Category Archives: கருத்து

ரான் பால் – ஏன் வாக்களிக்க ஒப்பவில்லை?

‘ஆளில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ என்பது பழமொழி. இராக் போரை எதிர்ப்பவர்களுக்கு இலுப்பைப்பூவாக அகப்பட்டிருப்பவர் முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) ரான் பால். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி சின்னமாகக் கருதப்படும் டெனிஸ் குசினிச் இலுப்பைப்பூவாக நினைத்துத்தான் ரான் பாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். (Kucinich suggests a Republican running mate – cleveland.com: “Call it the liberal-libertarian ticket, where left meets right and Democrat Dennis Kucinich picks Republican Ron Paul to be his vice president.”)

இந்த மாதிரி பலரும் ஏமாறக்கூடும் என்பதற்காக, ரான் பால் ஏன் என் வோட்டுக்கு உகந்தவரில்லை என்பதற்காக சில காரணங்கள்:

1. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்‘ – உலகம் முழுவதையும் ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம்’ என்பதற்காக அமைந்த ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகவேண்டும் என்கிறார். ஐநா- வை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகளைக் கூட சொல்லாமல், அமெரிக்காவின் அரசுரிமைத் தாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுவது அர்த்தமற்றது.

2. கருக்கலைப்புக்கு செல்லும் க்ளினிக் வாசலில், ‘தைரியாமாகச் சொல்… நீ மனிதன்தானா? என்பது போன்ற சூலச்சிலுவைகளைத் தாங்கி ‘சாகடிக்காதே… கொல்லாதே… ஐயோ… அணுஅணுவாக சித்திரவதை செய்யப்போகிறாயே…’ என்று குத்திவிடுவது போன்ற பயமுறுத்தலுடன் சிசுவதை, கண்ணைக் குத்தும் போன்ற சகல பில்லி சூனியங்களையும் அரங்கேற்றுவார்கள். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர், பதின்ம வயதில் பலவந்தப்படுத்தப்பட்டவர் போன்ற கேஸ்களில் கூட அபார்ஷனை எதிர்க்கும் குடியரசுக் கட்சியின் அதிதீவிர பாரம்பரியக் காவலராய், ரான் பால் இருக்கிறார்.

3. இட ஒதுக்கீடு, affirmative action, காலங்காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரப்படும் வாய்ப்பு போன்றவற்றை எதிர்க்கிறார். (அவரின் பிரச்சார தளத்தில் இருந்து: Ron Paul 2008 › Issues › Racism: “Liberty means free-market capitalism, which rewards individual achievement and competence – not skin color, gender, or ethnicity.”)

4. இனவெறியர்: Think Progress » Ron Paul: 95 percent of black men are ‘criminal.’ – கறுப்பர் என்றாலே கொள்ளையடிப்பவர், வன்புணர்பவர், திருடர், கொலையாளி என்று நம்புகிறவர்.

5. வாய்ப்புகளைத் தேடிவருபவர்களைத் தடுப்பவர்: சமீபத்தில் பார்த்த ‘பேபல்’ படத்தில் வருவது போல் மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து சொர்க்கபூமியாக நினைத்து குடிபுகல்பவர்களைத் தடுக்க நினைக்கிறார். (காலச்சுவடின் விமர்சனத்தில் இருந்து: திரை: வேற்று மொழிப் படங்கள் :: கடவுளின் சதி – குவளைக்கண்ணன் | Kalachuvadu |: “பண்டைய பாபிலோனியாவில் சொர்க்கத்தை அடைவதற்காக மனிதர்கள் விண்ணை முட்டும் கோபுரம் ஒன்றைக் கட்டுகிறார்கள். தனது இடத்தை அடைய நினைத்த மனிதர்களின் திமிரைக் கண்ட கடவுள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதபடி செய்து அவர்கள் சொர்க்கத்தை அடையவிடாமல் செய்துவிடுகிறார். மனிதர்கள் கட்டிய அந்தக் கோபுரத்தின் பெயர் பேபல். இந்தக் கதை ஆதியாகமத்தின் 11ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.”)

6. அமெரிக்க அடித்தட்டு மக்களின் சம்பளத்தைக் குறைக்க விரும்புகிறவர்: அந்தப் பக்கம் ஹில்லரி ஒன்பதரை டாலருக்கு ஊதியத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தால், இவர் இப்போது கிடைக்கும் வருமானத்தை இன்னும் கொஞ்சம் நசுக்கிப் பிழிந்தெடுத்து, வணிகர்களைக் கொழிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். (Immigration and the Welfare State by Rep. Ron Paul: “Our current welfare system also encourages illegal immigration by discouraging American citizens from taking low-wage jobs.”)

7. மொழி துவேஷம் பாராட்டுகிறவர்: Immigration and the Welfare State by Rep. Ron Paul: “All federal government business should be conducted in English.” – 2006- ஆம் ஆன்டு மக்கள்தொகை கணக்கெடுப்புபடி 44.3 மில்லியன் ஹிஸ்பானிய மக்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏழு சதவீத குடிமக்களின் மொழியை மொத்தமாக ஒதுக்க சொல்கிறவர், என்போன்ற தமிழ் பற்றாளர்களின் கோரிக்கையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.

8. கொண்ட முற்போக்கு (லிபரடேரியன்) கொள்கைகளிலேயே முரண்களை வெளிப்படுத்துபவர்: நாட்டின் எல்லைகளை கடுமையாக கண்காணிக்க பேரதிகாரத்தை முன்வைக்கும் சமயத்தில், அரசாங்கத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள சொல்லும் லிபரல் தத்துவத்தில் இருந்து விலகிச் சென்று குழம்புகிறவர். தனிமனிதனை சுயம்புவாகக் கருதும் தாராளவாதி கட்சியின் கோட்பாடை உயர்த்துவதாக பிரஸ்தாபித்துக் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் சுயமாக மகவை குறித்த முடிவை எடுக்கும் உரிமையை அரசாங்கத்தின் பிடியில் வைத்துக் கொன்டு கட்டுப்படுத்த நினைக்கிறவர்.

9. பாலியல் வன்முறைக்கு ஆதரவாளர்: “அலுவல் என்றால் ‘அப்படி – இப்படி’ எசகுபிசகாக இருக்கத்தான் செய்யும். சில அட்ஜஸ்ட்மென்ட்களை செய்து கொள்ள இயலாவிட்டால், பிறிதொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே!” என்னும் கருத்தை எண்ணுகிறவர். Ron Paul on Employee Rights (Part 1): Sexual Harassment-What’s the Big Deal? | California Employee Rights Blog: “Why don’t they quit once the so-called harassment starts? …[H]ow can the harassee escape [any] responsibility for the problem?”

10. பெண்களுக்கு வேலையில் பாரபட்சம் ஏற்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்பவர்: “பெண்கள் வடிவாக கண்ணுக்கு லட்சணமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறைக் கண்டீர்கள்? ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சம்பளம் என்றெல்லாம் கட்டாயப்படுத்தக் கூடாது.” – Ron Paul on Employee Rights (Part 2): Unattractive Women Need Not Apply | California Employee Rights Blog: “The idea that the social do-gooder can legislate a system which forces industry to pay men and women by comparable worth standards boggles the mind…The concept of equal pay for equal work is…an impossible task…. By what right does the government assume the power to tell an airline it must hire unattractive women if it does not want to?”

11. அரசு பள்ளிக்கூடங்களை மூடவேண்டும்: அனைவருக்கும் கல்வி என்பது தற்போதைய முறையிலேயே சாத்தியமாகி இருக்கிறது. பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய தனியார் கல்விக்கூடங்களை முன்னிறுத்தல், பெற்றோர்களை (அம்மாவை என்று இங்கு வாசிக்கவும்) வீட்டிலே முடக்கி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர வைத்தல் போன்றவற்றை ஆதரிக்கிறார். Ron Paul 2008 › Issues › Education: “The federal government has no constitutional authority to fund or control schools.”

12. ‘Rich get richer; poor get poorer‘ என்று சொல்லிவிட்டு நூறு கோடிக்கு ‘சிவாஜி’ திரைப்படத்தின் வியாபாரத்தை கவனிப்பது போல், ரான் பாலும் அக்மார்க் அரசியல்வாதி. – Sorry, Mr. Franklin, “We’re All Democrats Now” by Rep. Ron Paul: “Although the motivating factor is frequently the desire for the poor to better themselves through the willingness of others to sacrifice for what they see as good cause, the process is doomed to failure.
.
.
Democracies lead to chaos, violence and bankruptcy.”

நன்றி: Sherry Wolf: Ron Paul, libertarianism, and the freedom to starve to death

குறிப்புகள்: ரான் பால் புலம்புவது போல், மெக்சிகோவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்தே அமெரிக்க மருத்துவசாலைகள் சீரழிகின்றன என்பதை ஆதாரங்களுடன் மறுக்கும் சில புத்தகங்கள்:

  1. Uninsured in America: Life and Death in the Land of Opportunity: Susan Sered, Rushika Fernandopulle
  2. Medical Apartheid: The Dark History of Medical Experimentation on Black Americans from Colonial Times to the Present: Harriet A. Washington
  3. One Nation, Uninsured: Why the U.S. Has No National Health Insurance: Jill Quadagno

டாக்டர். ரான் பால்: சில பதில்கள்

எனது அமெரிக்காவின் காந்தி: டாக்டர் ரான் பால் என்ற பதிவிற்கு வந்த கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை இங்கு பதிலலித்துள்ளேன்.

வருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா?

வருமான வரியே தேவையற்றது எனும் போது, வருமான வரி கட்டாதவர்கள் தவரிழைப்பவர் ஆக மாட்டார்கள். நீங்கள் FOX Business news பார்ப்பவர்களாக இருந்தால் பீட்டர் ஹிப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். அவரது தந்தை இர்வின் ஹிப் பற்றியும் படித்துப் பாருங்கள். சில உண்மைகள் புரியும்.

வசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா?

மிக நல்ல கேள்வி. இதற்கு சுருக்கமாக பதில் சொல்வது இயலாது. இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறேன். 1) குடியரசு கட்சியின் கொள்கையே சிரமப்பட்டு வேலை செய்பவன், அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் முழு பலனையும் அனுபவிக்க வேண்டும் என்பது. அரசாங்கம் எல்லாம் செய்து கொடுக்கும் என்று எண்ணுபவர்கள் பெரும்பாலும் ஜனநாயக கட்சியை ஆதரிப்பவர்கள். ஆனால் தற்போது இரண்டு கட்சிக்களின் கொள்கையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரில் யார் அதிக சமதர்மவாதி (social) என்ற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பணக்காரனிடம் வாங்கி எழைகளுக்குக் கொடுக்கும் சமதர்மம், நடைமுறையில் அவ்வளவு சாத்தியமில்லை என்பது அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை பெருகுவதிலும், மத்திய வர்க்கத்தின் எண்ணிக்கை குறைவதிலும், ஏழை-பணக்கார வித்தியாசம் அதிகமாவதிலும் தெரிகிறது. 2) எனக்குத்தெரிந்த வரை ரான் பால் வருமான வரியை மட்டும்தான் வேண்டாம் என்கிறார். மற்ற வரிகளை அல்ல. காரணம்: Federal reserve அந்தப் பணத்தை என்ன செய்கிறது என்பது தெளிவாக இல்லை. அவ்வளவு பணத்தையும் வீணாக செலவு செய்ததால் இப்போது ஒவ்வொரு அமெரிக்கனும் பெரும் கடனாளியாகிக் கொண்டிருக்கிறான். இதற்கு பதிலாக, சிரமப்பட்டு வேலை செய்கிற ஒவ்வொருவரும் அதன் பலனை, அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டு அவர்களை எதிர்பார்க்காமல், தானே அனுபவித்தல் சிறப்பு. நேரம் கிடைத்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்.

இராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்?

டாக்டர். ரான் பால் ஆப்கானிஸ்தானை தாக்கியது சரியென்று சொல்லவில்லை. 9/11 -க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் ஓட்டெடுப்பில் புஷ்ஷின் செயல்களுக்கு ஆதரவாக ஓட்டழித்தது உண்மைதான். அவர் எதிர்பார்த்தது பின் லேடனை குறிவைத்துத் தாக்குவதைத்தான். ஆனால் நடந்ததோ ஈராக்கை ஆக்கிரமிப்பதும், முசரப் போன்ற சர்வாதிகாரியிடம் பணத்தைக் கொட்டுவதும், ஈரான் மீது போரைத் தொடங்குவதும். MTV-யில் கொடுத்தப் பேட்டியில் இதைப்பற்றி (3-வது பதில்) கூறியிருக்கிறார்.

தற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா?

டாக்டர். ரான் பால் முந்தைய பதிலில் உள்ள வீடியோவில் முதல் கேள்விக்கான பதிலில் கூறியதில் இருந்து நான் அறிந்து கொண்டது, அவர் அமெரிக்க அள்ளி வழங்குவதை எதிப்பதில்லை. அவர் கருதுவது அந்தப்பணம் பெரும்பாலான சமயத்தில் சரியான மக்களுக்குச் சென்றடவதில்லை, அதை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்றுதான். மேலும் இப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், நீண்ட நாட்களுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கடன் வாங்கியும், வெறும் காகிதப்பணத்தை அச்சடித்தும் வீண் செலவு செய்ய முடியாது. அது சரியென்றே படுகிறது.

அமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா? அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா?

டாக்டர். ரான் பால் அவர்களது குடியேறுதல் பற்றிய அவரது கொள்கை விளக்கத்தில், சட்ட விரோதமாக வந்தவர்களின் குழந்தை தானகவே குடியுரிமை பெருவதைத்தான் எதிர்ப்பதாகத்தான் எனக்குப் புரிகிறது. அது எனக்கு நியாயமாகவும் படுகிறது. உண்மையாக சொல்லப்போனால், சில விசயங்களில் நம்மை போன்று சட்டதிற்குட்பட்டு வருபவர்களை விட சட்ட விரோதமாக வருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக படுகிறது. உதாரணமாக நியூயார்க் நகரத்தில் சட்ட விரோதமாக இருப்பவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிப்பது பற்றி விவாதம். என்னைப் பொருத்தவரை சட்ட விரோதமாக வருபவர்களுக்கு எந்த உரிமையும், வேலையும், சலுகைகளும் கொடுக்கக்கூடாது. இவைகள் கிடைப்பதால்தான் ஒவ்வொருதினமும் பல மெக்சிகோவினர் எல்லையைக் கடக்க முற்பட்டு உயிரிழக்கின்றனர். ரான் பால் கூறுவது போல், அமெரிக்க பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இப்போது பொருளாதாரம் விழ்ந்து கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 14-வது மசோதா திருத்தத்தின் படி சட்ட விரோதமாக வருபவர்களின் குழந்தைகள் தானாகவே குடியுரிமை பெருவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ரான் பால் அந்த திருத்தத்தை எதிர்க்கிறார். அவருடன் நான் உடன்படுகிறேன்.

ரான் பால், விளையாட்டு: தமிழ்ப்பதிவுகள் – பெப்ரவரி 15

1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம். 🙂

தங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்


2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) – சரண்

விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

  • IRS constitution-க்கு எதிரானது
  • நாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக(?) ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,

பொருத்தமான இடங்களில் வீடியோ சுட்டிகள், கட்டுரை தொடுப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதைக்கு சில கேள்விகள்:

  1. வருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா?
  2. வசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா?
  3. இராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்?
  4. தற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா?
  5. அமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா? அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா?

இவரைக் குறித்த முந்தைய இடுகை: ரான் பால் – நியூஸ்வீக்
இந்த லிபரடேரியர்களை புரிந்து கொள்ளவே முடியலியே 😀

பதிவு, கருத்து, செய்தி அலசல் – பெப்ரவரி 14

படித்ததில் கவனத்தை ஈர்த்தவை…

1. பராக் ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம்:
Barak Obama - Economic Plan: Campaign Highlights

1. (அ) இந்தத் திட்டத்துக்கும் க்ளின்டனின் பொருளாதாரக் கொள்கைக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது கூட சிரமம். – Clinton, Obama Offer Similar Economic Visions – washingtonpost.com

1. (ஆ) ஹில்லரியின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் மேம்பட்டது என்பதை தவிடுபொடியாக்கும் பராக் ஒபாமா பிரச்சாரக் கமிட்டியின் விளக்கவுரை. – Obama Camp Memo on Clinton’s Health Care Plan :: The Page – by Mark Halperin – TIME

1. (இ) எப்பா… இவ்வளவு வரி ஏற்றமா? இதற்குத்தான் ரான் பால் வல்லவர் என்கிறார்களா! – RealClearPolitics – Articles – Obama’s Gloomy Big-Government Vision: “The Wall Street Journal’s Steve Moore has done the math on Obama’s tax plan. He says it will add up to a 39.6 percent personal income tax, a 52.2 percent combined income and payroll tax, a 28 percent capital-gains tax, a 39.6 percent dividends tax, and a 55 percent estate tax.”

2. குடியரசு கட்சியின் ஹக்கபீ, ஒபாமாவை விட தாராளமாக செலவழிக்கிறாரே என்று வருந்தியிருக்கிறார்கள். பராக் ஒபாமாவின் திட்டம் அறுபது பில்லியன் கோரினால், மைக் ஹக்கபியின் வரைவு 150 பில்லியன்கள் செலவழிக்கும். – Who’s more conservative: Obama or Huckabee? « The Political Inquirer

3. இவ்வளவு கஷ்டப்பட்டு ஹக்கபி திட்டம் தீட்டுவது எதற்காக? தோல்வியடைந்த நிலையிலும் தொடர்ந்து மல்லுக்கட்டுவது ஏன்? நான்கு வருடம் கழித்து நடக்கும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பிரச்சாரத்தையும் பேரையும் பரப்புகிறார். – Huckabee, the Energizer candidate – Los Angeles Times

4. அப்படியானல், இந்தத் தேர்தலில் குடியரசு கட்சிக்கு தோல்வி முகமா? அவர்களே ஆம் என்கிறார்கள். – Why Republicans Will Lose in 2008 by David R. Usher

5. அவ்வளவு எளிதாக கைவிட்டுவிட மாட்டார்கள். ஒபாமா வந்தாலும், க்ளின்டன் போட்டியிட்டாலும் ‘குற்றப்பத்திரிகை’ தயார். வருமான வரி ஏய்ப்பு போன்றவை க்ளின்டனுக்கு தூசி தட்டப்படும். – Top of the Ticket : Los Angeles Times : Past as prologue

5. (அ) ஒபாமா மேல் படிந்துள்ள கறைகளின் தொகுப்பு. – Bloomberg.com: Worldwide: “Besides his relationship with indicted businessman Antoin Rezko, Obama might face Republican criticism over contacts with a former leader of the Weather Underground, a banker with ties to a convicted felon and even his church.”

6. இளமையான வால்டர் மான்டேலை ரொனால்ட் ரேகன் எதிர்த்தபோது சொன்னாராம்: ‘என்னுடைய வயதை வைத்து உன்னுடைய அனுபவமின்மையை சுட்டிக்காட்டி நான் பேசப் போவதில்லை’. மெகெயின் x ஒபாமா: அது போல் இருக்குமா? – Presidential race: You ain’t seen nothing yet – Obama, McCain prepare to go at each other in general election: By John Mercurio

7. ஹில்லரி தோற்பது நிச்சயம். பசியோடு இருக்கும் பூனைகளுக்கு ருசி என்னும் சாதனைப் பட்டியலா வேண்டும்? RealClearPolitics – Articles – Why Hillary Will Lose: “She ran on a message perfect for a Republican primary — experience — and abandoned the key to winning a Democratic primary — the message of change — to Obama.

But too many of her votes come from Hispanics who fear blacks and from older whites who harbor residual racial feelings.”

8. எதுவாக இருந்தால் என்ன? பராக் ஒபாமாவே உகந்தவர்: ஆப்பிரிக்க – அமெரிக்கர்; அயல்நாட்டில் வசித்திருக்கிறார்; நடுப்பெயரில் இஸ்லாமியச் சொல் இருக்கிறது; அமெரிக்காவை சந்தைப்படுத்த பொருத்தமானவர். – Barbara Ehrenreich: Unstoppable Obama – Politics on The Huffington Post: “A Kenyan-Kansan with roots in Indonesia and multiracial Hawaii, he seems to be the perfect answer to the bumper sticker that says, ‘I love you America, but isn’t it time to start seeing other people?’ As conservative commentator Andrew Sullivan has written, Obama’s election could mean the re-branding of America. An anti-war black president with an Arab-sounding name: See, we’re not so bad after all, world!”

கொசுறு:

9. யவனர்களைக் கவர்வது எப்படி? (பாலபாடம் 1): Barack Obama Is Your New Bicycle

10. வெறும் வார்த்தை மட்டுமல்ல… படமும் காட்டுவோம் பராக்கிற்கு: YES WE CAN HAS

ஜனநாயகர்களின் பாதை – கருத்துப்படங்கள்

நன்றி: The Page – by Mark Halperin – TIME: Formulas: 66%-34%

இது ஒபாமாவின் கணக்கு வழக்கு:

Barak Obama - Calculations, Plus, Minus, Positives, Negatives, Fun, Images

இது ஹில்லாரி க்ளின்டனின் வழி:

USA President Primary Elections - Hillary Clinton for Democratic Party

வர்ஜினியா வழிகாட்டுகிறதா?

நேற்றைய வாக்கெடுப்பில் வர்ஜினியா மாகாணத்தில் ஒபாமாவுக்குக் கிடைத்த வாக்குகள் 623,141. குடியரசுக் கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 481,970 தான். ஒபாமாவின் வாக்குகள் எதிர்க்கட்சியின் மொத்த வாக்குகளுக்கும் மேலாக இருக்கிறது.

இரு கட்சிகளின் வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஜனநாயகக் கட்சியின் மொத்த வாக்குகள், குடியரசுக் கட்சியின் மொத்த வாக்குகளின் இரண்டு மடங்கைவிட அதிகம். இது குடியரசுக் கட்சிக்காரர்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தியுள்ளது. வர்ஜினியா மாகாணம் இதுவரை ஜனநாயகக் கட்சிக்கு சார்பாக வாக்களித்ததில்லை.

சென்ற1964-ம் ஆண்டில் லிண்டன் ஜான்ஸன் வென்றபோதுதான் இந்த அதிசயம் நடந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால், swing states என்று சொல்லப்படுகிற மிஸ்ஸூரி, ஐயோவா, நியூ மெக்ஸிகோ மாகாணங்களில் என்ன நடக்கும்?

தென்றல் இதழ்: அமெரிக்க அதிபர் தேர்தல் '08 – சுந்தரேஷ்

தென்றல் (இலவசம்) பதிவு செய்தால், இணையத்தில் படிக்கலாம். முழுக் கட்டுரையில் இருந்து விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

  • மைக் ஹக்கபீ சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சார்ந்த ஒரு மதத்தொண்டர். (இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பாப்டிஸ்ட் சர்ச்சின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கிறிஸ்தவத் தனிநாடு கேட்டு போராடி வருவது தெரிந்திருக்கலாம்). எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற்றவர். அதே சமயம் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களுக்கு மிக ஆதரவானவர்.
  • பல பிரச்சினைகளில் தெளிவாகக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஹிலாரி பராக் ஒபாமாவை விடக் கறுப்பின மக்களுக்கு இணக்கமானவராகத் தெரிகிறார்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் தொழில் துறை, அவுட்சோர்சிங், அணுசக்தித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரிபப்ளிகன் கட்சி இந்தியாவுக்கு பாதகமில்லாத நிலையை எடுத்து வந்துள்ளது. டெமக்ராட்டிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு மறுபரிசீலனைக்கு உள்ளாகலாம்.

ஜனநாயகக் கட்சி – ஹில்லாரி வேண்டும்

Hillary Clinton for Presidentஏன்? உடனடியாகத் தோன்றிய எண்ணங்கள்:

