Category Archives: Uncategorized

பாரா-க்களுக்கு பத்து கட்டளைகள்

குறிப்பு: எழுதுவதற்கு எவ்வளவோ முக்கியமான விஷயம் இருக்கிறது. சனிக்கிழமை பார்த்த குறும்பட விழா, அவற்றை குறித்த பிரதிபலிப்புகள், தொலைந்துபோன தாகூரின் மெடல்களின் கண்டுபிடிப்பு, காஷ்மீரில் கல்யாணச் செலவுகளுக்கு விதித்த தடா, தவணை அட்டைகளைத் திருடும் புதிய கணினி வைரஸ், குல்தீப் நய்யாரின் ராஜ்ய சபா எம்பி தேர்தலுக்கான நியாயமான மனு, இஷா கோபிகர் நடிக்கும் கேர்ள்ஃப்ரெண்ட், வாரசுரபி அனுப்பியது எரிதமா என்னும் எண்ணம், சென்னைக்கு வரும் இண்டெல் தொழிற்சாலையும் அதனால் என்ன நனமை என்னும் கேள்வி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் #8 என்று வரிசைப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ரேகனின் வாழ்க்கை+மரணம், என்.ஆர்.ஐ. எம்பி மது யக்ஷி குறித்த மனவோட்டங்கள், தலைபத்து ‘போதை தெய்வங்கள்’ வரிசையில் இடம்பிடித்த இந்தியர், நியு ஜெர்ஸிக்குப் போகும்பொழுது ‘பிபி துப்பாக்கி’யால் சுடப்பட்டதால் உடைந்த ரியர் வ்யூ கண்ணாடியின் சோகக் கதை, பயணத்தின் போது வாசித்த ஹார்வார்ட் கல்லூரி பத்திரிகை ‘எச்-பாம்ப்’, அதற்கு முன் ஊர் சுற்றிய வேகாஸ், என்று எக்கச்சக்க அனுபவம் இருக்க, பாராவுக்கு ஒரு பதில் பத்து:



1. சன் டிவி நியுஸ், ஹிந்து தலையங்கம், ரீடிஃப் செய்திகள் எல்லாம் அனைவருக்கும் இணையத்தில் கிடைக்கும். அதன் மறுபிரதிபலிப்பாக வலைப்பதிவு வைத்துக் கொள்ளாதீர்கள்.

2. என்.பி.ஆர். நடத்தும் ‘கனெக்ஷன்’,ஃபாக்ஸ் கொடுக்கும் ‘ஓரெய்லி ஃபாக்டர்’, பிபிசி ஒளிபரப்பும் ‘உலகக் காதல் திருமணங்கள்’, எண்டிடிவி நிகழ்ச்சிகள் போன்றவை இணையத்தில் எளிதாகத் தட்டுப்படாது. அதை வைத்து வலைப்பதியுங்கள்.

3. இருபத்தோராவது பதிவு, எழுபத்தி எட்டாவது பதிவு போன்றவை நல்ல விஷயம்தான். ஆனால், கட் அவுட் வைத்து marquee எல்லாம் போட்டு விளம்பரபடுத்தாமல் ஒரு ஓரத்தில் அதை சொன்னால் போதும்.

4. இணையத்தில் படிக்கும்போது நாலு கிலோபைட்களுக்கு மேல் ஒரே தடவையாகப் படிப்பது கொஞ்சம் சிரமம். அந்தப் பக்கம் பாஸ் வருவார்; இந்தப் பக்கம் மின்னஞ்சல் வரும்; ஆபீஸ் ஃப்ரிட்ஜில் இலவச டோனட் (இனிப்பு வடை) இருப்பதாக அறிவிப்பு வரும் – பத்தி நிமிடத்திற்குள் பறக்காவெட்டியாக கொத்தாக விட்டால் மற்ற சகாக்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள். இந்த மாதிரி இடைஞ்சல்களுக்கு நடுவில் பொம்மையே இல்லாமல் நாற்பது கிலோபைட் படிப்பதற்கு பதில், பகுத்து வெளியிடுங்கள். எங்கே விட்டோம் என்பதும் எளிதில் பிடிபடும்.

5. இன்னொருவர் கருத்தை எதிர்க்க வேண்டுமானால் உங்க எழுத்திலேயே மறுத்து எழுதுங்கள். ஆதாரபூர்வமான வாதங்கள் எடுத்து வைக்காமல், ‘வாய்மை எனப்படுவது…’ என்று குறளையும், சீவக சிந்தாமணியையும், இன்னா நாற்பதையும் துணைக்கு அழைக்காதீர்கள்.

6. எப்பொழுதாவது ஒரு மாட்ச்சுக்குக் காப்டன் ஆகும் ட்ராவிட் போல், என்றாவது ஒரு பதிவு எழுதிவிட்டு, அதை தமிழில் இயங்கும் அத்தனை குழுமங்களுக்கும் பிட் நோட்டிஸ் அனுப்பாதீர்கள்.

7. முகம் தெரியாமல் எழுதத் விரும்பினால், பிறரின் ட்ரேட்மார்க் உபயோகங்களை அள்ளித் தெளித்து விடுங்கள். ஆனந்த் ராகவின் ‘அபிவாதயே’, எல்லே ராமின் ‘கபாலி’, போன்ற பிரயோகங்கள் வைத்துக் கொண்டு, அவர்தானா இவர் என குழப்படியுங்கள்.

8. வலைப்பூ ஆசிரியர் ஆனால் சன் டிவி டாப் 10 போல் இல்லாமல், ஜெயா டிவி தொகுப்பாளர் போல் வலைப்பதிவுகளை விமர்சியுங்கள்.

9. உங்களுக்கு பத்து மாதம் முன்பு வந்த ஈமெயில், எட்டு நாள் முன்பு வந்த தொலைபேசி உரையாடல், முந்தாநாள் அடித்த அரட்டை எல்லாம் நண்பர்களின் அனுமதி வாங்கி கொண்டு பொதுசபையில் போடுங்கள்.

10. இந்த மாதிரி தலை பத்து முதல் எந்த விதமான அட்வை?களையும் சீரியசாக அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கிழக்கு வாசல்

இன்று (ஜூன் 4) பிறந்த நாள் கொண்டாடும் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜூன் 2 பிறந்த இளையராஜாவின் கூட்டணி கோலோச்சும் ஒரு பாடல்:

பச்ச மலப் பூவு

நீ உச்சி மலத் தேனு

குத்தங்குறையேது

நீ நந்தவனத்தேரு

அழகேப் பொன்னுமணி

சிரிச்சா வெள்ளிமணி

கிளியேக் கண்ணுறங்கு

தூரி… டூரி…

காற்றோடு மலராட

கார்குழலாட

காதோரம் லோலாக்கு

சங்கதி பாட

பஞ்சணை நேரம் (‘தரவும் தெரவும் உதவட்டுமே’ மாதிரி உறுதியில்லை)

கொஞ்ச வரும் மேகம்

அஞ்சுகம் தூங்க

கொண்டு வரும் ராகம்

நிலவ வான் நிலவை நான் புடிச்சுத் வாரேன்

குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்

பூநாற்று முகம் பார்த்து

வெண்ணிலா நாண

காணாமல் தடம் பார்த்து

வந்தவழி போக

சித்திரத்து சோலை

முத்து மணி மாலை

மொத்தத்திலே தாரேன்

துக்கம் என்ன மானே

வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்

விண்ணிலே மீன் பிடிச்சு சேலை தெச்சு தாரேன்

(‘மன்றம் வந்த தென்றலுக்கு’ மற்றுமொரு ரசனையான பாடல். எஸ்.பி.பி+இளையராஜா என்றவுடன் உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் பாடல் எது?)

இந்தியா டுடே – ஜூன், 2, 2004

ஆசிரியரிடமிருந்து….

  • இது தியாகமா இல்லை காங்கிரசின் ஒரே பிரச்சாரகரான சோனியா காந்தி மக்களின் தீர்ப்புக்குச் செய்த துரோகமா?

  • இது உணர்ச்சிமேலீட்டால் எடுத்த முடிவா அல்லது சாதுர்யமான முடிவா?

  • இது யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதன் விளைவா அல்லது பதவி பயமா?

  • தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்தாரா அல்லது தனது வரம்பைப் புரிந்து கொண்டு விலகினாரா?

இதற்கான விடை புதிரான சோனியாவுக்கு மட்டுமே தெரியும்.



போஸ்டரில் தொடரும் தேர்தல் ரகளை – இந்து தமிழர் முண்ணனி

  • தமிழன் என்று சொல்லடா

    தலை நிமிர்ந்து நில்லடா

    கன்னட கோமாளி ரஜினியை தூக்கி எறிந்த தமிழ் மக்களுக்கு

    நன்றி! நன்றி! நன்றி!

  • பாசிச பார்ப்பணவெறி பிடித்த

    பா.ஜ.க. அ.தி.மு.க. ஒழிந்தது

    இனி இந்தியா ஒளிர்கிறது

    ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு

    நன்றி! நன்றி! நன்றி!



பிரமிள் படைப்புகள்

தொகுப்பாசிரியர்: கால. சுப்ரமணியம்; வெளியீடு: அடையாளம்; பக்கங்கள்: 472; விலை: ரூ. 210/-

வெங்கட் சாமிநாதன்: “60களில் ‘கோடரி’ என்ற தொடக்கம் ஒரு தீர்க்கமான பார்வையையும் தேச, இன, மொழி வரம்புகள் கடந்த மனிதாயத்தையும் காட்டியது. ‘சந்திப்பு’, ‘லங்காபுரி’ போன்றவை பொதுவாக எழுதிய நல்ல எழுத்துக்கள். பெரிதும் உவந்து பேசப்படுபவை ‘ஆயி’, ‘பிரஸன்னம்’, ‘காடன் கண்டது’ போன்றவை. நிறைய சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள், விமர்சனம் என அவர் எழுத்து பலவாறாக இருந்த போதிலும், அதிகம் கவிஞனாகவும் அதை அடுத்து விமர்சகராகவுமே அவர் அறியப்பட்டார்.



அம்பானி: ஒரு வெற்றிக் கதை – என் சொக்கன்

ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புபவராக தன் வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் மாபெரும் தொழிலதிபராக உயர்ந்த அம்பானி, வெற்றிக்காக பின்பற்றிய வழிமுறைகள் ஒரு சினிமாவுக்கே உரிய விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கொண்டவை. அந்த விறுவிறுப்பு குறையாமல் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் சொக்கன்.

இலக்கிய அரசியலும் வெகுஜன அரசியலும் – காலச்சுவடு கண்ணன்

உலகத்தமிழ்.காம்: அறிவு ஜீவிகள் அரசியல் இயக்கங்களுடன் கொள்ள வேண்டிய உறவின் தன்மை பற்றியும், இருக்க வேண்டிய விலகல் பற்றியும் பரவலான விவாதங்கள் நடந்துள்ளன. குறிப்பாக எட்வர்ட் சையத்தின் கட்டுரைகள். இவற்றை ஆராய்வது அல்ல இங்கு நோக்கம். அரசியலின் ‘அசுத்தத்’திற்கு வெளியே சமூகத்தில் தனியாகச் ‘சுத்தம்’ என்று நிலவுகிறதா என்பதைப் பார்க்கலாம்.

பத்திரிகையாளர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் எந்த அவதூறையும் எழுதிவிட்டு ‘பத்திரிகைச் சுதந்திரம்’ என்ற உயர்ந்த விழுமியத்தில் பதுக்கிக்கொள்ளும் வரம் படைத்தவர்கள். தாங்கள் செய்யும் செயல்பாடுகளுக்கும் ஊழலுக்கும் அவர்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை.

சமூகப் பிரச்சினைகள் பற்றியும் மனித மனம் பற்றியும் தீர்க்கமான சிந்தனைகள் அறிவுஜீவிகளிடம் இருக்கலாம். இவை கரிசனம் கொண்ட அரசியல்வாதிகளுக்கும் பயன்படலாம். எனவே இந்த இரு சார்புகளுக்கும் இடையே உரையாடல் நடப்பது நமது சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கலாம். மாறாக, இன்று அரசியலையோ சமூகத்தையோ சீர்திருத்தும் அறச்சார்புகளோ விழுமியங்களோ நமது அறிவு ஜீவிகளிடம் இருப்பதாகக் கருதுவது ஒரு மூடநம்பிக்கை என்றே கொள்ள முடியும்.

கலை – குழந்தை – மசாலாப் படங்கள்

சமீபத்தில் பார்த்ததில் விவரமாக விமர்சனம் எழுதலாம் என்று தள்ளிப் போட்டவற்றில் சில:

அமோரஸ் பெரஸ்: மணி ரத்னத்தின் புண்ணியத்தில் இந்திய வலைப்பதிவுகளில் நிறைய அடிபட்ட படம். இந்தப் படத்தின் அறிமுகமானவர் ‘ஒய் டூ மாமா தம்பியேன்’ என்னும் அடுத்த படத்திலும் பின்னியிருப்பதாக ஆஸ்கார் பரிந்துரைத்தது. அந்த மெக்ஸிகன் படத்தின் இயக்குநர்தான் நாளை வெளிவரும் புத்தம்புதிய ஹாரி பாட்டரின் இயக்குநர். (மாதவனின் மொட்டை தலைக்கும் ஹாரி பாட்டரின் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது இப்படித்தான் 🙂

படத்தின் கதாநாயகர் – எடிட்டிங். இரண்டாவது நாயகர் – காட்சியமைப்புகள். கொஞ்சம் ஒழுக்கத்தை போதிப்பது போல் தோன்றினாலும், நம் மனதின் எதிர்பாராத ஈடுபாடுகளையும் வினோத முடிவெடுப்புகளையும் அமர்க்களமாக, ஆனால் 70எம்எம் பயமுறுத்தல் இல்லாமல் காட்டியிருந்தார்கள். ‘காதல் என்றால் நாய்க்குணம்’ (love is a bitch) என்னும் தலைப்பு. மூன்று கதாநாயகர்களின் குணங்களையும் அவர்களின் செல்லப்பிராணிகளை குறியீடாகத் தொட்டுக்க மட்டும் வைத்துக் கொண்டு, ரத்தமும் சதையுமாக காட்டிய படம்.

ஷ்ரெக்:மூன்றரை வருடம் முன்பு பார்த்த ‘மின்னலே’க்குப் பிறகு வெள்ளித்திரையில் ரசித்த படம். குழந்தை பிறந்தவுடன் சில படம் ‘ஏ’ முத்திரையாலும், சில படம் கமல் வசனம் பேசுவதாலும், சில படம் சரத்குமார் நடித்திருந்ததாலும், பல படம் ‘பிஜி’ முத்திரை இல்லாததாலும் சின்னத்திரையில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஸ்க்ரீனில் நிறைய ட்ரெயிலர்களுடன், பாப்கார்ன் கொறித்துக் கொண்டு, படத்தை நிறுத்தி நிறுத்தி செல்லும் அரசுப் பேருந்து விசிஆர் இல்லாமல், பாஸ்டன் டு பாம்பே செல்லும்பொழுது விடும் தமிழ்ப் படங்களின் இடைவேளை கூட இல்லாமல் பார்த்ததே முதல் சந்தோஷம்.

க்ரேஸி மோகன் வசனம் எழுதினால் ரெண்டு மூன்று முறை படம் பார்க்க வேண்டும். விஷயம் அறிந்த ஜீவன்களுடன் பார்த்தால் படத்தை ஆங்காங்கே நிறுத்தி நான் சாய்ஸில் விட்டுவிட்ட நகைச்சுவைகளை சுட்டி காட்டுவார்கள். இந்தப் படத்துக்கு க்ரேஸி வசனம் எழுதாவிட்டாலும், சில ஜோக்குகள் புரியவில்லை. கருணாஸ் செய்யும் அபத்த ‘வாலி’ உல்டா போல் அல்லாமல், விவேக்த்தனமாக ஒழுங்காக பல ஹிட் திரைப்படங்களை போட்டுத் தாக்கியிருந்தார்கள். புதிய காரெக்டராக அறிமுகமான பூனையாரின் அட்டகாசத்துக்காகவே டிவிடி வந்தவுடன் மறுமுறை பார்க்க வேண்டும்.

‘நீ நீயாகவே இரு; இன்னொருத்தருக்காக ‘செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி’ எல்லாம் முயற்சி செய்யாதே’ என்னும் உயரிய தத்துவத்தை குழந்தைகள் முதல் கோட்டான்கள் வரை மனதில் அறையுமாறு சொல்லியிருந்தார்கள்.

ஸ்மிலியாஸ் சென்ஸ் ஆஃப் ஸ்னோ: பீட்டர் ஹோக்கின் புத்தகத்தைப் படமாக்கியுள்ளார்கள். தமிழில் ஹீரோ செய்யும் சாகசங்களை இங்கு ஹீரோயின் அசத்துகிறார். ரெண்டு டூயட், ஒரு குடும்பப் பாடல், ஒரு சோகப் பாடல், ஒரு தத்துவப் பாடல் என்று மொழிமாற்றி சூப்பர் ஹிட் ஆக்கலாம். அதுதான் ‘விக்ரம்’ ஏற்கனவே வந்து விட்டதே என்கிறீர்களா!?

படத்தின் ஓரிரு வசனங்கள் மனதை மிகவும் கவர்ந்தது. மனிதனின் வளர்ச்சியையும் எண்கணிதத்தையும் ஒப்புமை செய்திருந்தார். குழந்தைப் பருவத்தில் எல்லாமே நிறையாகத் தெரிகிறது. வளர வளர நாம் சாதிக்க வேண்டியது, கிடைக்க வேண்டியது எல்லாம் நெகட்டிவ். கொஞ்சம் போல் நடு வயதில் மனிதர்களின் அழுக்கு, அவர்களின் ஆசை இடுக்குகள் எல்லாம் பின்னம். இன்னும் போகப் போக நாம் அறிய வேண்டியது, தேடல் எல்லாம் அண்ட பராபரத்தையும் தாண்டிய நிலை. மனிதர்களைப் புரிந்து கொள்வது காம்ப்ளெக்ஸ்கள் நிறைந்த கடினம் என்பது போல் விளக்கினார். இந்த உரையாடலுக்காகவே புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் மேலிட்டது.

நானும் ஆங்கில, ஸ்பானிஷ், மெக்ஸிகன், தாய்வான், சீனா என்று படங்களாகப் பார்த்து தள்ளத்தள்ள இரமணீதரனும் பார்க்காத படங்களாக லிஸ்ட் போட்டு செல்கிறார்.

பூஞ்சிட்டு

நிலாச்சாரல்.காம்: குழந்தைகளுக்கான மாத இதழை நிலாச்சாரல் கொண்டு வந்திருக்கிறது. புதிர்கள், படங்கள், ஆங்கிலக் கவிதைகள் என்று சிறுவர்களுகளின் எழுத்தைப் பதிப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எழுதும் ஆர்வத்தை இவை ஊக்குவிக்கும். ஆங்கிலக் கட்டுரைகளும் ஆங்காங்கே கொடுத்திருப்பது, தமிழ் அதிகம் பயன்பாடுத்தாதவர்களின் eyeballs வரவழைக்கும். மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

கலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து



திராவகத் தேன் – வைரமுத்து

உன் மீது அடித்த புயல்

திசைமாறி அடித்திருந்தால்

இமயமலை கொஞ்சம்

இடம் பெயர்ந்திருக்கும்

உன் மீது அடித்த வெய்யில்

கடல் மீது அடித்திருந்தால்

பாதிச் சமுத்திரம்

பாலையாய்ப் போயிருக்கும்

நீயோ

புயலில்

சவாரி செய்தாய்

வெயிலை

சமாதி செய்தாய்

எப்படி நீ கற்றாய்

எரிமலைக் குழம்பு தடவி

வெற்றிலை போடும்

வித்தை?

நீ ஒரு

விசித்திரக் கலவை

திராவகமும் தேனும்

சரிவிகிதத்தில்

சுயமரியாதைப் பண்ணையின்

வீரிய விதையே

உன்னைப்

பாறைகளுக்கடியில்

பதுக்கி வைத்திருந்தாலும்

நிழல் தரும்

விருட்சமாய் அல்லவா

விரிவாய்?

தன்மானம் ஒன்றே

உன்

தனிக்கவசம்

சொல்

முத்தமிடவாவது

நீ

தலை தாழ்ந்ததுண்டா?

அறுபதா? உனக்கா?

அடையாளம் இருக்கிறதா?

நிஜத்தை விசாரிக்க

நீதிமன்றம் கிடையாது

காலண்டர் கூடப்

பொய் சொல்லும் காலமிது

உன் ரத்தத்தில் கரைந்திருக்கும்

தமிழ்த் தங்கம்

முதுமையின் நரைகளை

முறியடித்து விடுகிறது

தோல்வி உனக்கொரு

துயரமன்று – அதுபோல்

வெற்றியும் உனக்கொரு

விஷயமன்று

இலையுதிர் காலமும்

வசந்தமும் இங்கே

கிளைகளுக்குத்தான்

வேர்களுக்கல்லவே

நீ

தேர்தலின் நெற்றிக்குப்

பொட்டாய் இருப்பதினும்

இனத்தின் மார்புக்கு

விழுப்புண்ணாய் இரு

காலத்தின் கணக்கேடு

விருதுகளை விட்டுவிடும்

விழுப்புண்களையே அது

விரும்பும்

என்

கால்சட்டைப் பருவமுதல்

கனவுகளை வளர்த்தவனே

காந்த எழுத்தாலே

கண்களுக்கு இனித்தவனே

என்

கிராமத்து வானத்தில்

கீதமாய் நிறைந்தவனே

என் இதயத்தின்

நான்கு அறைகளும்

அந்த

நன்றியால் நுரைத்திருக்கும்

எனக்கு

இதயத்தை நேரடியாய்

இறக்கி வைக்கத் தெரியாது

ஆனால்

உன்னை நினைத்து

எப்போதாவது நான் உகுக்கும்

இருதுளிக் கண்ணீர் –

உன் தோளில் விழும்

அத்தனை மாலைகளையும்

அடித்துக் கொண்டோ டி விடும்

(கலைஞருக்கு மணிவிழா கவிதை – 1984)

அன்று: The Hindu : Karunanidhi cancels birthday functions

இன்று: கருணாநிதி பிறந்த நாள்: சிறப்பாக கொண்டாட திமுக முடிவு

Wow… From the net 

Wow… From the net Posted by Hello

This photograph was taken by the crew on board the…

This photograph was taken by the crew on board the Columbia during its last mission.
Taken via satellite on a cloudless day, the picture is of Europe and Africa when the sun is setting.
Half of the picture is in night.
The bright dots you see are the city lights.
The top part of Africa is the Sahara Desert.
Note that the lights are already on in Holland, Paris, and Barcelona, and that’s it’s still daylight in London, Lisbon, and Madrid.
The sun is still shining on the Straight of Gibraltar.
The Mediterranean Sea is already in darkness.
In the middle of the Atlantic Ocean you can see the Azores Islands; below them to the right are the Madeira Islands; a bit below are
the Canary Islands; and further south, close to the farthest western point of Africa, are the Cape Verde Islands.
Note that the Sahara is huge and can be seen clearly both during daytime and nighttime.
To the left, on top, is Greenland, totally frozen.
 Posted by Hello

Officespace 

Officespace Posted by Hello