Madras Engg College Protests

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேண்டாமா? | எஸ்.ஆர்.எம் கல்லூரி ரகளை | Dreamchaser’s Blog | SRM Engineering College Under ATTACK!

மாணவர்களை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. அணி திரண்டிருக்கிறார்கள். ஆதிக்க சக்திகளை தூக்கியெறிந்திருக்கிறார்கள். அநியாயத்துக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம். அனுப்பிய அடியாட்களையே மிரள வைத்திருக்கிறார்கள்.

மணி ரத்னம் கூட நம்பும்படியாகத்தான் படம் எடுத்திருக்கிறார். ‘இரமணா‘, ‘ஜெண்டில்மேன்‘ போன்ற எழுச்சிப் பட கிளைமேக்ஸ்கள் கூட நிஜத்தில் சாத்தியமே.

எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவர்கள்தான் முதலில் தட்டிக் கேட்டிருக்கிறார்கள் (கல்லூரி மாணவன் சொன்னபடி). ஏற்கனவே கூவம் ஆக்கிரமிப்பால் இடிபாடுகளுக்கிடையில் கல்லூரிக்கு சென்று வந்தவர்கள். (என்னுடைய முந்தைய பதிவு).

பி.ஈ. கிடைக்காது. பி.எஸ்சி.தான் தருவார்கள் என்றவுடன் கையில்க கிடைத்ததை வைத்துத் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்கியிருக்கிறார்கள்.

விஷயம் பரவி ‘பாரத் என்ஜினீயரிங்‘ கல்லூரிக்கு சென்றிருக்கிறது. பிரச்சினையை சுமூகமாக அணுகி, கரிசனத்துடன் பார்த்தவர்கள் இந்த மாணவர்கள் மட்டும்தான்.

அடுத்த நியூஸ் எஸ்.ஆர்.எம். அடைந்திருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலை உயர்தர உணவகத்தை ரணகளமாக்கியிருக்கிறார்கள். கம்ப்யூட்டரை அப்படியே திருடாமல், உடைத்து விட்டு, பார்ட் பார்ட்டாக பிரித்து, சி.பி.யூ., மௌஸ், கீ-போர்ட், ராம், சவுண்ட் கார்ட் என்று அக்குவேறாக கடத்தியிருக்கிறார்கள்.

அந்தப் பகுதியிலிருந்து பாரிமுனை வருவதற்கு நண்பர் ஒருவர் 800 ரூபாய் கொடுக்க வேண்டிய அளவு ஆட்டோக்காரர்களுக்கும் அமர்க்களமான வருமானம்.

சத்யபாமா‘வில் போர் முரசு கொட்டியவுடன் விழித்துக் கொண்ட மேனேஜ்மெண்ட், மாணவர்களின் +2 மார்க் ஷீட்களை கிழித்தெறிந்திருக்கிறது. அனேகருக்கு நம்முடைய ஒரிஜினல்களும் கிழிபடுமோ என்ற பயத்தில் அடங்கினாலும், கல்லூரி பஸ்கள் எல்லாம் பலத்த சேதம்.

நியாயம் கேட்க போன காஞ்சிபுரம் சங்கரா பொறியியல் கல்லூரியின் கூட்டத்தில் நசுங்கி மிதிபட்டு மாணவன் ஒருவன் இறந்திருக்கிறான்.

அம்ருதானந்தமயி, வேலூரி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி என்று இன்னும் சிலர் அமைதி காக்கிறார்கள்.

ஒரு ஸீட் வாங்க இரண்டு லட்சம் ரூபாய் கேட்டுப் பெறுகிறார்கள். கணினிப் பொறியியல் கேட்காமல் இரண்டாம் தர நிலையில் உள்ள எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸுக்கு ஒன்றரை லட்சம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

கிரெஸெண்ட், வேல்டெக், வெங்கடேஸ்வரா போன்ற பெருசுகள் இன்னும் ‘அண்ணா பல்கலைக்கழக’த்துடன் இணைந்திருக்கிறார்கள். தொலைநோக்குடன் தனிவழியாக செல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் நிம்மதியான வாழ்க்கை.

