Category Archives: Music

Ilaiyaraja’s Neengal Kettavai – Kanavu Kaanum vaazhkkai yaavum

தேன் கிண்ணம்: 53. கனவு காணும் வாழ்க்கை யாவும்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

ிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன
ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி
ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்

பேதை மனிதனே கடமை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்..

படம் : நீங்கள் கேட்டவை
குரல் : யேசுதாஸ்
இசை : இளையராஜா

Bhoomikku Velichamellaam: Dishum – Songs

தேன் கிண்ணம்:

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

படம்: டிஷ்யூம்
இசை: விஜய் அந்தோனி

Kalainjar Karunanidhi’s Uliyin Osai with Ilaiyaraja & Ilavenil

kalainjar_karunanidhi_ilaiyaraja_uliyin_osai_ilavenil.JPGதமிழகத்தின் இசைக்கலையை உலகம் அறியச் செய்ய இசை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

முதல்வர் கருணாநிதியின் கதையில் உருவாகும் ‘உளியின் ஓசை’ என்ற திரைப்பட துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா என்னை சந்தித்த போது, நான் எழுதிய ‘சாரப்பள்ளம் சாமுண்டி‘ என்ற சரித்திர கதையை படமாக எடுக்க வேண்டும் என தீராத ஆசை உள்ளதாக தெரிவித்தார். அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சரித்திர பின்னணி கொண்ட படத்தை உருவாக்குவது சாதாரணமான விஷயம் அல்ல. சமூக படத்தை விட பலமடங்கு அதிகமான செலவு செய்யவேண்டும் என்ற அனுபவ ரீதியான உண்மையை நான் உணர்ந்துள்ளேன்.ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரை பின்னணியாக வைத்து தஞ்சை கோவில் சிற்ப கூடத்தை கதைக்களமாக அமைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளேன்.

என் வசனத்தை மட்டும் நம்பியிராமல் கலை, நடனம், இசை ஆகிய அனைத்து அம்சங்களும் கொண்டதாக இந்த படம் அமையும். தமிழனின் வரலாறு குறித்து அவனே சொல்லாததால் வெளியில் தெரியாமல் போயிற்று. முகலாயர்களுக்கு வரலாறு இருப்பது போல் தமிழர்களின் வரலாற்றை சொல்ல முடியாத நிலை உள்ளது. மனுநீதி சோழன் திருவாரூரில் கட்டிய கோட்டை இப்போது இல்லை. தஞ்சாவூர் கோட்டை தூள் தூளாகி விட்டது. இதற்கு காரணம் நம்முடைய வரலாறுகளை நாம் பதிய வைக்கத் தவறி விட்டோம்.

இதனால் வரலாற்று உண்மைகள் அழிந்து விட்டன. உத்திரமேரூர் பராந்தக சோழன் கல்வெட்டில் உள்ளாட்சி தேர்தல் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போதைய உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக, வாங்கிய கடனை திரும்ப தருபவர்களாக இருக்க வேண்டும் என அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகுதி உடையவர்கள் குடவோலை முறையில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உத்திரமேரூரில் உள்ள ஒரே ஒரு கல்வெட்டு மூலம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும். வரலாறுகளை புரிந்து கொள்ள இதுபோன்ற கல்வெட்டுகளை அமைக்க வேண்டியது அவசியம்.தஞ்சை கோவிலில் பரத கர்ணம் 108க்கு உரிய சிலைகளில் 87 சிலைகள் தான் உள்ளன. மீதமுள்ள சிலைகள் ஏன் உருவாக்கப்படவில்லை என்ற எனது கேள்விக்கான பதில் தான் இந்த படத்திற்கான கதை.

பல்கலைகழகம்:

இளையராஜா பேசும் போது, நமது இசைக்கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது அரசு விழா இல்லை என்றாலும் அவரது கோரிக்கைக்கு இசைந்து தமிழகத்தின் இசை பல்கலைக் கழகம் துவங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்தியாவின், தமிழகத்தின் இசைப் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் துவங்கப்படும் அந்த பல்கலை க்கழகத்திற்கு நானும் இளையராஜாவும் வலிவூட்டுவோம்.

keerthi_chawla_akshaya_mu_karunanidhi_tamil_cinema.jpgபடத்தில் புது நடிகைகள்: ‘உளியின் ஓசை’ படத்தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன் கூறியதாவது:

இப்படத்தின் தொடக்க விழாவிற்கு முன்பு திரைக்கதை குறித்து இயக்குனர் குழுவினருடன் முதல்வர் கருணாநிதி தீவிர விவாதத்தில் ஈடுபட்டார். பேராசிரியரை போல் வகுப்புகளை நடத்தினார். காலை 8 மணிக்கு அமர்ந்த முதல்வர் மாலை 6.30 மணி வரை தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டார். இந்த திரைப்படம் நன்கு அமைய பல யோசனைகளை தெரிவித்தார். இந்த படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை முதல்வருக்கு ஏற்பட்ட பிறகே துவக்க விழாவிற்கான தேதியை அறிவித்தார்.

முதல்வர் கருணாநிதி விரும்பும்படியும், இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பவும் வெற்றிப்படமாக இந்த படம் அமையும். இந்த படத்திற்காக ஏ.வி.எம்., முதல் தளத்தில் கலை இயக்குனர் மகி பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமான சிற்பக் கூடத்தை அமைத்துள்ளார்.இளவேனில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

வினித், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா, மனோராமா, சரத்பாபு, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Ooh.. La La… – Sun TV ‘Reality Show’ on Music Group Selections

நாலைந்து வாரமாக வரும் ‘ஊ..ல..லா…‘வின் ஒன்றிரண்டு வாரங்களைப் பார்க்க முடிந்தது.

இத்தனை பேர் விண்ணப்பித்ததில் வெரைட்டியாக தேர்ந்தெடுப்பது கஷ்ட காரியம். ஏற்கனவே பாடியதை சிடியில் பதிந்து தர வேண்டும் போன்ற விதிமுறைகளால், சன் டிவி தேர்வாளர்கள் குழுவிற்கு வேலை குறைந்திருக்கும்.

ஏ ஆர் ரெஹ்மான் பங்குபெற்ற ம்யூசிக் க்ரூப்பின், ‘தலை’யாக பால் ஜேக்கப் இருந்திருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். அன்று தலைவராக இருந்தவர், இன்று வாலாக இருக்கிறார். அப்பொழுது ஓரமாய் போஸ் கொடுத்த ரெகுமான், இன்று நடுநாயகமாக வளர்ந்திருக்கிறார்.

நிகழ்ச்சியை compere செய்யும் இருவருமே செம இளமை & துள்ளல். பின் வழுக்கையைத் தடவிப் பார்த்து, நரையை மறைத்துக் கொண்டாலும், மெட்ரோ அடுத்த ஜெனரேஷனைப் பார்க்கும்போது, வாழ்க்கை/வேலை/இறப்பு என்று பயம் எட்டிப் பார்த்து, ‘ஹெட்லைன்ஸ் டுடே’விற்கு கன்னல் மாற்றிவிட்டு, சோபாவில் சாயத் தூண்டுகிறது.

ஹெட்லைன்ஸ் டுடே குறித்துப் பேச்சு எழும் சமயத்தில், தெளிவாகப் பேசும் பிரண்ணாய் ராயும், புரியாத ஹிந்தியைக் கூட எளிமையாக்கும் துபேயும் கொண்ட தூர்தர்ஷன் காலங்கள் நினைவுக்கு வரும். ‘என்னதான் இவ்வளவு நியுஸ் சேனல் வந்தாலும், அந்தக் கால அலசல் போல் வருமா?‘ என்று ஹெட்லைன்ஸ் டுடே அங்கலாய்க்க வைக்கிறது.

இந்த கருத்துக்கும் விக்கியின் தமிழ்ப்பதிவர்கள் குறித்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. தலைப்புச் செய்திகள் இடும்போது பின்னணி இசை போடுவதில் குழப்பம்; செய்திகளை சகஜமாகத் தருகிறேன் என்று அரட்டை பாணியில் கொடுக்க முனைவது சரி – ஆனால், தத்துபித்து மொழியில் வளமும் இன்றி, ஆராய்ச்சியில் ஆழமும் இன்றி, பரப்பில் அகலமும் இன்றி, ‘முருகா… என்ன கொடுமை இது’ என்று சொல்லும் ‘ஹெட்லைன்ஸ் டுடே’ கண்டால் சன் செய்திகளின் தரம்/மணம்/குணம் மெச்சுவது சர்வ நிச்சயம்.

மீண்டும் ‘ஊலலா’விற்கே கன்னல் மாற்றிக் கொள்வோம்.

திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என்று சென்னை தவிர்த்த கிராமங்களுக்கும் சென்று தோண்டித் துழாவியதை பெரிதாக பிரஸ்தாபித்தார்கள். வியாபார காரணமோ அல்லது நவநாகரிக மயக்கமோ அல்லது பாப் கலாச்சார மோகமோ… ‘யாமறியேன் அல்லாவே!’ ஒரு குத்துப் பாட்டுக் குழு, நாட்டுப் புற இளையராஜா மெட்டமைப்பு, வில்லுப்பாட்டு வேலன்கள், வேட்டி கட்டிய வெள்ளந்திகள் எல்லாரையும் ஒதுக்கி அறவே புறந்தள்ளி விட்டு, டிஸ்டில்ட் வாட்டரில் ஸ்ட்ரா போட்டு அருந்துபவர்கள் மட்டுமே தேர்வானார்கள்.

அங்கேயே சப்.

அதற்கடுத்ததாக பேசத் தெரியாத மூவர் அணியாக நடுவர் குழு அடுத்த சப்.

பால் ஜேக்கப் மண்டையாட்டுவார். கையை அசைப்பார். காலைத் தூக்கி நின்றாடுவார். கைலியை ஃபேஷனாக முண்டாசு தட்டுவார். மைக் கொடுத்தால் மௌனியாவார்.

சிவமணி குளிர் கண்ணாடியில் தஞ்சம் அடைந்திருக்கிறார். ஆங்கிலத்துக்கு நடுவே தமிழ் வார்த்தைகள் வருவது ஒகே. அதுவும் வராத நேரங்கள் அதிகம்.

இருப்பதற்குள் வசுந்தரா தாஸ் தேவலாம். மனதில் பட்டதைப் போட்டுடைக்கிறார். நல்ல கணிப்புகள். ஆனால், கூட கம்பெனிக்குத்தான் ஆள் லேது.

ஊலலா பங்கேற்பாளர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களாகவோ, கல்லூரி மாணவர்களாகவோ இருப்பவர்கள். அல்லது அவ்வாறு காட்டிக் கொள்பவர்கள். பணத்தின் கருக்கு கலையாதவர்கள்.

பாடல் வரிகள் என்றால் ‘நடுநடுவே ரெண்டு மானே போட்டுக்க… தேனே சேர்த்துக்க’ என்னும் அலைவரிசையில் இருப்பவர்கள். வெற்றி பெறத் தேவையான பாடகரை அமுக்கும் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள். கீபோர்டிந் சூட்சுமங்களும், எலெக்ட்ரிக் கிடாரில் அபிநயமும் பிடிக்கத் தெரிந்த நண்பர்கள் கொண்டவர்கள். நாதஸ்வரமும் கடமும் மோர்சிங்கும் ஜலதரங்கமும் அலர்ஜியானவர்கள்.

சுயம்புவாக திறமை கொண்டவர்களையும் வார்ப்புரு எஞ்சினுக்குள் அடைத்து, பால் ஜேக்கப் ஆலையில் உருமாற்றி, ‘இப்படித்தான் இருக்க வேணும் ட்ரூப்பு’ என்று சீன தொழிற்சாலை தயாரிப்பு போல் வெளியாக்கும் ‘பழைய ட்யூன்; புதிய க்ரூப்’ வித்தை – ஊ… லலா…

1. Band Hunt with AR Rahman – Oohlalala Official Site

2. Music « Sun rises.. Sun sets… – Episode Experiences

தூவானம்

From Thamizhan Express:

நியூட்டன் இயக்கிய ‘தூவானம்’ படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார், தனது மகன்கள் சூர்யா, கார்த்திக் இருவரிடமும் அந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.

‘தூவானம்,’ அந்த அளவிற்கு அவரை ஈர்த்திருக்கிறது. இதேபோல சத்யராஜின் மனைவியும் படத்தைப் பார்த்து விட்டு சத்யராஜ், சிபிராஜ் ஆகியோரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். அதாவது அப்பா, மகன்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய படமாம்.

Random Songs

வீட்டில் இலக்கின்றி தட்டுமுட்டு வேலைகள் செய்யும் நேரம். சத்தமாக பாடல் பாடிய போது வாயில் முணுமுணுத்தவை:

1. ‘காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்;
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்’

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்

2. ‘பருவ மழை பொழியப் பொழிய உறவு தாம்பத்யம் ஆகாதோ;
இவள் வாழ்வில் பருவ மழை பெய்ததால் உடம்பு பாலைவனமாகியதே’

வேறு இடம் தேடிப் போவாளோ 

3. ‘இது தேவதையின் பரிசு; யாரும் திருப்பித்தர வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நடக்க ஒரு சம்மதமும் வேண்டாம்’

சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

4. ‘பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்தில’

நிலா அது வானத்து மேலே

5. ‘தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுதே’- ராஜராஜ சோழன் நான்

6. ‘காலங்கள் போனால் என்ன…
தலை சாய இடமா இல்லை; இளைப்பாறு பரவாயில்லை’

அகரம் இப்போ சிகரமாச்சு

7. ‘நிலவெங்கே சென்றாலும் பின்னால் வராதா;
நீ வேண்டாமென்றாலும் வட்டமிடாதா’

புது ரூட்டுலதான்

8. ‘மனதின் ஆசைகள்; மலரின் கோலங்கள்; குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்’

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை

9. ‘நடந்தவை எல்லாம் வேஷங்களா; நடப்பவை எல்லாம் மோசங்களா…
திரை போட்டு நீ மறைத்தாலென்ன தெரியாமல் போகுமா?’

வாழ்வே மாயமா பெருங்கதையா கடும்புயலா வெறுங்கனவா

10. ‘ஆட்டுக்கு வேலி தேவையும் இல்ல;
என் பாட்டுக்குத் தாளம் தேவையும் இல்ல’

ஒயிலாப் பாடும் பாட்டில ஆடுது ஆடு

முந்தைய பத்து

Vairamuthu Question & Answer – MSV, Rajaraja Chozhan

அல்லிமுத்து, பர்கூர்.

ஒழுக்கம் – சுத்தம் உங்கள் விளக்கம்?

சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாயிருப்பது ஒழுக்கம்.

கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்.


விஜி செந்தில், பேராவூரணி.மேட்டுக்குடி மக்களுக்கே ஆதரவு தந்த ராஜராஜசோழனை மாமன்னன் என்பது பொருந்துமா?

கல்வெட்டுச் செய்தி ஒன்று அறிந்தபோது மாமன்னன் ராஜ-ராஜனைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. இறைவன் பெயரால் அமைக்கப்பட்ட ஆலயத்தை நகர்த்தி நகர்த்தி மக்களுக்குக் கொண்டு சென்ற மாண்பு கண்டு வியந்துபோனேன்.

தாயின் நினைவாய், தந்தையின் நினைவாய்த் தஞ்சைப் பெருவுடை-யார் ஆலயத்தில் அணையா தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்றோர் ஆணை பிறப்பித்தான் அரசன். போகப் போகத்தான் தெரிந்தது அது தீபமல்ல ஏழைகளுக்கான திட்டம் என்று.

அணையா தீபம் ஏற்ற வருகிற செல்வந்தர்களுக்கு அரசன் ஒரு நிபந்தனை விதித்தான்.

சந்திரசூரியர் உள்ளவரை அந்த அணையா-விளக்கு ஒளிவிடவேண்டு-மென்றால், அது எரியத் தேவையான திரிக்கும் எண்ணெய்க்குமான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக 96 ஆடுகளைக் கோயிலுக்கு அவர்கள் கொடை கொடுத்துவிட வேண்டும். அந்த ஆடுகளை ‘சாவா மூவாப் பேராடு’ என்கிறது கல்வெட்டு. அந்த ஆடுகள் சோழமண்டலத்தில் உள்ள ஓர் ஏழைக் குடிமகனை அழைத்து ஒப்படைக்கப்படும். அவன் அதை வளர்த்துக் காத்து ஆண்டு அனுப-வித்துக் கொள்ள வேண்டியது; ஆலயத்தில் எரியும் தீபத்திற்கான எண்ணெய்ச் செலவை மட்டும் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியது.

எரியும் தீபம் எரிந்து கொண்டே-யிருக்கும்; ஓர் ஏழைக் குடும்பம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். தீபத்தில் எண்ணெய் உயர உயர சோழமண்டலத்தின் பால்வளமும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

ஆலயத்தில் எரியும் ஒரு சுடர் நெருப்பினால் ஓர் ஏழைக் குடும்பத்-திற்குப் பால் வார்த்தவன் என்றும், நெருப்பிலே பால் கறந்தவன் என்று-மல்லவா அந்த மாமன்னனுக்கு மெய்க்கீர்த்தி பாடத் தோன்றுகிறது.


அப்துல் அஜீஸ், திருநாகேஸ்வரம். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றி உங்கள் மதிப்பீடு?

மும்பையில் (பழைய பம்பாயில்) ஒரு மெல்லிசை நிகழ்ச்சி. மெல்லிசை மன்னரின் இசைமழையில் அரங்கம் மிதக்கிறது ஆனந்தத் தெப்பத்தில். மேடைக்கு ஒரு துண்டுத்தாள் வருகிறது. அதில் இருந்த செய்தி இதுதான்.ஓடம் நதியினிலே பாடுங்கள், எழுதியவர் யாரென்று பார்க்கிறார்கள். ‘இப்படிக்கு நௌஷாத்’ என்றிருக்கிறது. ‘அய்யோ… இது நேயர் விருப்பமல்ல. கடவுள் விருப்பம்’ என்று கும்பிடுகிறார் மெல்லிசை மன்னர்.

