Kalaaba Kaathalan

கலாபக் காதலனை பார்த்தேன்… ரசித்தேன். தோன்றிய சில:

  • சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களைக் கிண்டலடிக்கிறார்கள்: கண்மணி மிக அழகாக specifications கொடுக்கிறாள். அகிலன் மாதிரி ஆறடி உயரத்தில் சொவ்வறை வல்லுநராக இருக்க வேண்டும். மாமியார் வீட்டுடன் இருக்கக் கூடாது. நகரத்தில் வசிக்கணும். எக்ஸெட்ரா… அகிலன் ஒரு கணினி நிபுணன். எப்படி புரிந்து கொள்வான்? எப்படி செயல்படுவான்? படு நக்கல் + யதார்த்தம்.
  • கண்மணி சொல்வாள் ‘என்னைப் புரிந்து கொள்ள முடியாது: 100/100 உண்மை. அவளைப் புரிந்து கொண்டதாக நான் எண்ணியதால் – மாமாவுடன் சென்றவுடன், ஒரு தலைக் காதலனைக் கொலை செய்து விடுவாள் என்று எண்ணிய எனக்கு அதிர்ச்சி. அவளைக் கோழையாக சித்தரிக்காத இயக்குநர் இகோர், கடைசி காட்சியில் மட்டும் பல்டி அடிக்கிறார். செத்திருக்க வேண்டியது – வன் புணர்ந்த மாமாவோ, கூட்டிக் கொடுத்த அகிலனோ.
  • சென்னையின் கணினிப் பயிற்சியகங்கள்: மல்டிமீடியா கற்றுக் கொள்பவளுக்கு ‘/’க்கும் ‘\’க்கும் வித்தியாசம் தெரியவில்லை. வலையகம் செல்வதற்கு வழி கேட்கிறாள். எப்பா சாமீ… என்.ஐ.ஐ.டி.க்களும் எஸ்.எஸ்.ஐ.க்களும் ஒழுங்கா கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • கணி வேலையின் மன அழுத்தம்: முதுகு வலிப்பது கணினி வேலையின் இலவச இணைப்பு. அதற்கு நரம்பு மருத்துவரை அணுகாமல், நங்கையினை நாடி பிடிக்க சொன்னால் வலி மாயமாகவிட்டாலும், அடிக்கடி கழுத்து திருகிக் கொள்ளத் தோன்றும்.
  • கணி வேலையின் சித்தாந்தம்: மேலாளர் சொல்வதை கீழே பணிபுரிபவனிடம் சொல்லக் கூடாது. சகாவின் புலம்பல்களை மானகையாளர்களின் சந்திப்புகளில் போட்டுக் கொடுத்துவிடக் கூடாது. அகிலனும் அன்பரசியிடமும், குடும்பத்தினரிடமும் கண்மணியைக் குறித்துப் பகிர்ந்து கொள்ளாமல், open communication பின்பற்றாத அலுவல் சூழலை வீட்டிற்கும் எடுத்து செல்கிறான்.
  • லாவண்யா நர்மதா: ஊருக்கு வந்த புதிதில் Ramada Innஐப் பார்த்து ‘என்னங்க… நம்ம ஊரு ஆளுங்க கூட ஹோட்டல் நடத்துறாங்க போல? அங்கேயேத் தங்கிக்கலாமே’ என்று விசாரிப்பதை ஒட்டுக் கேட்டது போன்ற லாவண்யா ஐஸ்க்ரீம் காட்சி. வெள்ளந்தி வெள்ளந்திதான்.
  • சம்பந்தி பிணக்கு: நெஞ்சில் நின்ற, ‘அட… என்னம்மா பாலகுமாரன் அனுபவிச்சிருக்காரு’ என்று மனம் வெளிப்பட சிரித்து, உணர்ந்து, ஒன்றிய டிவி ரிமோட் போர் காட்சியமைப்பு.
  • கவிஞர்கள் கிண்டல்: கவிதை எழுதுவது எப்படி என்று கையேடு தயாரிப்பது போல் சுளுவாக விளையாடுகிறார்கள். உதவி இயக்குநர்கள் ஆளுக்கொரு வரியைக் கொடுத்து, கோர்த்து, பின் நவீனத்துவமும் வைரமுத்துயிஸமும் பிணைந்து எவ்வாறு பாடலும் புனைவும் எழுதுவது எளிது என்பதை அல்வா ஊட்டுகிறார்.
  • காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான்: கணவனில் நல்ல கணவன் எது? சந்தேக புருஷன் எது? எல்லா கணவனும் கண்ட்ரோல் ஃப்ரீக்தான்!

