Tag Archives: India

தமிழினத் தலைவர்களைப் புறக்கணிக்கும் கூகிளைப் புறக்கணிக்கும் போராட்டம்

மம்தா பேனர்ஜி இருக்கிறார்;

அனில் ககோத்கர் (யாருப்பா இவரு?!) இருக்கிறார்!

அமெரிக்காவுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கூட இடம் உண்டு.

அமெரிக்கரான டேவிட் மல்ஃபோர்டும் உண்டு.

இந்தப் பட்டியலில் ஏன் ஒரு தமிழருக்கு கூட ‘மேற்கோள் மழை’ பொழிய இடம் ஒதுக்கப்படவில்லை?

கூகிள் சோதனைக்கூடம் வழங்கும்: In Quotes

'ஒபாமா ஸ்டாலின் மாதிரி; மெக்கயின் அசப்பில் கருணாநிதி சாயல்'

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

(c) Sathya - Tamil Obama in Dhoti

(c) Sathya - Tamil Obama in Dhoti

பெருந்தலைகள் தீவிரமான விவாதிக்கும் பதிவில் எதுக்கு என்னைக்கேள்வி கேட்டு இடுகை போடறீங்கன்னு புரியுது. இருந்தாலும் நானும் தீவிரமாத்தான் பதில் சொல்லப்போறேன். அவங்க ரெண்டு பேரையும் தேர்ந்தெடுக்க சொன்னா அடாவடியான மெக்கெயின் வேட்டிய மடிச்சுக்கிட்டு இறங்கவும், ஹார்வார்ட் ஒபாமா சேட்டு மாதிரி குர்தா பைஜாமாவும் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

Presidential makeoverஆ ரெண்டு பேரையும் இந்தியனா மாத்தணும்னு என்னை தேர்ந்தெடுக்க சொன்னதால அவங்க உடல்வாகு பின்னணி பாத்து முடிவு பண்ணுவோம். ஒபாமாவை மெக்கயினோட பாத்தா கருணாநிதியையும் ஸ்டாலினையும் பாக்கறா மாதிரி இருக்கு. அவ்வளவு Generation Gap ரெண்டு பேருக்கும்.

Obama Poster in Tamil Nadu Shtyle (c) Sathya

ஒபாமா தென்னக மக்களை போல கறுநிறத்தை கொண்டவர் அவருக்கு வெள்ளை வேட்டி சட்டைய போட்டா நல்லா இருக்கும். அவரும் (அரசியலுக்கு) சின்ன பையன் மாதிரி இருக்காறா அதனால ஒரு பெரிய ஆள் கெத்து குடுக்க அதுதான் சரிவரும். ஏற்கனவே ஒல்லியா இருக்கறவருக்கு குர்தா பைஜாமா போட்டா சைடுல ஒரு ஜோல்னா பைய தொங்கவிட்டு ‘ஆங் நீங்க சரியாத்தான் சொல்றீங்கன்னு மண்டை மண்டைய ஆட்டறமாதிரி’ கிண்டலா ஒரு விளம்பரம் பண்ணுவாங்க மெக்கெயின் ஆளுங்க. அதுனால ஒபாமாவுக்கு வேட்டி சட்டை.

US Poll Special by satya

மெக்கெயினு கொழுத்த பணக்காரர். நல்ல எங்கூரு மிலான்சந்த் சேட்டு மாதிரியே இருக்கார் பாக்கறதுக்கும். அவருக்கு வேட்டி சட்டை போட்டா போண்டா மணி மாதிரி இருக்கும். அதனால மக்கெயின்னுக்கு பைஜாமா குர்தா.

7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

சத்யா

அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட்

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

உன்மைதான். தெற்காசியர்களின் பங்கேற்பு கனேடிய அரசியலில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இதில் தாராளக் கொள்கைகளைக் கொண்ட புதிய ஜனநாயாகக் கட்சியின் பங்கை மிகவும் பாராட்டியாக வேண்டும். (தலைவர் ஜாக் லெய்ட்டனின் மனைவி சீன வம்சாவளி ஒலிவியா சௌ). அதிக அளவில் சிறுபான்மையினரை நிறுத்துவது இவர்கள்தான்.

