Category Archives: Periyar

A Mini Intro to Dravidam & Periyarism in Tamil Nadu

திராவிடர் – திராவிடம் :: கா கருமலையப்பன்
புதிய பார்வை – ஏப்ரல் 16-30, 2007

  • சமூகரீதியாக பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நீதிக்கட்சி பெற்றுத் தந்தது.
  • கோயில்களுக்குக் குறிப்பிட்ட இனத்துப் பெண்களை பொட்டுக் கட்டி விட்டு தேவதாசி முறை என்கிற பெயரில் கட்டாய விபச்சாரம் செய்ததை நீதிக்கட்சி போராடித் தடை செய்தது.
  • 1928ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்காக போராடத் தொடங்கி இன்று கருவறை நுழைவு வரைப் போராடி உரிமை பெற்றுத் தந்தது.
  • பஞ்சமர்களுக்குப் பேருந்தில் இடமில்லை – சூத்திரனுக்கு உணவகத்தில் இடமில்லை என்கிற அயோக்கியத்தனத்தை அடியோடு வீழ்த்தி எல்லோரும் எங்கும் செல்லும்படி சமத்துவம் பெற்றுத் தந்தது.
  • ராஜாஜி 1938-இல் இந்தியைத் திணித்தபோது வெகுண்டெழுந்து பெரியார் ஹிந்தியை விரட்டியடித்தது.
  • அதே இராஜகோபாலாச்சாரி தமிழர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் ஒரே நாளில் 3000 பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிட்டு குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தபோது, பார்ப்பன மனுதர்ம கல்வித் திட்டத்தைத் தடுத்து நிறுத்திட எரிமலையாய் கொதித்தெழுந்த பெரியார், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வைத்தது.

Quotable Quotes – தந்தை பெரியார் அறிவுரை

வயிறு வளர்க்கும் கூட்டம்

“ஒரு விசயத்தைப் பற்றிச் சரியோ, தப்போ என்பதைக் கவனிக்காமல், எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பளந்து வயிறு வளர்ப்பதையே வாழ்க்கையாய்க் கொண்ட மக்கள் உலகம் எங்கும் இருந்துதான் வருகின்றார்கள். இவர்களுடைய உதவி யாருக்கும், எவ்வளவு குறைந்த விலைக்கும் கிடைக்கக் கூடும்.”

(“குடிஅரசு”, 25.12.1932)

எனது ஆசை
“எனக்கு ஆசை எல்லாம், மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் `பார்ப்பனர்’ இருக்கக் கூடாது. இதுதான் என் கொள்கை.”

(“விடுதலை”, 28.8.1972)

சீர்திருத்தம்
“ஒரு சிறு சீர்திருத்தம் கொண்டு வருகின்ற காலத்திலும் சீர்திருத்த விரோதிகள் எழுந்து நின்று ‘வந்துவிட்டது மதத்திற்கு ஆபத்து‘, ‘மதம் போச்சுது, மதம் போச்சுது‘ எனக் கூப்பாடு போட்டால், இந்த நிலைமையில் சீர்திருத்தக்காரர்கள் என்ன செய்ய முடியும்?’
(‘குடிஅரசு’, 30.8.1931)

முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட
“ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.”
(‘குடிஅரசு’, 25.8.1940)

தேர்தலும் – பொதுவுடைமையும்
“எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியம் என்றோ சொல்லிவிட முடியாது.”
(‘குடிஅரசு’, 12.6.1936)

Periyar – Movie Reviews, Cinema Experiences


பெரியார் திரைப்படம் குறித்த பெட்டகம்

பெரியார்
பெரியார்

பெரியார் திரைப்படம் வெளியாகிவிட்டது. இசையமைக்க இளையராஜா மறுப்பு, ராமர் தொட்டதால் அணில் முதுகில் கோடென்றொல் சீதையின் முதுகிலும் கோடுகள் உண்டா என்று கிண்டலடிக்கும் பாடலை எதிர்த்து வழககு, இப்படிப் பல்வேறு சிக்கல்களைக் கடந்து தமிழகத்தில் ஒருவழியாக இயககுநர் ஞான.ராஜசேகரனின் பெரியார் திரைப்படம் வெளியாகிவிட்டது.

முதல்வாரத்தில் திரையரங்குகளில் நல்லகூட்டம்தான்.
தொடக்கத்திலிருந்து இறுதிவரை சத்தியராஜ் தனது சிறப்பான நடிப்புத்திறன் மூலமாக அனைவரையும் கவர்ந்துவிடுகிறார் என்பதே பொதுவான கருத்தாக இருககிறது

ஆனாலும் பல்வேறு விமர்சகர்கள் திரைக்கதை அமைப்பில் குழப்பம் இருப்பதாகவும், சரியான தாக்கத்தினை பார்வையாளர்கள் மீது ஏற்படுத்தவில்லை என்றும் குறை கூறுகிறார்கள்.

இயககுநர் ஞான.ராஜசேகரனின் திரைப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவும், தயாரிப்பிற்கு நிதிஉதவி செய்த தமிழக அரசு மற்றும் திராவிடக்கழகம் ஆகியவற்றை திருப்திப்படுத்துவதற்காகவும் பல்வேறு சமரசங்கள் செய்துகொண்டு விட்டதாக எழுத்தாளர் ஞாநி குற்றஞ்சாட்டுகிறார்.

ஆனால் இயககுநர் ஞான.ராஜசேகரன் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணத்தில் பெரியாரை பார்ப்பது தவறு, அவர் மிகச்சிறந்த மனிதாபிமானி, அதையே திரைப்படத்தில் சொல்ல முற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

படத்தின் கலையம்சம் பற்றி இன்னும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயினும் கூட ஒரு சாதி ஆதிக்கத்தைத் தகர்த்து, இறுகிப் போயிருந்த சமூக அமைப்பை கலகலக்க வைத்து கீழ்சாதியினர் என்று கருதப்படுவோர் அரசியல் அதிகாரம் பெற வழிவகுத்த பெரியார் ஈவேரா வைப் பற்றிய ஓர் அறிமுகம் என்ற வகையில் இத்திரைப்படத்தை வரவேற்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Periyar Movie – Rajni Quote: Banner Ad

Rajni_fans_discussions_Udhyam_Periyar Banner_Quote.JPG

பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே!: ரஜினி ஏக்கம்

“பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று “பெரியார்’ திரைப்படத் தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஜினிகாந்துக்காக “பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்:

“பெரியார்’ படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகர் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ideologically challenged Tamil’s hatred towards Periyar?

இது சர்வே.

இது தற்போதைய நிலவரம்:
Tamil Blogger’s Weird Habits - Results

முழு முடிவுகள்.

என் முத்தாய்ப்பு: பெர்சனலான விஷயத்தில் கூட பெரியாரைப் பாராட்டினால், கேவலப்படுத்துகிறார்கள்.