    கலாபக் காதலன் விமர்சனங்கள்


    | |

  • Happy July 4th

    அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கான ஜூலை நான்கு வாழ்த்துகள்!

    Guardian Unlimited | Special reports | 12.06.06 Interactive. London bombs – July 7 anniversary: லண்டன் குண்டுவெடிப்புகள்

    ஒரு வருடம் முன்பு:

  • ஃபலூஜாவும் லண்டனும்
  • நியூ யார்க், மேட்ரிட், லண்டன்
  • Yahoo! 360° – RPRAJANAYAHEM – யமுனா ராஜேந்திரன் தனிமடல்

    No News Allowed – New York Times: செய்தி தணிக்கை என்பதன் புதிய பரிமாணமாக சீனாவின் $12,500 அபராதம் விதிக்கும் திட்டம்.


    | |

  • Affirmative Action – Cartoons

    ஏன் அஃபர்மேடிவ் ஆக்சன்?

  • வளமையான சூழலில் வளராமை
  • ஆலோசனை தரும் பெரியோர்கள் இல்லாமை
  • பள்ளிக்கூடங்களின் போதாமை

    கல்லூரிக்குள் நுழைவது எப்படி?

    வைதருப்பம் vs உயர்வு நவிற்சியணி.

    உதவிக்கு வரலாமா?


    | |

  • Clash in DMDK meet in Palani

    Clash in DMDK meet in Palani

    தேமுதிக கூட்டத்தில் அடிதடி; ஓட்டம் பிடித்த பெண்கள்
    பழனியில் நடந்த தேமுதிக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் அடிதடி, ரகளை நடந்தது. இதனால் கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    ஆர்.எப். சாலையில் உளள கல்யாண மண்டபத்தில் தேமுதிக உள்ளாட்சித் தேர்தல் ஆலோனை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். பெண்களும் பெரும் திரளாக வந்திருந்தனர்.

    இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவிக்குமார் பேசினார். அப்போது பழனி தொகுதியில் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பி.கே.சுந்தரத்தின் ஆதரவாளர்கள் எழுந்து, கூட்டத்திற்கான நோட்டீஸில் சுந்தரத்தின் பெயர் போடாதது ஏன் என்று கேட்டு ரவிக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    அதற்கு ரவிக்குமார் பதில் சொன்னார். ஆனால் அதில் திருப்தி அடையாத சுந்தரத்தின் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுந்தரம் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறு கோரினார். ஆனால் அதற்குப் பலன் இல்லை.

    இந்த வாக்குவாதம் பின்னர் அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இருக்கைகள், நாற்காலிகள் பறந்தன.

    ஆயக்குடி உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்தவர்களை மாவட்ட தலைமை புறக்கணிக்கிறது. இதனால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    வழக்கமாக பிற கட்சிகளில்தான் இதுபோன்ற கலாட்டாக்கள் நடக்கும். இப்போது தேமுதிகவிலும் அது எட்டிப் பார்த்துள்ளது.

    DPA leads in Pondycherry

    DPA leads in Puthucherry local body elections:

    புதுவை உள்ளாட்சி தேர்தல்:

  • காங்-திமுக முன்னணி
  • காரைக்காலில் தேமுதிக முன்னணி
  • அதிமுக தோல்வி

    புதுவை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக இந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது.

    பாண்டிச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 3 கட்டமாக நடந்த இத்தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

    புதுவையில் 2 மையங்களிலும், காரைக்காலில் 6 மையங்களிலும், ஏனாம், மாஹே ஆகிய இடங்களில் தலா 1 மையத்திலும் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. 5 நகராட்சி தலைவர் பதவிக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.

    புதுவை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ஸ்ரீதேவி 6,000 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார். உழவர்கரை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலும், ஏனாமில் காங்கிரஸ் வேட்பாளர் சந்திராவும், மாஹ÷வில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் பர்வத்தும் முன்னணியில் உள்ளனர்.

    காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளர் பிரபாவதி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். புதுவை உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் தேமுதிக, முக்கியமான காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் முன்னணி பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது.

    புதுவை நகராட்சி வார்டு தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக நான்கு வார்டுகளையும், அதிமுக மற்றும் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    உழவர்கரை நகராட்சி உறுப்பினர் தேர்தலில் திமுக இரண்டிலும், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். இந்த நகராட்சியின் நான்கு வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Meera Jasmine – Tirupathi – Non-Hindus

    மீரா ஜாஸ்மினுக்கு ரூ. 10,000 அபராதம் :: thats tamil.com: “ரகசியமாக கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்ற ‘குற்றத்தை’ சரி செய்ய நடத்தப்படும் தோஷ கழிப்பு பூஜைக்காக ரூ. 10,000 தர வேண்டும் என்று நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ராஜராஜேஸ்வர் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு என்ற ஊரில் ராஜராஜேஸ்வர் என்ற பிரபமலான கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு பெண்கள் இரவு 8 மணிக்கு மேல்தான் நுழைய முடியும். மேலும், இந்துக்கள் மட்டுமே கோவிலில் வழிபடலாம்.

    கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் இந்தக் கோவிலுக்கு நடிகை மீரா ஜாஸ்மின் வந்தார். உடன் இருந்த தயாரிப்பாளர் மீரா இந்து மதத்திற்கு மாறி விட்டார். மீரா என்ற பெயரில்தான் அவர் அர்ச்சனையும் செய்தார் என்று கூறி விட்டு மீராவுடன் காரில் ஏறிப் பறந்து விட்டார்.

    இது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்தவப் பெண்ணான மீரா எப்படி ராஜராஜேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடலாம் என்று கோவில் நிர்வாகமும், இந்து மத அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

    இந்த சர்ச்சை குறித்து மீரா ஜாஸ்மின் கூறுகையில்,

    சாமி கும்பிட்டதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    கடவுள்களுக்கு முன்பு எந்த மதமும் இல்லை. அனைத்தும் ஒரு மதம்தான். என்னைப் பொருத்தவரை இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கடவுள் ஒருவரே என்பது எனது நம்பிக்கை.

    அந்தக் கோவிலுக்கு ரகசியமாக நான் செல்லவில்லை. இரவு 8 மணிக்கு மேல்தான் அங்கு போக முடியும். நானும் கோவில் தலைமை நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற்று விட்டுத்தான் சென்றேன். தங்கக் குடம் காணிக்கையாகக் கொடுத்தேன். வழிபட்டு விட்டுத் திரும்பினேன்.

    நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டது இந்து மத விசுவாசிகளுக்க தவறாகத் தோன்றியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் மதம் மாறவில்லை. கிறிஸ்தவராகத்தான் இருக்கிறேன்

    என்றார் மீரா ஜாஸ்மின்.

    இந் நிலையில் மீரா ஜாஸ்மின் வந்து சென்றதால் கோவிலில் தோஷ நிவர்த்தி செய்ய சிறப்புப் பூஜை நடத்த வேண்டும். அதற்கான ரூ. 10,000 பணத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும், கோவிலுக்கு வந்து சென்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மீரா ஜாஸ்மினை கோவில் நிர்வாகம் கோரியது.

    இதை ஏற்றுக் கொண்ட மீரா ஜாஸ்மின் தனது பிரதிநிதி மூலம் கோவில் கோரிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டார்.இன்று இரவு அல்லது நாளை தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படவுள்ளது. இதில் கேரளாவில் உள்ள பல்வேறு கோவில் தந்திரிகள கலந்து கொள்ளவுள்ளனர்.


    Rediff On The NeT: VHP criticises Sonia‘s refusal to sign visitors’ book at Tirupati: “All non-Hindus visiting the Tirupati temple have to sign the visitors’ register. This condition was complied with by former Union minister C K Jaffer Sharief when he had darshan of Lord Balaji recently”


    இந்து மதத்தை யார் முதிர்ச்சியுடன் பின்பற்றுகின்றனர்?

  • மீரா ஜாஸ்மினின் தெளிவான பதிலும் அபராதத்தைப் பெருந்தன்மையுடன் கட்டிய விதமும் மிகச் சிறப்பாக உணர்ந்து செயல்படுவதை உணர்த்துகிறது.
  • திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் செய்கைகள் (வருகைப் பதிவேட்டில் நம்பிக்கை வாக்குமூலம் தரக் கோருவது) பிரபலமானவர்களுக்கு மட்டுமே சர்ச்சைக்குரியது என்றாலும், வரவேற்கத்தக்கது.
  • தளிப்பரம்பு கோவில், பக்கத்திலேயே இருக்கும் ஐயப்பனை பார்த்து, தங்களையும் மாற்ரிக் கொண்டு, சர்வ மத வழிபாட்டுக்கு வேண்டிய வகை செய்யவேண்டும்.
  • சபரிமலை நிர்வாகம், தளிப்பரம்பை பார்த்து தன் பழமையான வழிமுறைகளை காலத்துக்கேற்றவாறு தளர்த்தி, பெண்களும் தரிசிக்குமாறு விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்.

    | |

  • Soban babu’s Desecration Confession

    கண்ணகியைக் கட்டிப்பிடித்தேன் – முன்னாள் நடிகர் சோபன் பாபு

    குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும், நிஜத்தில் நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல!

    ‘நான் மெரினா கடற்கரைக்கு சென்று கண்ணகியைக் கட்டித் தழுவியது ஆட்டுக்கல் பகவதியே அறியும்‘ என்று முன்னாள் நடிகர் சோபன் பாபு பேட்டியளித்தார். முன்னாள் காதலியுடன் பொழுதைக் கழிக்க சென்னை பீச்சுக்கு சென்றதாகவும் அப்பொழுது தன்னுடன் இருந்த நடிகையை படம் பிடிக்க அமெச்சூர் வலைப்பதிவர் விரட்டியதாகவும், ஃப்ளிக்கர் கிராபரிடம் இருந்து தப்பிக்க ‘கண்ணகி என் காதலி’ என்று போஸ் கொடுத்து சமாளித்ததாகவும் விவரித்தார்.

    ‘சோபன் பாபு கூறுவது அப்பட்டமான பொய்’ என்றும் ‘கண்ணகி சிலை அருகே கண்ணன்கள் யாரும் சென்ற ஆட்சி பதவியேற்கும் வரை அனுமதிக்கப்பட்டதில்லை’ என்றும் முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார்.

    இதற்கு பதிலளித்து சோபன் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    “லட்சக்கணக்கான ரசிகைளின் மனதைப் புளகாங்கிதப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கண்ணகி சிலை அருகே என்ன நடந்தது என்பது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியும். இது ஒரு தனிப்பட்ட சம்பவம். இதை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை.

    2001 ஆம் ஆண்டு ஜகபதி பாபுவுக்காக ஒரு புதிய படம் தயாரித்தேன். அதற்கு கரடி ஜோஸியம் பார்த்தேன். அப்போதுதான் கண்ணகி என் மீது கோபமாக இருப்பது தெரியவந்தது. நான் மன்னிப்பு கேட்டு செல்வி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் இப்போது வெளியாகிவிட்டது” என்று சோபன் பாபு கூறியுள்ளார்.