அதற்கு அடுத்தபடியாக லிபரல்கள். பஞ்சாபியனர் அதிகம் வசிக்கும் (சொல்லப்போனால் பஞ்சாபியர் மாத்திரமே வசிக்கும்) டொராண்டோவின் வடமேற்குப் புறநகர் ப்ராம்ப்டனில் (Brampton) ரூபி பல்லா தற்பொழுதைய லிபரல் எம்.பி. அழகுப்போட்டி ஒன்றையே மூலதனமாக அரசியலில் இவர் வந்தபொழுது எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் தற்பொழுது தொகுதியின் அடிப்படை நலன்களை நல்ல முறையில் பாதுகாக்கிறார். இன்னும் சில பஞ்சாபியினர் எம்.பிக்களாக இருக்கிறார்கள், (ஒண்டாரியோ, அல்பெர்ட்டா, ப்ரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில்). பஞ்சாபியரைப் போலவே பாக்கிஸ்தானியர், இரானிய வம்சாவளியினர் என்று சிலரும் எம்பிக்களாக இருக்கிறார்கள். சீனர்களைச் சொல்லவே வேண்டாம்.

வலதுசாரி கன்ஸர்வேட்டிவினர் பொதுவில் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியைப் போலத்தான் இவர்கள் கூட்டத்தில் பொற்றலை (Blond) இல்லாதவர்கள்தான் சிறுபான்மை. கறுப்பு, சீனர், இந்தியர் இவர்கள் யாராவது தென்பட்டால் அதிசயம்தான். ஆனால் சமீபத்தில் பார்க்க நன்றாக இருப்பதால் ஸ்டீபன் ஹார்ப்பரின் எல்லா போட்டோக்களிலும் பின்னால் நீல டர்பனை அணிந்த ஒரு சீக்கியரும், இடுப்புக்குக் கீழே ஒளிந்துகொண்டு ஒரு சீனரும் தென்படுகிறார்.

ப்ளாக் க்யெபெக்வாவுக்கு இந்த நாடகமாடும் தேவைகூட கிடையாது.

ஆனால் தமிழர் யாரும் இன்னும் மத்திய அரசியலில் முதலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. இங்கிருக்கும் இந்தியத் தமிழர்களின் அதிகபட்ச சமூக நடவடிக்கை கர்நாடக சங்கீதக் கச்சேரிக்குப் போவதுதான். எனவே அவர்களை ஒதுக்கிவிடலாம்.

டொராண்டோ பெருநகர் பகுதியில் மாத்திரம் இரண்டரை லட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்; மருத்துவர், வழக்கறிஞர், தொடங்கி மாஃபியா வரை எல்லாமே உண்டு. ஆனால் ஜனநாயக முறை அரசியலில் இவர்கள்க்கு இன்னும் இடமில்லை. இதற்குக் காரணம் கடின உழைப்பாளிகள் பலருக்கு அரசியல் தேவையற்றதாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் பிற தமிழர்கள், தமிழர் நலனை மாத்திரமே முன்வைக்கிறார்கள். (அதாவது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை). இது தொகுதியில் இருக்கும் பிற சமூகத்தினரின் ஒரு ஓட்டுகூட அவர்களுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது.

கனேடியத் தமிழர்கள் பெரும்பாலும் உள்ளார்ந்த பார்வையையே கொண்டவர்கள், இதை உதறிவிட்டு கனேடியப் பொதுநலனை முன்னிருத்தி அதன் வாயிலாகத் தமிழர் நலனை முன்னெடுத்துச் செல்லாதவரை இவர்களுக்கு மத்திய அரசில் என்ன, உள்ளூர் மாநகராட்சித் தேர்தலில்கூட ஒரு இடமும் கிடைக்கப்போவதில்லை. பஞ்சாபியனர் இதைத் திறமையாகச் செய்கிறார்கள், பாக்கிஸ்தானியர் கூட. ஆனால் 2.5 லட்சம் தமிழர்களில் இன்னும் ஐந்து வருடங்களிலாவது உள்ளூர் நகர்மன்ற உறுப்பினராகும் வாய்ப்புகூட யாருக்கும் இல்லை என்பது வருத்தமான நிலைதான்.

அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பைக் குறித்து என்னைவிடத் திறமையாகக் கருத்து சொல்லப் பலரும் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை அரசியலில் ஈடுபடும் பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் தங்கள் பின்புலத்தின் காரணமாகவோ, அதன் நலனுக்காகவோ இல்லை. அதையும் மீறித்தான் அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். (Indians are not in American politics because of it, they are there despite of it.) தனிப்பட்ட நலன்கள் மாத்திரமே அவர்கள் முன்வைப்பது. பாபி ஜிந்தால் ஒருவர்தான் ஓரளவுக்கு அமெரிக்க அரசியலோடு இயைந்துபோகிறார் என்று தோன்றுகிறது.

3. டோக்யோவிலும் தாங்கள் வசித்ததுண்டு அல்லவா? ஜப்பான் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுப்பு எவ்வாறு வேறுபடுகிறது?

ஜப்பானிய அரசியல் அமெரிக்கக், கனேடிய, ஏன் இன்னும் பல ஜனநாயக முறைகளிலிருந்து வேறுபட்டது.

1950களில் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை இரகசியமாகச் செலவிட்டு தஙகள் சித்தாந்தங்களை ஜப்பானிய மண்ணில் வேரிடச் செய்தார்கள். இதே ரீதியாக பாக்கிஸ்தான், சிலி, ஈரான் உட்பட பல நாடுகளில் அவர்கள் கொடுங்கோலர்களை வளர்ந்த்தெடுக்க ஜப்பான் கொஞ்சம் தப்பித்துக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றிக் கொண்டது. 1955 தொடங்கி இன்றுவரை ஜப்பானில் (ஒரு சிறிய இடைவெளியைத் தவிர) லிபரல் டெமாக்ரடிக் என்று சொல்லப்படும் ஒரே கட்சிதான் ஆண்டுவருகிறது. இது கலவை இடது-வலது கட்சி.

தனியார் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களில் ரிபப்ளிக்கன் கட்சியை ஒத்தது இதன் கொள்கை, ஆனால் வலுவான, எல்லாவற்றிலும் தலையிடும் மத்திய அரசு, இலவசப் படிப்பு, மருத்துவம், ஓய்வுப் பாதுகாப்பு போன்ற பல விஷயக்களில் அமெரிக்க டெமாக்ரட்களை ஒத்தவர்கள். அதைத்தவிர பொதுவில் ஜப்பானின் கலாச்சாரம் இடதுசாயும் லிபரல் கலாச்சாரம்தான், இங்கே கருக்கலைப்பு எதிர்ப்பு, வலுவான ராணுவம், எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடலாம் போன்ற சித்தாந்தங்கள் வேகாது.

ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (ஜியூ மின்ஷுதோ) உட்கட்சி ஜனநாயகம் என்ற வகையில் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது. ஜியூவின் உள்ளே பல பிரிவுகள் உண்டு. இவர்களுக்குளே பூசல் மிகவும் பிரபலம். 55 தொடங்கி ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட 25 பிரதமர்கள் என்று ஆட்சி-ஆட்சிக்கலைப்பு ஆட்டங்கள் ஜப்பானில் சாதாரணம். ஆனால், ஜியூக்கள் மற்றவர்கள் தலையெழும்பச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் திறமையில் உன்னதம் கண்டவர்கள். கட்சியில் அடுக்கு முறைகள் வலுவானவை.

இதையெல்லாம் தாண்டி ஒபாமா மாதிரி ஒருவர் ஜப்பானில் வந்துவிட முடியாது.

அடுக்கு முறையில் படிப்படியாக மேலெழும்பி வருபவர்கள்தான் பிரதமர்கள். 1999-2001 ல் ஜப்பானில் நான் வசித்த பொழுதே யோஷிரோ மோரி, ஜுனிச்சிரோ கொய்ஸுமி, ஷின்ஷோ அபே போன்றவர்களின் பெயர்கள் கெய்ஸோ ஒபூச்சிக்கு அடுத்தபடியாக அடிபட்டன. இவர்கள் அனைவரும் பின்னால் ஒவ்வொருவராக பிரதமர்கள் ஆனார்கள். அப்பொழுது மேலடுக்கில் இருந்ததில் இன்னும் பிரதமர் ஆகாமல் இருப்பவர் டோக்கியோ மேயர் இஷிகாரா ஒருவர்தான். எனவே ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள்ளே ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட வரிசையில் நகர்ந்து இலக்கை அடைவதுதான்.

பெண்களுக்கு ஜப்பானிய அரசியலில் இன்னும் சொல்லிக்கொள்ளும் இடமில்லை.

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

தொடரும்…

மைத்ரேயன் – India & USA – Comparing the Political Process

எழுத்து: மைத்ரேயன்

இந்திய ஜனநாயகமும், தமிழக ஜனநாயகமும் ஒரு வகை கலவை ஜனநாயகங்கள்.

ஜனநாயக அமைப்புகளை மேற்கத்திய அளவுகோல்களில் வைத்து அளப்பது முற்றிலும் தவறு என்று நான் சொல்லத் தயாரில்லை. ஏனெனில் இந்திய ஜனநாயக அமைப்பே, அதன் உருவத்தைப் பொறுத்துச் சொல்கிறேன், பெருமளவு மேற்கத்திய வடிவுதான்.

  • அமெரிக்கா போல ஒரு சட்ட அமைப்பு,
  • ஃப்ரான்சைப் போல ஒரு கருத்தியல்,
  • பிரிட்டனைப் போல ஒரு அரசு அமைப்பு

என்று மூன்று வகை ஜனநாயகங்களை மாதிரியாகக் கொண்டு அம்பேத்காரும் இதர அரசியல் சாசனகர்த்தாக்களும் கட்டமைத்தார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் கொண்ட ஒரு விசித்திர அமைப்பு நம்முடையது.

மேலை ஜனநாயக அமைப்புகளின் பின்புலனில் கிரேக்கத்தில் முன்பு நடந்த அரசியல் மோதல்கள் இருக்கின்றன. கிரேக்க அரசியலில்- கிருத்தவத்துக்கு முந்தைய கிரேக்கத்தைச் சொல்கிறேன் – பிரதிநிதித்துவ ஜனநாயகம், நேரடி ஜனநாயகம் என்ற இரண்டு உண்டு. Direct democracy / participatory democracy, and indirect democracy/ representative democracy என்ற ஆங்கிலப் பதங்களை அப்படி முழி பெயர்த்திருக்கிறேன், மன்னிக்கவும்.

City state ஆக இருந்த கிரேக்க அரசுகளில் பல இடங்களில் குடியுரிமை பெற்றவர்கள் அரசின் செயல்பாட்டிலும், முடிவு எடுக்கும் சடங்குகளிலும் தொடர்ந்து பங்கெடுக்க வற்புறுத்தப் பட்டார்கள். அது மட்டுமல்ல, சில ஒய்ரோப்பிய நாடுகளில் இருப்பது போல வயது வந்த எல்லா ஆண்களும், முடமாக இல்லை என்றால், கட்டாயம் ராணுவ சேவை செய்தாக வேண்டும் என்று கூட வற்புறுத்தல் இருந்தது. இந்த வகை நாடுகள் / நகரங்கள் அனேகமாக participatory/ direct democracy என அறியப்படும்.

இதர அரசியல் அமைப்புகளில் சிலர் பெருவாரி மக்களின் ஆதரவைப் பெற்று பிரதிநிதிகளாகச் செயல்பட்டார்கள். இந்த வகை அமைப்பில் கூலிக்காகவும், பதவிக்காகவும், பொருளாதார வசதிக்காகவும் பணி செய்ய வந்த மனிதர்களால் ஒரு ராணுவம் அமைக்கப்பட்டது. அரசு இந்த வகை அமைப்புகளில் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ஒரு தனி உரு பெற்றது. இந்த வகை அமைப்புதான் இன்று பெருவாரி மேலை நாட்டு அமைப்புகளில் ஆட்சியில் உள்ளது என்றாலும், மற்ற அரசியல் அமைப்புடைய உந்துதல் எல்லா மேற்கத்திய நாடுகளிலும் தொடர்ந்து அரசியல் அரங்கில் இடம் கேட்டு முரண்டுகிறது.

அனேகமாக இடது என்று அறியப்படும் எல்லா அரசியல் இயக்கங்களும், இந்த நகரக் குடிமகன்களால் ஆன சுய ஆர்வ ராணுவப்படை கொண்ட அரசியல் அமைப்பு வேண்டும் என்று முரண்டு செய்வன. கிருத்தவ அரசியல், வலது சாரி அரசியல் செய்யும் இயக்கங்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை முன் நிறுத்துவன.

அமெரிக்க அரசியலில் populism is allowed, but is filtered through gargantuan administrative rules and regulations of many layers – some fascist in origin, some elitist in nature, some repressive of working class aspirations, some purely for the sake of administrative and technical convenience- control popular participation in the political process.

In India, we have not managed to evolve such a sophisticated control system. Instead we have a deeply fascist but also populist system of political participation. It is more like the carnival model. Where people come for entertainment and get just that. They believe they participated in a deeply democratic process. But in reality it is one of the worst forms of elitist manipulation of the masses.

இருந்தாலும் பொது வெளியில் இந்திய மக்களுக்கு அரசியல் ரீதியாக இயங்க இருக்கும் சுதந்திரம் அமெரிக்கருக்குக் கிடையாது. (உதா: பெருவாரியான இந்தியருக்கு எந்த அடையாள அட்டையும் கிடையாது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற மட்டும்தான் தடை உள்ளதே தவிர உள்நாட்டில் எங்கும் (கருத்தளவிலாவது) சுதந்திரமாக அவர்களால் உலவ முடியும்.

அதே நேரம் அமெரிக்கருக்கு அரசியலிலும், அரசு அமைப்புகளிலு இருக்கும் செயல் நிமித்தமான உரிமைகளும், பங்கெடுக்கும் வாய்ப்புகளும், அரசைத் தட்டிக் கேட்க இருக்கும் சட்ட, நிர்வாகக் கருவிகள் மேலும் விதிகள் எல்லாம் இந்தியருக்கு கிடையாது.

விரித்து எழுத எனக்கு நேரம் இல்லை, விருப்பமும் இல்லை.

Controlled and highly regulated american democracy is not really a people’s democracy. It is in general nicely manipulated elitist democracy. எனவே அது மோசமானது என்ற இடது சாரிப் புலம்பலை நான் முன்மொழியவில்லை. அது முன்னேற நிறைய தேவையும், இடமும் இருக்கிறது என்று மட்டும் சுட்டுகிறேன்.

இந்தியா உருவ அளவிலாவது ஒரு பொதுமக்கள் ஜனநாயகம்தான். செயல் முறையில் அது அமெரிக்க ஜனநாயகத்தை விட மோசமான மேல்தட்டு மனிதரால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ‘ஜனநாயகம்’ என்பதில் ஐயம் கொள்ள வேண்டாம். ஆனாலும் அதில் அமெரிக்க ஜனநாயகத்தை விட மேலான ஜனநாயகமாக வருவதற்கான வழிவகைகள் அதிகம்.

