Tag Archives: KSR

டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் எடுப்பதெல்லாம் அசல் என்று நம்புவது போல் இந்தப் பதிவும் சொந்த சரக்கு என்று ஏமாறுபவர்களுக்கான உரிமைதுறப்பு: இது உண்மை செய்தி அல்ல!

Tamil Movies on Spotசென்னை, மே. 20: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் தசாவதாரம்படம் வெளியிட தடை செய்யக் கோரி இன்ட்டர்போலில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை இயக்குநர் நாஞ்சில் குமரனிடம், ‘டாவின்சி கோட்‘ எழுதிய டான் ப்ரௌன் கொடுத்துள்ள புகார் விவரம்:

அமெரிக்காவின் நியூ ஹாம்ஷைரை சேர்ந்தவர் டேன் ப்ரவுன். இவர் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்‘ என்ற கதையை முதலில் சுட்டு எழுதினார். அதன் பின் ‘தி டாவின்சி கோட்‘ புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகத்தை பெருமளவில் விற்க இயேசு கிறிஸ்துதான் சரியானவர் என்று நினைத்து அவரை பயன்படுத்தியுள்ளார்.

அப்பொழுது அதைப் வாங்கியவர்களும், கதையைப் படித்துவிட்டு, தங்களது அபிலாஷைகளுக்கு ஏற்ப விமர்சனங்கள் எழுதியுள்ளனர். (வாசிக்க: Thinnai: “டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி! – ஜடாயு“)

இதற்கிடையில், ஒரு நாள் கமல் தொலைபேசியில் டேன் பிரவுனை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். தனக்கு முகப்பூச்சு போட வட அமெரிக்காவில் இருந்து வருபவர்களைப் போல் பிரௌனும், கே எஸ் ரவிகுமாருக்கு உதவி இயக்குநராக நியமிக்கும்படி கமல் கூறினாராம்.

Kamal in dasavatahramஜூன் ஆறாம் தேதி, ‘தசாவதாரம்’ படம் வெளியாகிறது. ‘என்னுடைய கதையில் இயேசுவின் வழித்தோன்றல்கள் என்றேன். அதை வைத்து உலகெங்கும் சுற்றிச் செல்லும் கதையை அமைத்தேன். இங்கே இயேசுவே காணோம் என்பது போல் ஈரைப் பேனாக்கி, பேனை பேயாக்கி, பேயைப் பெருமாளாக்கி மூழ்கடித்து வளர்த்திருக்கிறார்கள்! ‘, என்று கேஎஸ் ரவிக்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார் பிரௌன்.

எனவே, திருமலை வாழும் வெங்கடேசர், அமெரிக்கா வாழும் பிரவுன் ஆகிய இரு தரப்பையும் அழைத்து பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை ‘தசாவதாரம்’ படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கே எஸ் ரவிகுமார், ‘கமல் வேண்டுமானால் ஆங்கிலப் படங்களை எடுத்துக் கையாள்வதை வழமையாகக் கொண்டிருக்கலாம். நான் என்னுடைய படங்களில் இருந்துதான் மறுபதிப்பை உருவாக்குகிறேன்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

வழக்கு நடக்கும்போது கருத்து எதுவும் தெரிவிக்க கமல் மறுத்துவிட்டாலும், ‘என்னுடைய படத்தில் தொப்புளும் தொடையும் தென்பட்டாலும் தெற்கத்திய தொன்மைகளுக்கு ஏற்ப ‘யூ’ முத்திரை வழங்கியுள்ளது தணிக்கை குழு. ஆனால், ஆட்ரேயின் அக்குள் கூட காட்டாத ஆங்கிலப் படத்துக்கு ‘ஏ’ கொடுத்தார்கள் சென்சார். இதை சுட்டிக் காட்டி, இரு படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்த விரும்புகிறேன். மேலும் அந்தப் படத்தில் துப்பு துலக்கி கண்டுபிடிப்பார்கள். அப்படிப்பட்டKamal and asin in Dasavatharam எந்தவிதமான புதிர் சமாச்சாரமும் இங்கே கிடைக்காது!’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


சைவம் x வைணவம்? – இராமானுசர் வழக்கு தொடுக்க முடியுமா?
கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

கே எஸ் ரவிகுமார் :: ‘புரியாத புதிர்‘ எங்கிருந்து சுடப்பட்டது ஆராய்ச்சி:
Balaji’s Thots: Shyamalan and K.S.Ravikumar

ஒவ்வொரு படத்துக்கு ஒரு விதி:
Religion & Spirituality : Upcoming Competitive Intolerance Events [varnam]

டாவின்சி கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாக திமுக அரசு தடை விதித்தது: பதிவுகள் Kamalahassan in Dasavatharam - Tamil Movie Reviews, Story Previews
1. Thinnai: “டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1 :: K. ரவி ஸ்ரீநிவாஸ்

2. தேன் » Blog Archive » சிறில் அலெக்ஸ்: “என்ன’டா’ வின்சி கோட்?”

தொடர்புள்ள புனைவுகள்:
1. கருத்துக்களம் (இந்து மதம்/இராமன்): “தி இராவணன் கோட்’ (The Ravana Code) – சிறுகதை”

2. தமிழோவியம் சிறுகதை (புதிர்கள்): “தாத்தாச்சாரியார் கோட் – என். சொக்கன்

சினிமா விமர்சனங்கள்:
முகமூடி: டாவின்சி கோட் – புதிரா புனிதமா?

புத்தக அனுபவம்:
1. படித்ததில், பார்த்ததில் ரசித்தது உணர்ந்தது – செந்தில் குமரன்: “டாவின்சி கோட் – இயேசு கிறிஸ்து திருமணமானவர் என்ற நாவல்”

2. அபுல் கலாம் ஆசாத் :: எண்ணம்: டாவின்சி கோடு – THE DA VINCI CODEKamal in Dasavatharam - daVinci Code spoof

பத்திரிகை அலசல்:
ஜீனியர் விகடன், விகடன்.காம் :: தி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்

மதம்:
நேசகுமார் :: செக்சும் கடவுளும் சாத்தானும்

அசல் செய்திகள் (100% நிஜ நிகழ்வுகள்):
1. Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam « Tamil News: “நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு”

2. ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order « Tamil News: “கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு”

‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

தொடர்பான செய்திகள், தகவல்கள்:

1. ‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

2. சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

3. கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

4. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி

5. டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

6. தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

7. கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

8. பாஸ்டனில் தசாவதாரம்

Dasavatharam Kamal kizhavi old lady kungumam Makeup

India Glitz handwritten copyrights lawsuit Dasavatharam Kamal

English IndiaGlitz handwriting copyright Violations legal Dhasavatharam Kamalahasan

  • Kamal has done the story, screenplay and dialogues. Kamal had written the dialogues for Mumbai Xpress and Virumandi in recent times.
  • The story does not straddle between centuries, but between millennia.
  • Kamal starts off as Rangaraja Nambi who gets under sea along with a Perumal idol. Immediately, the story jumps off 1000 years later, with Kamal being shown as a scientist in America.
  • One of the 10 roles the actor doing in Dasavatharam is based on popular pop singer Daler Mehendi.
  • Jayapradha is playing a prominent role in Kamal Haasan’s Dasavatharam.
  • Kamal had played ‘Nepoleon’ in a pivotal role in his Virumandi. Now in his Dasavatharam, he has cast him in the role of a king.
  • திரைப்படத்தில் சுனாமியும் இடம்பெறுகிறது.

நன்றி: இந்தியா க்ளிட்ஸ்