வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.
வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.
வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.
வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.
நேற்றைய கேள்வி – பதிலின் தொடர்ச்சி…
3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??
பெரிய மாறுதல்கள் வர வாய்பில்லாவிட்டாலும் அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை எந்த வகையிலாவது சட்டமாக்கிவிட டெமக்கரட்ஸ் உத்வேகம் காட்டுகிறார்கள்.அதன் மூலம் ஆப்ரிக்க அமேரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று டெமக்ராடிக்கட்சி நினைக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகைகளில் அவ்விரு சமூகங்களே அதிகம் பெறுவதால் இவ்வாறான திட்டத்தை அறிமுகங்செய்வது அந்த வோட்டு வங்கியை தனதாக்கிக் காக்க முடியும் என்பது டெமாக்ரட்ஸின் திட்டம்.அவர்கள் தங்கள் தேவையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! அதனால் ஜனநாயகக் கட்சி ஆட்சிஅமைக்கும்பட்சத்தில் அரசாங்க மருத்துவக் காப்பீடு எந்த வகையிலாவது அமல்படுத்தப்படும்.
இவ்வாறான அரசாங்க் தலையீட்டிற்கு அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் தேவைப்படும். அதற்கு ஒரே வழி வரி அதிகரிப்பபது மட்டுமே. பராக் மற்றும் ஹில்லாரியின் மருத்துவக் காப்பீட்டை அமல் படுத்த அமெரிக்கர்களின் வரியை பத்து சதவீதமாவது உயர்த்தினால் மட்டுமே முடியும் என்று பல வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
அடுத்ததாகப் போர். அமெரிக்காவின் பொருளாதாரம் போரினால் விளையும் நன்மைகளில் வளர்ந்தது (Benefactor of the ‘Broken Window’ economic principle). எங்காவது எதற்காகவாவது போர் நடந்தால்தான் அமெரிக்காவினால் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும். முன்னாள் சோவியத் ரஷ்யாவுடன் கொண்ட பனிப்போரினால் அமெரிக்க வர்த்தகம் பல மடங்கு வளர்ந்தது. சோவியத்தின் மறைவிற்குப்பிறகு தனது தளவாட விற்பனை, மற்ற நாடுகளைக் காக்க வாங்கும் மானியம், குறைவற்ற எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் போன்ற பல வர்த்தக தொடர்புகளிலும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நெருக்கடி வளர்கிறது. அதை சமன் செய்ய அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாகக் காட்டி மிரட்டுவது அவசியமாகிறது.
பராக் ஜனாதிபதியானால் அவ்வாறான ஒரு சக்தி வாய்ந்த தளபதியாக செயல்படுவாறா என்பது சந்தேகமே. Barack’s ascend to presidency could start America’s fall from being a super power.
4. இந்தியர்களின் நலனுக்கு எவரின் எந்தக் கொள்கை உகந்தது? எச்1பி எண்ணிக்கை அதிகரிப்பார்களா? பச்சை அட்டை துரிதப்படுமா? எவரினால் இந்தியாவுடன் வர்த்தகம் மேம்படும்?
The biggest myth amonst Indians is that emocrats favor aliens or immigration which is NOT the fact! உங்களுக்கு சந்தேகமிருந்தால் ஜான் கெர்ரியின் சென்ற தேர்தல் வலைதளதில் தேடிப்பார்க்கவும்! இப்போதைய தேர்தலில் இம்மிக்ரேஷனுக்கு அத்துணை முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இரு வேட்பாளர்களும் அதைப்பற்றி பெரும் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வந்தேறிகளுக்கான குடியுரிமை சட்டங்களை முன்னின்று இயற்றி அதை அமல் படுத்தியது குடியரசுக் கட்சியே!
