கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்


cover_newyorker_190.jpgடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.

க்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Americas | Obama aide quits in ‘monster’ row: “An adviser to Barack Obama has resigned after a Scottish newspaper quoted her calling rival US Democratic candidate Hillary Clinton ‘a monster’.”

ஒபாமாவின் இந்த மாதிரி தூஷணைகளுக்கு ‘முடிவல்ல.. ஆரம்பம்’ என்கிறது நியூஸ்வீக்: Obama’s Next Moves | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “Obama’s aides are more than ready to turn their half-hearted criticism into a full-blown attack on the Clintons. Among the targets on the Obama campaign’s list: the Clintons’ tax returns, Bill Clinton’s international business relationships and the secret donors to the Clinton foundation.”

ஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.

“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு: Confronting the Kitchen Sink – New York Times: “if a choice on national security had to be made today between Senators Obama and McCain, voters — according to Mrs. Clinton’s logic — should choose Senator McCain. That is a low thing for a Democratic presidential candidate to do to a rival in a party primary.”

நாப்டா விவகாரத்தில் க்ளின்டனும் ஒபாமாவும் அடிக்கும் பல்டிகளுக்கு குடியரசு நாயகரான ஜார்ஜ் புஷ்ஷும், ஜான் மெகெயினுமே தேவலாம் போல என்று சர்வதேச ஊடகங்கள் அபிப்ராயிப்பதாக பரீத் ஜகாரியா தெரிவித்துள்ளார்: Zakaria: Dems vs. Free Trade | Newsweek Voices – Fareed Zakaria | Newsweek.com: “Listening to the Democrats on trade ‘is enough to send jitters down the spine of most in India,’ says the Times Now TV channel in New Delhi. The Canadian press has shared in the global swoon for Obama, but is now beginning to ask questions. ‘What he is actually saying—and how it might affect Canada—may come as a surprise to otherwise devout Barack boosters,’ writes Greg Weston in the Edmonton Sun.”

என்னவாக இருந்தாலும் ஹில்லரி கிளிண்டன் இடதுசாரி போல் பேசினாலும், ‘பழைய பாட்டில்; பழங்கஞ்சிதானே’ என்று ஒபாமா பேச்சுக்களின் சாத்தியக்கூறுகளை ராபர்ட் ரீச் முன்வைக்கிறார்: Opinions: ‘Idealism, not leftism’ by Robert Reich | Prospect Magazine March 2008 issue 144: “She wants universal healthcare, but won’t support a ‘single-payer’ plan like Britain’s NHS, which is the best way to control medical costs. She won’t commit to raising taxes on the rich to finance social programmes, except for rolling back the Bush tax cuts.”

இங்கிலாந்தில் இட ஒதுக்கீடு குழுவின் பொறுப்பில் இருக்கும் ஆப்பிரிக்க – அமெரிக்கரின் புத்தகம் சார்ந்த அலசல்: Opinions: ‘Healing postponed’ by Trevor Phillips | Prospect Magazine March 2008 issue 144: “For all his lofty talk of national unity, Obama may actually put back the arrival of a post-racial America”

சிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.

இந்த வாதத்தை தற்போதைய வோட்டு கணக்கெடுப்புகளை வைத்து, வாக்காளர்களின் பின்னணியைக் கொண்டு அலசி, மறுத்துப் பேசும் ஆராய்ச்சி: RealClearPolitics – HorseRaceBlog – Demography and the Democratic Race: “It is a matter of income. Whites who make more money tend to support Obama. Whites who make less money tend to support Clinton.”

ஆனால்… இனம் இன்னும் முக்கியம்?

na-ap652a_race_20080305201213.gif

நன்றி: Race May Be Playing Role For Working-Class Voters – WSJ.com: “White working-class voters tend to be more conservative in terms of social beliefs and that is going to spill over.”

ப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.

இப்போதைக்கு இழுபறி: Florida, Michigan revotes come down to money – CNN.com: “Florida revote could cost $20 million; Michigan’s could cost $10 million”

ஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: Obama trounces Clinton in Wyoming – Los Angeles Times: “His win after her victories in Ohio and Texas is another promise of a continued pitched battle for delegates.”

இவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…

ஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.

ஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: McCain Asked About Kerrys V.P. Offer – The Caucus – Politics – New York Times Blog: “when Mr. McCain was asked about the conversation – and why he said in an interview with The New York Times in May 2004 that he had not even had a casual conversation with Mr. Kerry on the topic – Mr. McCain displayed some of the temper that he has largely kept under control in this campaign.”

கட்டாங்கடைசியாக, செல்வராஜ் (R.Selvaraj)

ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

3 responses to “கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

  1. // ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.//

    என்னுடய மனதில் இந்த கருத்தே இருக்கிறது. நிஜமான ஆதரவா அல்லது மிகையா என்று தெரியவில்லை. தேசிய அளவில் ஓபாமா முன்னனியில் இருந்தாலும் பெரிய மாநிலங்களில் எல்லாம் ஹில்லரியே. என் மனத்தில் “BRADLEY EFFECT” ல் ஓபாமா ஆதரவு , மிகையாத் தோன்றுகிறது. விவரமாக அலசவேண்டும்.

  2. ப்ராட்லி எஃபெக்ட் போலவே இன்னொன்றையும் நான் பார்த்து வருகிறேன்.

    ஒபாமா ஜனநாயக வேட்பாளராகப் போட்டியிட்டு, தோற்றுவிட்டால், ‘கறுப்பர் என்பதால் வெற்றிவாய்ப்பை தவறவிட்டார்… இந்தத் தேர்தலிலேயே கறுப்பரால் வெல்ல முடியாவிட்டால், இனி எந்தத் தேர்தலில் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களால் வெல்ல முடியும்?’ என்னும் எண்ணம் எழுமோ என்னும் அச்சத்தை சிலர் வெளிப்படுத்தினார்கள்.

  3. இந்த அளவு ஒரு கறுப்பர் வந்தது ஒரு ஆச்சர்யமே! ஆனால் காகஸ் போன்ற வெளிப்படயாக வாக்குகள் தெரிந்தால் அங்கெல்லாம் ஒபாமா நல்ல வெற்றி பெறுகிறார்.( – ve “BRADLEY EFFECT”). வாக்குகள் வெளிப்படயாக தெரியாத பிரைமரியில் கஷ்டப்பட்டு வெற்றி/ தோல்வி!. கிட்டதட்ட ஒரு நாளில் நடந்த டெக்ஸாஸ் பிரைமரி/ காகஸ் முடிவுகளில் உள்ள வித்தியாசம் உள்ளங்கை நெல்லிகனியாக தெரிகிறது.
    தென் மாநிலங்களில் டெமாக்ரட் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் கறுப்பர்களே, ஆகையால் ஒபாமாவுக்கு அங்கு பிரைமரி/ காகஸ் வெற்றி பெறுவது பெரிய காரியம் இல்லை.
    நவம்பரில் ஒரு தென் மாநிலங்களில் கூட வெற்றி பெற சான்ஸ் இல்லை.

    இந்த முறை நான்கு மாநிலங்கள் வெற்றி/ தோல்வி நிர்ணயிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணிப்பு–Battle ground states of Florida, Arkansas, New Mexico, Ohio.

    ஹில்லரி கிளிண்டன் இந்த முறை இரண்டு தென் மானிலங்களில் வெற்றி பெறக்கூடும்- Florida and Arkansas. அது தவிர ஓஹையொவிலும் வெற்றி பெறக்கூடும்.
    ஹில்லரி கிளிண்டன் வழக்கமாக ஜெயிக்கும் டெமாக்ரட் இடங்கள்+ இது போன்ற Battle ground states என்றால் வெற்றி.
    ஹில்லரி கிளிண்டன் கறுப்பர்கள் வாக்கை வாங்குவது அவ்வளவு சிரமம் என்று தோன்றவில்லை. ஓபாமவுக்கு ஹிஸ்பானிஸ் வாக்கு வாங்குவது கடினமான காரியம். இதனால்தான் ஹில்லரி கிளிண்டன் ஒபாமாவை விட வெற்றி பெற Probability அதிகம் என எண்ணுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.