If only the indian middle class got out of its babu mentality, and learnt its key role in the system as the guardian of the ethics and functional efficiency of the state and polity, and also decides to take responsibility for the conduct of the political affairs of the nation, India will be a far superior democracy.

Of course the same path is open to americans too. But mobilizing American middle class to any mass action is far more difficult than in the case of India.

At least that is my biased opinion! 🙂

So please don’t use a lot of invectives against Indian democracy and cut it some slack. It is indeed obscene in many ways, but 1000 years of colonialism does not leave a lot of independent thinking as a culture among people of a nation.

தொடர்புள்ள வாசிப்புக்கு :: Robert B. Talisse – A Pragmatist Philosophy of Democracy – Reviewed by David Hildebrand, University of Colorado Denver – Philosophical Reviews – University of Notre Dame

இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது? – அமெரிக்க அதிபர் தேர்தல்

நேற்றைய கேள்வி – பதிலின் தொடர்ச்சி…

3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??

பெரிய மாறுதல்கள் வர வாய்பில்லாவிட்டாலும் அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை எந்த வகையிலாவது சட்டமாக்கிவிட டெமக்கரட்ஸ் உத்வேகம் காட்டுகிறார்கள்.அதன் மூலம் ஆப்ரிக்க அமேரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று டெமக்ராடிக்கட்சி நினைக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகைகளில் அவ்விரு சமூகங்களே அதிகம் பெறுவதால் இவ்வாறான திட்டத்தை அறிமுகங்செய்வது அந்த வோட்டு வங்கியை தனதாக்கிக் காக்க முடியும் என்பது டெமாக்ரட்ஸின் திட்டம்.அவர்கள் தங்கள் தேவையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! அதனால் ஜனநாயகக் கட்சி ஆட்சிஅமைக்கும்பட்சத்தில் அரசாங்க மருத்துவக் காப்பீடு எந்த வகையிலாவது அமல்படுத்தப்படும்.

இவ்வாறான அரசாங்க் தலையீட்டிற்கு அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் தேவைப்படும். அதற்கு ஒரே வழி வரி அதிகரிப்பபது மட்டுமே. பராக் மற்றும் ஹில்லாரியின் மருத்துவக் காப்பீட்டை அமல் படுத்த அமெரிக்கர்களின் வரியை பத்து சதவீதமாவது உயர்த்தினால் மட்டுமே முடியும் என்று பல வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்ததாகப் போர். அமெரிக்காவின் பொருளாதாரம் போரினால் விளையும் நன்மைகளில் வளர்ந்தது (Benefactor of the ‘Broken Window’ economic principle). எங்காவது எதற்காகவாவது போர் நடந்தால்தான் அமெரிக்காவினால் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும். முன்னாள் சோவியத் ரஷ்யாவுடன் கொண்ட பனிப்போரினால் அமெரிக்க வர்த்தகம் பல மடங்கு வளர்ந்தது. சோவியத்தின் மறைவிற்குப்பிறகு தனது தளவாட விற்பனை, மற்ற நாடுகளைக் காக்க வாங்கும் மானியம், குறைவற்ற எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் போன்ற பல வர்த்தக தொடர்புகளிலும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நெருக்கடி வளர்கிறது. அதை சமன் செய்ய அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாகக் காட்டி மிரட்டுவது அவசியமாகிறது.

பராக் ஜனாதிபதியானால் அவ்வாறான ஒரு சக்தி வாய்ந்த தளபதியாக செயல்படுவாறா என்பது சந்தேகமே. Barack’s ascend to presidency could start America’s fall from being a super power.

4. இந்தியர்களின் நலனுக்கு எவரின் எந்தக் கொள்கை உகந்தது? எச்1பி எண்ணிக்கை அதிகரிப்பார்களா? பச்சை அட்டை துரிதப்படுமா? எவரினால் இந்தியாவுடன் வர்த்தகம் மேம்படும்?

