Category Archives: Movies

KB – Parthaley Paravasam

‘பொய்’ படம் வந்திருந்த டிவிடி-யில் ‘பார்த்தாலே பரவசமும்‘ வந்திருந்தது.

1. தமிழ் சினிமாவை மீண்டும் உய்விக்க சிம்ரனின் சேவை, தேவை

2. ஸ்னேஹா எவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறார்.

3. பாத்திரங்களுக்கு பெயர் வைக்க கற்பனைப் பஞ்சம். மாதவா, சிமி…

4. திரைக்கதை அமைக்க கற்பனைப் பஞ்சம்: ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல்

5. நகைச்சுவைக்கும் அதே வறட்சி: ‘மௌன ராக’த்தில் வந்த ‘போடா டேய் பொடியா’ ஸ்டைலில் மலையாளம் சம்சரிக்கிறார்.

6. கமல் வந்த இடம் அருமை: மதன் பாப் விசிறியாக, ஃபேனைப் போட ‘ஆளவந்தான்’ மொட்டை அவதாரம். படத்தின் ஒரே பளிச்.

7. என்னதான் குரு, குருநாதர் என்று பொதுமேடையில் குளிப்பாட்டினாலும், கமல் மாதிரி தலையை நீட்ட ரஜினி மறுத்து விட்டாரே!

8. 2001-இல் தீபாவளிக்கு இந்தியா வந்திருந்தபோது, ஆளவந்தான், இந்தப் படம், மனதைத் திருடி விட்டாய், ஷாஜஹான் எல்லாம் ஒரே சமயத்தில் வெளியாகியிருந்த நேரம். வேறு எதைப் பார்த்திருந்தாலும் பரவாயில்லையாக இருந்திருக்கும்.

9. படம் பார்த்த ஞாபகமே இல்லாமல், அனைத்துக் காட்சிகளும் மறந்து போயிருந்தால், மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் தவறை இழைக்கக் கூடாது. நினைவு தப்புவது ஒரு காரண காரியத்துக்காகத்தான் என்பதை நினைவில் வைக்கவும்.

10. லாரென்ஸ் பெரிய அளவில் வரவேண்டியவர். சிம்ரனுக்கு சரியாசனம் போட்டு உட்காருகிறார்.

Passage to Blogdom

குருதிப்புனலில் வரும் வசனம்:
‘தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிப்பது.’

சம்பந்தமில்லாமல் இன்று உதித்த மொழி:
‘பின்னூட்டம்னா என்ன தெரியுமா? வியாக்கியானம் விளங்காத மாதிரி விளம்பி விடுவது.’

சம்பந்தமில்லாமல் இன்று கேட்கும் பாடல்:
‘அழியாத கோலங்கள்’ இன்னும் பார்க்காத படம். டிவிடி வரப்பிரசாதம் சீக்கிரமே கிடைக்கணும்.

தற்போதைக்கு சலீல் சௌத்ரி + ஜெயச்சந்திரன் ==> பூவண்ணம்

சம்பந்தம்:

தமிழ் சினிமா டயலாக் லொள்ளு | டயலாக் டென்

பிற:

1. ஸ்மிதா பட்டீல்: ஃபிலிம்ஃபேர் பதிவிலே வந்திருக்க வேண்டியவர். நடிப்பு, பெண்மை, சிந்தனை, லட்சியம், மசாலா எல்லாம் இருந்தும் டக்கென்று மறைந்தவர் 😦  சிறப்பு அஞ்சலி செலுத்தினார்கள்.

  • The only Asian cine-star who had the unique honour of a Retrospective in Paris and La Rochelle (at the promptings of no less a film luminary than director Costa Gavras), a two-time best actress award winner at the National Film Festival, a Padma Shree as well as a devoted wife and brand new mother, Smita Patil had every thing going her way, before the ironic final cut spliced her life from sight to memory. And the loss, even today, remains, irrevocably, ours….
  • In the early 1980s, Smita finally relented and trained her sights on commercial cinema. She won new fans with the blockbuster Namak Halal [1982] opposite Amitabh. Their together item song and dance rain number Aaj rapat jaaye showed her in an entirely new light. Smita had qualms about going the whole commercial hog (lore has it that she cried after shooting Aaj rapat jaaye).
  • Smita was compared ad nauseum with Shabana Azmi, her senior and rival in the off-beat films’ arena. So when the two were pitted opposite each other in Arth [1983], comparisons were inevitable. Shabana had the sympathetic author-backed role but Smita’s on-the-edge characterisation of a guilt-ridden mistress had its fair share of admirers, including Amitabh Bachchan and Kamal Haasan.

2. ப்ளூடூத்: காதில் பச்சை விளக்கு மினுமினுக்கும். அது பட்டவர்த்தனமாகத் தெரியாது. தனியாகப் பேசுவதைப் பார்த்தவுடன் பைத்தியத்தைக் கண்டவுடன் எழும் அச்சம் கலந்த பரிதாபம் கிடைக்கும். கோட், சூட் மாட்டியிருந்தும், இவ்வளவு சின்ன வயதில் ‘இப்படி ஆயிட்டாங்களே!’ என்பேன். காதல் தோல்வி, பதின்ம கர்ப்பம் என்று ‘விடுகதை‘ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மனம் பிழற்வது போல் கற்பனை விமானம் விடுவதுண்டு. இப்போது நானும் ப்ளூடூத்துக்கு மாறி, காற்றோடு உசாவ ஆரம்பித்தாயிற்று.

Black Friday – Quick Review

படத்தைக் குறித்து மூன்று வார்த்தை

1. ஜவ்வு (அ) தூக்க மாத்திரை
2. நடுநிலை (அ) இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மிகுதல்
3. புதுசா என்ன சொல்றீங்க (அ) சமகாலத்தவருக்கு விஷயம் ஏதுமில்லை

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

  1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு

    குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

  2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

    சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?

  3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    ‘மிஸ்… என்னை அடிச்சுட்டான் மிஸ்’ என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் ‘பாடம்’ எல்லாம் கவனிக்க முடியும்?

  4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்

    படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.

  5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

    சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.

  6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

    செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.

  7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

    மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

  8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

    ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

    “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.

  9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

    “மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு ஹேமமாலினி “அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்” என பதிலளித்திருந்தார்.

டயலாக் டென்

ரொம்ப மண்டையைக் குடையாமால் கூகிளைக் குழப்பாமல் யோசித்ததில் மனதில் தங்கிப் போன பத்து சினிமா வசனங்கள்:

1. …’என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?’…

2. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை

3. அவன் ஹேர்ஸ்டைலை பார்த்தியா? ஏ. ஆர். ரெஹ்மானையும் ஆதித்யனையும் மிக்ஸ் பண்ணி வளர்த்திருக்கான். இன்னொரு ஆங்கிளில் இருந்து பார்த்தா ‘அவதாரம்’ நாஸர் மாதிரியே இருக்கான்.

4. சபாஷ்! சரியான போட்டி.

5. உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா!

6. தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை – மன்னிப்பு.

7. தீவிரவாதியெல்லாம் என்ன மாதிரி அசிங்கமா இருக்க மாட்டான் சார். அழகா… உங்கள மாதிரி இருப்பான்.

8. எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!

9. ஓடினாள்… ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…

10. நீ மலையா? இருக்கலாம்… ஆனா, மலை உடைஞ்சா மண்ணுதான்.

நிறையப் படம் மனதில் ஓடினாலும், வசனம் வரமாட்டேங்குது. உங்களுக்கு நினைவுக்கு வந்த உரையாடல் என்ன 😉