இதில் அஜிதன் என்பதற்கு பதில் மனதின் குரல் அல்லது alter-ego என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏரியை மனிதனின் புத்தி. அதில் மின்னும் நட்சத்திர பிரதிபலிப்புகள் அண்டம். அதன் அருகே உள்ள மின்விளக்கு நகரம் ரத்தக்கொதி நிலை. நீலம் என்பது இரவில் கருமையில் தெரியாத பகலின் நீலவெளி. ஜெயம் (வெற்றி) என்பது இருட்டிலும் நீலத்தைப் புணரும் அண்டம்.
மேற்கண்டவாறு பலவிதங்களில் இந்தக் கதையை ஆராயலாம்.
இந்தக் கதையில் பல உச்சநிலைகள் இருந்தாலும், இரண்டு பிரயோகங்களை மட்டும் பார்ப்போம்:
1. ”ஹீரோக்கு கறி வாங்கப் போவோம். பெரும்பாலும் இளம் கன்று. அது ஆண் என்பதால் கறிக்கு விற்கப்படும். அதன் கறியே கிடைக்கும்.”
இங்கே ரஜினி, விஜய், அஜீத் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் எப்படி அடிமையாகிறார்கள் என்பது இங்கே சுட்டப்படுகிறது. ஹாலிவுட்டில் கறுப்பர்களுக்கு எந்த விருதும் தராமல், அவர்களின் பணத்தை மட்டும் குறிவைக்கும் ஆஸ்கார் விருதுகளை சுட்டுகிறார். அம்மாவும் கலைஞர் கருணாநிதியும் கேப்டன் விஜய்காந்த்தும் நடத்தும் அரசியலைச் சாடுகிறார்!
2. “கூகை. ஆந்தை இனத்தைச் சேர்ந்தது. ” என்றுவிட்டுத் தொடர்ந்தான்.” அதன் எடையைப் பாருங்கள் ஆனால் அது பறக்கும் போது, காற்று கூட அசையாது, சிறகுகள் எந்த ஒலியும் எழுப்பாது”
இதற்கு முந்தையப் பத்தியில்தான் குல தெய்வ வழிப்பாட்டில் இருக்கும் தத்துவப் பார்வை அற்ற வெற்றுச் சடங்கில் மெய்மை தேடும் பயணம் பற்றி சொல்லியிருந்தார். அதாவது நாம் ஆந்தை போல் இரவில் விழித்திருக்கிறோம். ஃபேஸ்புக் பார்க்கிறோம். செய்தியைக் கேட்கிறோம். எல்லாம் எடையில்லாதவை. அவற்றை அனுபவிக்கும்போது நிஜவுலகின் புரிதல் எட்டாது. விஷயம் தெரியாமல், விளைவுகள் ஏற்படுத்தாமல் பறக்கிறோம்!
ஜெயமோகனின் எழுத்துக்களுக்குத்தான் இப்படி வியாக்கியானம் எழுத முடியும். ஆனால், அவர் சம்பந்தமேயில்லாத பதிவொன்றுக்கு இவ்வாறு எழுதமுடிவது எழுத்தாளரின் சாதனை.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.
இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம்ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.
இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது
தமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்
உங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா?
உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா?
ஸ, ஹ, ஜ, ஷ, ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன? (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்
85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்?
பலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது?
நீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது?
லாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா?
தமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்?
விக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது? காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா? அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா?
சில சுவாரசியங்கள்
டிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:
திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு – நூலில் இருந்து ஒரு நறுக்
நான் கேரளத்தில் எம்.ஏ. முதலாண்டுக்குச் சேர்ந்த போதுதான் இலக்கியம் என்பது கதை, நாவல், கவிதை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பது விளங்கியது. ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ வாசித்தாலும் இன்றும் ‘இதுதான்’ என்று ஒரு வாக்கியத்தில் இலக்கியம் பற்றிச் சொல்ல என்னால் முடியவில்லை.
அதனால்தான் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு மல்லாடியவர்களைப் பற்றி கேள்விப்படும் போது அவர்களைச் சந்திக்க விரும்பியிருக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்ற தலைப்பில் ழான் பவுல் சார்த்தர் எழுதிய நூலை என் அலமாரியில் எப்போதும் வைத்திருக்கிறேன்.
