Category Archives: Music

Satham Podathey – Audio Review(s)

1. பிச்சைப்பாத்திரம்: சத்தம் போடாதே – இசை வெளியீட்டு விழா

2. Senthamizh Thaenmozhiyaan!: சத்தம் போடாதே (யுவன் ஷங்கர் ராஜா): சத்தம் போடாதேவின் பாடல்கள் சுமார்தான்.

3, செல்வேந்திரன்: சத்தம் போடாமல் கேளுங்கள்

“அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளித் தூக்கும்போது
பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்”
சங்கர் மகாதேவன் பாடும் சத்தம் போடாதே படப்பாடலை கேட்க நேர்ந்தது.

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரணை

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்

தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்
——————————————————–
பாடல்கள்: நா முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

௧) அழகு குட்டிச் செல்லம் – ஷங்கர் மஹாதேவன் :: ♥♥♥ /4

ஷங்கருக்காக ஒரு ♥;
நா முத்துக்குமாருக்காக ஒன்று;
கொஞ்சம் தாலாட்டு கேட்டு நாளாச்சு – ஒன்று.

இதே மாதிரி குழந்தை அடம்பிடிப்பதை, பொம்மை வாங்கப் படுத்துவதை, பாத்ரூம் போகும்போது பாதியில் அழுகையை முடிக்கிவிடுவதை, இராட்சஸியாக மாறுவதையும் மணமகன் கூடிய சீக்கிரம் எழுத பதினாறும் பெறுவாராக.

௨) எந்தக் குதிரையில் – ராஹுல் நம்பியார் & ஷ்ரேயா கோஷல் :: ♥♥♥♥ /4

என்னுடைய இசை குறுநிலத்தில், சுஜாதா, சித்ரா, ஹரிணி, மாலதி வரிசையில் ஷ்ரேயாவுக்கும் அரியணை உண்டு.
நெஞ்சில் நிற்கும் மெட்டு. Flawless Execution.

௩) காதல் பெரியதா – சுதா ரகுநாதன் :: ♥♥ /4

சுதா என்பதே தெரியாத மாதிரி பாட சுதா ரகுநாதன் எதற்கு? இருந்தாலும், சுதாத்தனம் தெரியாமல் பாடியது ஆச்சரியம்.

௪) ஓ இந்தக் காதல் – அட்னான் சாமி & யுவன் ஷங்கர் ராஜா :: ♥♥½ /4

‘மௌனம் பேசியதே’யில் ‘காதல் செய்தால் பாவம்’ நினைவுக்கு வருவது பள்ளிக்கூட காதலியை குழந்தையுடன் பீச்சில் சந்தித்தவுடன் ஏற்படும் தொண்டைக்குழி அவஸ்தை தருகிறது.

௫) பேசுகிறேன் பேசுகிறேன் – விவா கேர்ள்ஸ் :: ♥♥♥ /4

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே
கண்டம் தாண்டுமே

சிக்கன் சூப் பாடல். (ஒரு நட்சத்திரம்)
ராஜா போலவே எங்கிருந்தோ வந்த, ரசனையாக சுட்ட இடைச்செருகல். (ஒன்று)
குரல்களுக்காக… *

ரிதம்‘ மாதிரி இதமா அல்லது ‘பூவெல்லாம் கேட்டுப்பார்‘ மாதிரி காதுக்கு மட்டும் வைத்துப் பாரா என்பதை பார்த்த பிறகுதான் பாடல்கள் சத்தம் போடுதா, போடாதே-வா என்று தெரியும்.

Vairamuthu lists his favorite Movie Lyrics & Songs

வாசு.ஸ்ரீராம், செந்தலை.

தமிழ் சினிமாக் கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடலாக நீங்கள் கருதுவது?

பட்டியல் நீளும் ; பரவாயில்லையா?

  • எம்.ஜி.ஆர். –_ சந்தனப்பேழையே (அஞ்சலிப்பாடல்)
  • சிவாஜி _ பூங்காத்து திரும்புமா (முதல் மரியாதை)
  • சிவக்குமார் _ கலைவாணியே (சிந்துபைரவி)
  • ரஜினிகாந்த் _ ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் (படிக்காதவன்)
  • கமல்ஹாசன் _ அந்திமழை பொழிகிறது (ராஜபார்வை)
  • விஜய்காந்த் _ எரிமலை எப்படிப் பொறுக்கும் (சிவப்பு மல்லி)
  • கே. பாக்யராஜ் _ எண்ணியிருந்தது ஈடேற (அந்த ஏழுநாட்கள்)
  • ராஜேஷ் _ ஓடுகிற தண்ணியிலே (அச்சமில்லை அச்சமில்லை)
  • பிரபு _ பூவே இளைய பூவே (கோழி கூவுது)
  • அர்ஜுன் _ தாயின் மணிக்கொடி (ஜெய்ஹிந்த்)
  • சத்யராஜ் _ தாயும் யாரோ (பெரியார்)
  • சரத்குமார் _ கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை)
  • விக்ரம் _ மூங்கில் காடுகளே (சாமுராய்)
  • மோகன் _ இளையநிலா பொழிகிறதே (பயணங்கள் முடிவதில்லை)
  • கார்த்திக் _ பனிவிழும் மலர்வனம் (நினைவெல்லாம் நித்யா)
  • தியாகராஜன் _ ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்நேரம் (கொம்பேறி மூக்கன்)
  • பார்த்திபன் _ அம்மா யாரு அப்பா யாரு (புதிய பாதை)
  • பாண்டி-யராஜன் _ ஆராரிரோ பாடிய-தாரோ (தாய்க்-கொரு தாலாட்டு)
  • பாண்-டியன் _- பொத்-திவச்ச மல்லிகை மொட்டு (புதுமைப் பெண்)
  • மோகன்லால் _ நறுமுகையே (இருவர்)
  • முரளி _ ஒரு ஜீவன் அழைத்தது (கீதாஞ்சலி)
  • ராமராஜன் _ ஓடம் எங்கே போகும் (நம்ம ஊரு நல்ல ஊரு)
  • அரவிந்த் சாமி _ காதல் ரோஜாவே (ரோஜா)
  • பிரபுதேவா _ என்னவளே அடி என்னவளே (காதலன்)
  • விஜய் _ சர்க்கரை நிலவே (யூத்)
  • அஜீத் _ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் (அமர்க்களம்)
  • சூர்யா _ ஜன கண மன (ஆய்த எழுத்து)
  • மாதவன் _ தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால்)
  • பிரசாந்த் _ அன்பே அன்பே கொல்லாதே (ஜீன்ஸ்)
  • ரகுமான் _ வராக நதிக்கரை ஓரம் (சங்கமம்)
  • தனுஷ் _ என்னம்மா கண்ணு (திருவிளையாடல்)
  • ஸ்ரீகாந்த் _ ஆப்பிள் பெண்ணே (ரோஜாக்கூட்டம்)
  • ஜெயம் ரவி _ மண்ணிலே வந்து உடையிது வானம் (மழை)
  • விஷால் -_ ஆரிய உதடுகள் (செல்லமே)
  • ஷாம் _ காதல் வந்தால் சொல்லி அனுப்பு (இயற்கை)
  • ஜீவா _ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் (டிஷ்யும்)
  • ஆர்யா _ ஒவ்வொரு பிள்ளையும் (வட்டாரம்)
  • பிருதிவிராஜ் _ காற்றின் மொழி (மொழி)

Ten Random Songs – Ten Music Directors

  1. பாடல்: கருடா கருடா
    • பாடகர்: கிருஷ்ணராஜ், சுஜாதா
    • இசை: தேவா
    • படம்: நட்புக்காக
  2. பாடல்: அட யாரோ
    • பாடகர்: எஸ்பிபி
    • இசை: டி ராஜேந்தர்
    • படம்: ரயில் பயணங்களில்
  3. பாடல்: ஆடிடும் ஓடமாய்
    • பாடகர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
    • இசை: கங்கை அமரன்
    • படம்: சுவரில்லாத சித்திரங்கள்
  4. பாடல்: வண்ண வண்ணப் பூவே
    • பாடகர்: ஜானகி
    • இசை: இளையராஜா
    • படம்: பூட்டாத பூட்டுக்கள்
  5. பாடல்: தேனூறும் ராகம்
    • பாடகர்: ஜானகி
    • இசை: லஷ்மிகாந்த்-ப்யாரெலால்
    • படம்: உயிரே உனக்காக
  6. பாடல்ஆகாயம் பூக்கள்
    • பாடகர்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
    • இசை: சிற்பி
    • படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
  7. பாடல்: காடு கொடுத்த கனியிருக்கு
    • பாடகர்:
    • இசை: கேவி மகாதேவன்
    • படம்: நீதிக்குப் பின் பாசம்
  8. பாடல்: கவிதைகள் சொல்லவா
    • பாடகர்: எஸ்பிபி, சுஜாதா
    • இசை: கார்த்திக் ராஜா
    • படம்: உள்ளம் கொள்ளை போகுதே
  9. பாடல்: இதற்குப் பெயர்தான் காதலா
    • பாடகர்: ஹரிஹரன், சுஜாதா
    • இசை: பரத்வாஜ்
    • படம்: பூவேலி
  10. பாடல்: செல்வமே, ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
    • பாடகர்: எஸ்பி ஷைலஜா
    • இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    • படம்: அமரகாவியம்

Why I admire TR – 1

Ithu Kuzhanthai Paadum Thalaatu

Movie Name: Oru Thalai Raagam
Singer: Balasubramanyam S P
Music Director: Rajender T

Idhu Kuzhandai Paadum thaalatu
idhu iravu nera poobaalam
idhu merkil thoonthrum udhayam
idhu nadi-illaada oodam

nadai maranda kazhalkal thannin thadaiyathai parthen
vadamilantha ther-rathu ondrai naalthoorum illukiren
sirakilantha paravai ondrai vaanathil paarkiren
sirakilantha paravai ondrai vaanathil paarkiren
uravuvuraatha pennai yenni naalleallaam vazhkiren

(Idhu Kuzhandai…)

Verum naarril karam kondu poomaalai thodukiren
verum kaatril uli kondu silai ondrai vadikiren
vidinthu vita poozhuthil kuda vinai-innai paarkiren
vidinthu vita poozhuthil kuda vinai-innai paarkiren
virupanmila pennai yenni ulagai naan verukiren

(Idhu kuzhandai…)

ulamarinda pinthaanea avalai naan ninaithathu
ularvuvullaval yenna thaanaa manathai naan koodhuthathu
uyireillantha karuvai kondhu kavithai naan vadipathu
uyireillantha karuvai kondhu kavithai naan vadipathu
oruthaalaiyaai kaathaliyea yethanai naal vazhvadu

(Idhu Kuzhandai…)
றேடியோஸ்பதி: இது குழந்தை பாடும் தாலாட்டு

பாடல்: இது குழந்தை பாடும் தாலாட்டு
படம்: ஒருதலை ராகம்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர்: T ராஜேந்தர்

இது குழந்தை பாடும் தாலாட்டு!
இது இரவு நேர பூபாளம்!
இது மேற்கில் தோன்றும் உதயம்!
இது நதியில்லாத ஓடம்!

(இது குழந்தை பாடும்…..)

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்

(இது குழந்தை பாடும்…..)

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்

(இது குழந்தை பாடும்…..)

உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது

(இது குழந்தை பாடும்…..)

பாடும் நிலா பாலு!: இது குழந்தை பாடும் தாலாட்டு

Passage to Blogdom

குருதிப்புனலில் வரும் வசனம்:
‘தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிப்பது.’

சம்பந்தமில்லாமல் இன்று உதித்த மொழி:
‘பின்னூட்டம்னா என்ன தெரியுமா? வியாக்கியானம் விளங்காத மாதிரி விளம்பி விடுவது.’

சம்பந்தமில்லாமல் இன்று கேட்கும் பாடல்:
‘அழியாத கோலங்கள்’ இன்னும் பார்க்காத படம். டிவிடி வரப்பிரசாதம் சீக்கிரமே கிடைக்கணும்.

தற்போதைக்கு சலீல் சௌத்ரி + ஜெயச்சந்திரன் ==> பூவண்ணம்

சம்பந்தம்:

தமிழ் சினிமா டயலாக் லொள்ளு | டயலாக் டென்

பிற:

1. ஸ்மிதா பட்டீல்: ஃபிலிம்ஃபேர் பதிவிலே வந்திருக்க வேண்டியவர். நடிப்பு, பெண்மை, சிந்தனை, லட்சியம், மசாலா எல்லாம் இருந்தும் டக்கென்று மறைந்தவர் 😦  சிறப்பு அஞ்சலி செலுத்தினார்கள்.

  • The only Asian cine-star who had the unique honour of a Retrospective in Paris and La Rochelle (at the promptings of no less a film luminary than director Costa Gavras), a two-time best actress award winner at the National Film Festival, a Padma Shree as well as a devoted wife and brand new mother, Smita Patil had every thing going her way, before the ironic final cut spliced her life from sight to memory. And the loss, even today, remains, irrevocably, ours….
  • In the early 1980s, Smita finally relented and trained her sights on commercial cinema. She won new fans with the blockbuster Namak Halal [1982] opposite Amitabh. Their together item song and dance rain number Aaj rapat jaaye showed her in an entirely new light. Smita had qualms about going the whole commercial hog (lore has it that she cried after shooting Aaj rapat jaaye).
  • Smita was compared ad nauseum with Shabana Azmi, her senior and rival in the off-beat films’ arena. So when the two were pitted opposite each other in Arth [1983], comparisons were inevitable. Shabana had the sympathetic author-backed role but Smita’s on-the-edge characterisation of a guilt-ridden mistress had its fair share of admirers, including Amitabh Bachchan and Kamal Haasan.

2. ப்ளூடூத்: காதில் பச்சை விளக்கு மினுமினுக்கும். அது பட்டவர்த்தனமாகத் தெரியாது. தனியாகப் பேசுவதைப் பார்த்தவுடன் பைத்தியத்தைக் கண்டவுடன் எழும் அச்சம் கலந்த பரிதாபம் கிடைக்கும். கோட், சூட் மாட்டியிருந்தும், இவ்வளவு சின்ன வயதில் ‘இப்படி ஆயிட்டாங்களே!’ என்பேன். காதல் தோல்வி, பதின்ம கர்ப்பம் என்று ‘விடுகதை‘ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மனம் பிழற்வது போல் கற்பனை விமானம் விடுவதுண்டு. இப்போது நானும் ப்ளூடூத்துக்கு மாறி, காற்றோடு உசாவ ஆரம்பித்தாயிற்று.

Ustad Bismillah Khan & Late Night Hindustani Music

பிச்சைப்பாத்திரம்: இசைக்க மறந்த கலைஞன்: “எப்போதும் டொய்ங்.. டொய்ங்.. என்ற சப்தத்தோடோ அல்லது யாரோ அழுகிறாற் போன்ற கர்நாடக சங்கீதமோ இரண்டாவது அலைவரிசையில் கேட்கக் கிடைக்கும்.”

என்னும் அவதானிப்பை உணர்ந்தவுடன் ‘அட… இது நான்தானே!’ என்று தோன்றியது. அப்படியே இசையில் திளைக்கும் சுகுமாரனின் நிலைக்கு செல்ல விழைந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

கங்கையின் பெருமூச்சு – அஞ்சலி :: உஸ்தாத் பிஸ்மில்லா கான் : சுகுமாரன்

Ustad Bismillah Khanதிடீரென்று மேடைக்குள் சலசலப்பு. தபலாக்கள், கூடுதல் ஒலிபெருக்கிகள், பக்கவாத்தியக்காரர்கள் என்று மேடை உயிர்த்தது. சில நொடிகளுக்குப் பிறகு நிதானமான நடையுடன் ஒரு சின்ன உருவம் வந்து மையத்தில் அமர்ந்தது. விளக்குகள் ஒளிர்ந்தன. திரை மேலே சுருண்டது. பார்வையாளர் வரிசையிலிருந்து கரவொலி எழுந்தது. பிஸ்மில்லா கானின் முதுகு குனிந்து நிமிர்வது மட்டும் தெரிந்தது. பின்னர் நிசப்தம். சில நொடிகளில் ‘ங்ங்ஙே’ என்று ஒரு துளிப் பிரபஞ்ச விசும்பல் ஒலித்தது. அந்த விசும்பல் அதிர்ந்து பரவி ‘மியான் கிதோடி’யாகப் பெருக்கெடுத்தது. இரண்டு மணி நேரம் அந்த ஆனந்த விசும்பல் படிப்படியாகப் பெருகி அந்த அரங்கு முழுவதும் ததும்பிக் கொண்டிருந்தது.

சராசரி வானொலி நேயர்களைப் போல எனக்கும் ஒப்பாரி வாத்தியமாகத்தான் ஷெனாய் முதலில் அறிமுகமானது. தேசீயத் தலைவர்கள் மறைவின் போது துக்கம் கடைபிடிப்பதற்கான சங்கீதமாகத்தான் அந்த வாத்திய இசை அடையாளம் பெற்றிருந்தது. செவிப்புலன் பக்குவப்பட்டு இசையின் நுண்ணதிர்வுகளைப் பிரித்து அறியத் தெரிந்துகொண்ட அந்த அறியப்படாத நொடியில் பிஸ்மில்லா கான் என்னுடைய மானசீகக் கலைஞர்களில் ஒருவரானார். ஷெனாய் இசை எனக்குள்ளிருக்கும் இயற்கையின் சாரத்தை உணர்த்தும் சமிக்ஞையானது.

