சுக்லாம்பரதரம்…
லாஸ் வேகாசில் இருக்கும் ரெட் ராக் கான்யானில் இந்தக் காட்சி காணக் கிடைக்கிறது. வியாசரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, இடப்பக்க தந்தத்தை உடைத்து மஹாபாரதம் எழுதினார் கணேசர். அந்த நிலையில் இங்கே தரிசனம் தருகிறார்.
ரெட் ராக் கேன்யான்: ஆஞ்சனேயர்
பெருமாள் கோவில்களில் அனுமான் எப்பொழுதுமே தனித்து நிற்பார். இங்கே அவ்வாறு எழுந்தருளியிருக்கிறார்.
பெருமாளின் பாதார விந்தங்களைச் சேவிக்கும் கருடனும் அனுமனும்
அண்டமெங்கும் நிறைந்தவர் நாராயணர். வெங்கடாசலபதி கோவில்களில், மூலவரை நோக்கி கை கூப்பியபடி கருடரும் ஆஞ்சநேயரும் இருக்கிறார்கள்.
கீழே, அமெரிக்காவின் செம்பாறை செங்குத்துப் பள்ளத்தாக்கில் இந்தக் கோலத்தில் நிற்கிறார்கள்.
படங்களைக் கிளிக்கினால், பேருருவம் தெரியும். ஸ்தூல சரீரம் பெரியதாக விளங்கக் கிடைக்கும்.





