    கண்ணகியின் நினைவாக தான் பாடல் இயற்றியதாக சொன்ன அவர் விஜய் யேசுதாஸை வைத்து இசையமைத்துள்ளதாகத் தொடர்ந்தார்:

    கண்ணகிசனம் சோபன் பாபனம்
    கரடீஸ்வரம் சிலம்பாதுகம்
    பாண்டியமர்த்தனம் நித்யநிர்மூலனம்
    கண்ணகியாத்மஜம் காதலாஷ்ரயே

    மெரீனாவுக்கு நள்ளிரவில் சென்று கற்புக்கரசி கண்ணகியைத் தொட்டு கட்டிப் பிடித்ததாகக் கூறிய தெலுங்கு நடிகர் சோபன் பாபுவை தண்டிக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

    ஆயினும் இப்பிரச்சனை தன் தந்தைக்கு தொடர்பானது என்பதால் அரசு தலையிடாது என்று கூறியுள்ள அமைச்சர் முக ஸ்டாலின், கண்ணகியைக் கைப்பற்றி தன் காதலியை மறைக்கும் அளவு முக்கியத்துவம் வாய்ந்த நடிகை யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த நடிகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும் சமஸ்கிருதத்தில் கண்ணகிப் பாடல் என்பது பொருத்தமற்றது என்றும், தமிழில் பாடிய டூயட் தமக்குக் கிடைத்திருப்பதாக சொன்ன அமைச்சர், பாடலை ஒலிக்கவிட்டார்:

    காற்சிலம்பு கண்ணகிக்கு
    தள்ளுமுள்ளும் உடம்புக்கு மெத்தை

    கண்ணகியே சோபனுக்கோ
    சோபனுக்கே கண்ணகியா

    லாரி இடிப்பு கண்ணகிக்கே
    மீள் நிறுவல் கண்ணகிக்கே

    “‘கண்ணகியுடன் ஆண்’ என்று சர்ச்சையை ஏற்படுத்தி, மலிவான விளம்பரம் தேட முயல்கிறேன் என்னும் குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளார். அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். கூட தன் ஆட்சிக் காலத்தில் கண்ணகிக்கு மரியாதை செய்ததை ‘மாலையிட்ட மணாளன்‘ என்று ஏசியவர்கள் இன்று கோட்டை விட்டதை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. உண்மை எதுவாக இருந்தாலும் நான் அதை வெளியில் சொல்வேன்” என்றார் ஜெயலலிதா.

    நிஜ நிகழ்வுகள்: Webulagam : Jaimala should be prosecuted – Kerala Minister! | Dinamani.com – Headlines Page | Webulagam : Lord Ayyappan knows the truth – Jaimala!


    | |

    R Ponnammal

    என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளுக்கு ஒரு அறிமுகம் + தொலை உரையாடல்:

    1.

    First Part - Intro for R Ponnammaal - this is an audio post - click to play

    2.

    Second Part for R Ponnammal - this is an audio post - click to play

    3.

    Final Part of Ponnamaal - this is an audio post - click to play

    ஆர் பொன்னம்மாளின் வலைப்பதிவு | ஆர் பொன்னம்மாள் வாழ்க்கைக் குறிப்புகள்


    | |

    Pa Chidambaram’s Petrol Medicine – Maalan

    Dinamani.com – Editorial Page :: மாலன்

    கசப்பது மருந்தா? உண்மையா?

    இந்திய அரசியல் கட்சிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய அநேக தருணங்களில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயர்வுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. பல கட்சிகளின் – அநேகமாக எல்லாக் கட்சிகளின் – பொய் முகத்தை மட்டுமல்ல, அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதையும் ஒருசேரப் பகிரங்கப்படுத்திய நிகழ்வு அது. அந்த நாடகத்தில் இப்போது மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு “டாக்டர்’ பாத்திரம்.

    “பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாவிட்டால் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்து விடும்… எனவே கசப்பு மருந்தை மக்கள் கனிவோடு ஏற்க வேண்டும்” என்று “டாக்டர்’ சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

    அவர் பேச்சைப் படிக்கிற எவருக்கும் ஏதோ நம் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே நொடித்துப் போய் நஷ்டத்தில் நடந்து கொண்டிருப்பதைப் போலவும், அவற்றின் மீது இந்தச் சுமையும் ஏறினால் அவை நொறுங்கிப் போய்விடும் என்பது போலவும் தோன்றும். ஆனால் உண்மை என்ன?