இன்றுவரை தமிழில் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் க.நா.சு. என்பது என் கருத்து. வேறு ஏதாவது வேலை செய்தால் இந்தக் கேள்வி மனசிலிருந்து மறைந்துவிடும் என்று பயந்து எந்த வேலையும் செய்யவில்லை க.நா.சு.
க.நா.சு.வை முதன்முதலில் நான் சந்தித்தது பெங்களூரில் நண்பர் ப.கிருஷ்ணசாமியின் வீட்டில். க.நா.சு. ஒரு வாரத்துக்கு மேல் வந்து தங்கினார். கையோடு ஒரு சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டர் கொண்டு வந்திருந்தார். ஓய்வு நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தது தவிர எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார் என்பது என் நினைவு. இன்னுமொரு நினைவு வெள்ளைக் கதராடையில் எப்போதும் காட்சி தந்தார்.
இந்தக் காலத்துக்குச் சற்று முந்தி நான் அப்போது தமிழகத்தில் இருந்த நக்சலைட்டுகள் ஓரிருவரைப் பார்த்திருக்கிறேன். அதாவது எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அவர்கள் ரொம்பவும் கோபமாக இருந்தார்கள் என்பது என் கருத்து.
இந்த இரண்டு ரக மனிதர்களும் மற்ற தமிழர்களைவிட தனிமைப்பட்டு ஒரு வகையான இரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மற்ற தமிழர்கள் தமிழ்சினிமாவில் தங்கள் தங்கள் கனவுகள் நிறைவேறியதைக் கண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கனவை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டு போடக் கற்றிருந்தார்கள்.
ஆனால், க.நா.சு. அப்படிப்பட்டவர் அல்லர் என்பது அவரைப் பார்த்தவுடன் தெரிந்தது. அவருடைய வெள்ளைக் கதர் ஜிப்பாவும் (அவர் காலத்தில் எழுத்தாளர்கள் ஜிப்பா போட வேண்டும். புதுமைப்பித்தன் புகைப்படம் ஜிப்பாவோடுதான் எப்போதும் பிரசுரிக்கப்பட்டது), அவருடைய கறுப்புக் கண்ணாடியும் என்னை அவர் வேறுபட்டவர், வேறொரு காலத்திலிருந்தும் வேறொரு இடத்திலிருந்தும் வந்தவர் என்று நினைக்க வைத்தது. அதுபோல் அவருடைய ஆங்கிலம்.
நன்றி: திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு எழுதியவர் – தமிழவன் முதல் பதிப்பு: 2014 வெளியீடு: அடையாளம் விலை: ₹ 180 பக்கங்கள்: 237
நான் அமெரிக்காவில் கால் பதித்த பிறகுதான், இந்த நாள், மார்ட்டின் லூதர் கிங் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1983இலேயே கால்கோள் இடப்பட்டு, 1986இல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவினாலும், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் 2000ஆவது ஆண்டில்தான் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை எம்.எல்.கே. தினம் என்று அனுசரிக்கத் துவங்கினார்கள்.
இந்தியாவில் எங்கு திரும்பினாலும் மகாத்மா காந்தி சாலை. தமிழகத்தில் அண்ணா தெரு. அமெரிக்காவில் 730 நகரங்களில் இவர் பெயரைத் தாங்கிய தெருக்கள் இருக்கின்றன.
கடந்த வருடம் வெளியாகிய ‘செல்மா’ படத்தின் இயக்குநருடன் உரையாடும் பகுதியை கீழே பார்க்கலாம்:
வாக்குரிமைக்காக போராட்டம். சம உரிமைக்காக குரல் எழுப்புதல். காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள். பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்தல். வன்முறையில் இறங்க விரும்புவோரை வலியுறுத்தி சத்தியாகிரகத்தில் ஈடுபட வைத்தல். கிறித்துவ மதத்தின் அடிப்படையிலான சமூக அறத்தையும் புதிய ஏற்பாட்டில் இருந்து அன்பையும் எடுத்துக் கொண்டாலும், அதை கிழக்கத்திய சித்தாந்தங்களான காந்தியின் அரசியல் எழுத்தையும் புத்தரின் ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினத்தோடு ஒன்றி ஒருங்கிணைந்து வாழும் மதக் கோட்பாடுகளையும் தன் சொற்பொழிவுகளில் முன்வைத்தல்.
1. அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல: கோழைகளால் தைரியமாக இயங்க முடியாது. நீங்கள் தைரியமானவராக இருந்தால் மட்டுமே, சத்தியாகிரகத்தில் ஈடுபடவும். வெறும் பயத்தினாலோ, ஆயுதம் கிடைக்காததாலோ, வன்முறையின்மையை நீங்கள் கடைபிடிக்கக் கூடாது.
2. எதிரியை தாழ்வாகக் காட்ட நினைப்பதோ தோற்கடிப்பதோ அகிம்சையின் நோக்கம் அல்ல: எதிரியை நட்புறவு பேணவைத்து, எதிரியாக நினைக்கவைக்காமல், நம்முடைய நிலையைப் புரிய வைப்பதுதான் வன்முறையின்மையின் நோக்கம் ஆகும். பகிஷ்கரிப்பதும் ஒத்துறையாமை இயக்கமும் நம்முடைய வழிமுறை ஆகும். ஆனால், அந்தப் பாதையில் நம் நோக்கம் நிறைவேறியவுடன் எதிரியின் அகம் திறந்தவுடன் அவருடன் கைகோர்த்து வாழ்வதற்குப் பழக வேண்டும். அகிம்சாமுறை சத்தியாகிரகத்தின் இறுதியில் அன்பார்ந்த சமூகம் உருவாகி இருக்கும். துப்பாக்கி எடுத்து நடக்கும் வன்முறையின் முடிவில் பழிவாங்கும் வெறுப்பு மேலோங்கியிருக்கும்.
3. நம்முடைய எதிரி — தீவினைகளின் ஏவுகணைகள் அல்ல; அந்தப் பொல்லாத்தனமான வழிமுறை மட்டுமே நம் எதிரியாகும்: எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன்? எங்கோ, எவரோ தீங்கான செய்கைகளை வழிவகுத்து, அந்தத் தீவினைகளுக்கு காரியகர்த்தாவாக களத்தில் வேறொருவரை ஏவுகிறார்கள். நம்முடைய குறிக்கோள் அந்தப் பொல்லாத சித்தாந்தத்தை முறியடிப்பது மட்டுமே. இனவெறி என்பதைத் தாண்டி, இந்தப் பிரச்சினை அக்கிரமத்திற்கும் தர்மநீதிக்கும் நடுவே நடக்கும் போராட்டமாக அகிம்சாவாதி உணர்வான். வெள்ளைக்காரனை வீழ்த்துவது அல்ல குறிக்கோள். வெளிச்சத்தின் பாதையில் அனைவரையும் இட்டுச்செல்வதே நம் குறிக்கோள்.
4. தப்பித்துச் செல்லாமல் இருப்பது: ஜெயில் தண்டனையோ… லத்தியடியோ… அதைத் தாங்கும் மனோதிடம் வாய்த்தவரே அகிம்சாவாதி. எப்படி திருப்பி அடிக்கலாம் என்று எண்ணாதே!
5. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை: குண்டு வீசி எதிரியை அழிக்க நினைப்பது புறவயமான வன்முறை. அதே சமயம், மனத்தினுள்ளே வன்மமும் குரோதமும் கொழுந்துவிட்டெரிவது அகவயமான வன்முறை. வெறுப்பைக் கக்கும் பிரச்சாரங்களையும் அடுத்தவரை அழிக்கத் தூண்டும் கோபதாபங்களையும் அகிம்சாவாதி தூண்டமாட்டான். அவன் வழி அன்புமயமானது. குறள்மொழியில் சொல்வதானால்
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
பொருள் : அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
காதலியிடம் அன்பு பாராட்டுவது போல், தோழமையிடம் நட்பு பாராட்டுவது போல், நம்மை வெறுத்து ஒதுக்குபவரிடம் எவ்வாறு பாசமாகப் பழகுவது? அது இயலாத செயல் அல்லவா?
இங்கு Agape எனப்படும் கிரேக்கத் தத்துவத்தை மார்டின் லூதர் கிங் ஜூனியர் முன்வைக்கிறார். இவ்வாறு விரும்புவதற்கு எவ்விதமான லாபநோக்கங்களும் கிடையாது. எதிரியின் மீதான விருப்பம் கொள்வதற்கு அவர் மீதான பற்றோ, அல்லது அவரின் பொருள் மீதான வாஞ்சையோ காரணம் கிடையாது. இது பற்றற்ற பாசம். அவரின் மீது பரிதாபம் கலந்த பாசம். அடுத்தவரின் நன்மைக்காகவே நாம் உருவாக்கி கொள்ளும் பாசம். பாசம் வைப்பதால் நமக்கு நயா பைசா நன்மை கிடைக்காது. எனினும், அந்தத் தருவாயிலும் பாசம் மட்டுமே தோன்ற வைக்கும் அகவயமான அகிம்சையை நீங்கள் உங்கள் எதிரியின் மீது பாய்ச்ச வேண்டும்.
பௌத்தத்தைப் பொறுத்தளவில் அதன் மையக் கோட்பாடாக அன்பும் கருணையும் உள்ளன. மெத்தா(அன்பு), கருணா (கருணை), முதிதா (கருணை அன்பின் விளைவாகத் தோன்றும் மகிழ்வும் களிப்பும்) , உபேகா (அமைதி, சாந்தி) என்பன மிக அழுத்தமாக அதில் வலியுறுத்தப்படுகின்றன. இங்கு உபேகா எனக் குறிப்பிடப்படுவது, வெறுப்பு, பகைமையைப் போக்கி உள்ளம் அமைதியும் நிம்மதியும் அடைவதாகும். உள்ளமானது கோபம், வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சிபெற்ற நிலையிலேயே அன்பும் கருணையும் உருவாக முடியும் என பௌத்தர் கூறுகின்றார். உள்ளத்தில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பது வெறுப்பை நீக்குவது, அன்பு, கருணை என்பன உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். கோபமும் வெறுப்பும் பகைமை உணர்வும்- மன உளைச்சல், மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது புத்தரின் கோட்பாடாகும்.
6. நீதி சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது: உங்களுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அறவழியில் போராடுவீர்கள். இப்போது அடிவாங்கினாலும், நாளை நமதே என்னும் விசுவாசம் இருந்தால் மட்டுமே உடனடியாக தடியெடுத்து எதிராளியை அடிக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மதநம்பிக்கை வேண்டாம். ஆனால், நல்லது மட்டுமே வாழ்வாங்கு வாழும்; அகிலத்தில் தீயது அழிந்து பொசுங்கும் என்று உணர்வீர்களானால் அகிம்சையின் பக்கம் நிற்பீர்கள். அதற்கு என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கலாம். பிரம்மம் என்றுகூடச் சொல்லலாம்.
பிரையன் ஈனோ இங்கே கதை சொல்கிறார். அந்தக் கதையை நான் இவ்வாறு என் மொழியில் சொல்லிப் பார்க்கிறேன்:
1978ஆம் வருடம். நியு யார்க் நகரத்தில் இருந்தேன். அரசல் புரசலாக எனக்கு அறிமுகமாகியிருந்த அந்தப் பணக்காரரின் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைப்பு வந்திருந்தது. குண்டும் குழியுமான சாலைப் பயணம். வாடகைக் கார் ஓட்டுனர் என்னை சந்தேகாஸ்தபமாகப் பார்த்துக் கொண்டேதான் வண்டியோட்டினார். போகும் வழியி்ல் வீட்டின் வெளிச்சுவர்களில் விவகாரமான மொழியில் கரியினால் மிரட்டப்பட்ட கிறுக்கல்களும் காணக்கிடைத்தது.
இறுதியாக அந்தப் பாழடைந்த பழைய பின்னி மில்ஸ் கட்டிடம் போல் சிதிலமடைந்த கோடவுனில் வண்டியை நிறுத்தினார். அதன் வாயிற்படிகளில் இருவர் மயங்கி உலகமறியாத போதையில் கிடந்தனர். தெருவில் வேறு அரவமே இல்லை.
”நாம தப்பா வந்துட்டோம்னு நெனக்கிறேன்”, என்று ஈனஸ்வரத்தில் சொல்லிப் பார்த்தேன்.