இட ஒதுக்கீடுகளினால் சீட்டே கிடைக்கவில்லை என்பது புராணமாக மாறி, ‘அண்ணா பல்கலை’யுடன் இணைந்த கல்லூரிகளில் பல இடங்கள் காலியாக இருக்கிறது. இருந்தாலும், எம்ஜியார், எஸ்ஸாரெம், சங்கரா என்று லட்சம் கொடுத்து, கோடிக் கணக்குகளிலும் மண் விழுந்ததாகவே மாணவர்கள் நினைக்கிறார்கள்.

தன்னம்பிக்கை என்பதெல்லாம் காணாமல் போயிருக்கிறது. க்ரூப் டிஸ்கஷனில் வெற்றி பெறுவதற்கும், ஆப்டிடியூட் போட்டிகளில் தேர்வாவதற்கும் பிஈ-யாக இருந்தல் என்ன்? பி.டெக். ஆக இருந்தால் என்ன? பி.எஸ்சி.யாக இருந்தால் என்ன?

இந்த மாதிரி திறமையுடன் ஆசிட் பாட்டில் வீசுவது எல்லாம் அரசியலுக்கு வந்தால் பயன்படும். இப்படிப்பட்ட ‘கூட்ட‘ மனப்பான்மையுடன் ரகளை செய்வது கட்சி ஆரம்பித்தால், திராவிட பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும்.

ஆனால், சொந்தக் கல்லூரியின் பஸ்ஸையும், தினசரி பயன்படுத்தி வித்தை கற்கும் கணினிகளையும் உடைப்பதனால் யாருக்கு லாபம்?

வெளியூருக்கு சென்று ‘நான் சத்யபாமாவில் படித்தேன்’/’நான் எம்.ஜி.ஆரில் என்ஜினியரிங் கற்றேன்’ என்றால் இனி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ‘ஓ… கம்ப்யூட்டர் லேப் எல்லாம் அடிச்சு உடைச்சீங்களே? அந்த காலேஜ்தானே…’ என எளிதாக அறியுமாறு விசிட்டிங் கார்ட் செய்திருக்கிறார்கள்.

தான் நினைத்தால், தங்கள் படை சேர்ந்தால் அழிச்சாட்டியம் செய்யலாம் என்னும் தைரியத்தை சினிமாவும் சமூகமும் சேர்ந்து இவர்களுக்கு தோன்ற வைத்திருக்கிறது.

வருகிற தேர்தலில் கட்சி ஆரம்பித்து, கன்ஸ்ட்ரக்டிவ் ஆக மாற்ற தலைவர்தான் எவரும் இல்லை.


| |

Thrumavalavan on Tamil Cinema Politics

தமிழில் சினிமாவும் அரசியலும் பிணைந்திருப்பது குறித்த திருமாவின் எண்ணங்கள். ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் வெளியாகும் சமயத்தில் எழுதியது.

சினிமாவைச் சுற்றும் தமிழக அரசியல் : காலம் – 4 நி. 12 வி.

audio post - click to play

நன்றி: ‘அடங்க மறு’ – தொல் திருமாவளவன் : தாய்மண் வெளியீடு


| | |

Jeyamohan (Audio Blog)

படித்ததில் பிடித்ததைத் தட்டச்ச சோம்பேறித்தனமாக இருக்கிறது. தொலைபேசியில் அழைத்தோமோ… பிடித்த பகுதிகளை, தலையாட்டும் கருத்துக்களை, சிந்தனையைக் கிண்டும் பதிவுகளை சொன்னோமோ…

கொஞ்சம் பேசிப் பார்க்கிறேன்! (தங்களுக்கு ஆடியோ பதிவு எப்படி போடுவது என்று தெரிய வேண்டுமானால் ஒரு வார்த்தை கேளுங்க/தேடுங்க 🙂


Jeyamogan – I

Nithya Chaithanya Yathi book's Introduction by Jayamohan : audio post - click to play

Jeyamohan – II

Nitya Saidanya Yadhi book's Introduction by Jeyamogan : audio post - click to play

Thanks to ஜெயமோகன் : நித்ய சைதன்ய யதி – யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு (Nithya Chaithanya Yathi book’s Introduction by Jayamohan)


| |

The safety crash report of Train accidents – Railw…

The safety crash report of Train accidents – Railway Budget 2006 by Lalu Prasad Yadav Posted by Picasa

Dude where is my Party – Republican vs Democrat 

Dude where is my Party – Republican vs Democrat Posted by Picasa

The Railway Rupee – 2006 Budget by laloo prasad ya…

The Railway Rupee – 2006 Budget by laloo prasad yadav Posted by Picasa

Dinakaran E-Paper: Pondycherry 15% Reservation for…

Dinakaran E-Paper: Pondycherry 15% Reservation for Muslims, Christians in Educational Instituitions & Workforce Posted by Picasa

blogasm – Gilli

ஆர்காசம், ஆர்கானிஸம், அட்டகாசம் எல்லாம் தெரிஞ்சிருக்கும். தமிழ்ப்பதிவு பார்வையாளரின் ப்ளாகசம் என்றால் என்ன?


| |

ஜெயலலிதா – திருமாவளவன் கூட்டணி

அதிமுகவின் முதல் கூட்டணி முயற்சி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளுடன் நடந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்தி

திருமாவளவனின் பேச்சிலிருந்து சில மேற்கோள்கள்:

* திமுக எங்களை அங்கீகரிக்கவில்லை. அதனால் எங்களை அங்கீகரிக்கும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்.

* இக்க்கூட்டணியால் பாமகவுடனான நட்பு பாதிக்கப்படாது. ஆனாலும் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காகத்தான் முழுமூச்சாகப் பாடுபடுவோம். இதில் நட்பு(க்) கட்சி என்று பார்க்க முடியாது. எதிரணியில் யார் போட்டியிட்டாலும் கடுமையாக எதிர்ப்போம்.

* விடுதலைச் சிறுத்தைகள் பாமகவிடமிருந்து உள் ஒதுக்கீடு பெற்றுக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் கூறியது எச்சில் சோறு சாப்பிடச் சொன்னதற்குச் சமம்.

இரட்டை இலை

தனது அரசியல் பயணத்தை திட்டமிட்டு படிப்படியாக வளர்த்து, பல விஷயங்களில் மக்களை ஈர்க்கும்படியாக தமிழக அரசியலில் செயல்பட்டவர் எம்.ஜி.ஆர் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். தமிழக மக்களின் நாடித்துடிப்பை அறிந்து செயல்பட்டு அவர்களைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர்.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம் “இரட்டை இலை” சின்னம்

தன்னுடைய கட்சிக்காக ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்த பொழுது மிக எளிதில் மக்களை சென்றடையக் கூடிய சின்னமாகவும், எளிதில் சுவர்களில் வரையக் கூடியதாகவும் இருப்பதாலேயே இரட்டை இலையை தேர்ந்தெடுத்தாராம். அந்தச் சின்னத்தை அவர் தன்னுடைய இரு விரல்களை மக்களிடையே காட்டியே மிக எளிதாக பிரபலம் ஆக்கினார்.

இன்றைக்கும் நான் எப்ப ஓட்டு போட்டாலும் இரட்டை இலைக்குத் தான் என்று யோசிக்காமல் கூறும் பெருசுகளை பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆர் மக்களை தன் வசம் எப்படி வசப்படுத்தி இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் அறியாமையும், படிப்பறிவின்மையும், சினிமா கவர்ச்சியும் முக்கிய காரணம். அம் மக்களின் மனதில் எளிதில் நுழைந்த “இரட்டை இலை” சின்னமும் மற்றொரு காரணம்.

தகவல் : Sify