‘சிலகம்மா செப்பந்தி‘ என்ற தெலுங்குப் படத்தில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். இது ‘அடிமைகள்‘ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். மலையாளத்தில் சாரதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே.பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.
இந்த தெலுங்குப் படமும் வெற்றி பெற்றது. இதையே தமிழில் கே.பாலசந்தர் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கேரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கேரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றி பெற்றது.
கொசுறு:
இந்தியில் “ராம் கு கா லட்சுமண்” என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தின் தமிழ்ப் பதிப்பு வி.சி.குகநாதன் டைரக்ட் செய்த ‘மாங்குடி மைனர்‘. விஜயகுமார்தான் ‘மாங்குடி மைனர்’! இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.










