வெறும் பொழுது – உமா மகேஸ்வரி

பிரியம்

ஏனிந்தக் குருவியை

இன்னும் காணோம்?

எனக்கு மகா செல்லம் அது.

பழுப்புக் கலரில் அழுக்குக்குஞ்சு.

சின்ன இறக்கைகளில்

கறுப்புக்கோடு தெரியும்.

கண் மட்டும்

கண்ணாடிக் கல் மாதிரி

செளிச்சத் துறுதுறுக்கும்.

உரிமையாய் கூடத்தின்

உள்ளே நுழைந்து நடக்கும்.

புத்தகம் ஒதுக்கி

அதையே கவனிக்கும் என்னை

அலட்சியப்படுத்தும்.

மாடி வெயிலில்

வேட்டியில் காயும்

வடகத்தை அலகால் நெம்புதல்,

தோல் உரிக்காது

நெல்லை விழுங்குதல்,

துணிக்கோடியில் கால் பற்றிக்

காற்று வாங்குதல்,

அறைக்கண்ணாடியில்

தன்னைத் தானே

கொத்திக் கொள்ளுதல் –

அதற்குப் பிடிக்கும்.

நான் இறைக்கும்

தானியமணிகளை

அழகு பார்த்துத் தின்னும்

ரசனாவதி.

ஏனிந்தக் குருவியை

இன்னும் காணோம்?

அது வரும் மாலை

மெதுவாய் நகருதே!

கீழ்வானப் பரப்பில்

கண் விசிறித் தேடினும்

காணவில்லை, எங்கு போச்சோ!

திடுமெனக் காதில்

தித்தித்தது அதன் கீச்சுக்குரல்

ஜன்னல் பிளவில்

உன்னிப் பார்த்தால்

அடுத்த வீட்டு முற்றத்தில்

இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி

அழகு பார்க்கும் என் குருவி;

என் முகம் ஏறிடாது

திருப்பிக் குனியும் விழிகளை

oOo

தமிழினி – 224 பக்கங்கள் – ரூ. 100/-

கவிதைகளை ரட்சியும் – வைரமுத்து

Marathadi

அதிகாலை

சூரியன்கூட இன்னும்

முகம் கழுவவில்லை

வாசிக்க ஆளில்லை

என்னும்

வானப்புத்தகம்

திறந்திருந்தது

எனது தவச்சாலையாய்

மொட்டைமாடி

நட்டுவைத்த மௌனங்களாய்

மரங்கள்

அங்கங்கே

புள்ளினங்களின் பூபாளம்

கலை என்பது

இயற்கை வாழ்க்கை

இரண்டின் மொழிபெயர்ப்போ?

“அப்பா

உங்களைப் பார்க்க நிறையபேர்”

என் மகன்

கதவு தட்டிக்

கனவுடைத்தான்

கலைந்த தலை

கசங்கிய லுங்கி

முகத்தில் முள்

பரவாயில்லை

கவிதைக்கும் கவிஞனுக்கும்

நிஜமே கம்பீரம்

கீழே வந்தேன்

முகங்கள் முகங்கள்

முழுக்க முழுக்க முகங்கள்

படித்த முகங்கள் பாமர முகங்கள்

கனவு முகங்கள் கழுவாத முகங்கள்

அன்பில் குழைந்த ஆர்வ முகங்கள்

மழலை சுமந்த மாதர் முகங்கள்

‘வணக்கம்’

ஓ!

ஒரேபொழுதில்

அத்தனை உதட்டிலும் பூப்பூக்க வைக்கும்

அற்புத மந்திரமா ‘வணக்கம்’?

“எந்த ஊர் நீங்க?”

ஊர் சொன்னார்கள்

“என்ன விஷயம்?”

“ஒங்க பாட்டுன்னா உசுரு”

லுங்கி சிறகானது

“எல்லோருக்கும் டீ சொல்லுப்பா”

தேநீரைப் போலவே

சுடச்சுடக் கேள்விகள்

“ஒரு பாட்டு எழுத

எவ்வளவு நேரம்?”

“அதிகபட்சம்

அரை மணி நேரம்”

“பாட்டுக்கு எவ்வளவு

பணம் வாங்குறீங்க?”

“வாங்கவில்லை

கொடுக்கிறார்கள்”

“பாரதிராஜா உங்களுக்குச்

சொந்தக்காரரா?”

“ஆமாம் ‘கலைச்சொந்தம்'”

“ரஜினியோடு

சாப்பிடதுண்டா?”

‘உண்டு’

“கமல் டெலிஃபோன்

பண்ணுமா?”

“எப்போதாவது”

“நடிகைகள் வருவார்களா?”

“வந்திருக்கிறார்கள்

கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்கு”

“உங்களைப் பற்றியும்

கிசுகிசு வருகிறதே”

“என் புகழுக்கு அது போதாது”

“உங்களைத்

தொந்தரவு செய்கிறோமா”

“இல்லை

தோகை, மயிலுக்குத்

தொந்தரவா?

“உங்களுக்குப்

பிடித்த பாட்டு…”

‘காதல் சிறகைக்

காற்றினில் விரித்து’

“நீங்கள் நினைத்து

நிறைவேறாமல் போன ஆசை?”

‘மொட்டை மாடியிலிருந்து

குதிக்க வேண்டும்’

“உங்கள் பலம் எது?

பலவீனம் எது?”

‘பலம் – பகை

பலவீனம் – சொந்தம்’

“குறைந்த நாளில்

நிறையச் சம்பாதித்த கவிஞர்

நீங்கள் தான்”

‘இல்லை

எனக்கும்

மாசக்கடைசிகள் உண்டு’

“எங்களுக்கு

என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

‘மீண்டும் வணக்கம் சொல்ல

விரும்புகிறேன்’

சிரித்தார்கள்

அலையலையாய் அழகழகாய்ச்

சிரித்தார்கள்

கலைந்தார்கள்

கனவுகளாய்

கலர் கலராய்க்

கலைந்தார்கள்

எல்லோரும் போனபின்

அந்த அறையில் யாரோ

முனகுவது கேட்டது

திரும்பிப் பார்த்தேன்

தன்னை யாரும்

விசாரிக்கவில்லையே என்ற

விசாரத்தில்

கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது

என் கவிதை

oOo

வைரமுத்து கவிதைகள் – ரூ. 300/- சூர்யா வெளியீடு

என்.பி.ஆர். செய்தியோடைகள்

நான் முடிந்தவரை கேட்டுப் பயன்பெறும் நிகழ்ச்சிகளில் அமெரிக்காவின் ‘ஆல் இந்தியா ரேடியா’வான NPR முக்கியமான ஒன்று. நடுநிலைமை, ஓரளவு ஆழ்ந்த பார்வை, அவ்வப்போது அரசியல்வாதிகளையும் சிந்தனையாளர்களையும் தோண்டி வெளிக்கொணரும் பேட்டி, பரந்த உலகளாவிய பிண்ணனியில் செய்தி அலசல் என்று பலமுறை ‘அட…’ போட வைத்து, அவ்வப்போது டொனேஷனும் கொடுக்கவைத்த என்.பி.ஆர்., ஆர்.எஸ்.எஸ். கொடுக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியான விஷயம்.

All Things Considered: http://www.npr.org/rss/rss.php?prgCode=ATC

Morning Edition: http://www.npr.org/rss/rss.php?prgCode=ME

Day to Day: http://www.npr.org/rss/rss.php?prgCode=DAY

Tavis Smiley: http://www.npr.org/rss/rss.php?prgCode=TAVIS

Motley Fool: http://www.npr.org/rss/rss.php?prgCode=FOOL

Weekend Edition Sunday: http://www.npr.org/rss/rss.php?prgCode=WESUN

Weekend Edition Saturday: http://www.npr.org/rss/rss.php?prgCode=WESAT

Talk of the Nation: http://www.npr.org/rss/rss.php?prgCode=TOTN

Fresh Air: http://www.npr.org/rss/rss.php?prgCode=FA

ஒண்ணே ஒண்ணு… கண்ணே கண்ணு!

இங்கு செல்லவும். மவுஸை அவருடைய முகத்தின் மேல் சுட்டவும். மேலும் கீழும் ஆசை தீர ஆட்டவும். வேண்டிய அளவு ஆட்டிவைத்து, அலுத்தபிறகு, முகத்தின் மேல் சுட்டியை விட்டு விட்டு, நடப்பதைப் பாருங்கள். ஹிஸ்பானிய மக்களுக்காக ஃபிலிப்ஸ் நடத்திய இலக்கக் கலை (Digital Arts) விழாவில் முதல் பரிசை வென்றிருக்கிறது.

நன்றி: ஃபிலிப்ஸ்

Pinocchio Aamir Khan 

Pinocchio Aamir Khan Posted by Hello

Shahrukh vs Shahrukh 

Shahrukh vs Shahrukh Posted by Hello

Main (nahi) Hoon Naa – Shahrukh Khan 

Main (nahi) Hoon Naa – Shahrukh Khan Posted by Hello

Hrithik Roshan, Salman Khan, Sanjay Dutt, Ajay Dev…

Hrithik Roshan, Salman Khan, Sanjay Dutt, Ajay Devgan Posted by Hello

Hush Puppies 

Hush Puppies Posted by Hello

Nathai nadai by Colorful Snails 

Nathai nadai by Colorful Snails Posted by Hello