-
-
அண்மைய பதிவுகள்
- முருகனும் முகவரும் சுகரும்
- ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்
- அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி
- சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்
- பூமணி அஞ்சலி
- கனகதாசரின் வேண்டுதல் – சரணாகதியின் ஆத்மா
- சனாதனம் என்றால் என்ன? இந்த கேள்வியே தவறானதா?
- குண்டியில் ஓக்கப் பார்க்கும் உலகில் ஒரு ரூபாய் அவமானம்
- பிளேட்டோவின் குகை: தற்கணத்தின் நிழல்கள்
- இது அரசியல் பதிவல்ல
- 🎤 இதயம் இந்தியன் தான்! 🎤
- ஆழியின் ஆட்டம்: மீன்காடு கிராமத்தின் கடைசி வேட்டை
- Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
காப்பகம்
- ஓகஸ்ட் 2026
- ஜூலை 2026
- ஜூன் 2026
- மே 2026
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Category Archives: Uncategorized
Vijay Xerox – Karka Kasadara
Posted in Uncategorized
பெருசுகளின் பெருங்காப்பியங்கள்
கலைஞரின் “தொல்காப்பியப் பூங்கா”, சுஜாதாவின் “புறநானூறு ஓர் எளிய அறிமுகம்” போன்ற புத்தகங்கள் மூலமாவது சங்க இலக்கியங்கள் மேல் இத்தனை வெளிச்சம் விழுவதற்கு நான் நன்றி சொல்கிறேன். எளிய முறையில் இலக்கணத்தின் சூத்திரங்களை விளக்கி தொல்காப்பியம் அப்படி ஒன்றும் கடினமான விஷயமல்ல, இதைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் எனப் பூங்கா நிரூபிக்கிறது என்கிறார் சுஜாதா. அவ்வாறே சுஜாதாவின் புறநானூற்றுக்கும் நிறைய புகழாரங்கள் சூட்டப்படுகிறது.
ஆனால், வெகுஜனங்களால் விரும்பப்ப்டுபவர்களால் எழுதப்பட்டதாலோ, என்னவோ, இந்த இரண்டு புத்தகங்களுமே அச்சுப்பிழை, பொருட்குற்றம், நிறைவின்மை, உணர்வு முழுமை இல்லாமை என்று விமர்சகர்களின் சக்கரவியூகத்தில் அகப்பட்ட அபிமன்யுவாய் விழிக்கிறது.
தொடர்ந்து பாலகுமாரன், ப.கோ.பி., வாஸந்தி, வாலி போன்றோர் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்று நவீன மொழியில் மறுபதிப்பித்தால் அவைகளுக்கும் பெரியோரால் ஆசீர்வதிக்கப்பட்ட, பாடல் பெற்ற தலம் போல், தீட்சையளிக்கப்பட்ட இலக்கிய அந்தஸ்து கிடைக்கலாம்.
பேராசிரியர் தொ. பரமசிவன் ‘இந்தியா டுடே’யில் (ஜல்லை 9, 2003) ஒரு கடுமையான
விமர்சனம் எழுதியிருந்தார்:
கூடல்.காம்
என்னுடைய முந்தைய பதிவு
காலச்சுவடில் வெளியான கட்டுரைகள், தமிழ் சி·பியில் கிடைக்கிறது:
ச. நவநீதகிருஷ்ணன் – காலச்சுவடு/சிஃபி
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் எல்லாப் பிழையும். . . – காலச்சுவடு/சிஃபி
என்னுடைய கேள்விகள்:
1. ஏற்கனவே க்வாலிடியுடன் கூடிய பல உரைகள் இருந்தும், இவர்கள் புதிதாய் ஒன்று எழுதுவது எதற்காக?
அ. எங்க டீமும் ஓலிம்பிக்ஸில் பங்குபெற்றது.
ஆ. போதை மருந்து உட்கொண்டாவது (பிறரை வைத்து எழுதியாவது) பணம் சம்பாதிப்போம்.
இ. நாங்க பெண்டாதலன் வீரர்கள் (கதை, பாடல், இயக்கம், ஒளிப்பதிவு இன்ன பிற செய்த எண்பதுகளின் இயக்குநர்கள் போல).
ஈ. எழுதுவதற்கு வேறு எதுவும் அகப்படவில்லை.
2. முத்தொள்ளாயிரம் போன்றவைகளுக்குக் கூட சிறப்பான உரை இருக்கிறது. புலியூர் தேசிகன் எழுதினாரா, வானதி வெளியீடா என்று தெரியவில்லை. ஆனால், அனைத்துப் பதிப்பகங்களும் ஒரு உரையை, அவர்களின் ஆஸ்தான எழுத்தாளரைக் கொண்டு வெளியிட்டிருக்கும். இணையத்தில் எளிதாக எதுவும் கிடைப்பதில்லை என்பது குறையே. அதற்காக, சொக்கன் புதிதாக மீண்டும் ஏன் எழுதுகிறார்?
3. மீனாக்ஸின் ‘சென்னைத் தமிழில் புறநானூறு’, நடைமுறை வாழக்கையின் பிண்ணனியில் ஜெயமோகன் மனதில் நிறுத்திய ‘சங்கச் சித்திரங்கள்’ போன்றவை வித்தியாசமானதாகவும், வெறும் உரையை மட்டும் விரிக்காமல், வேறு கோணங்களில் விவரித்தது. புதுக்கவிதையில் சுஜாதா எழுதினாலும், அதுவும் உரைதானே? உள்ளத்தைத் தொடும் படைப்பாக இல்லாமல், அர்த்தத்தை மட்டும் போடும் மடித்து எழுதப்பட்ட அருஞ்சொற்பொருள்தானே?
4. முத்தொள்ளாயிரத்தில் 2700 பாடல்கள் இருக்கிறதா? (3 * தொள்ளாயிரம்). பெரிய ப்ராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கும் சொக்கனுக்கு வாழ்த்துக்கள். ஆனால், பொருள் கொடுப்பதோடு நிற்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு, அன்றைய கலாசாரம், சரித்திரப் பிண்ணனி, இன்றைய வாழக்கைக்கு எவ்வாறு பொருந்துகிறது போன்றவற்றையும் கோர்வையாக விவரித்து கொடுத்தால், வித்தியாசமான உரையாக இருக்கலாம்!?
-பாஸ்டன் பாலாஜி
Posted in Uncategorized
விருப்பப் பட்டியல் – தினம் ஒரு கவிதை
1. இணையத்தில் யூனிகோட் தமிழிலும் பதியவேண்டும்.
2. பழைய இதழ்கள் அனைத்தும் இற்றைப்படுத்தவேண்டும்.
3. ‘சிந்தனை செய் மனமே’ சீக்கிரமே ஆரம்பிக்கவேண்டும்.
4. கொறிக்க ‘கொத்து பரோட்டா’ தேவை.
5. அவ்வப்பொழுது வரும், நட்போடு ஓட்டளிக்க அழைக்கும் சுவாரசியமான தேர்தல்கள் வேண்டும்.
6. முடிந்தவரை முன்னுரை, பின்னுரை, என்னுரை என்று ஏதாவது ஒவ்வொரு நாளும் கவிதையோடு ஒட்டிக் கொண்டு, தினம்-ஒரு-கவிதை ரசனையை மேம்படுத்தவேண்டும்.
7. தி.ஒ.க., கல்கியின் ‘வலைபாயுதே’ முதல் ‘நெட்டன் பக்கம்’ வரை புகழடைய வேண்டும்.
8. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ ஸ்டைல் சொக்கரின் காமெண்டோடு, கவனிக்கத்தக்க புகைப்படங்களுடன் பதிப்பிக்கப்பட்டு, என் கைகளில் தவழவேண்டும்.
9. ‘மூக்கு’ சுந்தரின் மமஎவா வரவேண்டும்.
10. இன்னும் மறந்துபோன ‘விருத்தம் கற்க வருத்தம் எதற்கு’ முதற்கொண்டு ‘கொஞ்சம் கதைக்கலாம் வாங்க’ வரை அனைத்துத் தொடர்களும் தூசி தட்டி வெளியில் வரவேண்டும்!
Posted in Uncategorized
டீகட தினமணி பேப்பர்
1. அலைஞனின் அலைகள்: கவனம்
2. பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்: அழகிய பெரியவன்
3. நோட்டம்: மொழிபெயர்ப்பு – சுகதேவ்
4. THE CINEMAS OF INDIA – Yves Thoravaal
5. நூல் அரங்கம்: தினமணி கதிர்
6. புத்தக லிஸ்ட்: தினமணி ஞாயிறுமணி
7. 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் வரும்: ராமதாஸ்
Posted in Uncategorized
எதிர்க்கட்சி அரசியல்
பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய ஆட்சிக்குத் தேவையற்ற குழப்பம் விளைவிப்பதாக கருணாநிதி சில நாள் முன்பு அறிக்கையளித்தார். சிபு சோரென் போன்ற கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அமைச்சரவையில் பங்கு பெற கூடாது என்று தேசிய முண்ணனியும் ஆர்ப்பாட்டம் செய்து வந்தது. சட்டசபையை சரிவர நடத்தவும் முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்ணியமாக விவாதம் நடத்துமாறு அறிவுறுத்தினார் கலைஞர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை மிகச்சில நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதை திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் கண்டித்தது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 23 முதல் அவைக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்துள்ளனர்.
நான் பள்ளியில் படிக்கும்போது அவ்வப்போது ஆசிரியர் போராட்டம் வெடிக்கும். ஏன், எதற்கு என்று எல்லாம் கவலைப்படாமல், போர்டபிள் கரும்பலகைகளில் கோஷங்கள் எழுதி வாயிலில் வைத்து, வீராவேசமாக வசனம் கேட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியேறிவிடுவோம். ‘ஹைய்யா… ஒரு வாரம் விடுமுறை’ என்னும் குஷி மனதில் தங்கும். நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து மாதந்தோறும் சம்பளமும், இன்னபிற பஞ்சப்படிகளும் வாங்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் இதே மனநிலைதான் இருந்திருக்கும்.
கலைஞரின் மேல் கைவைத்தவரின் கைது + வீரப்பனுக்கு பணம் கைமாறிய முத்திரைத்தாள் மோசடி, கும்பகோணம் போன்ற தீவிபத்துகளின் தடுப்பு போன்றவை குறித்து காரசாரமான விவாதம் நடைபெறும் என்னும் குடிமகனின் எதிர்பார்ப்பு, எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் கலைந்து போனது.
பாரதீய ஜனதா இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டது, ஆனாலும், அந்தக் கட்சிக்குப் பிடித்த கொள்கைகளான ஆலயங்களின் குடமுழுக்குகள் ஒத்திவைப்பு, ஆடு, மாடு பலி மீதான தடை நீக்கம், கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட நீக்கம் ஆகியவை குறித்தும் அமைதி காத்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் யாராக இருந்தாலும், தமிழக சட்டசபைக்கு தரிசனம் தருவதில்லை. அந்தக் கட்சியின் தோழர்கள் காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியோரும் ‘தலைவர் எவ்வழி… தொண்டர் அவ்வழி’ என்று வெளிநடப்பு மட்டும் செய்து வந்தார்கள். அது தற்போது புறக்கணிப்பாக க்ராட்ஜுவேட் ஆகியிருக்கிறது.
இப்படித்தான் பேசாமடந்தையாக இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால், முதல்வருக்கு மட்டும் தேர்தல் வைத்து, அவரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவரை விட்டே, 234 தொகுதிகளுக்கும் உறுப்பினர்களை நியமனம் செய்து விடலாம்.
-பாஸ்டன் பாலாஜி
Posted in Uncategorized
Literary hoax & இணையப் பொறுக்கன்
- Bill Clinton Daily Diary: அட… பில்லி கூட வலைப்பதிகிறார் போல… யாராவது கலைஞரையும் வலைப்பூக்களுக்கு எழுத வையுங்கப்பா 😉
- BOROWITZ report.com: டேவ் பாரி பிடித்திருந்தால், இவரின் எழுத்துக்களும் உங்களுக்குப் பிடிக்கும்.
- USBDT: டைசன் தோற்ற கதையை அபுல் கலாம் ஆசாத் எழுதியிருந்தார். எனக்கு இந்த மாதிரி போட்டி வைத்தால் ஜெயிக்க நிறைய வாய்ப்பு உண்டு! (சுந்தரவடிவேலுவையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் :P)
- Rance: முகம் காட்டாத ஹாலிவுட் நட்சத்திரத்தின் வலைப்பதிவுகள். குசும்பன், பெயரிலி, இட்லி-வடை போன்ற வலைப்பதிவுகளுக்கு மாற்றாக, சிம்ரன், ரஜினி, கமல், ஸ்னேஹா என்று வலைப்பதிவுகள் தோன்றவேண்டும்.
- Jane Blog: மெட்டி ஒலியின் சரோஜா, கோலங்கள் அபி, அண்ணாமலை என்று காரெக்டர் பதிவுகள் கூட (எனக்குத் தெரிந்த வரையில்) தமிழில் கிடையாது. போலீஸாரின் பார்வையில் ‘அலெக்ஸ் பாண்டியன்’, பெண்ணின் குரலாக ‘விதி’ சுஜாதா, என்று எல்லாம் கூட கதாபத்திரங்களை வலையில் உருவாக்கலாம்.
- Andy Kaufman Returns: இறந்து போன என்.எஸ்.கே மீண்டும் மண்ணில் தோன்றினால்…
(கொஞ்சம் சீரியஸாக)
- The Andy Kaufman Hoax: பொய்பதிவர்களின் முகத்திரைகளைக் கிழிக்கக் கிளம்பியிருக்கிறார்.
- Museum of Hoaxes: அனைத்து வதந்திகளையும் சரிபார்க்க செல்லவேண்டிய இடம்.
- போடுங்கம்மா ஓட்டு: எதற்காக வலைப்பதிகிறோம்?
- India News – Topix.net: உலக ஊடகங்களின் பார்வையில் இந்தியச் செய்திகள்.
- INTERNALMEMOS.COM: மெய்யான சுற்றறிக்கைகளின் சேகரிப்பு. Kaiser Permanente-இல் ஸ்பின்ஸ் டால்கம் பவுடரோ, விவிடித் தேங்காய் எண்ணெயோ தடவிக் கொள்ளக்கூடாதாம்!
Posted in Uncategorized
இந்த வார ஹட்ஸன் கவிதை
EXILE (Ravi Shankar)
There’s nowhere else I’d rather not be than here,
But here I am nonetheless, dispossessed,
Though not quite, because I never owned
What’s been taken from me, never have belonged
In and to a place, a people, a common history.
Even as a child when I was slurred in school —
Towel head, dot boy, camel jockey —
None of the abuse was precise: only Sikhs
Wear turbans, widows and young girls bindis,
Not one species of camel is indigenous to India…
If, as Simone Weil writes, to be rooted
Is the most important and least recognized need
Of the human soul, behold: I am an epiphyte.
I conjure sustenance from thin air and the smell
Of both camphor and meatloaf equally repel me.
I’ve worn a lungi pulled between my legs,
Done designer drugs while subwoofers throbbed,
Sipped masala chai steaming from a tin cup,
Driven a Dodge across the Verrazano in rush hour,
And always to some degree felt extraneous,
Like a meteorite happened upon bingo night.
This alien feeling, honed in aloneness to an edge,
Uses me to carve an appropriate mask each morning.
I’m still unsure what effect it has on my soul.
நன்றி: Catamaran
சில பதார்த்தங்கள்:
1. epiphyte – தமிழ்ச்சொல் கிடைக்குமா?
2. Simone Weil – இந்தக் கவிதையின் மூலம்தான் இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ப்ரென்ச் வீரர்களுக்கு சர்க்கரை கிடைப்பதில்லை என்பதால், ஆறாம் வயதிலேயே தானும் சர்க்கரை சாப்பிடாமல் தவிர்த்திருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் போதும் இந்த மாதிரி பட்டினி கிடந்ததால் மோன நிலையில் கடவுள் தரிசனங்களைக் கண்டாலும், கடைசியில் அவரின் இறப்புக்கும் காரணமாகிறது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் அலைக்கழியாமல், அமெரிக்காவிலேயே இருக்க வாய்ப்பிருந்தாலும் குற்ற+கடமையுணர்ச்சினால், லண்டனுக்குத் திரும்பி ரிப்போர்ட்டராகிறார்.
“What a country calls its vital economic interests are not the things which enable its citizens to live, but the things which enable it to make war. Gasoline is much more likely than wheat to be a cause of international conflict.” (from The Need for Roots, 1949) – தகவல்: Simone Weil
3. ரவி ஷங்கரின் பேட்டி: What is ethnopoetics? – தெரியுமா 🙂
4. Verrazano – நியு யார்க் அருகே இருக்கும் பாலம்
5. தலைப்பு: ‘தேம்ஸ் பார்ட்டி’ என்றால் ஆங்கிலம் பேசுகிறவர் என்பது போல் ஹட்ஸன் நதியோடும் நியு யார்க் நகரத்தை குறிப்பிடும் ‘அமெரிக்க’க் கவிதை.
Posted in Uncategorized
அங்கும் இங்கும் பாதையுண்டு!?
நேற்றைய என்.பி.ஆரின் பங்குச்சந்தை குறித்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்புவதை அலசும் தொகுப்பு இடம் பெற்றது. நிகழ்ச்சியில் இருந்து:
* பதினேழு வருடம் கழித்துத் திரும்பிய Gartner-இன் பார்த்தா ஐயங்காருடன் ஒரு மினி பேட்டி.
* அமெரிக்காவில் கிடைக்கும் அந்தரங்கச் சுதந்திரத்தை இழந்தாலும், வயதான அப்பா-அம்மாவின் அருகாமை.
* இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கான முதலீடு அதிகரித்துள்ளது.
* அமெரிக்காவை விட 30-60% கம்மியாக கிடைத்தாலும் ராஜபோக வாழ்வு.
* தாத்தா பாட்டியின் பரிவு பேத்திகளுக்குக் கிடைத்தாலும், தினமும் சந்திக்க விரும்பும் பெற்றோர்.
* சட்டையைப் பிடித்து சங்கோஜமில்லாமல் கேள்வி கேட்கும் திறந்த மேலாண்மைக் கொள்கைகளை பயிற்சி கொடுப்பதில் உள்ள சங்கடங்கள். (இன்னுமா?!)
* எதற்காக தினமும் வேலைக்கு வருகிறார்கள்? எப்படி ஆசை காட்டி தக்கவைத்துக் கொள்வது? அடுத்தவன் அஞ்சு பைசா ஜாஸ்தி கொடுத்தால் தாவி விடுவார்களா?
நிகழ்ச்சியை கேட்டவுடன் சபலபுத்தி ஆட்கொண்டது. பெங்களூர் திரும்பி, சென்னையின் கூப்பிடு தூரத்தில் சொந்தங்களை வைத்துக் கொண்டு, லிடோ வில் புது தமிழ்ப்படமும், ரெக்ஸில் ஆங்கிலப் படமும் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருக்கத் திரும்பலாமா என்று நப்பாசை. இக்கரைக்கு அக்கரை பச்சை… என்ன சொல்றீங்க 😉
– பாஸ்டன் பாலாஜி
—————————
Posted in Uncategorized
Voltaire in Exile by Ian Davidson
வால்டேரை குறித்து ஏழாம் வகுப்பு சரித்திரப் புத்தகத்தில் படித்தது உண்டு. அதன் பிறகு ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்னக் கடிச்சுதா’ என்ற சத்யராஜின் ‘வால்டேர் வெற்றிவேல்’, அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வைத்தார். அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் A&E-இல் ஒருவரின் வரலாற்றை ஒரு மணி நேரத்தில் அடக்கும் வரை பொறுமையில்லாமல், வால்டேரை குறித்துத் தேடியபோது ஐயான் டேவிட்ஸன் கிடைத்தார்.
சிந்தனையாளர் வால்டேரின் (வால்டேர் எத்தனை வால்டேரடா) சிறை வாழக்கையையும், அவரின் படைப்புகளையும் அலசும் புதிய புத்தகத்தின் டைம்ஸ் மதிப்புரையில் இருந்து:
* மனித உரிமையை ஏளனம் செய்தவர் 180 டிகிரி அபவுட் டர்ன் அடித்து மனித உரிமைக்காகப் போராடிய கதையை சொல்லும் புத்தகம்.
* சகிப்புத்தன்மையற்ற, மூடநம்பிக்கைகள் நிரம்பிய கிறித்துவர்; பணக்கார மெய்யியலாளர் — நிதித்துறையில் நிகழ்த்திய சாகசங்களை ராபின்ஸன் அடுக்குகிறார்.
* Absolutism(???)-இன் எதிரி, neo-classical(???)-இன் ஆதரவாளராக எவ்வாறு விளங்கினார் என்பதை விவரிக்கிறது.
* முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம், அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை குறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்ட உற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்ட Candide-இன் விமர்சனம்.
* பாரிஸில் சட்டம் படித்த சரிதையில் ஆரம்பித்து, பண்ணைத் தொழிலாளிகள் வரி கொடுத்து அல்லல்படுவது என்று வால்டேரின் அஞ்ஞாதவாசம் அல்லாத வாழ்க்கையையும் புத்தகம் தொட்டுச் செல்கிறது.
* ப்ரொடெஸ்டண்ட்களுக்கு எதிரான காலகட்டம் அது. ரோமன்-கத்தோலிக்க சேவைக்கு செல்லாவிட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட காலத்தில் Protestant கத்தோலிக்கர்களுக்காக வால்டேர் தீவிரமாகப் போராடியுள்ளார். ழான் கலஸ் (Jean Calas) தன்னுடைய மகனை பிரிவு மாறியதற்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். சாட்சி எதுவும் இல்லாமல், விசாரணை கண்துடைப்பு முடிந்தபிறகு, கையையும், கால்களையும் சிதைக்க உத்தரவிடப்படுகிறது. தவறான தீர்ப்புக்கு மன்னிப்பும், நஷ்டஈடும் வால்டேர் வாங்கித் தந்திருக்கிறார்.
* பாண்டிச்சேரியை ஆங்கிலேயரிடம் இழந்துவிட்ட ஃப்ரெஞ்சு படைத் தலைவரின் மேல் தேசத்துரோகமும், அரசு சொத்துக்களைக் களவாடியதாகவும் பழிபோடப் படுகிறது. இவரை காப்பாற்ற முடியாவிட்டாலும், அந்த தீர்ப்பின் அநியாயங்களை மக்களிடம் விதைத்திருக்கிறார்.
* வால்டேர் சில சமயம் கோழையாகவும், பல சமயம் சீர்திருத்தவாதியாகவும் மாறி மாறி காட்சியளித்தது; பதவிக்கு அடிபணிந்து போய் பதவியில் இருப்பவர்களின் செயல்பாடுகளை எதிர்த்தது; கடவுள் நம்பிக்கையில்லாமல், ஆன்மிகப் பற்று வைத்திருந்தது; சிந்தனையாளராகவும், வர்த்தகப்புலியாகவும் ஒருங்கே ஒன்றையொன்று குழப்பாமல் செயல்பட்டது; பெரும்பணக்காரர்களின் செலவை கண்டித்தாலும், அவர்களைத் துறந்து விட இயலாதது; என்று வால்டேருக்குள் இருக்கும் சாதாரண மனிதனைக் கண்டெடுக்கிறார் ராபின்ஸன்.
இந்தியாவில் இருந்து எழுத்தாளர்கள் நாடு கடத்தப் படுவதில்லை. சல்மான் ருஷ்டி போன்ற சிலர் மீண்டும் தாய்நாட்டைத் தொடுவதற்கு தடைகள் இருந்திருக்கலாம். புகழேந்தி போன்ற சிலர், மன்னன் மகளுடன் சீதனமாக ஒட்டக்கூத்தருக்கு விலை போயிருக்கலாம். அப்பர் போன்ற சிலர் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டா?
புத்தகம் இன்னும் வாங்கவில்லை. வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
-பாஸ்டன் பாலாஜி
————————–
Hardcover: 368 pages
Publisher: Atlantic Books; (July 8, 2004)
$47.96
“People seem to think that our century is merely ridiculous,” he
sighed, “in fact, it is horrible.”
Posted in Uncategorized












