Daily Archives: ஜனவரி 6, 2004

நாட்குறிப்பு என்பது கடிகாரத்துடன் இணைக்கப்படாத டைம்பாம

டயரி எழுதுவோர் கவனிக்க! – மதுரபாரதி

நன்றி: தென்றல்

“புத்தாண்டு பிறந்தாச்சு. எல்லோருக்கும் புதிய நாட்குறிப்புப் புத்தகங்கள் வரும் நேரம் இது. அதைப் பற்றிய சில முன்னெச்சரிக்கைகளைச் சொல்லிவிடுவது எல்லோருக்கும் நல்லது என்று தோன்றியது.

நாட்குறிப்பு எழுதுவதால் நிறையப் பலன்கள் உண்டு. நீங்கள் என்னைப் போல் மறதி மகாதேவனாக இருந்தால், அன்றைய விஷயங்களையெல்லாம் அதில் எழுதிவைத்துவிட்டால் மறக்காமல் இருக்கும். “பதினாலு பைசா குடுத்தாப் போதும், திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து டவுனுக்குப் போயிடலாம் தெரியுமா அந்தக் காலத்தில்” என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ள உதவும். ஆனால் அப்போது வாங்கிய மொத்தச் சம்பளமே முந்நூறு ரூபாய்தான் என்பதைச் சொல்லக்கூடாது.

‘காலையில் கெட்ட கனவு கண்டு எழுந்தேன். தோசைமாவு புளித்திருந்தது. கடைசிவீட்டுக் கமலாம்பாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆபீசுக்குப் போனேன். பஸ்சில் ஒரே கூட்டம். மதியம் கொண்டுபோன தயிர்சாதமும் புளிப்பு” என்று இவ்வாறு மிக முக்கியமான சமாசாரங்களை எதிர்காலத்தின் பொருட்டாக, சரித்திரக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்களும் உண்டு. ஆனந்தரங்கம்பிள்ளையின் வாரிசுகள். என் பெரியப்பா ஒருவர் துருப்பிடித்த (ஒரிஜனலாகப் பச்சைப் பெயிண்ட் அடித்து மூடிமேல் கிளிப்படம் வரைந்த) டிரங்க் பெட்டிகள் நிறைய அவர் சிறுவயது முதல் எழுதிய பல நாட்குறிப்புகளை அடைத்து வைத்திருக்கிறார். ‘டைம் காப்ஸ்யூல்’ என்று சில அரசுகள் தமது ‘சாதனை’களையும் தனக்கேற்றவாறு சரித்திரம் எழுதுபவர்களின் படைப்புகளையும் ஆழப் புதைத்து வைப்பதுண்டு.

பிற்காலத்தில் தோண்டியெடுத்துப் பார்ப்பவர்களுக்கு இதன் மூலம் நமது நகைச்சுவை உணர்வு நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோலப் பெரியப்பாவின் டயரிகளையும் ஆழப்புதைத்து வைத்தால் நல்லது என்று நான் நினைப்பதுண்டு. மொத்தத்தில் இரண்டுமே ஆழப் புதைக்கப்படவேண்டியவை என்பதில் கருத்து வித்தியாசம் இருக்கமுடியாது.

என்னுடன் படித்த பிரகாஷ் பரிட்சைக்குப் படிப்பதாகச் சொல்லிவிட்டு ராத்திரி பத்து மணிக்குமேல் உட்கார்ந்துகொண்டு அன்றைக்குத் தன்னைப் பார்த்து மையல் கொண்ட மடந்தையரின் பெயர் இத்தியாதிகளை எழுதி மகிழ்வான். பெரும்பாலும் இவனுடைய கற்பனைதான்.

ஆனால் எழுதி எழுதி தானே நம்பத் தொடங்கிவிட்டான். சின்ன வயதில். கல்யணமானபின் பெண்டாட்டி கையில் மாட்டினால் என்ன ஆவது. விவாகரத்து வரைக்கும் போய்விடுமே!

அதனால்தான் நிறையப்பேர் நாட்குறிப்பு எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

என்னுடைய தூரத்துச் சித்தப்பா (அவர் கனடாவில் இருந்தார் – ரொம்ப தூரம்தானே) டயரியின் எல்லாப் பக்கங்களிலும் மேலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுக் கீழே விதவிதமாய்க் காக்காய்ப் படங்கள் போட்டிருப்பார். ஆர்.கே. லக்ஷ்மணுக்குப் போட்டிதான். ஆனால் வரைந்திருப்பது காக்காய் என்று அவர் சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டும். சலவைக்கணக்கு, ஹைக்கூ, ஸ்ரீ ராம ஜயம், பழைய பேப்பர்க்காரனுக்கு விலைக்குப் போட்டவைகளின் கணக்கு, தான் செய்த, செய்யவேண்டிய, செய்ய மறந்த வேலைகளின் பட்டியல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டும் எழுதப் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஜனவரி 7ஆம் தேதி புது டயரி கிடைத்ததும் ‘இன்றைக்கு இந்த டயரியை ராமசாமி கொடுத்தார். இனிமேல் தவறாமல் எழுதுவேன்’ என்று சூளுரைத்துவிட்டு, 9ஆம் தேதியோடு மறந்துவிட்டவர்கள் ஏராளம்.

என் நண்பன் சுப்பு மறக்கமாட்டான். காலையில் எழுந்து பல்தேய்த்ததும் டயரியை எடுத்துவைத்துக்கொண்டு மணிரத்னம் அடுத்த படத்துக்குக் கதை யோசிக்கிற தோரணையில் உட்காருவான். ஊஹ¥ம், ஒன்றும் தோன்றாது. கொஞ்சநேரம் உட்கார்ந்தபின் தன் மனச்சிக்கலை (காலையில் எவ்வளவு முக்கினாலும் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும்) ஒப்புக்கொண்டு, டயரியை மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்பான். முதல் பக்கத்தில் பெயர், முகவரி, பிளட்குரூப் எழுதியது தவிர அந்த நாட்குறிப்பில் மற்றப்படி வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதற்கு நீங்கள் சுப்புவைப் பழிக்கமுடியாது.

ராம்கி கொஞ்சம் ஆங்கிலத் தேர்ச்சி பெற்றவன் – அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. “டயரி என்று சொல்லுவதே தப்பு, அந்த வார்த்தைக்கும் பால்பண்ணைக்கும் தொடர்பு உண்டு” என்பான். டைரி என்பதுதான் சரியாம். எப்படியோ பத்துக்கு அஞ்சு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ கூடாது என்று தமிழர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இதில் சரி தப்பெல்லாம் பார்க்கவா முடியும்?

நான் பார்த்தவரையில் யாருடைய நாட்குறிப்பு செக்ரட்டரியால் எழுதப்படுகிறதோ, அதுதான் தவறாமல் ஒழுங்காகச் செய்யப்படுகிறது. நானும் ஒரு அழகான செக்ரட்டரிக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன் – தவறாமல் நாட்குறிப்பு எழுதத்தான். அட, யாரய்யா அது, டைம்பாமை நினவுபடுத்தறது!”

முழுவதும் படிக்க

எனக்குப் பிடித்த பாடல்கள்

1. பூங்குருவி பாடடி; சுக ராகம் தேடித்தான் – சுந்தர காண்டம்

2. அன்பெனும் மழையிலே – மின்சார கனவு

3. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு – விடுதலை

4. காற்றில் எந்தன் கீதம் – ஜானி

5. மந்திர புன்னகையோ, மஞ்சள் நிலவோ – மந்திர புன்னகை

6. தீர்த்தக்கரையினிலே – வறுமையின் நிறம் சிகப்பு

7. அக்கம்பக்கம் பாரடா – உன்னால் முடியும் தம்பி

8. கவிதைகள் சொல்லவா – உள்ளம் கொள்ளை போகுதே

9. அடி பெண்ணே – முள்ளும் மலரும்

10. வேறு இடம் தேடிப் போவாளோ? – சில நேரங்களில் சில மனிதர்கள்

11. கண்டதை சொல்லுகிறேன் – do –

12. சிந்தனை செய் மனமே – ???

13. சுந்தரி சௌந்தரி நிரந்தரியே – தூக்கு தூக்கி

14. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் – மலைக் கள்ளன்

15. வாராங்கோ… வாராங்கோ – செந்தூரப் பூவே

16. My Name is Birlaa – பிர்லா

17. ஆசை நூறு வகை – (அடுத்த வாரிசு?)

18. நானாக நானில்லை தாயே – தூங்காதே தம்பி தூங்காதே

19. சக்கரை நிலவே – யூத்

20. வேதம் நீ! இனிய நாதம் நீ – ???

21. பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் – ???

22. அது இருந்தா இது இல்லே… இது இருந்தா அது இல்லே. – ???

23. இதோ இதோ என் வாழ்விலே – வட்டத்துக்குள் சதுரம்

24. வாழ்வே மாயமா? வெறுங்கனவா? – காயத்ரி

25. மேரா நாம் அப்துல் ரெஹ்மான் – சிரித்து வாழ வேண்டும்

26. உனக்கென்ன குறைச்சல் – வெள்ளி விழா

27. கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு – வெற்றி கொடி கட்டு

28. கொஞ்ச நாள் பொறு தலைவா – ஆசை

29. முத்தைத் தரு – அருணகிரிநாதர்

30. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் – ???

31. அழகிய கண்ணே – உதிரிப்பூக்கள்

32. பூமாலையே தோள் சேரவா –

33. நான் தேடும் செவ்வந்திப் பூவிது –

34. அகரம் இப்போ சிகராமாச்சு – சிகரம்

35. ஒரு கிளி உறங்குது; உரிமையில் பழகுது. ஓ மைனா – கீதாஞ்சலி

36. ஆண்டவனைப் பார்க்கணும் – ???

37. காதல் என்பது பொதுவுடமை – பாலைவன ரோஜாக்கள்

38. ஆறும் அது ஆழமில்ல – ???

39. சோலை புஷ்பங்களே – ???

40. வைகைக் கரை காற்றே நில்லு – ??? (தங்கைக்கோர் கீதம்?)

படம் தவறு என்றாலோ, இடாத படங்கள் தெரிந்தாலோ

சொல்லுங்கள்.

கடந்த வருடத்தில்… (புலம்பல் – 1)

மரத்தடியில் ஒன்றைத் தேடப் போகையில் என்னுடைய பழைய மடல்களைக் கிண்ட கொஞ்சம் நேரம் கிடைத்தது. கடந்த ஒரு வருடத்தில் சினிமாவை குறித்தே அதிக அளவில் எழுதியுள்ளேன். திரைப்படம் அது சார்ந்த பாடல்களைத் தவிர வேறு எதற்கும் பதிலும் ஒழுங்காகத் தருவதில்லை. பரவாயில்லை… ஒன்றிலாவது ஏதோ கொஞ்சம் கிறுக்க முடிகிறதே!

ஈ-கலப்பையில் யூனிகோட்

புதிய தட்டெழுத்து விசைபலகையை எ-கலப்பையில் பூட்ட, கீழ்கண்ட முறையினை பின்பற்றுங்கள்.

1. UNICODETAMIL.kmx

Alternate Location

என்ற வலைசுட்டியில் இருந்து UNICODETAMIL.kmx(அல்லது வேறு தேவையான .kmx கோப்பு) என்ற கோப்பை வலையிறக்கி உங்கள் கணினியில் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.

(Do a Right Click on the Link and ‘Save Target As…’)

2. எகலப்பை இயக்கத்தில் இருக்கிறதா என சரிபார்த்து, இயக்கத்தில் இல்லை என்றால் ஓடவிடுங்கள்.

3. உங்கள் கணினியில் வலதுகை பக்கம், கீழ் ஓரத்தில் எகலப்பையின் ‘அ’ அல்லது ‘k’வடிவம் இருக்கும் அல்லவா, அதன் மேல் mouse pointerஐ வைத்து , right click செய்யவும், அப்போது தோன்றும் சிறு சாளரத்தில், “keyman configuration”ஐ தேர்ந்தெடுக்கவும்.

4. பிறகு வரும் ‘Tavulte soft configuration’ சாளரத்தில் , “install keyboard” பொத்தானை அழுத்தவும்.

5. பிறகு இந்த “UNICODETAMIL.kmx” டைப்ரைட்டர் கீபோர்டை கோப்பை தெரிவு செய்து ‘ok’ பொத்தானை தட்டினால், புதிய கீபோர்ட் நிறுவிவிடும்.

6. ‘Keyboard Details’ பகுதியில் உங்களுக்குத் தேவையான குறுக்குவழியை(Shortcut) தேர்ந்தெடுங்கள். நான் பயன்படுத்துவது

டிஸ்கி: Ctrl + Alt + 2

யூனிகோட்: Ctrl + Alt + 3

ஆங்கிலம்: Ctrl + Alt + 1

பிறகு புதிய கீபோர்டை எகலப்பையில் பயன்படுத்தலாம்.

7. பின்னூட்டங்கள் பகுதியில் நேரடியாக யூனிகோட் பயன்படுத்தலாம். யூனிகோட் சில சமயம் நோட்பேடில் சரியாக அடிக்க முடியாமல் போகலாம். Wordpad பயன்படுத்தி பாருங்கள்.

எழுதியவர்: முகுந்தராஜ் (mugunth@thamizha.com)

தேதி: 04 மார்ச் 2003

சில இடைச் செருகல்கள்: பாலாஜி (bsubra@india.com)