எந்திரனும் நானும்


ரொம்ப நாள் கழித்து ‘மச்சீ’ என்றழைக்கும் உரிமையை கல்லூரி செஷன்ஸ் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்த தோழர் அழைத்திருந்தார்.

“எந்திரன் பார்த்தாச்சாடா?”

“இனிமேல் ‘பாபா’ குறித்த பயம் போயாச்சு. அப்படியே ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு பல்லவி பாடும் ஷாஜி பிள்ளையாண்டர்களுக்கும் புதுசா ஒண்ணு சேர்ந்துகிடுச்சு.”

எந்திரன் பிரச்சாரங்களை பட்டியல் போட்டால்:

  1. சன் டிவி அராஜகம்: மாறன் சகோதரர்களின் அசுர பலம்
  2. ஐஸ்வர்யா ராஜ் சிலாகிப்பு: எப்பொழுது, எங்கே முத்தம்
  3. சூப்பர் ஸ்டார் பன்ச்: ரோபோ நடிக்கும் அற்புதம்
  4. ஷங்கர் அரசியல்: பெண்ணியம் முதல் காறியுமிழும் புணர்ச்சி
  5. சுஜாதா சுட்டார்: அறிபுனை கதை அணிவகுப்பு ஜெராக்ஸ்
  6. ரெஹ்மான் நாதம்: டமார மொழி
  7. பெரும் பொருட்செலவு: சிறுவியாபாரிகளை நசுக்கும் பட்ஜெட்
  8. ரசிகரடிப்பொடி மனநிலை: பா.ம.க., பாஜக + தமிழக அரசியல்

இப்படியாக தமிழிலிருந்தே தமிழுக்கு காப்பியடிக்கும் விமர்சகச் சூழலில் எந்திரமயமான பயம் தொற்றிக் கொண்டது.

  1. சன் டிவி ரோபாட்: சீரியலுக்கு வசனம் முதல் சீரிய சிந்தனை வரை
  2. ஐஸ்வர்யா ராஜ் எந்திரம்: நாட்டுக் கட்டை
  3. சூப்பர் ஸ்டார் சக்கரம்: தன்னைத் தானே எறித்துக் கொள்ளும் சூரியன்
  4. ஷங்கர் பொறி: பணம் செய்யும் மெஷின்
  5. சுஜாதா சூத்திரம்: ஏற்கனவே தமிழ் எழுத்துலகத்தை ஆக்கிரமிக்கும் எழுத்து சுனாமி
  6. ரெஹ்மான் கருவி: இயந்திரமே இயந்திரத்தை இயற்றும் மீட்டும்
  7. பொருட்செலவு விறிசு: என் இனிய இயந்திராவிற்கு அடுத்து ஜீனோ
  8. ரசிகரடிப்பொடி உபகரணம்: இது மட்டும் ரோபோ அல்ல

எந்திரம் பத்திரம். கூடிய சீக்கிரமே எந்திரக் குழந்தையும் ‘இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் எந்திரனின் வாரிசு’ என்று வெள்ளித்திரையில் வலம் வரும்.

சற்றே தொடர்பிருந்திருக்கக் கூடிய குரல் பதிவு: Conquering A Fear Of Robots : NPR

3 responses to “எந்திரனும் நானும்

  1. மீனாட்சி நாச்சியார்'s avatar மீனாட்சி நாச்சியார்

    Onnum Puriyala…

  2. நான் படித்த ‘எந்திரன்’ திரைப்படம் குறித்த வலைப்பதிவு விமர்சனங்கள் இயந்திரமயமாக இருப்பதையும், தற்கால உலகம் இயந்திரமயமாக இயங்குவதையும், ‘ரோபோ’ திரைப்படத்தை முன்னிறுத்தி ஒப்பிட்டு பார்க்கும் முயற்சி.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.