Tag Archives: கண்ணதாசன்

அந்தக்கால ரெட்டை அர்த்த பாடல்

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
தித்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
தித்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேக்காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீரும்காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம்காய் ஆனாலும் பருவங்காய் ஆகமோ
என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழைக்காய்
யாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியாக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்தால்போல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை என்னைக் காயாதே கோற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

முந்தைய பதிவு: Bale Paandiya – Movie Review