சன் டிவியின் திருவிளையாடலை விட இராமாயணம் சிறுவர்களைக் கவரும் விதமாக இருக்கிறது. மாதுரி தீட்சிட் & சல்மான் கான் மணம் செய்யும் ‘ஹம் ஆப் கே ஹை கௌன்’ போல் ஆற அமர கல்யாணத்தை சொல்லாததால் இருக்கலாம். தினமும் திருவிளையாடல் வந்து அலுப்பூட்டுவதாலும் இருக்கலாம்.
‘இராமருக்கு அப்புறம் சீதாவுடைய மகள்தான் அரசேறுவாள் என்பதாலா?’
‘அடுத்து என்ன நடக்கும்’ என்று பின் கதை சுருக்கமாக தங்கிலீஷில் இராமாயணத்தை விவரித்த போதுதான் மகளிடமிருந்து அந்தக் கேள்வி வந்தது. பரதனுக்கு முடிசூட்டுமாறு ஏன் கைகேயி உசுப்பேற்றப்பட்டாள் என்பதை பரம்பரை வாரிசுகளை கொண்டு விளக்கும்போது கேள்வி எழுப்பினாள். லவ குசா எல்லாம் தொடாமல், மையமாய் தலையை ஆட்டி வைத்தேன்.
நன்றி: Adam@Home
மனைவியிடம் எத்தனையோ முறை சொல்லியாகி விட்டது. ஆண்கள் முகத்தைப் பார்ப்பதில்லை; முடியையும் பார்ப்பதில்லை என்று. அரக்கர்களின் உயிர்கள் எங்கோ ஏழு கடல் தாண்டி இருக்கும் புறாவின் கண்ணில் இருப்பதாக அம்புலிமாமா கதை சொல்லும். உண்மைதான். புருவத்தை நெறிமுறை செய்தபிறகோ, புதிய காதணியைக் கண்டு கொள்வதிலோ, சமையலில் வித்தியாசம் காட்டியதையோ கண்டுகொள்வதில்தான் தாம்பத்தியத்தின் நாடி இருக்கிறது.
மேற்கண்ட கார்ட்டூன் போல் துப்புகளை சேமித்து ‘கணவன்மாருக்கான டம்மீஸ்’ புத்தகம் தொகுத்தால் ஐ.பி.எல்., என்.பி.ஏ., ரசிகர்கள் வாழ்த்துவார்கள்.
தன்னைச் சுற்றி விரிந்து அலையடிக்கும் வாழ்க்கையிலிருந்து சில துளிகளை மட்டுமே அள்ள முடியக்கூடியவன் மனிதன். ஆகவே முடிவில்லாத மர்மங்களின் நடுவே அவன் வாழ்கிறான். அவனுக்கு கிடைக்கும் பிரபஞ்ச அனுபவம் என்பது அந்த மர்மங்களில் இடறி விழுவதேயாகும். அப்போது அவன் ஒரு அதிர்ச்சியையும் கணநேர மனவிரிவையும் அடைகிறான்.அந்தத் தரிசனத்தைக் கொண்டு அவன் ஒரு வாழ்க்கை நோக்கை உருவாக்கிக் கொள்கிறான். அது அவன் வரைக்கும் சரியானது. அந்த எல்லைக்கு அப்பால் அதற்குப் பொருள் ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் மனிதன் இயற்கையின் பெருவிதிகளினால் சதுரங்கக் காயாக ஆடப்பட்டு அதைப் புரிந்துகொள்ள தன் தரிசனத்தால் ஓயாது முயன்றபடி வாழ்ந்து மெல்ல மெல்ல மறைகிறான். – ஜெயமோகன்: “சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்“
திங்கள் அன்று இரண்டு சோக செய்திகள். முதலில் நண்பரிடமிருந்து சினிமாவில் மட்டுமே பார்க்கும் வியாதி வந்திருப்பதைத் தாங்கி வந்த மின்னஞ்சல். வலைப்பதியவே மனம் ஒப்பவில்லை. ட்விட்டர் மட்டும் செய்து வைத்தேன்.
மாலையில் வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்பவருக்கு ட்யூபில் வந்திருந்த கட்டி குறித்து அறிந்ததும் வாழ்வின் நிலையாமை எல்லாம் எட்டிப் பார்த்தது.
என்னால் ஆனது… அலுவலில் தரும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்தேன்.
அலுவலில் சீனாவில் நடந்த நிலநடுக்கத்துக்கு நிதி சேகரித்தார்கள். எவ்வளவு தானம் கொடுக்கிறோமோ, அதை இரட்டிப்பாக்கினார்கள். 50,000+ பலி. தெரிந்தவருக்கு என்றால் மனம் பதை பதைக்கிறது. எங்கோ ஒருவர் என்பதால் எண்ணிக்கையாக போய்விட்டது.
பர்மா சூறாவளி நிவாரணம் குறித்து அலுவலில் மனிதவளத் துறையினரிடம் விசாரித்தேன். எழுபத்தெட்டாயிரமோ, 150,000-ஓ மறைந்த மியான்மர் வாசிகளுக்கு எதுவும் உண்டியல் குலுக்கவில்லையா என்று. நம் நிறுவனத்தில் இருந்து எவரும் வேலையும் செய்யவில்லை; தொண்டு நிறுவனங்களும் தெரியாது என்று தோள்குலுக்கிவிட்டார்கள்.
நாள்தோறும் தனிமடலிலும், பொதுவிலும் அண்ணா பல்கலை சார்ந்த பொறியியல் கல்லூரிகளின் தரப்பட்டியல் குறித்து விசாரிக்கிறார்கள்.
அமெரிக்காவில் கின்டர்கார்டன் படிப்பதற்கு எது #157வது சிறந்த பள்ளி என்பதற்கு கூட யுஎஸ் நியூஸ் & வோர்ல்ட் ரிப்பொர்ட், நியுஸ்வீக், டைம் என்று பல பத்திரிகைகள் வரிசைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் ‘கனவுக்கன்னி 2007’ நடத்தும் சன் டிவியும் சரி. ‘அழகிரியா/ஸ்டாலினா/உதயநிதியா?’ என்று கருத்துக்கணிப்பு நடத்தும் தினகரனும் சரி… யாரும் பட்டியல் போடுவதில்லை.
- தேர்ச்சி சதவீதம் என்ன?
- வளாக வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது?
- தங்கும் வசதிகள் எப்படி?
- சோதனைச்சாலைகள், பயிற்சிக்களங்கள் எங்ஙனம் இருக்கிறது?
- பலரும் அங்கேயே தங்கிப் படிக்கிறார்களா, மாநகரத்தில் இருந்து வந்து போகிறார்களா?
- எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது?
- படித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்? எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது?
- எந்தப் படிப்புக்கு எந்தக் கல்லூரி உகந்தது?
- அங்கே படிக்கும் மாணவர்களுடன் சந்திப்பு, நிறைகுறை பேட்டிகள்
- ரேகிங், கடுமையான நடைமுறை, கண்டிப்புகள், வசதிகள் குறித்த அலசல்
- நிர்வாகமே கடைசி வருட தொழிற்சாலை பயிற்சிக்கு உதவுகிறதா?
- செலவு எவ்வளவு?
தேர்தல் காலத்தில் குமுதமும் விகடனும் முண்டியடித்து, ஒவ்வொரு ஊராக சென்று வாக்கெடுப்பு நடத்தி, லயோலா கல்லூரி கணிப்பில் இன்னார் வெற்றி; என்டிடிவி நடத்திய வோட்டுப்பதிவில் இந்தக் கூட்டணி முன்னணி என்று பறைசாற்றுவது போல் இந்த மார்க்கெடிங் ரிசர்ச்சும் செய்தால், பலருக்கு பயனாக இருக்கும். டிஆர்பி ரேட்டிங் பிராப்திரஸ்து என்று வாழ்த்துவார்கள்.
இந்தப் பதிவில் கூட தசாவதாரம் என்று முணுமுணுக்காவிட்டால், கூகிள் தெய்வம் சீந்தாது என்பது போல் திரைக்கடியில் தெரியும் ஸ்க்ராலில் ஷாரூக்கானை நாயாக்கிய செய்தியை இட்டு நிரப்பி, மாணவர்களுக்கும் தெளிவு பிறந்தால் மகிழ்ச்சி.
நன்றி: Finding religion – Life – The Phoenix
வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர்.
போர்ஹேவைக் (Jorge Luis Borges) குறித்த பிரம்மராஜனும் சன்னாசியும் சொல்வது போன்ற வாழ்வின் விவரிப்பை பாவண்ணன் தொடர்ந்து நிறைவேற்றுகிறார். ‘If I only had a little humility, I’d be perfect.’ என்னும் டெட் டர்னர் போல் தன்னடக்கமின்றி சொல்லவேண்டுமானால், இப்படி மேற்கோள் காட்டி காட்டியே போர்ஹேயாகும் எண்ணம்தான் இந்த மாதிரி பதிவுகளின் தோற்றுவாய்.
What helped him overcome the block that had prevented him, almost until he was forty, from moving from essays to narrative prose was to pretend that the book he wanted to write had already been written, written by someone else, by an unknown invented author, an author from another language, another culture, and then to describe, summarize or review that hypothetical book.Part of the legend that surrounds Borges is the anecdote that the first, extraordinary story that he wrote using this formula, ‘The Approach to Almotaism’, when it first appeared in the journal Sur, convinced readers that it was a genuine review of a book by an Indian author – Italo Calvino (Why Read the Classics)
பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள் – பாவண்ணன்: தமிழில் இறையடியான். காவ்யா பதிப்பகம்
அன்பை நிராகரிக்கத் தூண்டியது எது? புறக்கணிப்பின் வலியால் உள்ளூர மனம் நொந்திருந்தாலும் அவருடைய கோபத்திலிருந்து மீள்வதற்காக புனைந்துரைத்த ஒரு சின்னப் பொய்யால் பூபாலனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்க பார்வதியைத் தூண்டிய உணர்வு எத்தகையது? நெருங்கிப் பழகியபிறகும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ஏன் இப்படி நிராகரிக்கிறார்கள்? நெருக்கத்தின் அனுபவம் ஏன் நிராகரித்தலைத் தடுப்பதில்லை? இந்த உறவு ஏன் இப்படி புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது?
:::
ஆண்பெண் உறவு போலவே, இந்தியமண்ணில் சாதி அபிமானமும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரும்புதிர். எல்லாச் சாதியினரிடையேயும் மாற்றுச் சாதியில் தனக்குப் பிடித்தமான இணையைத் தேடிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. சாதி என்னும் பேரமைப்பு அத்தகு நிகழ்ச்சிகளை தற்செயல்கள் என்றும் பிறழ்வுகள் என்றும் அடையாளமிட்டு சில காலம் தனித்துவைக்கிறது. பிறகு மெல்லமெல்ல தன் மையத்தைநோக்கி இழுத்துக்கொள்கிறது. சாதிக்கலப்பு என்பதை சாதிப் பேரமைப்பின் மையம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நிகழாதவரை அது அனுமதிக்கப்படாத ஒரு விதி. நிகழ்ந்தபிறகு, இணைத்துக்கொள்ளத்தக்க ஒரு விதிவிலக்கு. அவ்வளவுதான்.
::
மீண்டும் இந்த உறவும் வாழ்வும் ஏன் இப்படி புதிராக இருக்கிறது என்னும் வினா நம்மை அசைக்கிறது.













There is an organisation called NACC (?) and they assess colleges and universities. For some courses (MBA) many magazines rank and
publish lists of institutions.There are
methodological problems and information
may not be easy to obtain.But it is not
impossible and perhaps the will is lacking
or media prefers not to rub the
higher education ‘வள்ளல்கள்’
on their wrong side.
—NACC (?) and they assess colleges and universities—-
இணையதள முகவரி கிடைக்குமா?
—-media prefers not to rub the
higher education ‘வள்ளல்கள்’
on their wrong side.—
இந்தியா டுடே மாதிரி யாராவது செய்தால் புண்ணியமாகப் போகும். (கல்லூரிகளும் ஒரு அத்து இருக்கும் 😉
http://naacindia.org/
The website has more details,
perhaps more than what you want to
know but did not know how to ask 🙂
Very very informative site indeed Ravi!!!
Please refer Accredited Colleges in Tamil Nadu – Detailed reports
Accredited Universities
The irony (or call it tragedy if you want) is
not many in universities/collges know
about this and hence parents and students
grope in the dark. The tamil media as far as
i know never bothers to use these info.
in public domain.