  1. உருப்படியாகப் பேசுகிறார். வெற்று சவடால், புறக் கவர்ச்சி, பிரச்சார பூச்சு இல்லாமல், ஜாலமாக வாய்ப்பந்தலிடாமல் புள்ளிவிவரங்களுடன் ‘என்ன செய்யப் போகிறேன்?’ என்பதை பிட்டு வைக்கிறார் என்பதற்காக…
  2. அனுபவம். சபையறிந்து சமயோசிதமாக விவாதம் நடத்துதல், செனேட்டராக, முன்னாள் ஆளுநர் & ஜனாதிபதி க்ளின்டனின் மனைவியாக, பெண்களின் உள்ளக்கிடக்கைகளை அனுபவித்தவராக இருக்கிறார் என்பதற்காக…
  3. ஒபாமா என்பது மயிற்பீலிகளால் எழுப்பப்படும் மாளிகை. அன்றைய மோனிகா லூயின்ஸ்கி முதல் இன்றைய அயோவா சறுக்கல் போன்ற பல சம்பவங்களில் நெஞ்சுரத்துடன் எதிர்க்கட்சி தாக்குதல்களையும் அவதூறுகளையும் திறனாகத் தாங்கி, மக்களை தன் பக்கம் வசமாக்கக் கூடியவர் ஹில்லரி க்ளின்டன் என்பதற்காக…
  4. ஆளுமை. அழ வேண்டிய நேரத்தில் சிறிதாக நீர்த்துளி இறைத்து, புருஷனை கொம்பு சீவ வேண்டிய நேரத்தில் ஏவி, சொந்தப் பணத்தை கொடுக்க வேண்டிய நேரத்தில் தாரை வார்த்து, தலைமைப் பண்புகள் அனைத்தும் இயல்பாக வாய்க்கப்பெற்றவர் என்பதற்காக…
  5. வயது. ஒபாமாவிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும். மீண்டும் ப்ரைமரி பந்தயத்தில் தம் கட்டலாம். இன்னொரு பெண் வேட்பாளர் கிடைக்கும் அறிகுறி எதுவும் இல்லாத இந்த சூழலில் 61 வயது நிறைந்த ஹில்லரிக்கு தூஸ்ரா வராமல் போகலாம் என்பதற்காக…
  6. அரசியல்வாதி. பொதுஜனத்துடன் இணைந்து பழகி நெஞ்சில் நிறுத்தி நெருங்க வைப்பது இயல்பாக எழும் சமூக ஆர்வத்தின் பங்கு என்றால், வெல்லவேண்டிய நேரத்தில் வெற்றிக்கான உபாயங்களை ட்ரம்ப் சீட்டாய் இறக்கி தேர்ந்த அரசியல் செய்யத் தெரிந்தவர் என்பதற்காக…
  7. ஆண்கள்தான் அலைபாயக் கூடியவர்கள்; பெண்கள் வாக்கு சிந்தாமல், சிதறாமல் வந்து சேரும். ஒபாமாவை துணை ஜனாதிபதிக்கு சேர்த்துக் கொள்ளாவிட்டால் கூட எப்படியும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், குடியரசு கட்சி பக்கம் சுண்டுவிரல் கூட சாய்க்க மாட்டார்கள் என்பதற்காக…
  8. பண்பட்டவர். செனேட்டர் தேர்தலில் நின்றபோது, ‘இறுக்கமாக இருக்கிறார்’ என்னும் குற்றச்சாட்டு எழுந்தவுடன் அச்சங்களை உதறி வாக்காளர்களோடு இயைபாக பழகியவர்; க்ளின்டன் ஆட்சியில் நிறைவேற்ற முடியாத, ஆனால் காலப்போக்கில் அதைவிட மேம்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை முன்வைப்பவர்; இல்லத்தரசியலில் இருந்து இரும்புக் கோட்டை டி.சி. வரை கண்டுணர்ந்து சாதாரணர்களின் அன்றாட வாழ்க்கையை அனுபவித்தவர் என்பதற்காக…
  9. முன்னணி வேட்பாளர். பில் ரிச்சர்ட்சன் போன்ற அடக்கம் இருந்தால் மட்டும் போதாது; சகா ஜோசெப் பிடன் போன்ற அயல் அனுபவம் இருந்தால் மட்டும் பத்தாது. க்ளின்டன் என்னும் The Distinguished Gentleman போன்ற புகழ்பெற்ற பெயர் பெற்று வாஷிங்டனில் மாற்றத்தைக் கொணரக் கூடியவர் என்பதற்காக…

ஹில்லரி க்ளின்டன் வேண்டும்.