அவர் சரியான விலாசத்திற்குத்தான் கொண்டு வந்து சேர்ந்த்திருந்தார். என்னுடைய நண்பன் உற்சாகமாகக் கூவினான், “மேல் மாடி!!”. எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பாக்கி இருந்தது. அவன் விளையாட்டுப் பையன். அழைப்பு மணியை அடித்துவிட்டு, திறக்கும்போது, “எல்லாம் நிஜம்னு நம்பிட்டியா…” என்று வேடிக்கை மாயம் செய்யப்போகிறான் என கற்பனை செய்துகொண்டேன்.
மின்தூக்கி க்ரீச்சிடும் அபாய ஓசையுடன் அசைந்தாடி அதல பாதாளத்தில் தள்ளும் பிரக்ஞையுடன் வந்து சேர்ந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தால், தகதகவென இழைக்கப்பட்ட கோடானுகோடி மினுக்கும் மாளிகை அரண்மனைக்குள் கால் வைத்தேன்.
எனக்கு விளங்கவில்லை. இவ்வளவு படோடாபமாய், இத்துணை பணம் வாரியிறைத்து, இந்த மோசமான பகுதியில் எதற்காகக் குடியேற வேண்டும்? விருந்துபசரிக்கும் அவனின் குடும்பத்தலைவியிடம் கேட்டே விட்டேன்: “உங்களுக்கு இந்த டஞ்சன் பிரதேசம் பிடித்திருக்கிறதா?”
“நான் குடியிருந்த வீடுகளிலேயே, இந்த இடம்தான் பெஸ்ட்!
“ஆனால், வெளியில் பார்த்தால் பயமாக இருக்கிறதே?”
“ஓ… பேட்டையைச் சொல்கிறீர்களா! அது வெளியில் அல்லவா இருக்கிறது!?!”
நியு யார்க் என்றால் இந்த மனநிலைதான். இந்த மனோபாவம்தான் என்னை மீண்டும் மீண்டும் நியு யார்க் நகரத்திற்கு இழுக்கிறது. எல்லாமே கொண்டாட்டம்; எதிலும் வேகம்; இப்பொழுதைய தருணத்தைக் கொண்டாடுவோம்; நாளை நம் நாளோ… நமன் நாளோ!
இந்த தடவை நான்கு நாள் நகரத்தில் கழிக்க முடிந்தது.
முதல் நாள்: விட்னி அருங்காட்சியகம்
இரண்டாவது நாள்: செண்ட்ரால் பார்க்
உலக வர்த்தக மையம் + 9/11 நினைவுச் சின்னம்
டைம்ஸ் சதுக்கம் & அலாவுதீனும் அற்புத விளக்கும்
நான்கையும் பற்றி தனித்தனியே எழுத வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் இயக்குநர் இளமுருகுவையும் எழுத்தாளர் அரவிந்தன் கன்னையனையும் சந்தித்ததையும் நண்பர் டைனோ மற்றும் அவரின் மனைவியின் அறுசுவை விருந்தோம்பலையும் அவர்களின் உபசரிப்பையும் டைனோ வீட்டில் உண்ட நளபாக விருந்தையும் விவரிக்க வேண்டும்.
துவக்கத்தில் அர்ப்பணிப்பு, அஞ்சலி எல்லாமே பிரும்மாண்டத்தை முழக்கமாக தெரிவிக்கின்றன. (அவை தமிழிலும் இருக்கலாமோ?)
புத்தம் புதியதாக கட்டப்பட்ட நூறடுக்கு மாடி உலக வர்த்தக மையம் ஒரு ஷாட்; உடனடியாக இலையுதிர்ந்த காடு போன்ற பெருஞ்சோலையை பருந்து போல் ஆயிரம் அடியில் இருந்து பார்க்கும் தூரயியங்கி கோணம்; இருட்டில் முகம் மட்டுமே தெரியுமாறு ஒளிப்பதிவு என ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கி இருக்கிறார்கள்.
பையை அப்படியே பின் தொடரும் பட அமைப்பு; கார் புறப்பட்டுச் செல்வதை வித்தியாசமாக மனதில் பதியுமாறு அமைத்திருக்கும் கோணம் – எல்லாமே உறுத்தாமல் உள்ளத்தில் பதியும் திரைச்சிந்தனை.
பொண்டாட்டீஸ் ஆர் அஸ் போல் இதிலும் அனாதைப் பையில்தான் கதை ஆரம்பிக்கிறது. இரண்டும் சத்யராஜ்குமார்திரைக்கதை என்பதாலா? அல்லது ஒளிப்பதிவாளர் தினேஷ் ஜெயபாலனின் கைங்கர்யமா?
ஐ.எஸ்.ஐ போலி அடையாள அட்டை எல்லாம் தயார் செய்திருக்கிறார்கள். (எனக்கு ஒண்ணு பார்சல் பண்ணுங்க)
சோபாவில் துப்பாக்கி ஒளித்து வைத்திருக்கும் இடம் தூள். (நிஜமாச் சொல்லுங்க… எந்த சினிமாவில் இதைப் பார்த்தீங்க?)
நான்காண்டுகள் முன்பும் மோகன்ராம் அதேத் தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். தலைக்கு கறுப்பு மசி, தாடி இல்லாத முகம் என்று இல்லாவிட்டாலும், மழுவோ மச்சமோ, ஒட்டி விட்டிருக்கலாம்.
‘முஸ்தபா… முஸ்தபா’ போல் அந்த நட்புக் காட்சிகள் வலுவின்றி க்ளிஷேவாக, தற்பால் உறவின் விளிம்புக்கு அழைத்துச் செல்கின்றன.
எங்கே நிஜம், எங்கே கிராஃபிக்ஸ், எங்கே ஸ்டாக், எங்கே வெட்டி ஒட்டல் என தெரியாதவாறு ஏர் இந்தியா பறக்கிறது; குண்டுகள் வெடிக்கிறது; துப்பாக்கிகளும் தோட்டக்களும் பின்னணியில் படச்சுருள்களும் சுவாரசியம் கூட்டுகின்றன.
கண்ணாடியில் பிரதிபலிப்பு தெரிவது பழைய வாழ்க்கையை ஜீப்ராவை நினைத்துப் பார்க்க வைக்கிறதா… காதில் ஏதோ கர்ஜனை ஆணை வாங்கி கறுப்புக் கண்ணாடியுடன் அவருடனேயே நடக்க வைப்பதன் மூலம் வெளிச்சத்தில் வாழ்ந்தாலும் இருட்டில் இருப்பதைக் குறிக்கிறதா! யோசிக்க வைக்கிறார்கள்
குறும்படத்தின் துவக்கத்தில் வரும் அறிவிப்புகள், இந்தப் படம் முழு நீள நகைச்சுவைப் படம் என கபர்தார் செய்கிறது.
வேட்டையாடு விளையாடு, சி.எஸ்.ஐ மியாமி போல் பதினாறு, முப்பத்திரண்டு என்று நொடிக்கு நொடி பல் அடுக்கு பிரிவாக விரிந்து மாறும் குட்டித்திரைகள், விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள், என காட்சியமைப்பிலும் அரங்கப் பொருள்களிலும் நல்ல கவனம் செலுத்திய தயாரிப்பு.
கொலாஜ் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு துணுக்கு காட்சி, அதன் மேல் நாலைந்து சம்பவங்கள் என்று வசனங்கள் குறைவாக இருப்பது பலே!
ஒரே சமயத்தில் அஷ்டலஷ்மியாக நாலைந்து நபர்கள் வெவ்வேறு சட்டகங்களில் வெவ்வேறு லஷ்மிகளாக தோன்றியிருப்பது சிரத்தை.
உயிர்ப்போலி (க்ளோனிங் டிராக்கர்) உருவாக்கும் கணித்திரையாகட்டும்; அலுவல் திட்டத்தில் வரும் உளுத்தம் பருப்பு, தயிர் ஆகட்டும்; கோப்புகளையும் கணினி இடைமுகத்தையும் பாவ்லா காட்டாமல், உண்மையாகவே தயாரித்திருக்கிறார்கள்.
பெண்ணுக்கு ஆண் குரல் மாற்றம் எல்லாம் கச்சிதமாக இருந்தாலும், ஹேமா ஏன் அவ்வளவு மோதிரம் அணிந்திருக்கிறார் என்பதும், லஷ்மி ஏன் சீமந்தம் போல் அத்தனை வளையல் அணிந்திருக்கிறார் என்பதும் அவிழாத முடிச்சு.