    இந்த ஆண்டு (மார்ச் 31 அன்று முடிவடைந்த 2005-06 நிதி ஆண்டு) இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ள

  • ஈவுத் தொகை (டிவிடெண்ட்) 125 சதவீதம்.
  • ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
  • விற்பனை மதிப்பு ரூ. 1,83,204 கோடி
  • கடந்த ஆண்டை விட 21.6 சதவீதம் அதிகம்.

    லாபம், மத்திய அரசு கடனாக வழங்கிய 6,571 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்திய பிறகு, லாபத்தின் மீதான வரிகளைக் கழித்துக் கொண்டதற்குப் பிறகு கையில் மிஞ்சும் நிகர லாபம்.

    இந்தத் தகவல்கள் எல்லாம் இந்தியன் ஆயில் நிறுவனமே, பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்குப் பத்து நாள்களுக்கு முன் (மே 26ம் தேதி) அறிவித்தவை. இவற்றை இப்போதும் அதன் இணைய தளத்தில் காணலாம்.

    ஏதோ இந்த ஆண்டு மட்டும் அது லாபம் ஈட்டிவிடவில்லை. கடந்த ஐந்தாண்டுக் கணக்கை எடுத்துக் கொண்டால் ஒவ்வோர் ஆண்டும் அது லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபம் அளவில் அதிகரித்தும் வருகிறது.

  • 2000 – 01ல் அது ஈட்டிய லாபம் ரூ. 2,720 கோடி.
  • கடந்த ஆண்டு அது ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
  • 2000 – 01ல் அதன் வசம் இருந்த அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 17,510 கோடி.
  • கடந்த நான்காண்டுகளில் ரூ. 6,000 கோடி அதிகரித்திருக்கிறது.
  • கடன் சுமார் ரூ. 3,000 கோடி குறைந்திருக்கிறது.

    கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய ஆற்றல் அதிகரித்து இருக்கிறது (Debt Service ratio குறைந்திருக்கிறது). இப்போது அதன் வசம் உள்ள “ரிசர்வ்’ ரூ. 28,134 கோடி.

    உலகின் பெரிய 500 நிறுவனங்களில் (Fortune 500) 170-ம் இடத்தில் உள்ள நிறுவனம் இந்தியன் ஆயில். உலகில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் 18-வது பெரிய நிறுவனம். ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனம்.

    இவ்வளவு ஆரோக்கியமான நிறுவனத்தால், ரூ. 28 ஆயிரம் கோடிக்கு மேல் கையிருப்பு (ரிசர்வ்) உள்ள, 125 சதவீதம் டிவிடெண்ட் அறிவிக்கிற, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிற நிறுவனத்தால் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாது! இந்த உயர்வு இல்லாவிட்டால் அது நசிந்துவிடும்! எனவே இந்த நிறுவனத்தை விடப் பலமடங்கு நிதி ஆதாரம் குன்றிய மக்கள், மாதச் சம்பளம் வாங்குகிற மக்கள், ஆட்டோ ஓட்டுகிற தொழிலாளர்கள், இந்த விலை உயர்வையும், இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான விலை உயர்வுகளையும் ஏற்க வேண்டும் என்கிறார் அமைச்சர்!

    அமைச்சர் தனது பேச்சில் தெரிவித்திருக்கும் இன்னொரு விஷயம், இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பேரல் 23 டாலராக இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது 69 டாலராக, உயர்ந்து விட்டது என்பதாகும்.