பொதுவாக இந்திய இசையின் இயல்பு இது என்பது என் தரப்பு. கர்னாடக இசையோ ஹிந்துஸ்தானி இசையோ சாதாரண ரசிகனிடம் உருவாக்குவது இந்த நெகிழ்வான நிலையைத்தான். துக்கமல்ல; மகிழ்ச்சியின் உச்சத்தில் மனித மனதுக்குள் நிகழும் இளக்கத்தைத்தான் இசை சாத்தியமாக்குகிறது என்பது என் நம்பிக்கை. இந்த நெகிழ்வைத்தான் பக்தியென்றோ ஆன்மீகமென்றோ வைதீக மனப்பாங்கு சொல்லுகிறது என்று தோன்றுகிறது. பக்தியோ ஆன்மீக வேட்கையோ கலவாத நாட்டார் இசையில் மனம் லயிக்க இந்த இளக்கம்தான் காரணம். சாகித்ய வடிவத்தை அதிகம் சாராத ஹிந்துஸ்தானி இசையில் நெகிழ்வுக்கான சாத்தியங்கள் அதிகம். அதில் உச்சபட்ச சாத்தியம் கொண்ட வாத்தியம் ஷெனாய் என்பதை நிரூபித்தவர் பிஸ்மில்லா கான். அவர் பிரபலப்படுத்தும் காலம் வரை ஷெனாய் ஒரு பக்கவாத்தியம் மட்டுமே. கோவில்களில் வாசிக்கப்படும் சடங்குக் கருவியாகவும் திருமணம் போன்ற விமரிசைகளுக்கான ஊதுகுழலாகவும் கருதப்பட்டு வந்தது.
.
.
.
காசி விசுவநாதர் ஆலயத்தின் கதவுகள் பிஸ்மில்லா கானின் வாத்திய இசையுடனேயே திறக்கும். சநாதமான வரலாறும் மூர்க்கமான மத அக்கறைகளும் பின்னணியாகவுள்ள நகரத்தில் இது ஆச்சரியம். ஆனால் இது தன்னுடைய பிரிய நகரத்தில் சிறப்பு என்று நேர்காணல்களில் பலமுறை பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார் பிஸ்மில்லா கான்.
.
.
பிஸ்மில்லா கானின் இசையில் ஒரு நீர்ச் சலசலப்பு தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். கங்கையின் கரையிலிருந்து உருவான இசை என்பதனால் அந்தக் கசிவா? தெரியவில்லை. ஆனால் அவரது கச்சேரி பாணியை நீரோடு தொடர்புபடுத்திதான் இதுவரை ரசிக்க முடிந்திருக்கிறது. சீவாளியை ஊதிப் பரிசோதிக்கும்போது இசையின் துளிகள் கொட்டும். பின்னர் சற்று வலுத்து சாரலாகப் பரவும். இடையில் கேட்கும் தபலாவின் தும்தும். அதில் இலைகள் சிலிர்த்து அசையும். ஷெனாயிலிருந்து சின்னதும் பெரிதுமான மேகங்கள் உருவாகி தொடர்ந்து நகர்ந்தபடிப் பொழியும். விளம்பித் (ஆலாபனை) வாசிக்கும்போது சீராக மண்ணுக்கு இறங்கும். இலைகளும் கிளைகளுமாக நிற்கும் மரங்கள் இசையின் கனம் தாளாமல் நிதானமாக அசையும். த்ருத் (நிரவல்?) வாசிப்பின்போது எல்லா அசைவுகளும் வேகமாகும். இசையும் மழையும் மண்ணும் ஆகாயத்தின் குறுக்காகப் பாயும் நதியில் கரைந்தது போலாகும். முத்தாய்ப்பான கட்டத்தில் ஒரு சந்தோஷக் கேவலாக சங்கீதம் முதிரும். அப்போது பூமி தனக்குத் தானே செய்துகொள்ளும் பிரார்த்தனையாக மாறும். இந்தக் கசிவு வாத்தியத்தினுடையதா? வாசிப்பவனுடையதா? ரசிப்பவனுடையதா? என்று வியக்க வைப்பதுதான் பிஸ்மில்லா கானின் பாணி.

நன்றி: உயிர்மை; செப். 2006

New England Tamil Sangam – Pongal Vizha

பாஸ்டனில் பொங்கல் விழா

இடம்: லிட்டில்டன் மேல்நிலைப் பள்ளி அரங்கம், லிட்டில்டன், மாஸசூஸட்ஸ் (அடையும் வழி அச்செடுக்க)
நாள்: ஃபெப்ரவரி 3, 2007 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:30

நான் எதுவும் நிகழ்ச்சி தரப்போவதில்லை என்பதால், நீங்கள் தைரியமாகப் பார்க்க வரலாம். புதிய நண்பர்களை அறிமுகம் பெறவும், பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பிக்கவும் அருமையான வாய்ப்பு.

முழு விவரங்களுக்கு