காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு அல்-காய்தாவுடன் தொடர்பு: பின் லேடன் சிடிக்கள் சிக்கின
ஜம்மு, ஆக. 13: காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் குர்சியா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மோதலின்போது லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு கத்தால் கொல்லப்பட்டார். அவர் வைத்திருந்த 10 சிடிக்கள் சிக்கின. அதில் ஒசாமா பின் லேடனின் பிரசாரங்கள் அடங்கிய 2 சிடிக்களும் அடங்கும் என்று ராணுவ அதிகாரிகள் ஜம்முவில் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதன் மூலம் காஷ்மீர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் அல்-காய்தாவுக்கும் இடையிலான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அல்-காய்தா பயங்கரவாதிகள் இல்லை. ஆனால், சிடிக்கள் மூலம் பின் லேடனை ஹீரோவாகச் சித்தரித்து, இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்கும் நோக்கில் சிடி தயாரிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் படைகளுக்குப் பயங்கரவாதிகளைத் தயார் செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிடிக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 சிடிக்கள் தவிர மற்ற 8 சிடிக்களில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் மறுபெயரில் உருவாகியுள்ள ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளன.
காஷ்மீரில் 1989 முதல் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது தொடர்பான சிடிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாகூர் அருகே முரித்கே என்ற இடத்தில் உள்ள தங்களது தலைமையகத்தில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இதுபோன்று 100 சிடிக்களைத் தயாரித்து, காஷ்மீருக்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிடிக்கள் தோடா, ரஜெüரி, பூஞ்ச் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறினர்.











Dinamani.com – Headlines Page
இந்திய ஜவான்களிடையே “எய்ட்ûஸ’ப் பரப்ப ஐ.எஸ்.ஐ. சதி!
சிலிகுரி, ஆக. 14: இந்திய ராணுவம், துணை நிலை ராணுவம் ஆகியவற்றில் பணிபுரியும் ஜவான்களிடையே எய்ட்ஸ் வியாதிக்கிருமியைப் பரப்பும் கொடுந் திட்டத்தை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. வகுத்துள்ளது என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
பாதுகாப்புப் படையில் இருக்கும் ஜவான்கள் விலை மாதர்களிடம் செல்வது வழக்கமான ஒன்று. அதற்காக பாதுகாக்கப்பட்ட வழிமுறைகளை அவர்கள் கடைப்பிடித்தாலும் அவர்களுக்குப் போடும் ஊசி மூலமும் வேறு வகையிலும், எய்ட்ஸ் வியாதிக்கிருமியைப் பரப்ப சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
இதனால் ஜவான்களின் உடல் வலிமை குறைவதுடன், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு ஆள் பலம் குறைந்து பெருத்த சிக்கல் ஏற்படும். அத்துடன் மருத்துவச் செலவும் பல மடங்கு அதிகரிக்கும். வேறு சமுதாய, உளவியல் பிரச்சினைகளும் ஏற்படும்.
நேபாள, மியான்மர் (பர்மா) எல்லைகளைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சசாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) என்ற படைப்பிரிவுக்கு இந்த ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதை அதன் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜி.எஸ். சர்ணா, சிலிகுரி நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மருத்துவமனைகளுக்கு வரும் ஊசிகளையும் ஊசி போடும் குழல்களையும் முறையாகப் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.