என்னை பொருத்தமட்டில் (ஒரு சுயநல நோக்கில்கூட) எச்1பி எண்ணிக்கை இப்போதிருக்கும் அளவே அதிகமாகப்படுகிறது. மேலும் எச்1பி, பச்சை அட்டைக்களில் அரசாங்கம் நேரிடையாக தலையிடுவதில்லை. பச்சை அட்டை வழங்க அதிக ஆண்டுகள் எடுப்பதற்குக்காரணம் இல்லீகல் இமிக்கரண்ட்ஸ் எனப்படும் சட்டவிரோத வந்தேரிகளுக்கு அரசாங்கம் சட்டபூர்வ குடியுரிமை வழங்க முடிவெடுத்ததே காரணம். அந்த திட்டத்தினால் குடிநுழைவுத்துறையினர் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விண்ணப்பங்களை பார்க்க தேவையான ஆட்பலமின்றி நிலுவையில் கிடத்தப்பட்டது. மேலும் எச்1பி அதிகப்படுத்துவதாலும் பச்சை அட்டை வழங்க அதிக தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரம் முன்னேற்ற ஏற்பட்டு திறனுள்ள ஆட்களுக்கான தேவை ஏற்பட்டால் ஒழிய எச்1பியை அதிகப்படுத்துவது முட்டாள்தனமே. மேலும் ஏற்கனவே இங்குள்ளவர்களின் பணி நிலவரமே ஆட்டம் காணும் போது அதிக ஆட்களை இறக்குமதி செய்வது மக்களுக்கு அபிமானம்தரக்கூடியது அல்ல.
BRICS – Brazil, Russia, India, China and South Africa (Previously BRIC now SA joined the league to become the emerging five) ஆகிய ஐந்து நாடுகளின் வளர்ச்சியை புறக்கணிக்கமுடியாத ஒரு தளத்தில் இன்றைய பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக வர்த்தகதில் போட்டியிடவும், அதில் கலந்து கொள்ளவும் இந்த ஐந்து நாடுகளிடமும் நல்ல நட்புறவை பேணுவதே புத்திசாலித்தனம் என்பதை இரு கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால் எந்த கட்சி வந்தாலும் இந்தியாவுடனான வர்த்தகமும் பொருளாதார பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும் என்பதே உண்மை!
5.நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஸ்லேட் போன்றவை ஏன் குடியரசுக் கட்சிக்கு சார்பாக தலையங்கங்கள் தீட்டுவதில்லை?
அதையே நான் திருப்பிக்கேட்கலாம் – ஏன் அவர்கள் ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சியைத் தாக்குவதைப்போல தாக்குவதில்லை? தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் எப்படி மிடியா உலகையே தன் பிடியில் வைத்திருக்கிறதோ அதைப்போலவே இங்கு ஜனநாயகக் கட்சியும். பராக் ஒரு கொலையே செய்தாலும் அதை கருணைக் கொலை என்று வாதிடக்கூடிய பத்திரிக்கைகள் இங்கு அதிகம். மேலும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சிக்காரர்கள் அந்த பத்திரிக்கைகளை படிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். முன்னால் கம்யூனிஸ்ட் மற்றும் இடது சார்புடைய வெளிநாடுகள் மூலம் அவர்களுக்கு பணம் வருவதாலும் இருக்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பதிவர்களிடம் கேள்வி கேட்டு எனக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க எண்ணம். முதலில் மாட்டியவர் பதிவர் டைனோ.
நீங்களும் பதிலளிக்க ரெடி என்றால், உங்கள் மின்னஞ்சலை எனக்கு அஞ்சல் செய்ய வேண்டுகிறேன். கூடவே கேள்விகளையும் கேட்டுக் கொண்டுவிட்டால், பதிலளிக்க தோதுப்படும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
இனி டைனோவுடன் குறுக்கு விசாரணை:
1. ட்விட்டரில் கொடுக்கும் ஸ்டேட்டகளைப் பார்த்தால் நீங்க குடியரசுக் கட்சி ஆதரவாளர் போல் தெரிகிறீர்? ஏன் ரிபப்ளிகன்ஸ்?
நான் குடியரசுக்கட்சி ஆதரவாளன். கட்சிகளைக்களைக் கடந்து, நல்ல நவரச பேச்சாளர் என்பதால் பில் க்ளிண்ட்டன் பால் கொஞ்சம் சாஃப்ட் கார்னர் உண்டு.
ஏன் ரிபப்ளிக்கன் – கொஞ்சம் எனக்கு தெரிந்தளவில் விரிவாக பதிலளிக்க முயல்கிறேன்:
அவர்களின் கொள்கை மேல் கொண்ட ஈர்ப்புத்தான் முதல் காரணம். குடியரசுக்கட்சியின் கருக்கலைப்பு, ஒருபால் சேர்க்கை ஆகிய சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அவர்களின் மற்ற கொள்கைகளில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஜனாதிபதி ரீகன் அவர்களின் “Lesser Government Intervention” அதாவது அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாத ஒரு நாடு/பொருளாதாரம் என்பது என்னை மிகவும் கவர்ந்தது.
காப்பிடலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு என்று இதை நான் கூறுவேன். கம்யூனிசம் சம்பாதிப்பது அனைத்தையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு அரசாங்கத்திடமே கையேந்தச்செய்யும் ஒரு வறட்டு சித்தாந்தம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இறைந்து பெறவேண்டிய நிலை வந்தால் தனி மனித முன்னேற்றத்தை தடை செய்வது போல உள்ளது. வாசிப்பிற்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் எழுதத்ப்பட்ட ஒரு நடைமுறை சாத்தியமில்லாத மனிதகுல வளர்ச்சியை தடைசெய்யும் புதினம்தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் வீழ்ச்சி மனித பரிணாமத்தின் அவசியம் என்பதை உலக மக்களைப்போல நானும் உணரத்துவங்கியிருக்கிறேன்.
சுதந்திரக்கட்சி சமத்துவம், சமதர்மம் போன்ற ஏட்டு சுரைக்காய்களை இன்னும் தாங்கிப்பிடிப்பதால் அவர்களை வெறுக்கிறேன். அரசாங்க மருத்துவக் காப்பீடு, அரசாங்கத்தின் தயவிலான கல்வி போன்றவை எனக்கு பிடிக்கவில்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ‘நம்மை’ விட சிறந்தவர் யாருமில்லை என்பது ரிபப்ளிக்கன்கள் கருத்து. நமக்கு ‘அரசாங்கமே’ சிறந்த பாதுகாப்பு அளிக்கும் என்பது ஜனநாயக கட்சியின் வாதம்.
இப்போதைய அமெரிக்காவில் என் குழந்தையை நான் தனியார் பள்ளிக்கு அனுப்ப விரும்பினாலும் அரசாங்கத்திற்கு பள்ளிக்கான வரியை செலுத்தியே ஆகவேண்டும். ஒரு வகையில் என் பிள்ளைகள் எந்த பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதை அரசாங்கம்தான்
முடிவு செய்கிறது. (ஏன் நல்ல பள்ளியிருக்கும் மாவட்டத்திற்கு மாறி விட வேண்டியதுதானே என்று விதண்டாவாதம் செய்யலாம் – அதைப்பற்றி விரிவாக பிரிதொருநாளில்).
நாளை அதே முறையைத்தான் ஜனநாயகக்கட்சி மருத்துவத்திற்கும் அறிமுகம் செய்யவிருக்கிறது. வருடத்திற்கு 10,000 டாலர் மருத்துவ சேவை வரி கட்டும் நானும், வேலை செய்யாமல் அரசாங்க உதவி பெரும் ஒருவரும் ஒரே வரிசையில் தரமில்லாத ஒரு மருத்துவமனை வரிசையில் காத்திருக்ககும் நிலை வரும். இதில் ஹில்லாரி/ஓபாமா கொண்டுவருவதாக சொல்லப்படும் மருத்துவக் காப்பீட்டில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் நான் வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படுவேன், இப்போது பள்ளிகளுக்கு வரி கட்டுவதைப்போல! Rob the rich and distribute to poor என்பது ராபின்ஹுட்டிற்கும் எம்ஜியார் திரைப்படங்களுக்கு மட்டுமே உரிதானவை. அவரே தன் கடைசி காலத்தில் அமேரிக்கா வந்துதான் மருத்துவச்சிகிச்சை பெற்றார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏன் எல்லோரும் சமமாக இருக்கலாமே என்று இந்திய கம்யூனிஸ்டுகளைப்போல கேட்கலாம். அதற்கு லிங்கன் அவர்களின் கூற்றே பதில் – “The government that can do everything for us will take everything from us”. அரசாங்கம் சீரமைப்பு சட்டங்களை ஏற்படுத்திவிட்டு அதை வழிநடத்துவதை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவதே காப்பிடலிஸத்தின் அடித்தளம்.