The biggest myth amonst Indians is that emocrats favor aliens or immigration which is NOT the fact! உங்களுக்கு சந்தேகமிருந்தால் ஜான் கெர்ரியின் சென்ற தேர்தல் வலைதளதில் தேடிப்பார்க்கவும்! இப்போதைய தேர்தலில் இம்மிக்ரேஷனுக்கு அத்துணை முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இரு வேட்பாளர்களும் அதைப்பற்றி பெரும் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வந்தேறிகளுக்கான குடியுரிமை சட்டங்களை முன்னின்று இயற்றி அதை அமல் படுத்தியது குடியரசுக் கட்சியே!

என்னை பொருத்தமட்டில் (ஒரு சுயநல நோக்கில்கூட) எச்1பி எண்ணிக்கை இப்போதிருக்கும் அளவே அதிகமாகப்படுகிறது. மேலும் எச்1பி, பச்சை அட்டைக்களில் அரசாங்கம் நேரிடையாக தலையிடுவதில்லை. பச்சை அட்டை வழங்க அதிக ஆண்டுகள் எடுப்பதற்குக்காரணம் இல்லீகல் இமிக்கரண்ட்ஸ் எனப்படும் சட்டவிரோத வந்தேரிகளுக்கு அரசாங்கம் சட்டபூர்வ குடியுரிமை வழங்க முடிவெடுத்ததே காரணம். அந்த திட்டத்தினால் குடிநுழைவுத்துறையினர் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விண்ணப்பங்களை பார்க்க தேவையான ஆட்பலமின்றி நிலுவையில் கிடத்தப்பட்டது. மேலும் எச்1பி அதிகப்படுத்துவதாலும் பச்சை அட்டை வழங்க அதிக தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரம் முன்னேற்ற ஏற்பட்டு திறனுள்ள ஆட்களுக்கான தேவை ஏற்பட்டால் ஒழிய எச்1பியை அதிகப்படுத்துவது முட்டாள்தனமே. மேலும் ஏற்கனவே இங்குள்ளவர்களின் பணி நிலவரமே ஆட்டம் காணும் போது அதிக ஆட்களை இறக்குமதி செய்வது மக்களுக்கு அபிமானம்தரக்கூடியது அல்ல.

BRICS – Brazil, Russia, India, China and South Africa (Previously BRIC now SA joined the league to become the emerging five) ஆகிய ஐந்து நாடுகளின் வளர்ச்சியை புறக்கணிக்கமுடியாத ஒரு தளத்தில் இன்றைய பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக வர்த்தகதில் போட்டியிடவும், அதில் கலந்து கொள்ளவும் இந்த ஐந்து நாடுகளிடமும் நல்ல நட்புறவை பேணுவதே புத்திசாலித்தனம் என்பதை இரு கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் எந்த கட்சி வந்தாலும் இந்தியாவுடனான வர்த்தகமும் பொருளாதார பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும் என்பதே உண்மை!

5.நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஸ்லேட் போன்றவை ஏன் குடியரசுக் கட்சிக்கு சார்பாக தலையங்கங்கள் தீட்டுவதில்லை?

அதையே நான் திருப்பிக்கேட்கலாம் – ஏன் அவர்கள் ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சியைத் தாக்குவதைப்போல தாக்குவதில்லை? தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் எப்படி மிடியா உலகையே தன் பிடியில் வைத்திருக்கிறதோ அதைப்போலவே இங்கு ஜனநாயகக் கட்சியும். பராக் ஒரு கொலையே செய்தாலும் அதை கருணைக் கொலை என்று வாதிடக்கூடிய பத்திரிக்கைகள் இங்கு அதிகம். மேலும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சிக்காரர்கள் அந்த பத்திரிக்கைகளை படிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். முன்னால் கம்யூனிஸ்ட் மற்றும் இடது சார்புடைய வெளிநாடுகள் மூலம் அவர்களுக்கு பணம் வருவதாலும் இருக்கலாம்.

டைனோ | டைனோ