எம். சகா, மேலூர்.
அறிவாளிகள், முட்டாள்கள் இருவரின் வாழ்க்கையும் எப்படிப் பட்டது?
‘எத்தனையோ அறிவாளிகளை நான் கண்டிருக்கிறேன். அவர் களிடம் நான் காணாதது சந்தோ ஷம்’ என்றார் ஹெமிங்வே.
க.நா.ராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.
கம்யூனிஸ்டுகளுக்கும் பா.ம.க.வுக்கும் என்ன வித்தியாசம்?
கம்யூனிஸ்டுகள் எக்காலத்திலும் பி.ஜே.பி.யோடு சேரமாட்டார்கள்.
பா.ம..க. எக்காலத்திலும் எவரோடும் கூட்டுச் சேரும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
சிரிப்பில் எத்தனை வகை உண்டு?
- டாக்டர் ராமதாஸ் கலைஞரைப் பார்த்து சிரிப்பது டார்ச்சர் சிரிப்பு.
- கம்யூனிஸ்டுகளைப் பார்த்து மன்மோகன் சிங் சிரிப்பது நக்கல் சிரிப்பு.
- மிருகவதைத் தடுப்புச் சட்டத்தைப் பார்த்து சல்மான்கான் சிரிப்பது கேலிச் சிரிப்பு.
- டால்மியா வகையறாக்களைப் பார்த்து கங்குலி சிரிப்பது எக்காளச் சிரிப்பு.
- சன் டி.வி.யைப் பார்த்து கலைஞர் டிவி சிரிப்பது சவால் சிரிப்பு.
- சிம்புவைப் பார்த்து நயன்தாரா சிரிப்பது எஸ்கேப் சிரிப்பு.
- சில கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் அரசு சிரிப்பது கேனைச் சிரிப்பு.
இப்படிச் சிரிப்பில் பல வகைகள்.
எம். குமாரசாமி வேலூர்
தன்னுடைய படங்களில் வருவதைப் போலவே பல புள்ளி விவரங்களைச் சொல்லி கூட்டங்களில் அசத்துகிறாரே கேப்டன்?
அதில் நான் ரசித்த ஒன்று. ஒரு பெண்கள் கூட்டதில் அவர் சொன்ன கணக்கு : “ இலவச காஸ் அடுப்பு தர்றோம்னு சொல்லி அரசாங்கம் உங்களை ஏமாத்துது. மண்ணெண்ணை அடுப்புன்னா உங்களுக்கு மாசம் 180 ரூபாய்தான் செலவாகும். ஆனா காஸ் அடுப்பு சிலிண்டருக்கு மாசம் 300 ரூபா ஆகும்..உங்களை அதிகமா செலவழிக்க வெச்சி ஏமாத்தற திட்டம் இது”