உணர்ச்சிகரமான தருணங்களில் ஆங்கிலத்தில்தான் வசனம் அமைந்திருக்கிறது என்பது நெருடல்
நடிகையில் ஒரெழுத்தை எடுத்துவிட்டால் நகை கிடைத்துவிடும். விளம்பரம் என்னும் வார்த்தைக்கு வியாபாரம் என்னும் வார்த்தை மோனை சந்தத்துடன் அமைந்திருக்கும். நயந்தாரா என்றால் அட்டைப்படம் என்று சென்ற வாரம் காணப்பட்டது. கீழே கல்கி அட்டை கட்டுரை:
தமிழ் சினிமாவின் கோடி லேடி, சிங்கிள் பெண் சிங்கம், ட்ரெண்டிங் பியூட்டி, மாயாவன தேவதை, தனி ஒருத்தி… அவ்வளவும் நயன்தாராதான்!
ஒரு ஹீரோயினாக 10 வருடங்கள் கடந்தும் படபடக்கிறது நயன்தாரா கிராஃப். அடுத்தடுத்து ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ் தட்டியவர். காதல் தோல்விகள், வீண் வம்புகள், உள்ளடி வேலைகள் கடந்தும் ஒரு படத்தின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் நயன். மாஸ் நடிகர்களே நயன் கால்ஷீட்டுக்காக மல்லுக்கட்டுகையில், ‘ரெஜினா’, ‘மாயா’, ‘மஹிமா’, ‘காதம்பரி’… என
சினிக்கூத்து, வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரெஸ் எல்லாம் பார்க்கவில்லை. அங்கும் அவர்தான் இருப்பார் என்பது சம்சயம். ஏன்?
எல்லாப் புகழும் ஜி.ஆர்.டி. தங்க மாளிகைக்கே!
மாநகராட்சி இடத்தையெல்லாம் பல கோடி கமிசன் பெற்று ஜி. ஆர்.டி வாங்கும் போது இந்த மாதிரி, தங்களுடைய பிராண்ட் அம்பாஸ்டரை முன்னிறுத்துவது ஜுஜுபி:
ஜூலை 2012 செய்தி: சென்னை மாநகர மேயருக்கு தொடர்புண்டா? சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராபின்சன் பூங்கா அருகில் சுமார் பத்து கிரௌண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் திமுகவினர் ஆக்கிரமித்து தங்களது கட்சி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இப்போது மீதம் உள்ள இடத்தில எம்சி சாலையை ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செயபட்டிருந்தது. இப்போது அந்த இடத்தை ஜி. ஆர். டி தங்க மாளிகை நிறுவனத்திற்கு லீஸ்கு விட சுமார் ஐந்து கோடிக்கு கமிசன் பெற்று கை மாற்றி விட வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு தலைக்கு ஒரு லட்சம் கொடுத்து விரட்டபடுவதாக தகவல். மேலும் முக்கிய புள்ளி ஒருவருக்கு பதினைந்து கோடி கைமாறப் போவதாக கூறப்படுகிறது. நீதித் துறையின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு கவுன்சிலர்கள் அம்மாவின் உத்தரவையும் மீறி தலா ஐந்து லட்சம் பெற்றுள்ளனர். இதனால் சென்னை மேயரும் பலன் பெற்றிருப்பார என்ற சந்தேகம் வலுத்துள்ளது
இவ்வளவு கோர்த்துவிட்டு, சமீபத்திய நயன் தாரா செய்தியை சொல்லாவிட்டால்… எப்படி?
சமீபத்தில் நயன் – விக்னேஷ் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகியது. மேலும், விக்னேஷுக்கு நயன் அன்பளிப்பாக பி.எம்.டபிள்யூ கார் மற்றும் வீடு ஒன்றை வாங்கி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
தனது பிறந்தநாளை (18 நவம்பர்) முன்னிட்டு, ரோம் நகருக்கு சென்ற நயந்தாரா, அங்கு போப்பிடம் ஆசிர்வாதம் பெற்றார். அவருடன் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தார். அப்படியே நயந்தாராவுக்காக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இயக்குநர் விக்னேஷ், தனது பெயரை விக்டர் என்று மாற்றிக்கொண்டாராம். இந்த பெயர் தேவு நயந்தராவின் சாய்ஸாம்.
பிரபு தேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறிய நயந்தாரா, காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் தனது தாய் மதமான கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்
”உங்களை சந்திக்கணுமே…” என்றவுடன், நீச்சலுடையை முதன் முதலில் அணியும் சினேஹா போல் சிணுங்கலுடன், “அதெல்லாம் வேணாம் சார். நான் ரொம்ப பேச மாட்டேன்.” என்று தொலைபேசியில் செல்லமாக மறுத்தார்.
தவணை அட்ட்டையில் கடன் வாங்கியது தொடர்பாக நுகர்வோர் எண்ணை அழுத்தினால், ஸ்வாதீனமான குரலில் பெண்மணி பேசுவார். எண் இரண்டை அழுத்தவும்; எண் நான்கை அழுத்தவும் என்று உடனடியாக பதிலளிப்பார். அவ்வாறே எனக்கு பாஸ்கர். நான் அனுப்பும் அஞ்சல்களுக்கு உடனடியாக பதில் போடுவார். தீர்மானமான மறுவினையாக இருக்கும். ஆக்ஷன் கிங் என்னும் அடைமொழிக்குப் பொருத்தமானவர். டூரிங் சோதனை செய்து பார்த்தால், நட்பாஸ் என்பவர் ஒரு ரோபோ, என்னும் முடிவுதான் வரும் என்று நான் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தேன்.
எனவே, இதுவரை மின்னஞ்சல் மூலமாகவே பேசிக்கொண்டிருந்தவரை தொலைபேசியில் பிடித்தது, அவர் எந்திரன் – 2, அல்ல… நிஜம்தான் என உறுதி செய்தது.
எங்காவது இனிப்பை வைத்துவிட்டு சென்றுவிடுங்கள். கொஞ்ச நேரத்தில் ஒரேயொரு எறும்பு மோப்பம் பிடித்து வரும். அந்தர் பல்டி அடித்து, உள்ளே நுழையும். செல்லும் பாதையையும் அங்கே கிடைக்கும் பதார்த்தங்களையும், தன் புற்றுக்குச் சென்று தோழர்களிடம் சொல்லும்.
பாஸ்கர் இந்த எறும்பு.
ட்விட்டரில், வலைப்பதிவில், வலை இதழில், மொழி பெயர்ப்பில், செம்மையான கட்டுரைகளாக, முழுமையான குறிப்புகளாக, தமிழுக்குக் கொணர்வார்.
அதே எறும்பை நீங்கள் இன்னொரு இடத்தில் பார்த்து இருப்பீர்கள். கரப்பான் பூச்சியையே சுமந்து வரும். அதன் இறக்கையை, உடலை, பகுதி பகுதியாகப் பிரித்து, தன்னுடைய சிற்றெரும்பு தலையில் தாங்கி இழுத்து வரும்.
அந்த எறும்பும் பாஸ்கர்.
எங்காவது நல்ல கட்டுரை, வித்தியாசமான பார்வை, புதுமையான எண்ணம் என ஆங்கிலத்தில் கிடைப்பதை சமூக ஊடகங்களில் பகிர்வதோடு நில்லாமல், அதை தமிழாக்கம் செய்து தந்து கொண்டேயிருக்கிறார். திங்கள்கிழமைக்குள் ஆயிரம் வார்த்தைகள் வேண்டும் என்று ஞாயிறு இரவு சொன்னால் கூட, “இன்னும் ஒரிரண்டு மணி நேரத்தில் சரக்கு வந்துரும்” என்று உறுதிமொழி மட்டும் தராமல் செழுமையான, சரளமான மொழிமாற்றம் செய்பவர்.
அவரை நேற்று பார்க்க முடிந்தது. ஒரு பயங்கரவாதியை, அதி தீவிர வீர்யத்துடன் செயல்படும் தீவிர செயலாளியை, அடுத்த தலைமுறையில் தமிழை நிலைநிறுத்தி இணையத்தில் பரவலான ஆக்கங்கள் உருவாக்குவதில் மொழி அரக்கனாகவும் விளங்குபவ்ரை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.
அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.
தீவனம்
நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்
சஞ்சீவனம்
சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.
சீவனம்
வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.
கவனம்
கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?
பிருந்தாவனம்
பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.
யெளவனம்
நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.
தாருகாவனம்
தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.
Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.
உபசீவனம்
சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde