Tag Archives: திரைப்படம்

Dor (நூல்) – விமர்சனம்

நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை. பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.

ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:

  • dor-2006-5b-1_1188030619.jpgஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
  • பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து ‘நடிப்பு வராத பொண்ணு’ போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
  • ‘Dutch courage’ ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது ‘நடக்காது!’ என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
  • வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
  • படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
  • தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; ‘ராத்திரி பத்து மணிக்கு’ என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி…
  • சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே

காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது… இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.

புகைப்படம்: யாஹு

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா? குத்துப்பாடல்களும் குலுக்கல்களும் பெண்களுக்கும் ரசிக்கிறதா? மெட்டு ரசிக்கப்படுகிறதா? காட்சியாக்கமா? மூன்று மணிக்கு ஃபோன் சிணுங்குவதை நிறுத்துபவர்கள் இருக்கட்டும்; சிற்றஞ்சிறுகாலே மூன்று மணி தாகசந்திக்கு யாரைக் கேட்க விருப்பம்?

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

1. ‘அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’ – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

2. ‘செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா’ கேட்க விரும்பினால் இன்னும் ரொமான்ஸ் மூடு போகவில்லை என்று அர்த்தம். அல்லது நண்பர் குழாம் தூங்கிப் போனதும் காரணமாக இருக்கலாம். இரண்டையும் சரி செய்தால் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’

3. ‘வஜ்ஜிரம் வவ்வாலு மீனுதானா!’ – செம்பருத்தி

4. ‘போட்டு வைத்த காதல் திட்டம் ஒகே கண்மணி’ – சிங்காரவேலன்

5. ‘கூடையில கருவாடு; கூந்தலிலே பூக்காடு’: ஒரு தலை ராகம்; ஒரிஜினல் டி ஆர் சிச்சுவேசனுக்கு ஏற்ப ‘அட பொன்னான மனசே பூவான மனசே’ என்று உருமாற்றலுக்கும் ஏற்றவர்.

6. ‘எம்மாடி ஆத்தாடீ! உன்ன எனக்கு தரியாடீ?’ – எம்மா எம்மா எம்மம்மாஆ; தற்போதைய காளை ‘குட்டிப் பிசாசே’வும் சரியான ஆம்பிளையின் தேர்வு.

7. ‘தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’ – சிந்துபைரவி

8. ‘காதல் என்பது பொதுவுடைமை; கஷ்டம் மட்டுந்தானே தனியுடைம’ – பாலைவன ரோஜாக்கள்

9. ‘ஆசை நூறு வகை’ (அசல்): அடுத்த வாரிசு

10. ‘கண்ணத் தொறக்கணும் சாமீ; கையப் புடிக்கணும் சாமீ!’ – முந்தானை முடிச்சு

தொடர்புள்ள பதிவுகளில் சில:

பெண்ணின் ஸ்டீரியோடைப் மனதைத் தொட்டுச் செல்லும் பாடல்களை guess செய்தால்…

1. ‘கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான்!’ – உள்ளம் கொள்ளை போகுதே

2. ‘தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது’ – மகாநதி

3. ‘காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ – தம்பிக்கு எந்த ஊரு

4. ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ – மௌன ராகம்

5. ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ – ஆசை

6. ‘வசீகரா’ – மின்னலே

7. ‘பச்சை நிறமே’ – அலைபாயுதே

8. ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்… ஒற்றை நாணயம்’ – ஆனந்தம்

9. ‘மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே’ – ரோஜாக்கூட்டம்

10. ‘குறுக்கு சிறுத்தவளே’ – முதல்வன்

சிறப்பு கொசுறு: ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ – ஆட்டோகிராப்

‘உற்சாகம்’ பாடல் கேட்டிருக்கீங்களா?

கேட்டிருந்தாலும் பரவாயில்லை.

இன்னொரு தடவை கேளுங்க. இந்த ஜீவி பிரகாசுக்கு கிடைக்கிற வாய்ப்புகளுக்கு பத்தில் ஒன்றாவது ரஞ்சித் பரோடுக்கு சென்றுவிட எல்லாம்வல்ல இறைவரைப் பிரார்த்திக்கிறேன்.

இன்றைய சந்தேகம் & அறச்சீற்றம்

anjathey-prasanna-daya-lengthy-hair-cinema-movies.jpgதமிழக சினிமா காவல்துறை மேல் எனக்கு பெருத்த அவமரியாதை கூடிய சந்தேகம் எழுந்துள்ளது.

என் மகளுக்கு இருக்கும் கொஞ்சூண்டு தலைமுடியை வாரி விடுவதற்குள் பிராணன் போகிறது. இங்கே ‘வேட்டையாடு விளையாடு’ டேனியல் பாலாஜி, ‘அஞ்சாதே’ பிரசன்னா என்று எல்லா வில்லர்களும் சடாமுடியுடன் அருள்பாலிக்கிறார்கள். நாராயண் ‘சத்யா’ போன்ற லஞ்சப் பேர்வழிகள் நிறைந்த திரைப்பட போலீசால் ஏற்பட்ட வினை!

Vettaiyadu Vilaiyaduஇதில் டேனியல் பாலாஜி இன்னும் அக்கிரமம். அமெரிக்கா வந்த பிறகு பின் வழுக்கையும் முன் வழுக்கையும் தலை குலுக்கிக் கொள்ளும் தண்ணீரில் நீராடியும் ‘வேட்டையாடு விளையாடு’ என்று கொலையுதிர்த்தும் சிலிர்த்துக் கொண்டே பான்டீன் விளம்பரமாயும் கொழிக்கிறார்.

இதெல்லாம் நல்லதுக்கில்லை.

மயிரை சீராட்டி பாராட்டி சாம்பிராணி போடும் நேரத்தில் நாலு பொண்ணை வியாபாரம் செய்தோமா… ராகவனுக்கு எலுமிச்சை அனுப்பினோமா என்றெல்லாம் பொறுப்பாக செயல்படாமல் கூந்தல் வளர்த்து வெறுப்பேற்றும் நெகடிவ் நாயகர்களை நம்ப முடியாத குணச்சித்திரமாக சித்தரிக்கும் மிஷ்கின் & கவுதம் மேனனுக்கு கண்டனங்கள்!!!

இளவரசு அறிமுகமான படம் எது?

விடை தெரிந்துகொள்வது எளிதுதான் 🙂

ட்ரிவியாபேட்டைக்கு சமர்ப்பணம்.

தொடர்புடைய சுட்டி: திரைப்படம்.காம்

The In-Laws – Michael Douglas & Albert Brooks (2003)

ஆல்பர்ட் ப்ரூக்ஸ் நடந்தால் சிரிப்பு வரும். ‘Defending Your Life’ போல் சிரித்தால் யோசனை வரும். கமல் போன்ற திறமையான இயக்குநர், நடிகர் கம் எழுத்தாளர். இந்தப் படத்தில் நாசர் ஏற்று நடிக்கும் முசுடு போன்ற கதாபாத்திரம்.

மைக்கேல் டக்ளஸ் வில்லத்தனம் செய்வார். காதல் மன்னனாக காத்தரீன் ஜீடா ஜோன்ஸையொத்த பெண்களை வலையில் வீழ்த்துவார். என்றாவது இவரைக் குறித்து இன்னும் விரிவாக எழுதவேண்டும். இந்தப் படத்தில் சத்யராஜ் போன்ற சகலகலா பேர்வழி ரோல்.

சூப்பர் பௌல் பார்த்து பேட்ரியாட்ஸ் தோற்ற சோகத்தைக் கழுவ இருவரும் நடிக்கிறார்கள் என்றவுடன் பார்க்க ஆரம்பித்த படம். தவற விடாமல் பார்க்கும் ‘பாஸ்டன் லீகல்‘ தொலைக்காட்சித் தொடரின் கான்டிஸ் பெர்கனும் கவுரவத் தோற்றத்தில் வந்துபோகிறார்.

ஒன்றரை மணி நேரம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் லாஜிக் கூட உண்டு. அடல்ட்ஸ் ஒன்லி ரகமான காட்சிகள் எதுவும் இல்லை.

சீரியஸ் நாசரும், சிஐஏ சத்யராஜூம் இணைந்தால் நடக்கும் களேபரம், அங்க சேஷ்டைகள், கிரேசி டைமிங் காமெடிகள் நிறைந்த கதை. தமிழில் ஒழுங்குபட எடுத்தால் பிய்த்துக்கொண்டு ஓடும்.

மேலும் அறிய: ஐ.எம்.டி.பி.

கேடி – டிவித்திரை விமர்சனம்

Ilianaஇந்தப் படத்தை சமீபத்தில் சன் டிவியில் போட்டிருந்தார்கள். பார்த்த பலரும், வேண்டிய அளவு பயமுறுத்தியிருந்ததால், மிகக் குறைந்த எதிர்பார்ப்புடனே பார்க்க ஆரம்பித்தேன்.

கேர்ஃப்ரீ வாங்குவதகு கூச்சப்படும் கல்லூரி மாணவி எண்பதுகளுக்கு முந்தைய எஃபெக்டை கொடுத்தது. மற்றபடிக்கு முதல் பாதி தேவலாம். இரண்டாம் பாதி போகப் போக நெளிய வைத்து, இறுதிக்காட்சியில் இது வரை பார்த்தவர்கள் படித்து படித்து சொல்லியிருந்த எச்சரிக்கைகளை உறுதியாக்கியது.

தமண்ணாவை மொத்தமாக வில்லியாகவே நடமாட விட்டிருக்கலாம். கடைசியில் தியாகி ஆக்குவது ஹீரோ மேல் பரிதாபம் வரவைக்காமல், இலியானாவையும் கோமாளியாக சித்தரித்தது.

‘ஆதிவாசி’ பாடலில் பூச்சிகளை எல்லாம் தொப்புளில் ஊறவிடுவது தமிழகத்தில் காவேரி போன்ற கற்பனை.

சராசரி மாணவனை சாதனை மாணவனாக்குவதை ‘காதலன்‘ சொல்லியது. ரவியின் முந்தைய படம் செவன் ஜி, பத்ரி போன்ற வெற்றி பெறக்கூடிய ஃபார்முலாதான். காதலுக்காக போட்டியில் கலந்து கொள்வது; வீழ்ந்து கொண்டிருப்பவன் உந்தப்படுவது என்று ரொம்ப சுவையான, நிச்சயம் வென்றிருக்கக் கூடிய சமாச்சாரங்கள்.

கூடவே இலியானா, தமண்ணா.

கதையே இல்லாமல் ‘எனக்கு 20; உனக்கு 18’ கொடுத்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இனிமேல் இந்த மாதிரி திரைக்கதைகளை சொதப்பாமல் சொல்லத் தெரிந்து கொண்டால், அப்பா ஏ ஏம் ரதனத்திற்கு ‘பீமா’ கடனை மீட்கலாம்.

தொடர்புடைய தமிழோவியம் விமர்சனம்: KD / கேடி

சித்திரையில் என்ன வரும்?

தொடர்புடைய தினமணி கட்டுரை: Tamil New Year: Thai Pongal or Chithirai First Day?: “சித்திரையில்தான் புத்தாண்டு – எஸ். ராமச்சந்திரன்”

பெண்
MK Young Youth Chithirai Karunanidhi அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன்
செப்புக்கல்லு சீரழகன் சின்ன
செம்பவள வாயழகன்
இப்படியோர் தேரழகன் இல்ல
இன்னு சொல்லும் ஊரழகன்
அப்பறம்நான் என்ன சொல்ல
என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்

பல்லவி

சித்திரையில் என்ன வரும்?
வெய்யில்
சிந்துவதால் வெக்கவரும்

நித்திரையில் என்ன வரும்?
கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?

தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்

சரணம் : ஒன்று

பாவி பயலால
இப்ப நானும்
படும் பாடுயென்ன

ஆவி பொகபோல
தொட்டிடாம
அவன் போறதென்ன

கண்ணுக்கு காவலா
சொப்பனத்தப் போடுற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்கள பூசுற

நூலப்போல சீல – பெத்த
தாயப்போல காள
யாருபோல காதல் ,சொல்ல
யாருமே இல்ல

சரணம் : இரண்டு

கேணி கயிறாக
ஒங்கபார்வ
என்ன மேலிழுக்க

கூனி முதுகாக
செல்லவார்த்த
வந்து கீழிழுக்க

மாவிளக்கு போலநீ
மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற

யாரும் எறச்சிடாத – ஒரு
ஊத்துப்போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம்- இவ
கண்ணுமுழி தூங்கி

அசல்: யுகபாரதி: சித்திரையில் என்ன வரும்

DMDK Vijayganth vs AIADMK Jeyalalitha – Tamil Nadu Politics: Cartoons by Mathy

Host unlimited photos at slide.com for FREE!

காளை & Disaster Lyricism

ஆண்: குட்டிப் பிசாசே
குட்டிப் பிசாசே
உன் தொல்ல தாங்கலே

பெண்: சுட்டிப் பிசாசே
சுட்டிப் பிசாசே
உன்னால தூங்கலே

ஆண்: ட்வின் டவர் மேல ஏர்க்ராஃப்ட் போல
என் மேல மோதுனா என்னாவது?

பெண்: ஹ்ம்ம்
உன்மேல மோதி
உற்சாகம் கோடி
உண்டாகத்தானே
நான் மே மாசம் பெண்ணானது

தொடர்புடைய சேவியரின் பதிவு:

கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ?