அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சொட்டமயார் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். புத்தக வெளியீட்டை ஒட்டி எல்லா ஊடகங்களிலும் பேட்டியும் நூல் அறிமுகமும் கிடைத்தது.
சக உச்சநீதிமன்ற நீதிபதியான கிளாரென்ஸ் தாமஸ் கருப்பர். சோனியா ஸ்பானிஷ் மொழி பேசுபவர். இருவருமே சிறுபான்மையினர். அஃபர்மேடிவ் ஆக்ஷன் எனப்படும் இடஒதுக்கீட்டினால் பயன் பெற்றவர்கள்.
ப்ரின்ஸ்டனில் படித்த காலத்தில் விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள். அங்கே மேயர் இவருக்கு அறிமுகமாகிறார். முதன்முறையாக பார்த்தவுடன் கேட்ட கேள்வி: “நீ ஸ்பானிஷ் மொழி பேசுவதால்தான் உனக்கு சீட் கொடுத்தார்களா?”
பொறுமையாக பதில் சொல்கிறார். என்னுடைய SAT மதிப்பெண் இத்தனை. நான் சேவை செய்த நிறுவனங்கள் இவை. நான் பள்ளியில் வகித்த பொறுப்புகள் என்ன என்றெல்லாம் விளக்குகிறார். அவரின் பதில், “நானும் ஆயிரம் பேரிடம் இதே கேள்வியை இப்படி கேட்டு அவமானம் செய்ய நினைத்திருக்கிறேன். நீதான் முதன் முதலாக உன்னால்தான் நீ முன்னேறினாய் என்று விளக்கி இருக்கிறாய்”.