Tag Archives: Yuvan Chandrasekar

பின்னைப் புதுமைக்கும்: ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே

இஸ்மாயில் என்னும் பேரில் யுவன் சந்திரசேகர் எழுதுவது சரியா?
விடுபட்ட நரி என்று எந்தத் தமிழ் எழுத்தாளரை யுவன் குறிப்பால் உணர்த்துகிறார்?
நேர்மையாக இருக்க வேண்டிய மூலமே இல்லாதபோது, ஆங்கில மொழிபெயர்ப்பு என்று எவரை/எதை யு.ச.சே. சாடுகிறார்?

இதெல்லாம் கதை படித்தால் உங்களுக்குப் புரியலாம்.
வாலறுந்த நரியாக

அபுனைவை வாசிக்கும்போது வேறு பல நூல்களையும் விஷயங்களையும் துணைக்கழைப்பேன்.
நாவலில் – எப்பொழுதாவது சில நேரம்.
கதையில் – என்றும் இல்லை; வெகு அபூர்வம்.
இந்தக் கதைக்கு – நான்கு நாள் ஓடிப் போனது:

1. காணாமலே காதல் -கு.ப.ரா சிறுகதை
2. கார்வேயின் யுகாந்தா
3. ராகுல சாங்கிருத்தியாயன், எம்.என். ராய், ஞானக்கூத்தன்
வால்மீகி, கம்பன், ஆடிசி, ஹோமர், யுலிசஸ், வியாசர், புராணங்கள் – போய்க் கொண்டே இருந்தேன்.

முதலில் ஞானக்கூத்தனின் ‘விட்டுப்போன நரி’ (நறுக் மட்டுமே – முழுக் கவிதையை கூகுளில் காண்க)

“மேற்படிக்
குரலைக் கேட்டார்
மாதொரு
பாகர்.

திருவருட்
திட்டம் பொய்த்த
தற்கொரு
ஊளைச் சான்றாம்
நரி எதிர்
உதித்துக் கீற்று
நிலாத் திகழ்
ஈசர் சொன்னார்:

நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம் போய்வா”
—

பிரம்மபுராணக் கதை என்பது போல் நிறைய அபத்தங்களும் உண்டு என்பதால் கண்ணி வெடியை மிதிக்காமல் செல்க.

கதை என்றால் *கருப்பொருள்* தேவையே! என்னது அது?
i) தாய்மை – சபரி, சூர்ப்பனகை (இராமாயணம்… மன்னிக்க – இராவணாயணம் பாத்துட்டீங்க தானே!?), திரௌபதி, பூதகி, பின்னே மேகம் கூட உண்டு

ii) அமுதாகவும் நஞ்சாகவும் மாறக்கூடிய பால் – நாயகிகள் அரக்கியாகிறார்கள், அரக்கிகள் தாயாகிறார்கள் – அதிகாரம் பெண்ணை ஆணாக்கிவிடக்கூடும்.

iii) யுவனின் வழக்கமான பாணி: உள்ளடுக்குக் கதைசொல்லிகள், கண்டெடுக்கப்பட்ட நூல்கள், நினைவுச் சங்கிலிகள். ஏதொவொரு முகம் பல நினைவுகளை எழுப்பி, அவை மேலும் பல முகங்களை எழுப்புவதாக வாசகர் அவரது கதைகளை விவரிக்கிறார்

மேற்கோள் நேரம்:
அ) மொழிபெயர்ப்பின் தரம் அல்லது நேர்மை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத பெருந்தன்மை கொண்டவர்களாயிற்றே என்றும் தோன்றியது.

ஆ) பொசுங்கிய உடல்களின் புகைநாற்றத்தை நுகர்ந்தவாறே வாசிப்பதுபோல…

இ) மகனே, என்னைத் தாய் என்று சொல்லவில்லையே!?

ஈ) ஒன்றுக்கொன்று பார்வையைவிட்டு விலகாத ஆகாயமும் தரையும்போல, வலது முலையில் நஞ்சும் இடது முலையில் அமுதமும் சுரக்கும் மாயப் பிறவி அவள்

கதை என்றால் *மறைபொருள்* தேவையே! என்னது அது?
i) இதிகாசங்கள் விட்டுச்சென்றவற்றை நிரப்புவதே கற்பனை.

ii) கலைஞன் தந்திரமுள்ள குள்ளநரி; எழுத்தாளர் – எத்தர் – சூதர் – கபடக்காரர் – குரங்குச்சேட்டை – அனுமன் – மேகத்தில் பால் குடிப்பவர்

iii) தொன்மங்கள் சமகாலம் பற்றி எழுத பாதுகாப்பான இடம் – கற்பனை விமர்சகர் வழியாக யுவன் தன் சொந்த உரைநடைப் போக்கையே விமர்சிக்கிறார்

இதிகாசங்களை மாற்றிச் சொல்லும் உத்திகள்:
i) இனவரைவியலும் புவியியலும்
ii) நடந்த நிகழ்வுக்குக் காரணம் தருவது
iii) தர்க்கத்தைக் கேள்வி கேட்பது

மறுபுனைவுகள் என்ன செய்கின்றன?

பிரதிபா ரேயின் யாஜ்ஞசேனி (திரௌபதி), வோல்கா-வின் விமுக்தா (சீதை மற்றும் பிற பெண்கள்), மேடலின் மில்லரின் சிர்சே.
புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்” – குரலைத் தருகின்றன; நீதிமன்றத்தில் நிறுத்துகின்றன.
இரவாதி கார்வேயின் யுகாந்தா ஆய்வாகவே இதைச் செய்கிறது.

நான் ஸ்னாப் ஜட்ஜ் – நொடியில் நீதி வழங்கத் துடிப்பவன்.
சிறந்த மறுபுனைவு தீர்ப்பளிக்காது; உத்தரக்ஷண கணத்தைத் திறந்து காட்டும்.

கண்ணுற்றீரா?

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

திருவெம்பாவை 9 (மாணிக்கவாசகர்)