The government should regulate by creating and amending laws not own institutes and run them. அரசாங்க சேவை என்றுமே தரத்துடன் இருக்காது என்பது கண்கூடு! அரசாங்கம் எப்போதுமே ஊழல் நிறைந்தது. அதன் தாக்கத்தை குறைப்பதே ஒரு
நாடு பொருளாதார முன்னேற்றம் அடைய தற்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே தீர்வு! இந்தியாவில் அரசாங்கம் நடத்தும் பள்ளிகள்,மருத்துவமனைகள் எந்த தரத்துடன் இருக்கிறதோ அதே தரத்துக்கு அமெரிக்கவிலும் வந்து விட ஜனநாயகக்கட்சி துணை போவதாலும் அவர்களைப்பிடிக்காது.
நான் மேலே குறிப்பிட்டதைப்போல அரசாங்கமே பல துறைகளை நடத்த வேண்டும் என்று டெமக்ரட்ஸ் விரும்புவதால் அவர்கள் வரிகளை உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். வரி அதிகம் கட்டுவது எனக்கு உவப்பில்லாததால் வரி குறைப்பை ஆதரிக்கும் குடியரசுக்கட்சியை எனக்குப் பிடிக்கும். பதில் மிகவும் நீண்டு விட்டது. விளக்கம் தேவைப்பட்டால் மீண்டும் தொடர்கிறேன்!
2. ஜான் மெகயின் – சாரா பேலின் அல்லது பராக் ஒபாமா – ஜோ பைடன்: எவருக்கு உங்க ஆதரவு? அடுத்த ஆட்சிக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆகிறார்கள்.
இதற்கான பதிலை என் சென்ற பதிலில் இருந்தே ஊகித்திருக்கலாம். மெக்கெய்ன்னுக்குத்தான் என் ஆதரவு!
பராக் சிறந்
த பேச்சாளர். அமெரிக்கத் தேர்தலில் இந்த நிலையை எட்டியிருக்கும் முதல் கருப்பினத்தவர் என்ற வகையில் அவரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அதே சமயம் அவருக்கு பின்னால் இருக்கும் கட்சி இறந்த சித்தாந்தங்களை தூக்கிப்பிடிக்கும் வயதானவர்களும் புதிய சிந்தனைகளை ஏற்காத ஒரு கட்சி. சென்ற இரு தேர்தலின் போது பத்திரிக்கைகளில் வந்த பல கட்டுரைகள் டெமக்ரட் கட்சியின் அடிவேரை அம்பலப்படுத்தி அந்த கட்சிக்கு ஒரு நல்ல தலைமை இல்லாத குறையை சுட்டியிருக்கிறார்கள். அந்த ஒரு பெரிய இடைவெளியை ராஜ தந்திரத்துடன், இனபற்றையும் மாற்றம் என்ற வரையறுக்காத கொள்கையையும் முன்னிறுத்தி சொகுசாக அமர்ந்து கொண்டவர்தான் பராக். குடியரசுக் கட்சி அவ்வாறல்ல. இப்போதே Fiorina, Bobby Jindal, Palin போன்ற இள ரத்தங்களை பாய்ச்சி தன் கொள்கைகளை உயிர்பித்துக்கொண்டே இருக்கும் ஒரு கட்சி. என்னைப்பொருத்தமட்டில் பராக் இந்த ஆண்டு பொறுத்து அடுத்த தேர்தலாண்டில் போட்டியிட்டிருக்கலாம். அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடும்படி இல்லை. அனுபவமின்மை, தலைமை ஏற்று நடத்தகுடிய முதிர்ச்சியின்மை ஆகியவை பெரிய கெடுதல்களை உருவாக்கலாம்.
மெக்கெய்னின் அனுபவம், நாடாளும் திறமை, நாட்டுக்கு ஆற்றிய சேவை, பல்லாண்டு கால செனட்டில் இருகட்சிகளை பல திட்டங்களில் ஒருங்கிணைத்த பாங்கு, பொறுமை, எதிர்த்து போட்டியிட்ட தன் கட்சி மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்க
ளை கையாண்ட முதிர்ச்சி ஆகிய பல பண்புகளுக்கு டெமக்ராட்ஸிடம் எந்த சரியான பதிலுமில்லை!
3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??