Monthly Archives: நவம்பர் 2006

Idly – Vadai & DJ Thamilan

nedstatbasic.net & ilead.itrack.it popup

நான் உலாவும் வலைப்பதிவர்களில் இருவர் (படம் காட்டுதல் அல்லது பயமுறுத்துதல் & இட்லி – வடை) WebStats4U (Webstats4u.com – Catalogue / Top 10 charts) பயன்படுத்துகிறார்கள்.

இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் சென்றால் சில சமயம் ஐ.ஈ.

புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை – இன்னினியே
நின்றான், இருந்தான், கிடந்தான் தன் கேளலறச்
சென்றான் எனப்படுதலால்.

இறந்து விடுகிறது.

ஃபயர்பாக்ஸோ, இரத்தபீஜனாக, அணுப்பிளந்து பல சாரல்களைப் போட்டு சாளரங்களைத் திறந்து கணினியையும் கணித்திரையையும் ஆக்கிரமிக்கிறது.

நெட்ஸ்டாட்பேஸிக்.நெட் அல்லது வெப்ஸ்டாட்ஸ்4யு.காம் பயனர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த இலவச புள்ளிவிவரக் கணக்குகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறலாம். அல்லது, கீழ்க்கண்ட தளங்களில் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றலாம்:

ilead.itrack.it popup – எப்படி தவிர்ப்பது | இன்னொரு சுருக் முறை

முழுவதும் படிக்க: ilead.itrack.it popup – SWI Forums

Massachusetts Ballot Measures

வாக்குச்சீட்டு கேள்விகள்

நன்றி: தமிழோவியம்

சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து விவாதித்து முடிவு எடுப்பதற்கு சில சமயம் தாமதம் ஆகும். அதைத் தவிர்க்க பொதுமக்களே, கேள்வியை கேட்டு, ‘ஆம் என்றால் இப்படி ஆட்டுங்க’, ‘இல்லை என்றால் தெளிவா சொல்லிடுங்க’ என்று வினவுவார்கள். இவ்வாறு மக்களால் திட்டங்களும் சட்டங்களும் இயற்றப்பட்டாலும், ஒப்புக்கு சப்பாணிதான்! மக்கள் மன்றத்திலும் எம்.எல்.ஏ.க்களால் இன்னொரு முறை நிறைவேற்றப்பட்டாலே அவை சட்டமாக மாறும்.

ஆனால், ஏனோதானோ என்றில்லாமல், பத்தாண்டுகள் கிடப்பில் போடாமல், அதுவேக துரித கதியில், சட்டசபைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்களின் மனதைக் கவர்ந்த செல்ல சட்டம், உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்படும்.

பாஸ்டனை தலைநகராகக் கொண்ட மாசாசூஸட்ஸ் மாகாணத்தில் மூன்று கேள்வி கேட்கிறார்கள்.

முதல் கேள்வி வர்த்தக ரீதியானது. பலசரக்குக் கடைகளில் வைன் ஷாப்பை ஓரமாக வைத்து விற்றுக் கொள்ளலாமா? கூடாதா? அல்லது அதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கும் கள்ளுக் கடையில்தான் வைன் விற்க முடியுமா?

குடிமக்களுக்கு வைன் கடை என்றால், கல்யாணி, ஹேவர்ட்ஸ் 5000 பியர் வகையறா, மெக்டோவல்ஸ் விஸ்கி, கோல்ட் ரிபாண்ட் ஜிம், பகார்டி ரம் என்று எல்லாம் கிடைக்கும் இடம் என்பது அத்துப்படி. ஆனால், அமெரிக்காவில் வைன் என்றால், ‘சைட்வேஸ்’ திரைப்படத்தில் வருமே… அதுபோல், மெர்லோ, பினோ கார்ஜியோ, வைட் ஜின்ஃபேண்டல் என்று திராட்சை ரசம் மட்டுமே பொருந்தும்.

விளக்கை அணைத்தால் கட்டாந்தரையும் கட்டிலும் ஒன்றுதான் என்று வாதிடுபவர்களுக்கு, கள்ளுக்கடையும் ஒன்றுதான்; காயலான் கடையும் ஒன்றுதான். எங்கு கிடைத்தால் என்ன? கிடைச்சா சரி… எனவே, இந்த கருத்துக் கணிப்பில் பெரிதாக எனக்கு ஆர்வம் இல்லை.

இந்த முயற்சி தோல்விய்டைந்து விட்டது. பெரும் பணக்காரர்களைத் தோற்றுவிக்கும் என்னும் அச்சமும், தண்ணி கரைபுரண்டோடும் என்னும் கன்சர்வேடிவ் மதுவிலக்கு வாதமும் வென்றுவிட்டது.

அடுத்த கேள்விதான் மேட்டர் கேள்வி.

கூட்டணிக் கட்சியில் நாலு முக்கிய கட்சிகள் இருக்கிறது. எ. காட்டாக திமுக, பா.ம.க., இந்திரா காங்கிரஸ் & கம்யூனிஸ்ட். ஒவ்வொருவரும் எனக்கு இங்கே 13.4% இருக்கிறது; அங்கே 27.8% உண்டு; வடக்கே எங்க சாதிக்காரங்க 39.45% என்று புள்ளிவிவர பேப்பர் புலியாக இருப்பார்கள். உணமையாகவே இவர்களின் பலம் என்ன? எத்தனை பேர் இந்தக் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக நம்ம வேட்பாளருக்கு வாக்களித்தார்கள்?

இந்த சங்கதியை அறிந்துகொள்ள வகை வகுக்கும் கேள்வி அது. ஒரு வேட்பாளரே, பல தடவை வாக்கு சீட்டில் இடம் பிடிக்கலாமா?

பத்து கட்சி கூட்டணி என்றால், விருப்பப்பட்டால், மூ.மு. கழகத்திற்காக ஒரு தபா, சிபிஐ.க்கு ஒரு தபா, சிபிஐ(எம்)முக்கு இன்னொரு தபா, காங்கிரஸ்(ஐ), தமிழ் மாநில காங்கிரஸ், வாழப்பாடி காங்கிரஸ், பொதுவுடைமை கட்சி (தா பாண்டியன்) என்று எல்லோரும் பரிந்துரைத்து, அதிக வாக்குகள் பெற்றவர் என்னும் பெயர் பெறாவிட்டாலும், அதிக தடவை வாக்குச்சீட்டில் பெயர் அச்சடித்தவர் என்னும் பெயரையாவது தட்டிச்செல்லலாம்.

இந்த முறையில் ஃபார்வார்ட் ப்ளாக் மதுரையில் அஇஅதிமுக-வையும், தேனியில் திமுக-வையும், பெரியகுளத்தில் தனியாகவும் நிற்பதற்கு டீல் போடலாம்.

குழப்ப கூட்டணிகள் மிகும் என்பது அரசியல்வாதிகளின் தலைவலி.

எந்த சின்னத்தில் ஓட்டுப் போடுவது என்பதே குழப்பமடைபவர்களுக்கு, ‘மேட்ரிக்ஸ் array’ போல் இத்தனாம் வரி, என்று சொல்லி பிரச்சாரம் செய்து, புரிய வைத்து, செல்லும் வாக்கு போடுவது தற்போதைய மின்னணு சாதனங்களில் கஷ்டமாக இருக்கலாம். வாக்குகளைக் கூட்டிக் கழித்தல் சிரமம் தரலாம்.

ஆனால், பெருவாரியாக படித்தவர்களைக் கொண்ட தொகுதியில் இந்த முறை வரவேற்கத்தக்கது.

பொழிச்சலூரில் மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு கொண்டு, அவர்களுக்காகப் போராடுபவரை தனி அமைப்பு ஒன்று தனி வரியாக பட்டியலில் சேர்த்து, தங்கள் பலத்தை நிரூபிக்கலாம். பொதுசனங்களை கவனியாமல், விளைநிலங்களை மட்டும் கணக்கில் சேர்த்து, விமான நிலைய அரசியல் செய்யும் கட்சியின் கவனத்தைக் கோரலாம்.

இதுவும் மண்ணைக் கவ்விவிட்டது.

இதுபோன்ற முறைகள் ஏற்கனவே நியு யார்க் போன்ற மாற்றங்களை வேகமாக அங்கீகரிக்கும் இடங்களில் இருக்கிறது. பல கட்சி, பல கொள்கை, பல்வேறு கோரிக்கை, விருப்பங்கள் கொண்ட சிறுபான்மையினருக்கும் பெருமதிப்பைத் தரும் ஜனநாயகத்தின் அடுத்த படியாக இந்த வினாக்கள் இந்தியாவிலும் இடம்பெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தொடர்பான முந்தைய பதிவுகள்:
1. American Polls: Corruption is top issue & Some Ballot Measures: வாக்காளர்களின் முடிவை எதிர் நோக்கும் சில கேள்விகள்

2. Harlot’s Prerogative: சுதந்திரத்தைப் அச்சுறுத்தும் நீதிபதிகள்


| | |

American Polls: Corruption is top issue & Some Ballot Measures

அமெரிக்காவில் இன்று தேர்தல்.

வாக்காளர்களின் முடிவை எதிர் நோக்கும் சில கேள்விகள்:

1. South Dakota – Abortion law controversy: சவுத் டக்கோட்டாவில் கருகலைப்பு சட்டவிரோதமானது. இந்த வருடம் மார்ச் ஆறாம் தேதி தாயின் உயிருக்கு பேராபத்து இருந்தால் ஒழிய, மற்ற அனைவரும் குழந்தை பெற்றே தீர வேண்டும் என்னும் மசோதாவை கவர்னர் கையெழுத்திட்டார். வன்புணர்வு, பதின்ம வயதினர் போன்றோருக்குக் கூட சட்டத்தில் இருந்து விலக்கு கிடையாது.

மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? பெண்களுக்கு முடிவு எடுக்கும் உரிமை கொடுப்பார்களா? மாட்டார்களா?

2. Same-sex marriage: பல மாகாணங்களில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். தற்பாலாருக்குள் திருமணத்தை அனுமதிக்கலாமா? கூடாதா?

கணவனுக்கு காப்பீடு இருந்தால், குடும்பத்துக்கும் அதே காப்பீட்டைக் கொண்டு, மருத்துவ செலவை சமாளிக்கலாம். தற்பாலார் சேர்ந்து வாழ்ந்தால், ஒருவரின் காப்பீடு, குடும்பத்துக்குப் பொருந்துமா? அல்லது இருவருமே தனித்து வாழ்பவர்கள் போல் கருத வேண்டுமா?

கல்யாணம் என்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும்தானா?

3. English-only movement: அரிசோனாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். மெக்ஸிகோ போன்ற பிற நாடுகளில் இருந்து கடைநிலை ஊழியராக வேலை பார்ப்பவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இதை நிறுத்திவிட்டு, இனி அமெரிக்காவின் தேசிய மொழி ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டுமா? அல்லது அரசாங்கம் தொடர்ந்து இரட்டை மொழியில் பாடங்களை சொல்லித் தர வேண்டுமா?

4. National Association for the Advancement of Colored People: மிச்சிகன் மாகாணம். மிச்சிகன் பல்கலை போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கொடுக்கலாமா? தவிர்க்கலாமா?

வெகு சமீபம் வரை இனம், மொழி, நிறம், குடியுரிமை, போன்ற பல வகைகளைக் கொண்டு, அனைத்து தரப்பினருக்கும் இடம் பிடிக்க வசதியாக சிலருக்கு முன்னுரிமை வழங்கி வந்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் வழக்கம், உச்சநீதிமன்ற ஆணையினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்தப் பழக்கம் தொடர வேண்டுமா? அல்லது கல்லூரி நுழைவில் எந்தவித ஒதுக்கீட்டுக்கும் இடம் கிடையாதா?

5. Legal issues of cannabis: போதைப் பொருள் வைத்திருப்பது குற்றமா? அல்லது உட்கொள்வது குற்றமா? எவ்வளவு எடுத்துக் கொண்டால் சட்டப்படி தவறு?

6. digg – Arizona proposes making election ballots 1 MILLION DOLLAR lottery tickets: தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க வெள்ளி கிடைக்கலாம். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை லாட்டரி குலுக்கல் நடைபெறும்.

கடந்த தேர்தலில், அரிசோனாவில் இரண்டு மில்லியன் வாக்காளர்கள் கடமையை செய்திருக்கிறார்கள். தனியார் நன்கொடை மூலம் கிடைக்கும் ஒரு மில்லியன் இவர்களில் ஒருவருக்கு சென்றடையும்.

இப்படி பணம் கொடுப்பதன் மூலம் மக்கள் பங்களிப்பு அதிகரிக்கலாம். சரியா? தவறா?

7. Stem cell controversy: மருந்து கண்டுபிடிக்காத நோய்களை குணப்படுத்த ஸ்டெம் செல்கள் தேவை. எயிட்ஸ், புற்றுநோய், அல்செய்மர்ஸ், போன்ற எண்ணற்ற குறைபாடுகளுக்கு சரியான சிகிச்சையை ஆராய, பரிசோதனை செய்ய, கண்டறிய, ஸ்டெம் செல் இன்றியமையாதது.

கருத்தரித்தவுடனேயே உயிர் என்று கருதுபவர்களுக்கு, ஸ்டெம் செல் கூட சிறுவராக தென்படுகிறது. மேலும், cloningகுக்கும் பயன்படும் என்னும் பயமும் இருக்கிறது.

புதிய அறிவியல் விடைகளுக்காக ஸ்டெம் செல்லைக் கொடுக்கலாமா? அல்லது தடை செய்து விடலாமா?


| | |

US Elections – Slate Cartoons

நன்றி: Slate Magazine – Editorial and Political Cartoons, Comic Strips

முதல் நம்பிக்கை: மீண்டும் ஒசாமா – ‘வில்லனை ஒழிப்போம்’

கடைசி நம்பிக்கை: சதாம் ஹுசேனுக்கு தூக்கு – ‘வில்லன் ஒழிந்தான்’

சுவரொட்டிகள் நிரந்தரம்

போட்டியாளரின் மேல் புழுதி தூற்ற எளிய வழிகாட்டி – ஏசிப் பிழைக்கும் அரசியல் முறை

பிரச்சினையைத் தூக்கி கிடப்பில் போடு

புதுயுகத்தில் பூத் பிடிப்பது எப்படி?

‘உங்கள் குழந்தை அடுத்தவரைத் திட்டுகிறதா? கூடப் படிப்பவர்களை அடித்து வதைக்கிறதா? கவலை வேண்டாம்!’

இன்று அமெரிக்காவில் ‘நாடாளுமன்ற’ தேர்தல்

தொடர்புள்ள வாசனின் பதிவு: அமேரிக்காவில் தமிழன் :: யாருக்கு என் வாக்கு.. ?


| |

Boston Ahts Festival – 2006

ஓவியர்களையும் கலைஞர்களையும் ரசிகர்களுடன் ஒருங்கிணைக்கும் விழா. மண்பாண்டங்கள் ஒரு புறம் இருக்கிறது. இன்னொரு ஸ்டாலில் இயற்கைக் காட்சிகள். மற்றொன்றில் கைப்பைகள். பல கைவினைக் கலைஞர்களின் திறமைகளை ஒருங்கே பார்க்க வகை செய்திருக்கிறார்கள்.

Boston Ahts Show - 2006 : Christopher Columbus Park : Arts Fair

ஆர்ச்சீஸ் காமிக்ஸ்?

