கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட்: கண்டித்து பிருந்தாவனத்தில் கடையடைப்பு
பிருந்தாவனம், செப். 18: உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிவிக்கப்பட்டதைக் கண்டித்து அங்கு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கடை அடைப்பு நடந்தது.
பிருந்தாவனத்தில் உள்ள பங்கே பிகாரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
இந்தக் கோயிலில் வியாழக்கிழமை ஆனந்த மஹோத்சவ திருவிழா நடந்தது. அப்போது, இங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிவிக்கப்பட்டு, கையில் புல்லாங்குழலுக்குப் பதிலாக செல்போன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்செயலுக்கு கோயில் நிர்வாகிகளே காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டமும் கடையடைப்பும் நடத்தினர்.
கோயில் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடத்தின. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பிருந்தாவனத்திலுள்ள சந்தைப் பகுதி வெறிச்சோடியிருந்தது.
கோயிலின் புனிதத்தைக் கெடுத்ததாக இக்கோயிலின் நிர்வாகிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அனைத்து புகைப்படங்களுக்கும் ஃப்ளிக்கருக்கு நன்றி உரித்தாகுக. நிழற்படங்களின் மேல் மூசிக்குட்டியை சுட்டி, காப்புரிமை பெற்றவரையும் எடுக்கப்பட்ட இடங்களையும் அறிந்து கொள்க.
செய்ய மறந்த அலங்காரங்கள்:
- ராதாவுக்கு நீச்சலுடை
- ஆயர்பாடிக் கண்ணனுக்கு கொழுப்பு நீக்கிய I Can’t Believe It’s Not Butter

- கோவர்த்தன கிரிக்கு பதில் Louisiana Superdome
- வாயைத் திறந்தால் கூகிள் மேப்ஸ் தெரியும்.
- வாகனமாக மோட்டார் பைக்
- புல்லாங்குழலுக்கு பதில் ஐ-பாட்
- கொண்டையில் மயிலிறகு கிடையாது; புத்தகக்குறித் தொகுப்பின் USB வைத்திருப்பார்.
Krishna | Fashion | Cellphones | Jeans











விவேக் சொன்னது தான் ஞாபகம் வருது ” ஏன் மாரியாத்தாக்கு எப்பவும் கூழ் மட்டும் ஊத்தறீங்க? ஒரு செட் தோசை, மசால் வடை குடுக்கலாமில்ல?”
கண்ணனுக்குக் குழாய் மாட்டியதால் ஆத்திரப் பட்டார்களா! ம்ம்ம்…மக்களை என்னதான் சொல்வது. இறைவனுக்கு எந்த அலங்காரமும் செய்து கொள்ளலாம். தவறில்லை. நமது குழந்தையை எத்தனை வகையான உடைகளில் பார்த்து ரசிக்கிறோம். ஆகையால் இதெல்லாம் தவறில்லை. ஆனால் அதை நமது வீட்டிலோ தனியிடங்களிலோ செய்து கொள்ளலாம். அனைவருக்கும் பொதுவான திருக்கோயிலில் செய்வது தகும் என்று தோன்றவில்லை.
அருணா…
நான் காலையில் சாப்பிடும் சீரியலை சில சமயம் நைவேத்தியம் செய்வதுண்டு 🙂 அடுத்து, சிக்கன் நக்கட்ஸ் கொடுக்கலாமா என்று யோசனை.
ராகவன்…
உங்கள் சிந்தனையும் ஒத்துக் கொள்ளத் தோன்றுகிறது. புராதனக் கோவிலில் நவநாகரிக மாற்றங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் இந்து மதம் மேல் நம்பிக்கையையும் வளர்த்தது.
காலத்திற்கேற்ற வளர்ச்சி & கோலத்திற்கேற்ப வளைந்து கொடுத்தல்!