நான்கு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.
சூதாட்டத்தை இன்னும் அதிகரிக்கலாமா?
Question 1 would allow the Gaming Commission to issue an additional slots license.
இன்னும் துவக்க வேண்டிய சூதாட்ட கேளிக்கை மையங்களையே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மேலும் ஒன்றா?
முதலில் துவக்க வேண்டியதை துவக்கி நடத்த ஆரம்பிக்கட்டும். அவற்றில் எவ்வளவு காலப்போக்கில் பிழைத்து, பிழைப்பை நடத்துகின்றன எனப் பார்ப்போம். அவற்றினால் எந்த மாதிரி பின் விளைவுகள் வருகிறது என ஆராய்வோம். அதன் பின் அடுத்ததைத் துவக்குவோம்
அரசாங்க செலவில் நடக்கும் தனியார் கல்விக்கூடங்களை அதிகரிக்கலாமா?
Question 2 would authorize the approval of up to 12 new charter schools or enrollment expansions in existing charter schools by the state Board of Elementary and Secondary Education per year.
ஒவ்வொரு வருடமும் பன்னிரெண்டு புது பள்ளிக்கூடங்கள் தனியார் கையில் தரப்படும். நாளடைவில் மொத்த மாஸசூஸட்ஸ் மாநிலப் பள்ளிகளுமே தனியாரிடம் கொடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து, எந்த மாதிரி பரீட்சைகளை வைத்தால் மாணவர்கள் தேர்வு பெறுவார்கள் என்பதைப் பொருத்து கேள்விகளை எளிமையாக்குவது வரை எல்லாமே மாறும்.
சோற்றுக்கு வளர்க்கப்படும் மாமிச உணவாகும் மிருகங்களைக் கூண்டில் வைக்காமல் திறந்தவெளியில் வளர்க்க வேண்டுமா?
Question 3 would prohibit certain methods of farm animal containment.
நமது தட்டிற்கு வரப்போகும் இறைச்சிகளை எப்படி வளர்க்க வேண்டும்? அவை கால் நீட்டிப் படுத்துக் கொள்ள இடம் தர வேண்டுமா? அல்லது இரண்டே இரண்டு டாலருக்கு சுவைமிக்க மாமிசம் கிடைக்க வேண்டுமா? நிமிர்ந்த நடையும், திரும்பித் திரும்பி உலகத்தைச் சுற்றும் தனிமனித உரிமைகளை பன்றிக்கும் கன்றுக்குட்டிக்கும் தர வேண்டுமா? அவை அவ்வாறு சுதந்திரமாக வாழ்ந்தால்தான் செத்த பிறகு சுவைக்குமா?
இந்த கருத்துக் கணிப்பை ரோட்டில் சுதந்திரமாக அலைந்து திரியும் நாய்களையும் பூனைகளையும் பொறி வைத்து, தேடிப் பிடித்து கருணைக் கொலை செய்து தீர்த்து கட்டும் ஜீவகாருண்ய சங்கம் ஆதரிக்கிறது.
சிறிய அளவில் போதைப் பொருளை உட்கொள்ள வயதுவந்தோரை அனுமதிக்கலாமா?
Question 4 would legalize recreational marijuana for individuals at least 21 years old.
எங்கே பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. வீட்டிற்கே வந்து மாரிவானா (marijuana – மரிஹுவானா என்ற போதைப்பொருள்) கொடுக்கும் அமைப்புகளை நீங்கள் லியனார்டோ நடித்த ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ போன்ற படங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் இது குற்றம் என்பதால் காவல்துறைக்குத்தான் ரோதனை. இதைவிட மோசமான போதையான சாராயம், தண்ணீர் ஆறாக ஓடி அமெரிக்காவிலும் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. பியர் வாங்கினால், மது உட்கொண்டால் – அரசாங்கத்திற்கு வரி மூலம் வருமானம் கிடைக்கிறது. அதே போல் கஞ்சா வாங்கினாலும் விற்பனை வரி மூலம் பள்ளிக்கூடங்களைப் பெருக்கலாம்; காவல்துறையை மக்களை பாதுகாக்க அதிகரிக்கலாம்.