ஆரோக்கியம் | பாரா-பேப்பர்


  • எந்தக் கீரையானாலும் சரி. மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, அரை, முளை, முருங்கை என்று கிடைத்ததையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடலாம். ஒரு வேளை சோற்றுக்கு பதில் கீரை மட்டுமே சாப்பிட்டால்கூடத் தவறில்லை.
  • எதைச் சாப்பிடலாம், எது கூடாது என்பது ஒரு விஷயமே இல்லை. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
  • உடல் பருமனுக்கு வித்திடும் உணவுப்பொருள்களை மட்டும் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிக்க உணவுகளை நிறைய உட்கொள்வதன்மூலம் பசியின்றி இருக்கவேண்டியதுதான் டயட்டின் முதல் விதி.
  • மாறாக வயிற்றை காலியாகவே எப்போதும் வைத்துக்கொள்வதன்மூலம் வாயுத்தொல்லைக்கும் வேறு பல பக்கவிளைவுகளுக்கும் ஆட்பட நேரிடும்.
  • டயட்டில் இருப்பவர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொள்ளக்கூடாது
  • தவறிக்கூட எண்ணெய் ஐட்டங்களைத் தொடாதீர்.

முழுவதும் வாசிக்க: ஆரோக்கியம் | பாரா-பேப்பர்

முந்தைய பதிவு: உடல் பருமன் « Snap Judgment

இன்னும் சில துப்புகள்:

  1. தங்களின் தட்டை மூன்றாக வகிர்ந்து கொள்ளுங்கள். புரதம் நிறைந்த சாப்பாடு ஒரு பாகம்; உள்ளங்கை சைஸைத் தாண்டாமல் இருக்கட்டும்; சிக்கன், மஞ்சக்கரு நீக்கிய முட்டை, தானிய வகை… ஏதாவது; பாக்கி இரு பாகத்தில் காய்கறி + பழம்; எண்ணெய் பேக்கு என்றால் ஆலிவ் ஆயிலில் வதக்கிய வெண்டைக்காய் கறி மாதிரி சிலது மட்டும் ஒக்கே!
  2. இரவில் லேட்டாக சாப்பிடாதீர்கள். சாயங்காலம் ஏழு மணிக்குள் சாப்பிட்டு விட்டு, ஒன்பது மணிக்கு மேல் தூங்கும் வரை கொறிக்காமல் இருக்கவும். காலையில் எழுந்தவுடன் கபகபன்னு பசி வயித்தைக் கிள்ளணும். நான்கு மணி நேரத்துக்கொருமுறை மினி மீல்ஸ் – தியேட்டர் போல் 7 மணி காலை; 11 மணி பகல் காட்சி; மூன்று மணி மேட்டினி; கடைசியாக 7 மணி இரவு.
  3. காலையில் 25 தோப்புக்கரணம் – இருமுறை; காரி பார்க்கிங் என்றால் தள்ளி நிறுத்துவது; என்னை மாதிரி ட்ரெயின்/பஸ் பயணம் என்றால், முந்தின நிறுத்தத்திலேயே இறங்கி, லொங்கு லொங்கென்று விறுவிறு ஓட்ட நடை. ஒரு மணி நேரத்துக்கொருமுறை அலுவலில் ரவுண்ட்ஸ் செல்வது; நிறைய தண்ணீர் அருந்திக் கொண்டே இருப்பது (வறுமையின் நிறம் சிவப்பு கமல் போல் 😦
  4. ஆயிரம் டாலருக்கு சோபா வாங்கிப் போட்டிருப்பது அடுத்தவருக்காக. உங்களுக்கு சொகுசாக உட்கார்ந்து கொள்ள அல்ல. நிமிர்ந்த தோள்களுடன் கூன் விழாத posture தொப்பையை நீக்குவதற்கு அவசியம். முதுகு வலி வராத மாதிரி ஆனால் அனந்த சயன போஸ் கொடுக்காமல் உட்காருங்கள்.

கடைசியாக பாரா பன்ச்:

இது ஒரு புறமிருக்க, என்னுடைய எடைக்குறைப்புப் பிரதாபங்களை அடுத்தவருக்கு விளக்குவதில் விரைவில் பெரிய ஆர்வம் வந்துவிட்டது. என்னைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட கதறி ஓடும் மக்கள்கூட்டம் அதிகரித்தது. மாட்னா மவன செத்த. டயட் பத்தி பேசியே சாவடிச்சிடுவான்.

6 responses to “ஆரோக்கியம் | பாரா-பேப்பர்

  1. ”ஒரு மணி நேரத்துக்கொருமுறை அலுவலில் ரவுண்ட்ஸ் செல்வது; நிறைய தண்ணீர் அருந்திக் கொண்டே இருப்பது (வறுமையின் நிறம் சிவப்பு கமல் போல்’

    ஒரு மணி நேரத்துக்கொருமுறை அலுவலில் ரவுண்ட்ஸ் செல்வது – இப்படி செய்தால் நிஜமாகவே வறுமையின் நிறப்பு கமல் மாதிரி ( வேலையில்லாமல் திரிந்து தாடி வளர்த்து) ஆகி விட வாய்ப்பிருக்கிறது, உடல் மெலியலாம் ஆனால் ஸ்ரீதேவி போன்ற அழகான காதலி கிடைப்பாள் என்று உறுதி சொல்ல முடியாது 🙂

  2. பத்மா அர்விந்த்

    இங்கே http://www.mypyramid.gov/pyramid/index.html போனால் உங்களுக்கான திட்டத்தை தயரித்துக் கொள்ள முடியும். இங்கே http://www.mypyramid.gov/kids/kids_game.html குழந்தைகளுக்கான ஒரு விளையாட்டு இருக்கிறது. அதன் மூலம் எந்த உணவில் புரதம் இருக்கிறது, எதில் நார்ச்சத்து இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
    இங்கே சொன்ன மாதிரி பசிக்கும் போது மட்டும் சாப்பிட்டால் கூட போதும் , ஆசைக்காகவும் சுவைக்கான tempatation காகவும் இல்லாமல் http://reallogic.org/thenthuli/?p=227.

  3. —ஸ்ரீதேவி போன்ற அழகான காதலி கிடைப்பாள் —

    உடல் பெருத்து அமர்சிங் போல் ஆனாலும், ‘கிடைக்கிறார்களே’ 😉

  4. பத்மா… சுட்டிக்கு நன்றி 🙂

    —ஆசைக்காகவும் சுவைக்கான tempatation காகவும் இல்லாமல—

    நெத்தியடி சூட்சுமம்… பின்பற்றுவதுதான் கஷ்டமா இருக்கு 😦

  5. சுட்டி ஒன்று சஞ்சிதாவிற்கு. விளையாடினாளா?

  6. பத்மா… இன்னும் இல்ல… வாரயிறுதி!?! 💡

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.