இந்த வருடம் ஃபேர்-ஒன் – ஃபிலிம்ஃபேர் விருதுகளை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். கவர்ந்த சில விஷயங்கள்:
- திலகன் :: வாழ்நாள் சாதனையாளர் #1: 50+ வருடமாக குணச்சித்திர மலையாள நடிகர்; ‘அருமைநாயகம்’ என்றவுடன் அம்மா வயிற்று குழந்தை கூட கதிகலங்கும்; கிரீடம், பெருந்தச்சன் முதல் ‘நீ வேணுண்டா செல்லம்’ வரை இயல்பான நடிப்பு; தேசிய விருது வாங்கியவர்; நெகிழ்வுடன் பேசினார்.
- சுகுமாரி :: வாழ்நாள் சாதனையாளர் #2: 55 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பவர். கலைமாமணி; பத்மஸ்ரீ; ‘வாராய் என் தோழி வாராயோ’ முதல் காதலுக்கு மரியாதை வரை பல தலைமுறைகளை மகிழ்விப்பவர்.
- ‘வான்மதி’ ஸ்வாதி, ரீமா சென், நமிதா, ‘மழை’ & ‘சிவாஜி’ ஷ்ரேயா, ஸ்மிதா (‘அனுகொகுண்ட ஒக ரோஜு’ பாடகி), மேக்னா நாயுடு (தெலுங்கு?), மாளவிகா என்று நிறைய பேர் மூச்சிறைக்க ஆடினார்கள். ஷோபனாவும் கிரிக்கெட், ஹாஸ்ப்பிடல் என்று நவீனங்களை நாட்டியத்தில் அவசரமாக மூன்று நிமிடத்துக்குள் ஓடியாடினார். எதுவுமே சோபிக்கவில்லை.
- வாயசப்பதை மட்டும் செய்யும் தேவி ஸ்ரீபிரசாத் போன்றோருக்கு எதற்கு வாயின் அருகே மைக்? ஜெஸிகா சிம்ப்ஸன் போல் பாவ்லா கூட காட்டுவதில்லை. விருதுக்கு வாக்களித்தோரை நகைக்கும்விதமாக, தலையோடு ஒட்டி உறவாடும் ஒலிப்பான் (Head phone). இளைய தளபதி விஜய்யின் உச்சரிப்புக்கு ஏற்ப, கையசைத்தார்.
- அனைத்து அவார்ட்களையும் ‘நுவ்வொஸ்தானண்தே நேநொத்தண்தானா‘ (Nuvvostanante Nenoddantana) தெலுங்கிலும் ‘அன்னியன்’ தமிழிலும் குத்தகை எடுத்தது. தெலுங்கு நடிகை த்ரிஷாவுக்கு ஃபிலிம்பேர் கொடுப்பதற்கு முன் செம டைமிங் சென்சுடன் பாக்யராஜ், கையைத் துடைத்துக் கொண்டு கைகுலுக்கியது ‘சிறந்த எண்டெர்டெயினர்’ விருதைக் கோரியது.
- ‘தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு கொடுக்கப்பட்ட குணச்சித்திர நடிகர் (ராஜ்கிரண்) & நடிகை (சரண்யா) விருதுகள், சன் டிவியில் கத்தரிக்கப்பட்டது.
- ஸ்ரேயாவை அறிமுகம் செய்த கண்ணன், மாமனார், மாப்பிள்ளை இருவருடன் நடிக்கும் என்பதை உபசாரமாக சொன்னாலும், நம்ம புத்திக்கு நக்கல் செய்த மாதிரி அர்த்தம் கொடுத்தது.
- அஜீத்தின் நடிப்பை விட பயமுறுத்துமாறு, சேரனின் சிகையலங்காரம் பூச்சாண்டியாக அச்சுறுத்தியது.
- ‘கேளடி கண்மணி’ வசந்த் இளைத்து, படு ட்ரிம்மாகி சுசி கணேசன், எஸ் ஜே சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க ரெடி என்றார்.
- ஒரு மாறுதலுக்காக இயக்குநர் பார்த்திபன் மாறுதலாக பேசி கடித்துக் குதறாமல், தன் குரு பாக்யராஜ் போல் எதார்த்தமாய் ‘self-deprecating humor’ முயற்சிக்கலாம். ‘மலையாளத்தில் மாரடித்து’ என்று சொல்லி பார்வையாளர் பக்கம் கைதட்டலுக்காக ஏங்கினார்.
- அடுத்த வருடம் நிச்சயம் பரிந்துரைக்கப் படுவேன் என்று ‘ஜித்தன்’ ரமேஷ் வாக்களித்தார். தம்பி ஜீவா அடக்கி வாசித்தார்.
- ஆஸ்காருக்கு இணை பிலிம்பேர் என்று கிடைத்ததை வைத்து பலரும் பெருமை கொண்டனர். பரிந்துரைப் பட்டியலை முழுமையாக அறிவிக்கும் விதத்திலாவது அகாடெமியை பின்பற்றினால், நிகழ்ச்சி சுவாரசியமாகும்.
- ‘எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சுக்கோ’ என்று சொல்லிவிட்டு, நிறைய பேரின் பிறந்த நாள் எட்டாம் தேதியாக இருப்பதாக எண் கணிதம் போட்டார்
- நடிகர் விக்ரம். முத்தாய்ப்பாக
- சாபு சிறில் (கலை),
- ரவி வர்மன் & மணிகண்டன் (ஒளிப்பதிவு),
- ஷங்கர் (இயக்குநர்),
- ஆஸ்கர் ஃபிலிம்ஸ் (தயாரிப்பு),
- ஹாரிஸ் ஜெயராஜ் (இசை),
- பீட்டர் ஹெய்ன்ஸ் (சண்டைப் பயிற்சி),
- வைரமுத்து (பாடலாசிரியர்)
என்று எட்டு விருதுகளை அன்னியன் பெற்றிருக்கிறது என்று எட்டின் பெருமையை எடுத்து வைத்தார்.
- சோதனைக் காலங்களில் உறுதுணையாக இருந்த அம்மாவை மேடைக்கு அழைத்தார் ‘அன்னியன்’ விக்ரம். பல சமயம் அழைக்க எத்தனித்தாலும், கூச்சம் காரணமாக முடியவில்லை என்றும், இன்று தன் தாயின் பிறந்தநாள் என்பதால் கூப்பிடுவதாக பாசத்தைப் பகிர்ந்தார். பார்வையாளர் அனைவரும் நெகிழ்வுடன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர். தான் முடங்கியிருந்த மூன்று வருடமும் தன்னம்பிக்கை ஊட்டி, முன்னேற்றிய, தன் கஷ்டத்தைப் பொருட்படுத்தாது கான்வெண்ட்டில் படிக்கவைத்த ஒவ்வொருவரின் அன்னையின் நினைவாகவும் அன்புடன் பகிர்ந்த பரிசு.
- ‘சந்திரமுகி’க்கு சிறந்த நடிகர் விருது கிடைக்காததால் சூப்பர் ஸ்டார் ரஜினி வரவில்லை. ஆறுதல் பரிசாக நகைச்சுவை (வடிவேலு) நடிகரும், சிறந்த பின்னணிப் பாடகி விருதும் சந்திரமுகிக்கு கிடைத்தது. ‘மும்பை எக்ஸ்பிரஸை’ கண்டு கொள்ளாவிட்டாலும் கமல் ஆஜர்.
- 21 கேமிராக்கள்; அரங்கு மேடையிலேயே கையில் பிடித்துக் கொண்டு, நடிகையின் தொப்புள் க்ளோசப் கொடுத்து உதவ ஒன்று. மேடைக்கு வெகு உச்சியிலே நாற்பதடி உயரத்தில் ‘பருந்துப் பார்வை’ கொடுக்க ஒன்று. மேடையோடு சரிசமமாக ‘ஸ்டம்ப் விஷன்’ தர ஒன்று. பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஜிலுஜிலு சந்தியாவின் புடைவையில் செய்திருப்பது சம்க்கி வேலையா, ஆரெம்கேவியின் காவியப் பட்டு வேலையா என்று ஆராயும்போது முகபாவங்களை அள்ள மிச்ச பதினெட்டு என்று படத்தொகுப்பை வெகு சிறப்பாக செய்திருந்த சன் டிவிக்கு நன்றி.
- நேரு விளையாட்டரங்கம் மெச்சுமாறு ஹாக்கி வீரர்களும் தடகள வீராங்கனைகளும் கலக்குவதில்லை. தென்னிந்திய நட்சத்திரப் பட்டாளமும் ரசிகக் கண்மணிகளும் மகிழுமாறு நிகழ்ச்சிகள் நடத்துவதாவது ஆய பயனை அளிக்கிறது.
முந்தைய சில விருதுப் பதிவுகள் –
2004 :: மெடிமிக்ஸ் – தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்
2005 :: தினகரன் – மெடிமிக்ஸ் விருதுகள்














முகமூடி: பிலிம்ஃபேர் விருதுகள் 2005
There are two Nehru Stadiums in Chennai. One is Indoor and other is outdoor. The awards function held in indoor stadium. Indoor stadium has nothing to do with Athletics and Football. Athletics and Football are played in outdoor stadium.
நீரும் பின்னிட்டீரு.
//அடுத்த வருடம் நிச்சயம் பரிந்துரைக்கப் படுவேன் என்று ‘ஜித்தன்’ ரமேஷ் வாக்களித்தார்.//
பிலிம் பேரை ஆர்.பி.செளத்ரி வாங்கிவிட்டாரா?
வணக்கம் பாபா
உங்கள் பதிவை வாசித்தபோது சில நெருடல்கள்.
நான் சிட்னியில் இருந்து பார்த்த சன் டீவி (எல்லோருக்குமே ஒரே நிகழ்ச்சி தான் என்று நினைக்கிறேன்) இதை முழுமையாகக் காட்டியது.ராஜ்கிரனின் காட்சித் துண்டும் சரண்யாவின் காட்சித் துண்டும் காட்டப்பட்டது. ராஜ்கிரணுக்குப் பதில் யாரோ வந்தார்கள். சரண்யா இந்த விருது தன் தாய்க்கு அர்ப்பணம் என்றாரே? பார்க்காவில்லையா அல்லது தம் அடிக்கப் போய்ட்டீங்களா:-)
நான் ரசித்த ஒரே காட்சி தேவி சிறீ பிரசாத்தின் பேச்சும் ஆட்டமும் தான்.
ரஜனியின் பொண்ணும் தனுஷின் வூட்டுக்காரியுமான ஐஸ்வர்யா தலைக்கு அடித்த கலர் இன்னொரு சந்திரமுகியை ஞாபகப்படுத்தியது.
துளசி… வாங்க 🙂 விருது வாங்கத்தான் கூவலை; ஃபிலிம்பேர் விமர்சகர் வட்டமாவது ஆரம்பிப்போம் என்னும் முயற்சிதான் 😉
அனானி… மழைக்குக் கூட சேபாக்கம் பக்கம் ஒதுங்கினதில்லை. ரொம்ப நாள் வரைக்கும் கண்ணகி சிலைக்கு எதிர்த்தாப்ல இருக்கும் சாரணர் கிரவுண்ட்தான் சேப்பாக்கம் என்று நினைத்த அப்பாவி அய்யா நான் 😀
சுட்டலுக்கு நன்றி.
கானா… தவமாய் த. குறித்து முகமூடியும் எழுதியிருக்கிறார். ரொம்பத் தூக்கக் கலக்கமா இருந்திருக்கும். ஆட்டம் ஆடினவர்கள் யாரையும் தவறவிடவில்லை… கவனித்தீர்களா ;-))
போகிற போக்கில் நடிகர் விக்ரம், தன்னுடைய நடிப்புத் திறமையை ஷங்கர்தான் ‘பிதாமகன்’ பாலாவை விட திறம்பட வெளிக்கொணர்ந்ததாக பனிப் பாறாங்கல்லை வைத்ததை சொல்ல மறந்துவிட்டேன்.
திருத்தல்களுக்கு நன்றி.
12 நாடுகள் கலந்து கொண்ட உலகக் கோப்பை ஹாக்கியில் 11-வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் நிலையை விமர்சிக்கும் நேற்றைய தினமணி தலையங்கம்: State of Indian Sports Teams – Hockey: “கனவாய் பழங்கதையாய்…” (தினமணி எடிட்டோரியல்)
//ரஜனியின் பொண்ணும் தனுஷின் வூட்டுக்காரியுமான ஐஸ்வர்யா தலைக்கு அடித்த கலர் இன்னொரு சந்திரமுகியை ஞாபகப்படுத்தியது. //
அட நீங்க முகத்தில் அடித்திருந்த அக்ரிலிக் பெயிண்ட்டை பார்க்கவில்லையா? என்னத்த சொல்ல!
//’வாராய் என் தோழி வாராயோ’ முதல் காதலுக்கு மரியாதை வரை பல தலைமுறைகளை மகிழ்விப்பவர்.//
காதலுக்கு மரியாதையில K.P.A.C.லலிதா தானே ஆகிட் கொடுத்தாங்க?
கஜினியில் ஒரு கலக்கு கலக்கிய எங்கள் கல்பனாவை இந்தக் கவரேஜில் புறக்கணித்த உம்மைக் கண்டித்து இந்த வாரயிறுதியில் எங்கள் வீட்டில் “அசின் மராத்தான்” நடக்கப்போகிறது.