இப்படி இசைமேதைகளையே சுரக் கயிறுகளால் கட்டிப்போட்ட-வரல்லவா மெல்லிசை மன்னர்! எத்தனை மோதிரங்கள் பூட்டுவது அந்த வித்தக விரல்களுக்கு?

அறுபதுகளின் ஆகாயத்தையே தன் ஆர்மோனியத்துக்குள் அடைத்-துப் போட்ட அந்த ஆளுமையைச் சொல்லவா?

உணரமட்டுமே முடிந்த உணர்ச்சி-களுக்கு சப்த வடிவம் கொடுத்த சக்கரவர்த்தி என்று சொல்லவா?

தம்புராவின் சுதியிலேயே ஒரு மொத்தப் பாட்டும் அமையவேண்டும் என்று இயக்குநர் கேட்டபோது, ‘பொன்னென்பேன்… சிறு பூ வென்பேன்’ என்று பாடி முடித்த படைப்பாற்றலைச் சொல்லவா?

‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாரதி பாட்டுக்கு இசை-யமைத்தபோது, ஒரு கவிஞன் எழுத எத்தனிக்கும் முணுமுணுப்பிலிருந்து இசையமைத்தால் என்ன என்ற உத்தி படைத்த புத்தியைச் சொல்லவா?

‘ஆடை முழுதும் நனைய நனைய மழை-யடிக்குதடி’ என்ற பாடலின் இணைப்-பிசையில், அழுகை வாத்தியம் என்று அறியப்பட்ட ஷெனாயில் ஆனந்தத் தாண்டவம் வாசித்த அதிசயத்தைச் சொல்லவா?

உப்புச் சப்பில்லாத படங்களுக்-கும் வஞ்சகமில்லாமல் வாசித்த வள்ளன்மை சொல்லவா?

‘என் பெயரே எனக்கு மறந்து-போன இந்த வனாந்தரத்தில்’ என்ற என் கவிதைக்கு இசையமைத்து இந்தியாவிலேயே புதுக் கவிதைக்கு இசை யமைத்தவர் என்ற புதுமை புரிந்ததைச் சொல்லவா!

வார்த்தைகள் பாடப்படும்போது ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று வாத்தியங்களை ஒதுக்கிவைத்துத் தமிழுக்குத் தலைமை தந்த தகைமை-யைச் சொல்லவா!

  • பிறப்பு _
  • இறப்பு,
  • தாலாட்டு _
  • ஒப்பாரி,
  • காதல் _
  • பிரிவு,
  • கண்ணீர் _
  • புன்னகை,
  • விரக்தி _
  • நம்பிக்கை,
  • வெற்றி _
  • தோல்வி

என்று வாழ்வின் சகல உபநதிகளையும் தனக்குள் வாங்கி வைத்துக்கொண்ட சமுத்திர-மல்லவா மெல்லிசை மன்னர்!எல்லாவற்றுக்கும் மேலாய் தன் இசைக்குத் தமிழூட்டிய கவிஞனை மறவாத நன்றியாளர்; இசை நிழல்; தமிழே நிஜம் என்னும் பெருந்தன்மை-யாளர்.

எம்.எஸ்.வி மூன்றெழுத்தில் ஏழுசுரம்.

நூற்றாண்டுகளுக்குப் புகழ்சேர்த்த-வர் நூறாண்டுகள் வாழட்டும்!

Anbu – Thavaminri Kidaitha Varame

வித்யாசாகரின் இசையில் ‘அன்பு‘ திரைப்படத்தில் வரும் பாடல்
பாடகர்கள்: ஹரிஹரன் & சாதனா சர்கம்

தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

நீ சூரியன்…
நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன்
நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன்
நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்

நீ சூரியன்
நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்!

Distributor & Operator becomes the Editor & Director

மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது.

எந்தப் படம்?

Continue reading

சிவாஜி பாட்டை பாராட்டினார் இளையராஜா

பஞ்சு அருணாச்சலம் சார் “கவரிமான்” என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். “ப்ரோவ பாரமா?” என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா’ என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

ராகம்பாடி, `ப்ரோவ பாரமா’ தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், “எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?” என்று கேட்டார் சிவாஜி.

“நடிகர் திலகம்” என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

நன்றி: தினத்தந்தி :: திரைப்பட வரலாறு 704 சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம் (வரலாற்றுச் சுவடுகள்)