    மத்திய அரசு அதன் தீர்வைகளை இறக்குமதி செய்யப்படும் விலையின் அடிப்படையில்தான், இத்தனை சதவீதம் எனக் கணக்கிட்டு வசூலிக்கிறது. ஒரு பொருள் இந்தியாவில் வந்திறங்கும் போது அதன் விலை 100 ரூபாய்; தீர்வை 30 சதவீதம் என்று வைத்துக் கொண்டால் அப்போது அரசுக்குக் கிடைப்பது 30 ரூபாய். அதே பொருள் விலை உயர்ந்து 300 ரூபாய் ஆகும் போது, அரசுக்குக் கிடைக்கும் தீர்வை 90 ரூபாய். கூடுதலாகக் கிடைக்கும் இந்தத் தொகையைப் பெற அரசுக்குக் கூடுதல் செலவு ஏதும் இல்லை. அதே அதிகாரிகள், அதே அமைப்பு, அவர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம். கூடுதல் செலவு இல்லாத நிலையில் கிடைக்கும் இந்த வருவாய் உபரி வருவாய். இன்னும் சொல்லப்போனால் எதிர்பாராமல் கிடைக்கும் வருவாய்.

    இதைக் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் நலிவைச் சமாளிக்க முடியும். வேறு சில விதங்களிலும் அரசு இந்த “நலிவை’ எதிர்கொள்ள முடியும்.

    மத்திய அரசு தனது இறக்குமதித் தீர்வைகளைக் குறைத்துக் கொண்டும், நான்கு சக்கர வாகனங்கள் மீதான தீர்வையை அதிகரித்தும், அவற்றின் விலையில் ஒரு சதவீதத்தை “செஸ்’ ஆக (இப்போது கல்வி செஸ் வசூலிக்கப்படுவது போல) வசூலித்தும், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், கையிருப்பு (ரிசர்வ்) இவற்றின் மூலமும் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நலிவு ஏற்பட்டுவிடும் என்று அச்சுறுத்தும் அரசும் அமைச்சர்களும், விலை உயர்வு இல்லை என்ற நிலையில் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்ற கணக்கை வெளியிட முன் வருவார்களா?

    கசப்பது மருந்தா? உண்மையா?
    கசக்கும் மருந்துகள் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சில காய்ச்சல்கள் ஏற்படும்போது, இனிப்புக்கூடக் கசக்கும் என்பதும்! நமது அரசு இப்போது தாராளமயமாக்கல் பொருளாதாரம் என்ற ஒரு விஷக் காய்ச்சலில் விழுந்து கிடக்கிறது. அதற்குப் பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே கசக்க ஆரம்பித்திருக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்களின் நலன்களைக் காக்க மக்கள் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கோருகிறார். அவை நம் (மக்களின்) நிறுவனங்கள். எனவே அவற்றைக் காக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுமானால் மக்கள் நிச்சயம் “தியாகம்’ செய்ய முன் வருவார்கள். மக்களின் தேசப்பற்று இன்றுள்ள எந்த அமைச்சரின் நாட்டுப்பற்றுக்கும் குறைவானதல்ல.

    ஆனால் இன்று மக்களுக்கு மருந்து கொடுக்கும் அமைச்சர்கள் பொதுத்துறை நிறுவனங்களைப் பேண முற்படுகிறார்களா? அல்லது அவற்றை காவு கொடுக்க முற்படுகிறார்களா? நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை நம் நவரத்தின நிறுவனங்களுக்கு ஒருபோதும் ஏற்படாது என்று அமைச்சர்களால் உறுதி அளிக்க முடியுமா?

  • Vijaykanth party launches team to catch bad officers!

    Vijaykanth party launches team to catch bad officers!:

    கேப்டனின் ‘ரமணா ஸ்டைல்’ ஊழல் தடுப்பு படை

    தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் குறித்து இங்கு புகார் கொடுக்கலாம் எனவும், அப்படிப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் அறிவித்துள்ளார்.

    இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இந்தப் பிரச்சினையில் நான் மிகவும் தீவிரமாக உள்ளேன். பிரச்சினைக்கு தீர்வு வரும் அன்றுதான் எனது பிறந்த நாளை கொண்டாடுவது என்றும் முடிவு செய்துள்ளேன்.

    என்றார் விஜயகாந்த்.

    கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது வழக்கம்போல் சினிமா பாணியில் கோபமடைந்த விஜயகாந்த்,

    திட்டம் இல்லாமலா கட்சியை ஆரம்பித்திருப்பேன்? அதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி எல்லாம் உங்களிடம் விவாதிக்க முடியாது என்றார்.”