விருதுவிழாவை வழங்கிய காம்பியர்களை கட் செய்து விட்டு (அவர்கள் ஆங்கிலத்தில் பேசியதாலோ) சன்டிவி மியூசிக்கில் வரும் இருவர் எரிச்சலூட்டும் வகையில் வழங்கியதை விட்டு விட்டீர்களே?
//தெலுங்கு நடிகை த்ரிஷாவுக்கு ஃபிலிம்பேர் கொடுப்பதற்கு முன் செம டைமிங் சென்சுடன் பாக்யராஜ், கையைத் துடைத்துக் கொண்டு கைகுலுக்கியது ‘சிறந்த எண்டெர்டெயினர்’ விருதைக் கோரியது.//
ஆஸ்கர் விருதுகளை வழங்கும்போது சிறந்த நடிகைக்கான விருதை கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகரும் vice versa-வும் வழங்குவது வழக்கம். குறிப்பாக ஒரு முத்தம் பரிமாறிக் கொண்டு வழங்குவதும் வாடிக்கை. சில ஆண்டுகளுக்கு முன்னால் Halle Berryயிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொள்ள வந்த Adrian Brody, முத்தத்துக்கு முன்னால் கோட் பாக்கெட்டிலிருந்து mouth freshener எடுத்துப் பயன்படுத்தி விட்டு நச்சென்று அடித்த முத்தம் தான் நினைவுக்கு வந்தது.
🙂
சுதர்சன்,
—–காதலுக்கு மரியாதையில K.P.A.C.லலிதா—-
விஜய் படங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்ததால் குழம்பிட்டேன். சொல்ல நினைத்தது – ‘பூவே உனக்காக’. இனிமேல் Triviapettaiயில் சரிபார்க்காமல், மனம் போன போக்கில் தட்டச்சக் கூடாது 😀
மீனாக்ஸ்,
—-Halle Berryயிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொள்ள வந்த Adrian Brody, —-
நாலு வருஷம் முன்னாடி நடந்ததா…. மறந்தே போச்சு; இப்பொழுது, நினைவுக்கு வருகிறது 🙂
சுரேஷ்,
—-சன்டிவி மியூசிக்கில் வரும் இருவர் எரிச்சலூட்டும் வகையில் —
முண்டா பனியன்களில் முதுகுப்புறத்தின் மேற்புறம் சிறிய ப்ளாஸ்டிக் பட்டை இருக்கும். பனியனின் சைஸ், தயாரித்தவர், எப்படி தோய்க்க வேண்டும், எப்படி காயவைக்க வேண்டும் என்று எழுதி இருப்பார்கள். தேவையற்றுத் தொங்கி முதுகை அரித்து சிரமத்தைக் கொடுத்தாலும், எல்லா பனியனிலும் இருப்பதால் பழகிப் போய் இருக்கிறது.
இந்த இருவர் சன் தொலைக்காட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதால், (சமீபத்திய சிங்கப்பூர் ‘செல்வி’ கொண்டாட்டங்கள், கலைஞர் பாராட்டு விழாக்கள்) மரத்துப் போய் இருக்கும்.
பின்னூட்டத்திலும் பி.கு.: தற்போது ஜாக்கி போன்ற பெரிய பனியன் நிறுவனங்கள், இந்தப் பட்டையை தவிர்த்து, பனியனின் பின்புறத்திலேயே, தகவல்களை அச்சிட ஆரம்பித்து, முதுகு உராய்வை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆமாம், பிரபா சொன்னது போல் சரண்யா வந்தது எங்க வீட்டு டி.வில தெரிஞ்சுது. ஏன் உங்களுக்கு மட்டும் தெரியல?
பார்க்கத் தவறிய கதையைக் கேட்கிறீர்களா… தம் போட போனபோது கொடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் :D)
நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் – நடிகைகள்: படப்பிடிப்பு 2 நாள் ரத்து
பதிவெல்லாம் நல்லாதான் இருக்கு
முகமூடி தன் பதிவுல கன்னட நடிகையின் டபுள் லேயர் புடவைக்கட்டு பத்தி எழுதியிருக்காரே…நீங்க குடுத்த போட்டோ லின்க்குல அஞ்சாவது படத்துல இருக்குதே… அதுங்களாண்ணா…மண்டை காயுது…ரண்டு நாளா தூங்கலை…சீக்கிரம் சொல்லிருங்க :D–
புண்ணியமா போகட்டும்
சரவணகுமார்
நன்றி!
—கன்னட நடிகையின் டபுள் லேயர் புடவைக்கட்டு பத்தி —
😉
காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா
மாயனாராம்
குயவன் செய்த மட்பாண்டம்
ஓட்டடா
😛