வசூல்ராஜா MBBS – ஆழ்வார்பேட்டை ஆளுடா


K:

ஆல்வார்பேட்டை ஆளுடா

அறிவுரையே கேளுடா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா

இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

G:

லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

K:

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா

நர்ஸு பொண்ணை காதலி

கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

G:

ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை

ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

K:

பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே

G:

லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:

கண்ணை பார்த்து பேச சொல்ல

கழுத்துக்கு கீழ் பார்க்குமே

G:

லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:

கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது

உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே

ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது

உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே

இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்

எதனையும் புரிஞ்சு நடக்கணும்

காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா

இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

GROUP CHORUS:

ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை

ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா

இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

…போடு

….வா நர்சம்மா

…ஐய்யோ

K:

பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்

G:

நல்லது அனுபவம் உள்ளது

K:

காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்

G:

சொன்னது கவிஞர்கள் சொன்னது

K:

டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்

கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா

ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே

உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா

ஐய்யயோ இதுக்கா அழுவுரே

lifeஇலே ஏன்டா நழுவுரே

காதல் ஒரு கடலு மாறிடா

அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா

டேய் டேய்

GROUP CHORUS

K:

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா

நர்ஸு பொண்ணை காதலி

கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

GROUP CHORUS

நன்றி: vaali

2 responses to “வசூல்ராஜா MBBS – ஆழ்வார்பேட்டை ஆளுடா

  1. எங்கிருந்து இதெல்லாம் புடிக்கிறீங்க, பாலா. எப்படி புடிக்கிறீங்க !!!!

  2. எல்லாம் http://www.vasoolrajambbs.com/ சரணம் கச்சாமி.

    புதிய திரைப்பாடல்களின் வரிகளுக்கு http://www.nanjilonline.com/music/lyrics.asp செல்லலாம்.

Santhosh Guru -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.