தொடர்புடைய இடுகை: ஒபாமா வெல்லட்டும் – வெங்கட்

பத்ரி ♥ பராக் ஒபாமா

முழுப் பதிவும் வாசிக்க

ஜனநாயகக் கட்சி – என்ன நடக்கிறது?

  • அரிசோனோ, கலிஃபோரினியா போன்ற இடங்களில் அதிகம் வாழும் லத்தினோ (ஸ்பானிய அல்லது போர்ச்சுகீசிய மொழி பேசும் மக்கள்; பெரும்பாலும் மத்திய/தென் அமெரிக்காவிலிருந்தோ மெக்சிகோவிலிருந்தோ குடியெர்ந்தவர்கள்) வாக்கு வங்கியைப் பெற காரணமாயிருந்ததாக டாயில் (Patti Solis Doyle) மாற்றப்பட்டிருக்கிறார்.
  • லத்தீனோக்கள் அதிகம் வாழும் டெக்சாஸில், தற்போதைய நிலையில் ஹில்லரி கிளின்டன் முன்னிலை வகித்தாலும், இந்த மாற்றம் சறுக்க வைக்கலாம்.
  • எனினும், ஆப்பிரிக்க – அமெரிக்கரை, தலைமைப் பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஒபாமாவின் கறுப்பின வாக்குகளை சிதறடிக்க முடியும்.
  • மனைவி மிஷேல் வேண்டுகோளுக்கு செவிமடுத்த பராக் ஒபாமா, தன்னுடைய புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயன்று கொண்டிருக்கிறார்.
  • ஜான் எட்வர்ட்ஸின் ஆதரவைப் பெற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். கடந்த வியாழன் அன்று ஹில்லரி சந்தித்திருந்தார்; இன்று ஒபாமாவின் மண்டகப்படி.
  • நாளைய ப்ரைமரிக்குப் பிறகு க்ளின்டனின் பிரதிநிதிகள் எண்ணிக்கையை ஒபாமா எட்டிப்பிடித்து விடுவார் என்கிறார்கள்; எனினும், மார்ச் மாசத்தில் நடக்கும் டெக்சாஸ், ஒஹாயோ மாகாணங்களில் தற்போதைக்கு ஹில்லரி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்று கணித்திருக்கிறார்கள்.
  • குடியரசுக் கட்சியைப் போலவே ஜனநாயகக் கட்சியும், விகிதாச்சார பிரதிநித்துவ கணக்கெல்லாம் போட்டு சமநீதி வழங்காமல், வெற்றி பெற்றவருக்கே அனைத்து பிரதிநிதிகளையும் வழங்கி வந்திருந்தது. 1988 -ல் நடந்த ஜெஸ்ஸி ஜாக்ஸன் x மைக்கேல் டுகாகீஸ் போட்டிக்கு பிறகே இந்த முறை, தற்போதுள்ள நடைமுறைக்கு மாறியிருக்கிறது.
  • எம்.எல்.ஏ/எம்.பி. போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கட்சி பெருசுகள் நிறைந்த பெரிய பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் சூப்பர் டெலகேட்ஸ் கையில்தான் இப்போதைக்கு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
  • பெரிய பிரதிநிதிகளைக் கவர்வதிற்கான போட்டியில் ‘யார் மெக்கெயினுக்கு சரியான போட்டி’ என்று நிரூபிப்பதில் இரு வேட்பாளர்களும் கவனம் செலுத்துகிறார்கள். ‘நான் இதுவரை சந்தித்த அளவு அவதூறுகளை ஒபாமா அனுபவித்ததில்லை’ என்று ஹில்லாரியும்; ‘என் அளவுக்கு பணந்திரட்டும் சக்தியும், தெற்கு மாகாணங்களில் புதிய வாக்குகளையும் சேகரித்து வெல்லக்கூடியவர் எவருமில்லை’ என்று ஒபாமாவும் கட்சிப் பெரியவர்களிடம் நல்ல பெயர் எடுக்க முயல்கிறார்கள்.
  • கொசுறு: முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டனையும் ஜிம்மி கார்டரையும், சிறந்த ‘பேசும் புத்தகத்திற்கான’ க்ராமிப் போட்டியில் ஒபாமா வென்று, முதல் பரிசைப் பெற்றுள்ளார்.

பாலாஜி