1. உன்னாலே உன்னாலே: சொற்குப்பை. சிம்ரன் இல்லாத இடத்தை நிரப்புவதற்கு, கஜோல் தங்கச்சி வந்திருக்கிறார். பேருந்தில் கை போடுவது போன்ற சித்தரிப்புகள் தமிழ்ப்படங்களுக்குரிய எதார்த்தம். மொத்தத்தில் வசனவலி கொடுக்கும் சாக்லேட்சுருள்.
2. Pan’s Labyrinth: நிகழ்வுகளை fairy tales ஊடாகப் பார்க்க வைக்கிறார்கள். அம்மாவின் நலன் வேண்டும் மகள்; மகளின் வருங்காலம் கருதும் அம்மா. படபடக்கும் பூச்சியாக நாமும் பின் தொடர, அன்றாட திடுக்கிடல்களை மாயாவாதக் கூறுகள் விளக்கும் கலக்கல் சித்தரிப்பு.
3. தாமிரபரணி: ‘இந்தப் படம் எங்கே கவரப் போகிறது?’ என்னும் அவநம்பிக்கையுடன் சிரத்தையின்றி பார்க்க ஆரம்பித்த படம். அருள், சாமி, கோவில் என்று ஹரியின் எந்தப் படமும், எதற்காகவும்ஒரு துளி கூட ரசிக்காமல், விவேக் வராத நேரங்களில் முழுக்க முழுக்க நோகடித்தவை. இருந்தாலும், கடகட காட்சி நகர்த்தல். நேர்த்தியான விஷால். சன் டிவி சீரியலின் சாமுத்ரிகா நாயகி. சந்திரமுகி அல்லாத பிரபு. இணையத்திலும் காணப்படும் சக அபிமானம். சில எதிர்பாராத திருப்பங்கள். படம் நன்றாகப் போகிறது.













