Category Archives: Uncategorized

உயிரெழுத்து குழுமம்- அம்புலி மாமா… அம்புலி மாமா…

சேவியர் – #5258: சதுரங்கம் படத்துக்காக யுகபாரதி ஒரு பாடல் எழுதினார்,



அம்புலி மாமா அம்புலி மாமா

ஆசை தீர முத்தம் தாதா

கன்னக் சிவப்பில்

பின்னம் கழுத்தில்



என்று போகும் அந்தப் பாடல். இந்தப் பாடலில் பல்லவியை நண்பர் பழனிபாரதியிடம் இவர் சொல்ல. பிரமாதமாக இருக்கிறதே என்று பாராட்டியவர்…. பேரழகன் படத்துக்காக பாடல் எழுதும் போது அதைக் காப்பியடித்து



அம்புலிமாமா அம்புலிமாமா

அம்புலிமாமா நாந்தானே….



என்று பாட்டை எழுதிவிட்டார். பாடலைக் கேட்ட யுகபாரதி அதிர்ச்சியாகி… இப்படியும் இருக்கிறார்களா கவிஞர்கள் என உள்ளுக்குள் உடைந்தே போனார். பழனி பாரதி ஒரு பாடலைச் சம்பாதித்தார்…. ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டார். இப்போது என்னுடைய கேள்வியெல்லாம்….. எத்தனை (பிரபலமாகாத) கவிஞர்களின் கற்பனைகள் இப்படி திரைப்படப் பாடலாசிரியர்கள் சிலரால் திருடப்பட்டு விற்பனையாகிறதோ ?

புதியமாதவி – #5264: கவிஞர் இன்குலாப் என்னிடம் சொல்லியிருக்கின்றார்.. ” என் கவிதைகளில் சில உருவகம், படிமம், சொல்லாடல் எல்லாம் சீவகசிந்தாமணியில் இருப்பதை என் கவிதைகளை நான் எழுதியப் பிறகு நான் மணிமேகலை நாடகத்திற்காக சீவகசிந்தாமணியை முழுமையாக வாசிக்கும்போது உணர்ந்தேன்..இப்போதெல்லாம் ஏதாவது புதிய கற்பனை, படிமம் வந்து விழுந்தால் நமக்கு முன் எழுதிய சீவகசிந்தாமணியில் இருக்கின்றதா என்று புரட்டிப் பார்க்கின்றேன்..!!!”

என் கவிதை “போராளியின் பயணத்தில் ” நான் எழுதியிருந்தது..



கதறினாள் சின்னாத்தா-எந்தக்

கண்ணனும் வரவில்லை

“பாஞ்சாலிக்குப்

பட்டுச்சேலைக் கொடுத்த

கண்ணபிரானின் கரங்கள்

சின்னத்தாயின்

நிர்வாணத்தில்

சிறைப்பட்டுப்போனது”



ஆனால் அச்சில் வரும்போது இந்த வரிகள் நீக்கப்பட்டு அவசரம் அவசரமாக எழுதிக்கொடுத்தேன்



“அவள் கதறுலுக்கு ஓடிவர

அவள் என்ன

ஐவருடன் படுத்த

தர்மராஜனின் தர்மபத்தினா..?”

என்று.

ஏன் தெரியுமா,, என் பட்டுச்சேலை வரிகளின் கருத்து அப்படியே கவிஞர் இன்குலாப் எழுதி மிகவும் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்ட வரிகள் என்று. என் கவிதைகளை வரிவிடாமல் வாசித்து பிழைத்திருத்தமும் செய்த அய்யா இன்குலாப் அவர்கள் ஏன் என்னிடம் இதைச் சொல்லவில்லை..? விடுவேனா சொல்லுங்கள்.. கேட்டேன்.. அய்யா சொன்னார்.. நீ என் கவிதையை வாசிக்கலை. உனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதுனு எனக்குத் தெரியும்.

தந்தையர் தினம்

ஞாயிற்றுக்கிழமை ‘அப்பாக்களின் தினம்’.

ஆதர்ச அப்பா என்றல் கண் முன் நிழலாடுபவர் ரேமண்ட் விளம்பரங்களில் வருபவர்தான். ஆபீஸில் இருந்து சோர்ந்து வந்தாலும் ‘ரீ-வைடால்’ மாத்திரை விளம்பரத்தில் வருபவர் போல் ‘முடியலே’ என்று புலம்பாமல், செல்ல மகளுடன் விளையாடுபவர். காலில் வைத்துத் தூக்கிப் போடுவது, தோளில் உப்பு மூட்டை தூக்குபவது, ஓடிப்பிடித்து விளையாடுபவது, கண்ணாமூச்சி ஆடுவது, குழந்தையைத் தூக்கிப் போட்டு பிடிப்பது என்று உற்சாகமாக வளைய வருபவர்.

இன்னொரு (பழைய) ரேமண்ட் விளம்பரத்தில் மகனை காடு, மலைக்குக் கூட்டி சென்று கதை பேசுவார். ஒரு டிபிகல் அப்பா என்றால், வனத்துக்கு சுற்றுலா கூட்டிச் சென்றாலும், அம்மாவிடம் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, பெட்டி மட்டும் தூக்குபவர் என்னும் பிம்பத்தை உடைத்த விளம்பரம். திரைப்படங்களில் காட்டப்படும் எஸ்.வி.ரெங்காராவ் முதல் ‘பிரமிட்’ நடராஜன் வரையினாலான (இதை வைத்து கூட தந்தையர் தின ஸ்பெஷல் கட்டுரை ஒன்று செய்யலாம் போல் இருக்கிறதே… 🙂 அப்பாக்களிடம் இருந்து வித்தியாசப்படும் சித்தரிப்புக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால், என்னதான் குழந்தைகள் விரும்பினாலும் வேர்வைகளின் தலைநகரம் சென்னையில் இருந்து கொண்டு கோட்-சூட் எல்லாம் மாட்டிக் கொண்டு திரிய முடியாது. நமக்கு சௌகரியம் காட்டன் பனியன்+ஜீன் ஷார்ட்ஸ் மட்டுமே. விளம்பரத்தில் மட்டுமே கோட் போட்ட மாடல் அப்பாவை ரசிக்கலாம்?

Raymond Ads 

Raymond Ads Posted by Hello

வலைப்பதிவாளர்களுக்கு வழிகாட்டல் நெறிகள்

பாராவின் கட்டளைகளைத் தொடர்ந்து வலைப்பதிவுகளுக்கு என்று ஏதாவது தார்மீக நெறிகள் இருக்கிறதா என்று தேடியபோது, இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்தது.

அவர்கள் கட்டளைகளின் சாராம்சம்:

நேர்மை + நியாயம்

  • திருடாதே!

  • ஆதாரம், நன்றி, சுட்ட இடம் எங்கே என்பதை சொல்லி விடுங்கள்.

  • பரபரப்பு தவிர்.

  • வதந்தி வேண்டாம்.

  • எது உங்கள் கருத்து, எது பட்டாங்கு (fact) என்பதை தெளிவாக்கவும்.

    தீங்கின்மை

  • பாதிக்கப்படுபவர்களை கருத்தில் கொள்.

  • தனி மனித சுதந்திரத்தில் தலையீடு கூடாது.

    பொறுப்பு

  • தவறுகளை திருத்திக் கொள்.

  • விளம்பரதாரர்களுக்காக பதிவுகளை மாற்றாதே.

  • சக வலைப்பதிவர்களின் ஒழுங்கீனமான செய்ல்பாடுகளை அம்பலப் படுத்து.

  • மற்றவர்களுக்கு சொல்லும் உயரிய நியதிகளை நீ முதலில் பின்பற்று.

    கொசுறு: பாரா முன்பொரு நாள் கொடுத்த பிடிக்காத பத்து

  • 0.004" வாமன வித்தியாசம்

    இந்தப் பதிவு வயது வந்தோர்களுக்கு மட்டுமே ஏற்றது. கணேஷ் சந்திரா போல் இருபத்தொன்று வயதுக்குக்குக் கீழ் இருப்பவர்கள் தவிர்த்து விடலாம்.

    Viveka Babaji -வீட்டில் இருக்கும் கருப்பு-வெள்ளை டிவியில் அந்த விளம்பரம் வந்தால் அணைத்து விடுவார்கள். செய்திகளுக்கு முன் வரும் ‘நிரோத்’ விளம்பரம் சில காலத்துக்குப் பின் அனுமதிக்கப் பட்டது. என்ன சொல்ல வருகிறார்கள், எதற்கு பயன்படுத்தலாம் என்பது ஓரளவு புரிந்திருந்தாலும், சுய தேடலும் ஆர்வமும் மிகுந்தது மட்டுமே மிச்சம். செய்தித்தாள்களில், விளம்பரப் பலகையில் என்று நிறைய இடங்களில், இருவர் கை கோர்த்து – பீச் மணலில் அந்தி மயங்குவதை, ரசிப்பதை பார்க்கலாம். அதற்கும் நிரோத்துக்கும், குடும்ப கட்டுபாடுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்காத அப்பாவிகளாக நாங்கள் மூவரும் இருந்தோம். இந்த மாதிரி விஷயங்களை விளக்குவதற்காகவேனும் ஆறாம் வகுப்பில் இருந்தே செக்ஸ் எஜுகேஷன் வர வேண்டும் என்று காரசாரமாக விவாதிப்போம். எங்களுடன் வம்பு செய்யும் 10-டி பசங்களுக்குக் கூட அதில் கருத்தொற்றுமை நிலவியது.

    ஸ்கூலில் இருந்து திரும்பிவரும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் நிரோத்தை கேட்டுப் பெறுவது என்று நண்பர்கள் முடிவெடுத்தோம். ஸ்டிக்கர்களுக்கும், ஐஸ்-க்ரீம்களுக்கும் மட்டும் செலவு செய்யும் பணத்தை சேமித்து, ஒரு பாக்கெட் வாங்கி மூவரும் அலசலாம் என திட்டம். கடைக்காரன் கை விரித்து விட்டான். ·பார்மஸியில் விசாரித்து பார்த்தவுடன், அவர், என்னுடைய அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்த ·பார்மஸி எங்களுக்கு ராசியானது இல்லை. வீட்டை விட்டுத் தள்ளி மெயின் ரோடில் இருப்பதாலும், அங்கு மருந்து வாங்கிய ஒரு முறை – எனக்கு நோய் குணமாகததாலும், அந்தப் பக்கம் ·பைவ் ஸ்டார் வாங்கக் கூட கால் வைக்க மாட்டோம். அவருக்கு எப்படி என்னையும், என்னுடைய அப்பாவையும் அடையாளம் தெரிந்தது என்பது, இன்னும் எனக்குத் தெரியாது.

    பிலானி போய் இறங்கி, ‘மோகம் முப்பது நாள்’ ராகிங் முடிந்து, சீனியர்களுடன் சமபந்தி போஜனம் ஆரம்பித்த பிறகு, என்னுடைய நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு அரங்கேறியது. நிரோத் என்ற் அல்பதனமாய் சிந்திக்காமல், மூட்ஸ் வாங்கி ஆளுக்கொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டது குறித்து சொல்ல வெட்கமாய் இருக்கிறது. பூஜா பேடிகளும், தீப்தி பட்நாகர்களும் இருந்தால்தான் பயன்படும் என்பது வாங்கிய பிறகுதான் தெரிகிறது. இப்பொழுது இங்கு எழுத வந்தது அது குறித்து அல்ல.

    ஆணுறைகளில் நடக்கும் புரட்சியை குறித்து அறிமுகம் செய்வதே இந்தப் பதிவின் நோக்கம். ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. வழக்கமான அமெரிக்க என்.பி.ஏ கூடைப்பந்து, சவுத் பார்க் சிலாகிப்பு எல்லாம் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் ஸ்வீடனில் ஆணுறை வழங்கும் அரிய திட்டத்தை சொன்னார்கள். அமெரிக்காவின் கல்லூரிகளிலும் இது போன்ற திட்டங்கள் இருக்கிறது. இலவச ஆணுறை, சல்லிசான விலையில் கருத்தடை சாதனங்கள் என அனைத்தையும் விடுதியின் வாசலிலேயே டெலிவரி கொடுத்து விடுவார்கள். இலவசமாகக் கொடுக்கும் ஆணுறையின் அகல, நீளங்களை ஹார்வார்ட் மாணவர்களின் H-Bomb நடத்திய அலசலுக்குப் பேச்சு தாவியது. இலவசமாக தரப்படும் ஆணுறை 0.007 இன்ச் தடிமனாக இருக்கிறது என்பதே அந்தக் கட்டுரையின் முக்கிய புலம்பல். அவர்களுக்கு உலகின் தலை பத்து காண்டம் பட்டியலில் இருந்து சில ஆணுறைகள் மட்டுமாவது சகாய விலைகள் விற்கப்பட வேண்டும் என்று முழங்க ஆரம்பித்தனர். சராசரி ஆணுறையின் தடிமன் 0.003″ மட்டும்தான்.

    எனக்குத் தெரிந்து எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக, முள் வைத்து, கொம்பு கொடுத்து, முனை நீட்டி, கோடு போட்டு, இருட்டில் தகதகத்து, கலர் கலராய், டிஸைனர்களின் வரிகள் போட்டு, யானை போல், குதிரை போல் விதவிதமான வடிவங்களில் விற்பதை லோக்கல் ·பார்மஸியில் அலசியிருக்கிறேன். பாட்டுப் பாடும் ஆணுறைகள் கூட பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பாக்கெட் வைத்தவை கூட விற்பனைக்கு வந்ததாக கேள்பட்டிருக்கிறேன்.

    ஆனால், 0.004″ கொடுக்கும் அனுபவத்துக்கும்; 0.007″ பயன்படுத்தினால் கிடைக்கும் அனுபவத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம், இருவருக்கும் இடையே இருந்துவிடப் போகிறது!?! தெரிந்தால் ஒரு பதில் போடுங்க 🙂

    What is the book she reading? 

    What is the book she reading? Posted by Hello

    Is it a real Photo or imagery? 

    Is it a real Photo or imagery? Posted by Hello

    True to real life 

    True to real life Posted by Hello

    Is she really online :) 

    Is she really online 🙂 Posted by Hello

    Can U see the moving lines? Are they really moving…

    Can U see the moving lines? Are they really moving??? Posted by Hello