Category Archives: Uncategorized

ஜே. ஜே.: சில குறிப்புகள்: சிறு குறிப்புகள்

பெயரிலி:

நாவலுக்கு இலக்கணம் வலிந்து அதன்படி தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல் வகுத்து, தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத்திறனாய்வுக்குழவிகள் தொடங்கி, (தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு – ஜெயமோகன்.) தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்தபத்து பொறுக்கும் பெரும்பாலான சாதாரண வாசகர் வரைக்கும் எவருமே தமது பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு, குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்-திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே, குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால், தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன், ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே, வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே, பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும், வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக, ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான்; விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலும், எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.

இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும் விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது, வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து, இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கலை; சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால், கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி, சாராம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி, ஊர்வம்பூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு, ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவரணங்கள் – இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா தமிழ் இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்கமுயற்சித்த விளக்கங்களை அவரின் விரிவும் ஆழமும் தேடியிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- ‘யாரோ, இவர் யாரோ? இவரோ? அவரோ?’ என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலும், கதை விரியுமிடத்திலே அந்தத் தனியாளை இந்தப் பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால், தானானது உள்ளே மாறாமற் போகின்றது.

முழுவதும் படிக்க – பெயரிலி கோப்புகள்

ஜே.ஜே : சில குறிப்புகள்

சுந்தர ராமசாமி

‘இலக்கியப் போக்கையே தலைகீழாக மாற்றிவிட்டார்களே இங்கு. மூன்று வேளை சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போது இலக்கியத்தில் நாம் ஒரு வார்த்தை பேசக்கூடாது. செம்மான், தோட்டி, வெட்டியான், நாவிதன், வேசி, பிச்சைக்காரன், கோடாலிக்காரன், கசாப்புக் கடைக்காரன், மீன்காரி, பூட்ஸ் துடைக்கும் சிறுவர்கள், கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். இலை போட்டுச் சாப்பிடுகிறவன் வரக்கூடாது. …..

….

‘புதிதாக இன்னும் எழுதித் தா’ என்று அரிக்கிறான் என் வெளியீட்டாளன். பாலு, நான் சரித்திரத்துக்கு எங்கே போவேன்? என் நாவல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததும், ‘பட்சி சாஸ்திரம்’, ‘பெண்களை வசீகரிப்பது எப்படி?’, ‘படுக்கை அறை ரகசியங்கள்’, ‘வாகட விளக்கம்’, ‘எண்பது வயதுக்குப் பின் இளமை’ என்று எழுதிக் கொண்டிருந்த பயல்கள் எல்லாம் சரித்திரத்தின் மேல் ஏறி விழுந்து பிச்சுப் பறக்கவிட ஆரம்பித்து விட்டார்கள். பாலு, உனக்குத் தெரியும். எங்களுக்குக் கொஞ்சம் போல்தான் சரித்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்றால் முக்குளித்து விளையாடலாம். இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள், பழுதடைந்த அரணமனைகள், மண் மூடிவிட்ட சுரங்கப் பாதைகள், சாய்ந்த கோபுரங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டோ ம். பாலு, கோட்டாற்றில் ஒரு சண்டை நடந்ததாமே, உனக்கு அது பற்றி, ஏதாவது விபரம் தெரியுமா? ஒரு பழைய பாடல், பழைய பாடலின் வாய்ப்பான வரி, கிடைத்தால் போதும். அதை ஒரு பிடி பிடித்தேன் என்றால் தொள்ளாயிரம் பக்கத்துக்கு எழுதிவிடுவேன். ஜே.ஜேயும் அவனுடைய வானர சேனைகளும் புலம்பிக்கொண்டு இருக்கட்டும். எனக்கு என் வசகர்கள்தான் முக்கியம். இலக்கிய தர்மத்தை ஒருநாளும் நான் கைவிட மாட்டேன்.’



பிறமொழி எழுத்தாளர்கள் மாதிரித்தான் நம் மொழி எழுத்தாளர்களும் என்பதை நாம் மறந்துவிடலாம்? தரத்தில் வேண்டும் என்றால் கூடுதல் குறைவு இருக்கலாம். குணத்தில், நடத்தைகளில், பழக்க வழக்கங்களில், போட்டி பொறாமைகளில், குழு மனப்பான்மைகளில், குழி பறிப்பதில், காக்காய் பிடிப்பதில் ஏகதேசமாக ஒன்றுதான். வெவ்வேறு மொழி பேசினாலும் நாம் எல்லோரும் இந்தியர்கள்தானே? நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்குமா?



‘தமிழ் வாசகன் எவனும் பிறமொழி இலக்கியம் படிக்க முடியாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லவில்லையே’ என்றார். எனக்கு முகத்தில் அறைந்தாற்போல் ஆயிற்று. ‘நீங்கள் எழுதவில்லை என்று உண்ணாவிரதம் இருக்கும் வாசகன் எவன்?’ என்று நான் திருப்பிக் கேட்டிருக்கலாம். அந்த நிமிஷத்தில் எங்கள் உறவு முறிந்து போய்விடும். ‘எவரும் அவர் விரும்பும் கருத்தை வெளியிடுவதுதான் இலக்கிய உலகின் நிர்த்தாட்சண்யமான நியதி’ என்று சொல்லிக் கொண்டே கடைசி வரையிலும் என்னிடம் பேசாமல் இருந்துவிடுவார். இவரும் பேசாதாகிவிட்டால், அப்புறம் நான் தனியே பேசிக் கொள்ள வேண்டிய நிலை இன்று.



‘கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள்’ என்ற தலைப்பில் அவன் எழுதியுள்ள நூலில், “தோவிகளுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம், குழு அல்ல, நான்தான் முக்கியம் என்ற விளையாட்டுக்காரனின் மனோபாவமே. காலடியில் வந்துசேரும் பந்து என்னுடையதல்ல, என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. உனக்குக் கொண்டுபோவதற்குச் சாத்தியமானதற்கு மேல் ஒரு அங்குலம் கூடப் பந்தைக் கொண்டுபோக முடியும் என்று நினைக்காதே. நீதான் ‘கோல்’ போட வேண்டும் என்று ஒரு போதும் நினைக்காதே. உனக்கு பெரும் தடைகள்சூழ்ந்து வரும்போது, பந்தை மேலெடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே’ என்றெல்லாம் ஜே.ஜே. எழுதியிருக்கிறான். கால் பந்தாடத்தை அடிப்படையாக வைத்து விரிவாக ஜே.ஜே. எழுதியுள்ள குறிப்புகள், கால் பந்தாட்டத்தை பற்றியது மட்டும் அல்ல என்று விமர்சகர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எங்கும் பலவீனத்தின் ஊற்றுக்கண்ணுக்கான காரணம் மனிதன், அவனுக்கும் அவன் ஆற்றும் பங்குக்கும் உள்ள உறவில் கோணல் ஏற்படுத்திக் கொண்டு விட்டதே என்றும், இந்தக்கோணல் சுய பிமானத்திலிருந்து தோன்றுகிறது என்றும் ஜே.ஜே. கூறுவதாக விமர்சகர்கள் குறித்திருக்கிறார்கள்.

காலச்சுவடு – ரூ. 75/-

Patient’s anasthesia also does not work :)) 

Patient’s anasthesia also does not work :)) Posted by Hello

The lifecycle of all shareware 

The lifecycle of all shareware Posted by Hello

Not very funny… but okay 

Not very funny… but okay Posted by Hello

Appaa…. Ammmaa Vilaiyaattu 

Appaa…. Ammmaa Vilaiyaattu Posted by Hello

How to ask for help in the future? 

How to ask for help in the future? Posted by Hello

Office email… Please send emails to Hotmail or Y…

Office email… Please send emails to Hotmail or Yahoo 😉 Posted by Hello

Does it work, when my software crashes on client-s…

Does it work, when my software crashes on client-site also? Posted by Hello

திண்ணையின் Take-aways

இசை கேட்டு… : சந்திரலேகா வாமதேவா

1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளiல் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன.



சமீபத்தில் வாசித்த நூல்கள் : ஜெயமோகன்

தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் – மூவாலூர் ராமமிர்தத்தம்மாள்

இந்நாவல் ஒரு சமூக ஆவணமாக இன்றும் மிக முக்கியமானது. இதில் நாம் ஏறத்தாழ முற்றாக மறந்துபோன ஒரு காலகட்டத்தின் எளிய சித்திரம் உள்ளது. தாசிகள், அவர்களின் தாய்மார்கள், டாபர் மாமாக்கள், மைனர்கள், கிரிமினல் வக்கீல்கள் அடங்கிய ஓர் உலகம். ‘தில்லானா மோகனாம்பாள்’ [கொத்தமங்கலம் சுப்பு] போன்ற நாவல்களில் நாம் ஓரளவு கலைப்பூர்வமாகவும் விரிவாகவும் காணும் உலகம்தான் அது. அந்தக் கோணத்தின் மறுபக்கம் இந்நாவலில் உள்ளது. தாசிவாழ்க்கையில் உள்ள இழிவுகள் அனைத்தையுமே தார்மீகமான கோபத்துடன் ஆசிரியை சொல்லிச்செல்கிறார். அவ்விழிவை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக நம்பிக்கைகள், மதநம்பிக்கைகள், அதை வைத்து சுரண்டிப் பிழைக்கும் தனவந்தர் மற்றும் புரோகிதர் சோதிடர்க் கும்பல், அதன் பொருளியல் உள்ளடக்கங்கள் என ஒர் அர்ப்பணிப்புள்ள சமூக சேவகியின் சீற்றம்கொண்ட குரலை நாவல் நெடுகிலும் கேட்க முடிகிறது.

இரண்டாவதாக இந்நாவலின் சிறப்பாகச் சொல்லவேண்டியது இதில் தாசிகளின் உலகின் தந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் நுட்பமான உளவியல் அவதானிப்பு உள்ளது என்பதுதான். குணபூஷணி செய்யும் நீண்ட சொற்பொழிவில்கூட தாசிகள் செய்யும் தந்திரங்கள் விவரிக்கப்படுகையில் ஆண் பெண் உறவின் ஆழங்களும் ஜாலங்களும் வௌதவருகின்றன. உதாரணமாக பெரியமனிதர்களை நக்கல்செய்து பேசி இழிவு செய்தும், குற்றேவல்கள் செய்யவைத்தும் அவர்களுடைய உள்ளார்ந்ந்த மசோக்கிய இயல்பைத்தூண்டி விசித்திரமான இன்பங்களை அளிக்கிறார்கள்.தாசி கற்புடன் தன்னையே நினைத்து உருகி வாழ்வதாகக் கற்பனைசெய்ய விழைகிறார்கள். அதை அவர்கள் உள்மனம் நம்புவதில்லை. ஆகவே மனப்போராட்டம், அலைக்கழிப்பு. இந்த மன அலைகளே அவ்வுறவின் முக்கியக் கவர்ச்சியாக அமைந்து அவர்களை மூழ்கடிக்கின்றன.



தமிழ்ப் புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்

தமிழ் புதுக்கவிதையின் வரலாறு குறித்துப் பேசும் நூல்களில் முக்கியமாக இதுகாறும் குறிப்பிடப்பட்டது வல்லிக் கண்ணன் எழுதிய ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ [இந்நூலுக்காக அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றார்] . அக்கினிபுத்திரன் [கனல் மைந்தன்] எழுதிய புதுக்கவிதைவரலாறு மிதமிஞ்சி வானம்பாடி இயக்கப் புகழ்பாடுவதாகையால் பொது வரலாறாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. சி சு செல்லப்பாவே புதுக்கவிதை குறித்து எழுதியிருக்கிறார். அது எழுத்து இதழ் சார்பான பார்வை.

1950களில் சி சு செல்லப்பாவால் வெளியிடப்பட்ட எழுத்து இதழ் உருவாக்கிய கவிதைநோக்கின் இயல்புகளாக கீழ்க்கண்ட அம்சங்களைச் சொல்லலாம்.

  • கவிதையின் மறைபிரதிக்கு [subtext] முக்கியத்துவம் தந்து வாசகனின் கற்பனையை தூண்டும் விதமாக எழுதுவது

  • கவிதைமொழியை ஆர்ப்பாட்டமில்லாமல், அணிகளோ அலங்காரங்களோ இல்லாமல், முடிந்தவரை எளிமையாக, பேச்சுமொழிக்கு அருகேவரும்விதமாக அமைப்பது

  • கவிதைவடிவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக சொற்களை பயன்படுத்துவது

  • இசையமைதியைத் தவிர்த்துவிடுவது

  • கவிஞனின் அந்தரங்கமான குரலையே கவிதையில் வௌதப்படுத்துவது. பொதுவான கருத்துக்களையும் குரல்களையும் தவிர்த்துவிடுவது .

    இதற்கு மாறான அமைப்பாக உருவானது வானம்பாடி இயக்கம்.

  • வெளிப்படையான, நேரடியான, மறைபிரதி ஏதும் இல்லாத குரல்

  • தளர்வான கட்டுப்படில்லாத வடிவம்

  • பொதுவான அரசியல் சமூகக் கருத்துக்கள் மற்றும் அறைகூவல்கள்

  • அணிகள் சொல்விளையாட்டுக்கள் கொண்ட மேடைப்பேச்சு நடை ஆகியவை கொண்டது.



    தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா

    சுஜாதா கதைகள் நான்குவகை.

  • நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை.

  • நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல்சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.

  • மூன்றாவதாக உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள்.

  • நான்காவது வகை ஒரு வகையான பகீரடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை.