அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.
வியப்பு:
சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ?
விளம்பரம்:
விமர்சனம்:
ஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.
தன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.
குழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.
நிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ? வேலை போயிடுமோ??’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.
இறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.
விளைவுகள்:
ஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.
அரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.
பென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.
ஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
இந்த நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியப் பிரதம மந்திரிகளின் குடியரசு தின உரைகளை கவனித்துப் பாருங்கள். அல்லது, ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றும் உரைகளக் கேட்டுப் பாருங்கள்.
அச்சு அசல் நக்ஸல்பாரி போராளிகளின் பேச்சு போலவே இருக்கும்.
நாட்டில் நிலவும் பஞ்சம், வறுமை, கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள், அரசியலில் புகுந்துவிட்ட கிரிமினல்களை ஒடுக்க வேண்டியதன் அவசியம், வேலையில்லாத் திண்டாட்டம், ஜாதிக் கொடுமை, பெண்ணடிமைத்தனம் என்று பல பிரச்சினைகளைப் பற்றி நக்ஸல்பாரிகளின் மொழியிலேயே பேசியிருப்பார்கள்.
ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரிகளின் உரையைத் தயாரித்துக் கொடுக்கும் அவர்களது காரியதரிசிகள் ஒருவேளை பழைய எம்மெல் ஆட்களோ என்று கூட பெருமாளுக்கு சந்தேகமாக இருக்கும்.
தமிழினத் துரோகி என்பது போல் சோஷலிஸம் என்பது அமெரிக்காவில் தகாத வார்த்தை. ஒபாமாவை சமதருமம பேசுபவர் என்று சித்தரிப்பதன் மூலம் இழக்கும் வாக்காளர்களைப் பெற முடியும் என்பது மெகயினின் புதிய பிரச்சார யுக்தி.
ஒபாமாவை சோஷலிஸ்ட் என்று முத்திரை குத்தும் ஊடகங்களின் தொகுப்பு மற்றும் $700 பில்லியன் கொடுத்து நிறுவனங்களை தேசியமயமாக்குவது சோஷலிசம் அல்ல என்று பேட்டி கொடுக்கும் மெகயினின் விழியம்:
கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் மீண்டும் பிரபலம் அடைகிறதா? ஜெர்மனியின் மிகப்பெரிய இடதுசாரி பிரசுர நிறுவனங்களில் ஒன்றான டியெட்ஸ்ஸின் பார்வை அது.
தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து மார்க்ஸின் பிரபல படைப்புகள் எல்லாம் தமது கடைகளில் வேகமாக விற்றுத் தீர்ந்துவருகின்றன என்று அப்பிரசுர நிறுவனம் கூறுகிறது.
கார்ல் மார்க்ஸுடைய பொருளாதாரச் சித்தாந்தம் – அதிலும் குறிப்பாக அதன் ரஷ்ய லெனினிய வடிவம் – சோவியத் ஒன்றியம் 1980களின் பிற்பகுதியில் சிதறுண்டதிலிருந்தே, தனது மொத்த மவுஸையும் இழந்துவிட்டிருந்தது.
ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை, முதலாளித்துவத்தின் தோல்வியாகப் பார்க்கும் சிலர், நாம் எங்கே கோட்டை விட்டிருக்கிறோம் என்பதை மார்க்ஸின் சித்தாந்தத்தால் விளக்க முடியும் என்று நம்புகின்றனர்.
வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை ஒப்புக்கு சப்பாணியாக ஜான் எட்வர்ட்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கிட்டத்தட்ட ஹில்லரி க்ளின்டனின் ஆதர்ச ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பராக் ஒபாமாவிற்கு மாறியபிறகு கிடைத்திருக்கும் எட்வர்ட்சின் ஆதரவினால் அடுத்து வரும் கென்டக்கியில் ஹில்லரியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படலாம்.
மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி போன்ற இவையெல்லாம் ஜனநாயகக் கட்சி நிச்சயம் தோற்றுவிடக் கூடிய இடங்கள் என்பதால் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எனினும், இந்த மாகாணங்களின் பிரதிநிதிகளைப் பெறுவதற்கான போட்டியாக இவை மாறியுள்ளதால், இந்தத் தேர்தல்களும் கவனிப்பைப் பெறுகின்றன.
முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவப்போகும் மாநிலங்கள்: Election Guide 2008 – Presidential Election – Politics – Electoral Map – The New York Times: “Here are what the Obama and McCain campaigns now consider the true battleground states going into the fall campaign, assuming — as both candidates now do — that Barack Obama is likely to win his party’s nomination. In addition to these states, both sides have states that they say (or rather hope) will come into play in the months ahead — think New Jersey for Republicans and Georgia for Democrats — but for the time being, this is where the action is going to be.”
தொடர்புள்ள அலசல் பத்தி – Trailhead : Hard-Working White American Endorses Obama: “Edwards is still influential. Just look at the 7 percent of the vote he picked up in West Virginia—impressive for someone who dropped out more than three months ago. If Edwards supporters in Kentucky take his cue and vote for Obama…”
2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை சுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முழு விவரங்களுக்கு: McCain Plane Still Flying – The Caucus – Politics – New York Times Blog: “Mrs. McCain is effectively subsidizing her husband’s campaign because either she or her company has to make up for the difference between what his campaign pays for the jet’s use and what it really costs to operate it.”
3. ஜான் மெகெயினின் உடல்நல காப்பீட்டு திட்டம் குறித்த பாஸ்டன் க்ளோபின் தலையங்கத்தில் இருந்து சில விவரம் கலந்த கருத்துகள்:
மெடிக்கேர் (Medicare) என்னும் திட்டம் கடந்த நாற்பதாண்டுகளாக அரசாங்கத்தால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருவது அறிந்திருந்தும், “அரசுத்துறையால் இதை செம்மையாக செயலாக்க இயலாது” என்று பேசுவது அழகு அல்ல.
மெகெயினின் திட்டப்படி சேமத்திட்டத்திற்கு செலவழிக்கும் தொகை வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.
இதனால் அதிகரிக்கும் வரிச்சுமையைப் போக்க
தனிநபருக்கு $2,500 தள்ளுபடி
குடும்பஸ்தருக்கு $5,000 தள்ளுபடி
ஆனால், நிஜ வாழ்க்கையில் முழுமையான காப்பீட்டுத் திட்டத்திற்கான செலவுத் தொகை:
தனிநபருக்கு $4,479
குடும்பஸ்தருக்கு $12,106
வருடத்திற்கு $139,000த்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே குடியரசு வேட்பாளரின் திட்டம் பயனளிக்கும்.
வயதானவர்களுக்கும், வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவரின் பரிந்துரையில் எந்த இடமும் கொடுக்கவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்விதமாக, மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இவர்களைப் பாதுகாக்க மாற்று திட்டம் தயார் செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால், இது குறித்தும் எவ்விதமான தெளிவான தொலைநோக்கு காப்புறுதியும் கிடைக்கவில்லை.
சந்தைப்படுத்தலால் மட்டுமே சேமநல திட்டங்களை அனைத்து பொதுமக்களுக்கும் முழுமையாக கொண்டு செல்லமுடியாது.
அவ்வாறு நடந்திருக்குமானால், கடந்த காலத்திலேயே நடந்திருக்குமே!?
தொலைக்காட்சியில் அழகாகத் தோன்றுவது வேட்பாளர்களுக்கு காலத்தின் கட்டாயம். வியர்த்து, விறுவிறுத்து காணப்பட்டால், ‘சோர்வானவர்; பதைபதைப்புடன் செயல்படுபவர்‘ என்றெல்லாம் வாக்காளர்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.
ஆனால், அழகு பார்க்கும்போது, செல்பேசி விழியப்பதிவுகளை தடுத்தாட்கொள்வது அரசியல் வெற்றிக்கு முக்கியமான விஷயம்.
இங்கே, ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் எட்வர்ட்ஸ் ‘நான் நடந்தால் நடையழகு; நான் கோதினால் முடியழகு’ என்று கண்ணாடி களிப்புறும் காட்சி:
1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:
அதன் தொடர்ச்சி:
2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.
3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:
4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:
5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் ஆய்வு (பெரிய செவ்வ்வாய்க்கு முன்பு தொகுக்கப்பட்டது)
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde