Category Archives: Biodata

Kumudham Biodata – Niranjan

1. தொலைக்காட்சி கவர்ச்சி நடன விருந்து – மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா, ஜோடி நம்பர் 1

stage-performance-shows-bio-data-kumudham-reality-vulgarity.jpg

2. பாகிஸ்தான் – முஷாரப், பெனாசிர் புட்டோ, நவாஸ் ஷெரீப்

pakistan-musharaf-benazir-bhutto-kumudam-biodata.jpg

3. திராவிட முன்னேற்ற கழகம் – கலைஞர் கருணாநிதி, அழகிரி, முக ஸ்டாலின், கனிமொழி

dmk-party-biodata-niranjan-kumudam-kalainjar-karunanidhy.jpg

4. நரேந்திர மோடி – குஜராத், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், கோத்ரா

narendra-modi-bio-data-niranjan-kumudham-bjp-gujarat.jpg

5. அனில் கும்ப்ளே –  இந்திய கிரிக்கெட், அணித்தலைவர், பந்துவீச்சு

anil-kumble-cricket-sports-players-india-captain.jpg

6. அடியாள் – அரசியல், குண்டா, போக்கிரி, போலீஸ்

goonda-militant-criminal-convict-refuge-politics-party.jpg

7.  சிரஞ்சீவி – தெலுங்கு நடிகர், சூப்பர் ஸ்டார், தந்தை, அரசியல், காங்கிரஸ், ஆந்திரா

chiranjeevi-bio-data-nirachan-kumudam-telugu-tollywood-actors.jpg

8. தேவ கௌடா –  கர்னாடகா, குமாரசாமி, ஜனதா தளம், பாஜக, ஆட்சிக்கவிழ்ப்பு

deve-gowda-karanataka-coomarasamy-bjp-janata-dal.jpg

9. ராமதாஸ் – அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சி, ஜிகே மணி, காடுவெட்டி குரு, ஒப்பந்தம், ராஜ்ய சபா

ramadoss-2-kumudam-biodata-niranjan-pmk-tamil-nadu-politics.jpg

10.  மகளிர் மட்டும் – பெண்கள் தினம், லேடீஸ் ஸ்பெசல், ஆடவர், ஆண்கள்

ladies-special-bio-niranjan-kumutham-women-satire.jpg

Poongaa – One Year Anniversary

முதலில் குமுதம் நிரஞ்சன் வகை பயோடேட்டா:

பெயர்: பூங்கா

வயது: செப்டம்பர் வந்தால் ஒராண்டு

நண்பர்கள்: எல்லா திசைகளிலும் இல்லை

திடீர் எதிரிகள்: நாலு கிலோபைட்டுக்கு மேல் எழுதியும் பூங்காவில் இடம்பெறாதவர்கள்

நீண்டகால எதிரிகள்: பாரதீயவாசிகள்

தொழில்: எல்லாரையும் எல்லாவற்றையும் படிக்கவைப்பது

பழைய பொழுதுபோக்கு: விவாதாங்களை நீட்டித்தது

புதிய பொழுதுபோக்கு: தொகுப்பாளரின் மேசையிலிருந்து மூச்சு வாங்க வைப்பது

பிடித்த வேலைபழைய கதைகளை கிளறுவது

பிடித்த இடம்: தமிழ் பாரதி அல்ல

மறந்தது: பூந்தோட்டம்

மறக்காதது: ‘இணையத்தமிழின் முதல் வலைப்பதிவிதழ்’ என்று பிரஸ்தாபிப்பது

விரும்புவது: வாழ்த்துச் செய்திகளைப் படிப்பது

கிடைப்பது: பயனர்களின் தொழில்நுட்ப பரிந்துரை

எரிச்சல்: நேரந்தவறிய ‘தமிழ்மணம் வாசிப்பில்‘ பத்திகள்

சமீபத்திய சாதனை: தொடர்ச்சியாக முப்பது+ இதழ்கள் கொண்டு வருவது

நீண்டகால சாதனை: தமிழில் வலைப்பதிவுகள் என்றால் தமிழ்மணம் என்றாக்கியது


இப்பொழுது திருவிளையாடலுக்கு மாறுவோம்:பிரிக்க முடியாதது என்னவோ? பூங்காவும் புரியாமையும்

பிரியக் கூடியது? பூங்காவும் பெண்ணியமும்

சேர்ந்தே இருப்பது? பூங்காவும் புரட்சியும்

சேராதிருப்பது? பூங்காவும் பட்டிமன்றமும்

கேட்கக் கூடாதது? இடுகைகள் ஏன் இடம்பெறவில்லை

கேட்கக் கூடியது? இடுகைகளை இடம்பெற்றதற்கு நன்றிகள்.

சொல்லக்கூடாதது? பூங்காவில் கருத்து சுதந்திரம்

சொல்லக்கூடியது? ஊடகங்களில் கருத்து சுதந்திரம்

பார்க்கக்கூடாதது? பிடித்தவர்களின் மறுபக்கம்

பார்த்து ரசிப்பது? புனிதப்பசுக்களின் மறுபக்கம்

இதழுக்கு வேண்டியது? இடுகைகளின் சம்மதம்

வாழ்த்துகள்!

Kumudam Cartoons, Biodata (Maran, Ramadoss, President Prathibha)

துக்ளக்:

thuglaq kanimozhi manmohan karunanidhi home attai

கல்கி:

cartoon kalki Pillai PMK Ramadoss karunanidhi attacks

cartoon pillai kalki JJ rashid masood VP elections

குமுதம் – பயோடேட்டா

Kumudam president prathibha patil Niranjan Biodata fun joke Pun

Kumudam DMK Dayanidhi maran Niranjan Biodata fun joke Pun

Kumudam PMK Ramadoss Niranjan Biodata fun joke Pun

Biodata Anbumani ramadoss PMK Health Ministry

Other Cartoons

mathy dinamani prathibha dolls manmohan sonia congress govt

kumudam cartoon dmk family mp mla minister stalin Kanimozhi Azhagiri

Cartoons (Week of July 16)

Shekawath double standards VP karunanidhi DMK PoliticsAdade mathy dinamani MBBS Study expenses prices capitation exorbitant fees

Continue reading

குணச்சித்திரம் : 1 – ஐ(இ)காரஸ் பிரகாஷ்

இந்தத் தொடரைப் பதிந்து வைக்கலாம் என்றவுடன் பத்ரி, மூக்கன், மதி, ஆசிப், குசும்பன் போன்ற வலையோர்கள் ஞாபகம் வந்தார்கள். அவர்களைக் குறித்த என் அனுமானங்களையும் சந்தித்த சரித்திரங்களையும் நினைவுக்கு எட்டிய வரை குறிப்பதாக திட்டம்.அமெரிக்க டிவியில் தொடர்கள் ஒளிபரப்பாவதற்கு ஒத்திகையாக வெள்ளோட்டத்தை pilot என்றழைத்து ‘புலி வருது’ கணக்காக மார்க்கெட்டுவார்கள். அந்த மாதிரிதான் பிரகாஷை பிள்ளையார் சுழியிடுவது.

இணையத்தில் வளைய வந்ததை வைத்து, கண் கட்டிய நிலையில் கொம்பைக் கொண்டு உறி அடிப்பது போன்ற விளையாட்டு. சில சமயம் துணியை சரியாகக் கட்டாததல் இலக்கு துல்லியமாகத் தெரியும். சுற்றி விடுபவரே pinata-வுக்கு 180 டிகிரியில் நிற்கவைத்து அனுப்பும் போங்கும் நடக்கும். கன்ணாடியைக் கழற்றினாலே முழுக்குருடான என்னைப் போன்றோருக்கு யானையைத் தடவி அறியும் பயிற்சியாகவும் கொள்ளலாம்.

ஒரே வாரத்தில் வழக்கு விழுந்தால், காலைக் கையைப் பிடித்தால், இளகும் தன்மை உடையவர். அவரை வைத்தே மண்டகப்படியை ஆரம்பிக்கலாம்.

எல்லா நல்ல எழுத்தாளர்களைப் போல் ஆரம்பத்தில் புயலென்று வந்தவர். ராயர் காபி க்ளபில் நுழைந்த போது இருந்த வீரியம் குரல்வலை: பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்! போன்ற பின்னூட்டங்களில் எப்போதாவது இன்னும் எட்டிப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

ஆறும் அது ஆழமில்ல‘ என்பது போல் அழுத்தம் ஜாஸ்தி. அந்தளவு போட்டுப் பார்ப்பதில் வல்லவர் என்பதை வெளிக்காட்டாமல் மந்தமாக இருப்பதே கஷ்டமான சாமர்த்தியம். ஆனால், புரை தீர்ந்த நன்மை தரும் லாவகத்துடன் ‘எடுக்கவோ, கோர்க்கவோ‘ என நம்மிடம் கையாள்பவர்.

பிரகாஷை இரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன். எழுத்தைப் போலவே எளிமையான, முதிர்ச்சியான 😛 தோற்றம். சூப்பர் ஸ்டார் ரசிகன் என்பதற்கேற்ப பேச்சில் வேகம். தள்ளி விலகாமல் நொடியில் அரவணைக்கும் நட்பு பாராட்டுதல். ITC பங்கை வாங்கி வைக்கச் சொல்லும் பழக்கம்.

பிரகாஷின் எழுத்தில் உள்ள நெகிழ்ச்சி, பேச்சில் மிஸ்ஸிங். அது எனக்கு ஏமாற்றமா என்று சொல்லத் தெரியவில்லை என்கிறார் மூக்கு சுந்தர். திண்ணையில் தனது குருவை விவரிக்கும் ஜெயமோகன் ‘அவரே தன் கல்வியை வெளிக்காட்டும் தருணங்கள் குறைவு. நாம் கேள்வி கேட்கையில் அவர் அதற்கான சிறிய ஆனால் கச்சிதமான விளக்கத்தை அளிப்பார்’ என்பார்.

இது இரண்டுக்கும் நடுவாந்தரமான கேந்திரத்தில், விவாதத்தை வளர்க்க, தொய்வு ஏற்படும்போது வெட்டிப் பேசுபவர்.

ராயர் காபி க்ளபில் இரா முருகன், வெங்கடேஷ், பாரா, எல்லே ராம், சொக்கன் என்று பஞ்ச பூதங்கள் ரஷித்தால், பாஞ்சாலியாக எல்லோரையும் மேய்த்தவர். பாஞ்சாலிக்கு கர்ணனையும் பிடிக்கும் என்பதுபோல் மரத்தடி பக்கமும் ஒதுங்கி பங்கெடுத்தவர். திரௌபதியின் வெளிப்படையான துடுக்குடன் Maraththadi : Message# 10053 மிளிர்ந்தவர், வானபிரஸ்தம் மேற்கொண்ட க்ளபிற்குப் பிறகு, விஸ்வரூபம் காட்டாமல், கில்லிக் குடுவையில் அடைந்து கிடக்கிறார்.

Pathbreaking-ஆக தனிப் பதிவில் குடித்தனம். மெத்தனமான தமிழ்ப்பதிவுகளுக்கு சூடான முன்னோடி ஒருங்கிணைப்பாக கில்லி. தமிழரின் தொன்மையான பற்றுக்களமான படத்திற்காக ட்ரிவியாபேட்டை.

இனிமையான மேலாளர்க்குரிய குணங்களாக சிலதைப் பட்டியலிடலாம்

  • ப்ரொஃபஷனல் & பெர்சனல் டச் வேண்டும்.
  • சிஈஓ, சி.எஃப்.ஓ போன்ற மாடி ரூம் சன்னலோரவாசிகளை குஷிப்படுத்த வேண்டும்.
  • ப்ராஜெக்ட் மேனெஜர், பிஸினஸ் அனலிஸ்ட் இடையே போதிய அரசியல் புகை வரவழைக்க வேண்டும்.
  • இதெல்லாம் செய்ய வேண்டும் என்று படித்து அறிந்தவரும், உணர முடியாதவாறு இவற்றை இயல்பாக்க வேண்டும்.

பிரகாஷ் அருமையான ஆதர்ச மேலாளரும் கூட.

பதிவில் எப்படி நகைச்சுவை இழையிட வைப்பது, என்ன வெரைட்டி கொடுக்கலாம் என்று குழம்பினாலோ, அலுத்தாலோ, ஆதி ராயரில் Icarus என்று தேடி மெல்லுங்கள். எழுத விஷயம் கிடைக்கவிட்டாலும், இனிமையான நேரங்கழித்தலுக்கு நான் உத்தரவாதம்.

வழக்கம் போல் சில சுட்டிகள்:

  1. My Nose – விரதம்..?? !!!
  2. ஈ-தமிழ்: Chat Meet – Icarus Prakash
  3. Prakash’s Chronicle 2.0