம்ஸ், துபாயில் பாடகர் என்று உலகமயமாக்கப்பட்ட பிறகு இசை ஆர்வம் மங்கிப் போகும்.

  பொழுதுபோக்கை சிரத்தையாகத் ஈடுபாட்டுடன் தொடர்வதில் ஸ்ரீகாந்த் மின்னுகிறார். தொடர்ச்சியாக தனிப்பாடல்கள், பாப், பாரதி, ஆன்மிகம் என்று கலந்துகட்டி தந்து வந்தவர் இப்பொழுது முழுத் தொகுப்பாக முதல் ஆல்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

  இலவசமாகக் கொடுத்திருக்கும் எம்.பி3யைக் கேட்டால் ஆறு பாடல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

  1. ஸ்ட்ரெயிட் அவுட் ஆஃப் காலேஜ்
  2. தேடித் தேடி தென்றல் வீசும்
  3. வரவு எட்டணா
  4. திக்குத் தெரியாத காட்டில்
  5. கண்ணாலே அம்பு விட்டு
  6. எஞ்சினியரிங் மார்க்கு

  ஒரிரண்டு தடவை கேட்டதில் ரீமிக்ஸ் கொஞ்சம்; புரிகிற வரிகள் கொண்ட ஆங்கிலப்பாடல்; தேஸி இந்தி கொஞ்சம்; தமிழ்ப்பட பாடல்களுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைந்த குத்துப் பாட்டும் இருக்கிறது.

  திருவாசகம், எனி இந்தியன், காமதேனு, காந்தளகம் என்று இணைய முயற்சிகள் மின்னும் காலம் இது. சினிமாவின் பின் மட்டுமே போகிற பாடல் உலகத்திற்குக் குறிப்பிடத்தக்க வரவு. வாழ்த்துக்கள்!!!

  இணையத்தில் வாங்க விரும்புவோர் தமிழோவியத்தில் வாங்கலாம்

  மறுப்புக்கூற்று: இந்த ஆல்பத்தின் தயாரிப்பிலோ, விற்பனையிலோ எனக்கு தொடர்போ லாபமோ கிடையாது 🙂