விதவித வண்ணங்களில் குட்டி கூழாங்கற்கள். பொறுமையாக நேர்த்தியாக பதித்திருக்கிறார்.

நிஜ நவீன கலைப் படைப்பு?! ஒற்றை மலர் மொட்டு (அல்லது) நெகிழ்ந்து விரிந்த வாழ்வின் குறியீடு

“அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.”
“ஆம், நீலம் ஒரு புன்னகை.”
– கொற்றவை : ஜெயமோகன்

இந்த ஓவியப் புகைப்படத்தின் விலை $899.95

என் மகளையும் $900 வருமாறு வரைய சொல்லும் ஆசை

மற்ற படங்கள்: Flickr: Boston Ahts Festival


| |

சுத்தம் சோறு போடும்

பாழாகலாமா பொதுக் கட்டடங்கள் – யோ. கில்பட் அந்தோனி: “சுற்றுப்புறத்தூய்மை: கட்டடத்தின் பலமும் நலமும் அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொறுத்து அமையும். ஆனால் ஒரு பொதுக்கட்டடத்தைப் பார்க்கும்போது அதில் காணப்படும் குப்பைகள், ஒட்டடைகள், அழுக்கடைந்த சுவர்கள் மற்றும் தரைகள், நாற்றமெடுக்கும் கழிப்பறைகள், உடைந்த குழாய்கள், உடைந்த நாற்காலி – மேசைகள், கழிவு நீர் தங்குமிடங்கள் ஆகியவை நமது மனத்தைச் சம்மட்டி கொண்டு தாக்குவதுபோல் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய ஒரு வருடத்தில் மூன்று நாள்கள் தனித்தனியாக தூய்மைப் பணிக்கு ஒதுக்கலாம்.”

அழுக்கான கணினித் திரையை தினந்தோறும் பார்த்தால் கண் கெட்டுவிடும். வாங்கிய புதிதில் பளபளா. இப்போதோ கேபிள்காரரும் ஈ.பி.யும் தோண்டித் துருவிய சாலையாக வெடிப்புகள். மேல்துண்டை எப்போதுமே போட்டிருந்தாலாவது, தூசியில் இருந்து தடுத்திருக்கும்.

உங்களுடைய பத்து வருட பழைய திரையை புத்தம்புதியதாக ஆக்க வேண்டுமா?

உங்கள் வெண்திரையை பளிச்சிடுவதற்கு செல்லும் முன்…

இசை அமுது :: பாரதிதாசன்தூய்மை

தூய்மை சேரடா தம்பி — என்
சொல்லை நீபெரிதும் நம்பித்

தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்

தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை — உண்ணும்
உணவினில் தூய்மை — வாழ்வின்
நடையினில் தூய்மை — உன்றன்
நல்லுடற் றூய்மை — சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்

தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் — சாதி
துளிப்பதும் இல்லை — சமயப்
புகைச்சலும் இல்லை — மற்றும்
புன்செயல் இல்லை — தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்

தூய்மை சேரடா தம்பி!

இனி… நயா அணா செல்வில்லாத வழி:

| |

Kalki Cartoon

Tamil Nadu Civic elections and Denial of permission for meeting

நன்றி: கல்கி


| |

Kalachuvadu Announcements

காலச்சுவடு விழா + அறிவிப்புகள்


காலச்சுவடு அறக்கட்டளை நடத்தும்

பாரதி – 125
புதுமைப்பித்தன் – 100
சு.ரா. – 75

உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு :: டிசம்பர் 18, 19, 20 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை டிசம்பர் 18 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவங்கி வைக்கிறார்.


| |

Va Vaa Sangam scores Centum

கிரிக்கெட்டில் சதம். சிக்ஸரும் ஃபோருமாய் அடித்துத் தள்ளினால் சீக்கிரமே வந்து சேரும்.

திரைப்படத்திற்கு நூறாவது நாள். வெற்றி விழா எடுப்பார்கள். அல்லது ‘நூறாவது நாள்’, ‘வெற்றி விழா’, என்றே தலைப்பிட்டு கொண்டாடுவார்கள்.

ஆட்சியில் 100 நாள் முடிந்தவுடன், பத்திரிகைகள் அனைத்தும் தங்கள் மதிப்பீடுகளை வழங்கும்.

வேலையில் சேர்ந்து டிரெயினிங் முடிந்து, கணினி கையில் கிடைத்து, திறமையை நிரூபிக்க நூறு தினங்கள் போதும்.

அந்தக்காலமாக இருந்தால் திருமணமாகி நூறு நாள் ஆனால், ‘பொண்ணு குளிக்கறாளா?’ என்று ப்ரெஷர் போட ஆரம்பிப்பார்கள். இந்தக் காலமாக இருந்தால் தேனிலவு கூட முடிந்திருக்காது.

பிறந்த குழந்தைக்கு தலை தூக்கி நின்று விடுவது என்னும் முக்கியமான அடையாளத்துக்கு நூறு நாட்கள்.

விநாயகருக்கு கொழுக்கட்டை பிடித்தால் நூறு. தெய்வங்களுக்கு தேங்காய் உடைத்தால் நூறு.

பூஜ்யத்துக்கு அர்த்தம் சேர்ப்பது ஒன்று.
வாழ்க்கையின் மைல்கல் நூறு.

சங்கத்து சின்னம்ஒற்றை ரூபாயாக எளிதில் லஞ்சம் கொடுக்க வசதியான ரூபாய் நூறு.

அவசர போலீஸ் 100.

நூற்றுக்கு நூறு என்பது கணக்கு பரீட்சையில் சாத்தியம். தமிழில் சாத்தியமில்லை என்பதை முறியடிக்க பிறந்தவர்கள் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம். பெயருக்கு ஏற்றமாதிரி வருத்தப்படாமல் ஒரு காரியம் செய்து இருக்கிறார்கள். என்னைக் கூப்பிட்டு எழுத சொல்லியிருக்கிறார்கள்.

உஷா சொல்வது போல் வ. வா சங்கத்தில் பாபாவா?- தெய்வமே.. தெய்வமே

வ.வா.ச. நூறாவது பதிவு.


| | |

Creamy Layer – AK Antony – Drunkard MLA – Bank Strike

பேசும் செய்தி – 5 (நன்றி: திண்ணை)

Pumpkin-Citrus Cake1. இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: ‘ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று தொல். திருமாவளவன் கலந்து கொள்ளும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

செல்பேசி சுழன்றது. “வணக்கம். இன்று நான் திமுக அணியில் இருக்கிறேன். பா.ம.க ஆதரவு நிலைப்பாடை அறிய எண் 2-ஐ அழுத்தவும். தற்போதைய குஷ்பூ ‘பெரியார்’ பட கண்டன அறிக்கையை கேட்க எண் 3-ஐ அழுத்தவும். ‘அன்புத் தோழி’ வெளியீட்டுத் தகவல்களைப் பெற எண் 4-ஐ அழுத்தவும். என்னைத் தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எண் 5-ஐ அழுத்தவும். என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள எண்-பூஜ்யத்தை அழுத்தவும்” என்னும் தானியங்கி செய்தி வாசித்தது.

ஜீரோவைத் தொட்டவுடன் தொல். திருமா கிடைத்தார். கருத்தை வினவினோம். “மாதத்துக்கு 20,833.33 மட்டுமே பெறுபவர்கள் அவர்கள். இவர்களை எப்படி க்ரீமி லேயர் என்று சொல்லலாம்? திரைப்படம் பார்க்க சென்றால் ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எம்.ஜி.எம் சென்றால் இன்னும் சில ஆயிரங்கள். பாலில் க்ரீமி லேயர் இருக்கும். இவர்களோ கிஷ்கிந்தாவில் ஸ்க்ரீம் மட்டுமே செய்பவர்கள். நான்கு வாரங்கள் கொண்ட மாதத்தில் கேளிக்கைக்கே எல்லா சம்பளமும் செலவழிக்கும் இவர்களின் வழித்தோன்றல்களுக்கு சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது.” என்று பகிர்ந்து கொண்டார்.

Greetings and salutations.2. மத்திய அமைச்சரவையில் ஏ.கே.அந்தோணி கேரளாவுக்கு 2-வது மந்திரி: ஏ.கே.அந்தோணி ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு தற்போதைய முதல் மந்திரி அச்சுதானந்தன் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

‘நமது எம்.ஜி.ஆர்’-ஐப் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மயங்கி விழுந்ததாக விஷயமறியாத வட்டாரங்கள் என்னிடம் சொன்னார்கள். “அம்மாவிற்கு அதிர்ச்சியாகாத செய்திகளைத்தான் ‘நமது எம்.ஜி.ஆர்’ பிரசுரிக்கும். ஆனால், இந்த செய்தி எடிட்டரின் பச்சை மையால் திருத்தப்படாமல் தப்பித்து விட்டிருக்கிறது. அம்மா அயர்ச்சி ஆனவுடன், என்ன செய்தி என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நாங்களும் புரட்டினோம். நமது அண்டை மாநிலத்தார் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டோம்.

ஏகே ஆண்டனியோ காங்கிரஸ். அச்சுதானந்தனோ கம்யூனிஸ்ட். எதிர் துருவத்தைப் பாராட்டலாமா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாழ்த்தியிருக்கிறார்? ‘உள்ளூரில் இருப்பதற்கு பயப்பட்டுக் கொண்டு ஓடி ஒளியும் எதிர்க் கட்சி கரப்பான் பூச்சி’ என்று ரைமிங்காகவோ, ‘ஏற்கனவே மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர்தானே? நாளைக்கே பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டு துண்டுக் கடுதாசி கொடுக்கப் போகும் அரை வேக்காடு’ என்று ஏக வசனமாகவோ வசைமொழியல்லவோ வீசியிருக்க வேண்டும்?

ஆனால், தேசிய அளவில் தன் அரசியல் முதிர்ச்சியை கொண்டு செல்வதற்கு இது ஏற்ற சமயமாக அம்மா கருதுகிறார். கூடிய சீக்கிரமே லல்லு போல் ‘அரசியல் பாடம்’ எடுக்க முயற்சிகளை முனைவார்” என்று வட்டாரம் முடித்துக் கொண்டது.

That's one way to deal3. விஜயகாந்த் பற்றி விமர்சனம்: கண்ணிய குறைவாக இருந்தால் ஜெயலலிதா மீது நடவடிக்கை: சபாநாயகர் பேட்டி: “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு பொறுப்புடன் வந்து செல்கிறார். சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினர் குடித்து விட்டு வருவார் என்று ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது தமிழக சட்டசபையின் ஜனநாயக மாண்பை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழக மக்கள், குடித்துவிட்டு யார் சட்டப் பேரவைக்குள் வருகிறார்கள் எனத் தெரியாமல் எல்லா உறுப்பினர்களையும் குடிப்பழக்கம் உள்ளவர்களாகவே உருவகப்படுத்தி பார்க்கத் தொடங்கியுள்ளனர்.” என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக மக்களைத் தொடர்பு கொண்டோம். விளம்ப ஆரம்பித்தார். “ஆறரை கோடிப் பேர்களும் ஒருமித்த கருத்துடனேயே இருக்கிறோம். விஜய்காந்த் திரைப்படத்தில் நடிப்பதை அப்படியே நிஜ வாழ்வில் நடத்திக் காட்டுவார் என்று நம்புவதைப் போலவே, புரட்சித் தலைவி ‘குடிகாரர்’ என்று சொன்னவுடன், அனைவருக்கும் அந்த வசதி கிட்டுவதாகவும், பயன்படுத்துவதாகவும் நம்புகிறோம். எங்களுக்குத்தான் குடிக்க தண்ணீரும் கிடைப்பதில்லை. காசு கொடுத்து வாங்கும் கோக்கிலும் நச்சுப்பொருள் பாய்ந்து தவிக்க விடுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களாவது வசதியாக, தாகசாந்தி செய்து கொள்பவர்களாக எண்ணினோம்.” வாதம் புரிந்தவரின் தொண்டைத் தண்ணீர் வற்றிப்போனது. நிறுத்திவிட்டார்.

பீட்டர் அல்ஃபோன்ஸ் வந்தார். “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்று நாங்கள் சட்டமன்றத்தைப் பாங்குடன் நடத்துகிறோம். கூட்டணித் தலைவர் கலைஞர் தன்னுடைய பதவிப் பித்தைக் கூறுவார். அதற்கு எதிரணித் தலைவி செல்வி ஜெயலலிதாவும் ஆட்சி மோகத்தை அரங்கேற்றி பதிலளிப்பார். நடுநடுவே நாங்களும் சமயத்திற்கேற்ப புழுதி வாரி தூற்றியும் புகழை வாரி துதிபாடியும் சபை நடவடிக்கையில் பங்கேற்போம்.

எவ்வளவு குடித்தாலும் எங்களுக்கு போதையேறுவதில்லை. குடித்தால்தான் போதையேறும் என்னும் நிலையிலுமில்லை. எனவே தெளிவில்லாமல் பேரவைக்குள் வருகிறார்கள் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்” என்று நிதானமாகவே காணப்பட்டார்.

do-practically-nothing4. அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கலை எதிர்த்து அக். 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வெளிப் பணி ஒப்படைப்பு (அவுட் சோர்சிங்), ப்ரைவடைசேஷன் ஆகியவற்றை எதிர்த்து அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள்.

கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாச்சலத்தை முதலில் பிடித்தோம். “இப்போது கூடப் பாருங்க சார்… நான் ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன். ‘வெங்கடாசலா…’ என்று ஒரு முறை அழைத்தவுடனேயே கூவிய குரலுக்கு செவி மடுத்தேன். இது எப்படி முடிகிறது? ஏகப்பட்ட பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள். எனக்கு இன்னிக்கே வேலை போனாக் கூட சாகிற வரைக்கும் பென்ஷன் சலுகைகள் உண்டு. உங்க சாஃப்ட்வேரில் agile methodologyன்னு ஜல்லியடிப்பீங்களே… ஒத்த வேலைக்கு நாலு பேரு கணினிய சுத்தி நின்னு கும்மியடிப்பீங்களே! அந்த மாதிரி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க சொல்றோம். தப்பா? ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் விகடன்.காம் சந்தாவா கட்ட சொல்லி வறுபுத்தறோம்? ஃப்ரீயா கிடைக்கறத மட்டும் படிச்சு, தேமே என்று இருக்கும் எங்களை வீணாக உசுப்பி விட்டிருக்கிறார்கள்”.

அவரைத் தணிக்க முயன்ற அடிப்பொடியை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. ‘வல்லவன்’ டிக்கெட் கிடைத்ததும் வெங்கடாசலம் கிளம்பிப் போனபின், நுழைவுச்சீட்டு வாங்கி வந்திருந்த அந்த கடைநிலை சிப்பந்தியை அணுகினோம். “எனக்கு பயமாக இருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தினால், வங்கி ஊழியர்களின் தேவையை மக்களும் நிர்வாகமும் உணர்ந்து விடுவார்களோ என்னும் கவலைத் தொற்றிக் கொண்டுள்ளது. பணியே செய்யாமல் டபாய்ப்பதை எல்லோருக்கும் புட்டு புட்டு வைத்து, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்ல’ என்பது போல் சிறுபிள்ளைத்தனமாக ஸ்டிரைக் செய்கிறார்கள். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்று வருந்தினார்.


| |