S Ve Sekar talks on ‘EVR Periyar Movie’ & Mylapore


Dinamani.com – TamilNadu Page

மனைவிக்கு நன்றி கூறி கன்னிப் பேச்சைத் தொடங்கினார் எஸ்.வி.சேகர்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசினார்.

பெரியார் படம்: சத்யராஜ் நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ரூ. 95 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதல்வர், கதை வசனகர்த்தாவாக இருந்து திரைப்படத்துறை பற்றித் தெரிந்தவர். அந்த படத்தை ரூ. 70 லட்சம் செலவில் தயாரிக்க முடியும். ரூ. 95 லட்சம் நிதி உதவி கொடுப்பதால் படத்தின் உரிமையை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தனி நபருக்கு நிதி உதவி செய்வது சரியல்ல. இதுபோன்று மூதறிஞர் ராஜாஜி, ஆலய பிரவேசம் செய்ய போராடிய வைத்தியநாத அய்யர் ஆகியோரது வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்படுமா? என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

மெட்ரோ ரயில் வேண்டாம்: சென்னையைப் பொறுத்தவரை மெட்ரோ ரயிலை விட மோனோ ரயில் திட்டம்தான் சிறந்தது என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அதைச் செயல்படுத்த வேண்டும்.

மாநகராட்சி கழிப்பிடங்களில் ரூ. 2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கும் நிலையில் ரூ. 8 தேவைப்படுகிறது. ரூ. 2-க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுவிட்டு கழிப்பிடம் செல்ல ரூ. 8 செலவு செய்ய வேண்டியதிருக்கும். எனவே, இலவச கழிப்பிடம் தேவை.

மயிலாப்பூர் தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் “போர்’ மூலம் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். மந்தைவெளியில் புதிதாக துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்து விளம்பரப் படுத்தவேண்டும் என்றார் எஸ்.வி. சேகர்.

10 responses to “S Ve Sekar talks on ‘EVR Periyar Movie’ & Mylapore

  1. // ரூ. 2-க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுவிட்டு கழிப்பிடம் செல்ல ரூ. 8 செலவு செய்ய வேண்டியதிருக்கும் //

    🙂 Good One..

  2. Unknown's avatar கால்கரி சிவா

    //மாநகராட்சி கழிப்பிடங்களில் ரூ. 2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கும் நிலையில் ரூ. 8 தேவைப்படுகிறது. ரூ. 2-க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுவிட்டு கழிப்பிடம் செல்ல ரூ. 8 செலவு செய்ய வேண்டியதிருக்கும். எனவே, இலவச கழிப்பிடம் தேவை.
    //

    நல்ல பாய்ண்டா இருக்கே. காமெடி ஆக்டர்ன்னு நினைச்சேன்.

  3. மனைவிக்கு நன்றி கூறி கன்னிப் பேச்சைத் தொடங்கினார் எஸ்.வி.சேகர்
    not JJ ?

  4. see how viduthali has twisted his comments.
    http://www.viduthalai.com

  5. buy rice from ration shop get free token for family to use the rest room 🙂

  6. பெரியார் திரைப்படத்திற்கு ரூ.95 லட்சம் அறிவித்த தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு தமிழர் தலைவர், `பெரியார்’ படக் குழுவினர் நேரில் நன்றி :: கோமாளி நடிகர் பேச்சுக்குத் தமிழர் தலைவர் பதிலடி!

    பெரியார் திரைப்படத்திற்கு ரூ.95 லட்சம் அறிவித்ததற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தலை மையில் திரைப்படத்தின் இயக் குநர் ஞான.ராஜசேகரன், நடிகர் `இனமுரசு’ சத்யராஜ், கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, வரியியல் அறிஞர் ச. இராசரத்தினம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். தமிழக சட்ட சபையில் `இனமுரசு’ நடிகர் சத்யராஜ் நடிக்கும் பெரியார் பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப் படத்திற்கு ரூ.95 லட்சம் வழங் கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.

    தமிழர் தலைவர் பதில்
    அப்பொழுது செய்தியாளர் களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறியதாவது:

    பெரியார் திரைப்படத்தை ஞான.ராஜசேகரன் இயக்குவிக்கிறார். அதற்கு தமிழக நிதி நிலை அறிக்கையில் அரசு ரூ.95 லட்சம் நிதி அறிவித்துள்ளது என்றார்.

    நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ., சட்டசபையில் பெரியார் திரைப்படத்திற்கு நிதி அளித்துள்ளீர்களே, ராஜாஜி, ஆலயப் பிரவேசம் செய்த வைத்தியநாத அய்யரைப்பற்றி படம் எடுத்தால் உதவி செய்வீர்களா? என்று கேட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

    அ.தி.மு.க., அல்ல அக்கிரகார தி.மு.க.,’
    அதற்குப் பதிலளித்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், “பூனைக்குட்டி வெளியே வந்தி ருக்கிறது. அ.தி.மு.க., அக்கிரகார தி.மு.க., என்பது தெளி வாகியுள்ளது. அதற்கு நன்றி’’ என்றார்.

    நடிகர் சத்யராஜ்
    தந்தை பெரியார் வேடம் ஏற்று நடிக்கும் `இனமுரசு’ சத்யராஜ் கூறியதாவது:

    பெரியார் படத்தில் நடிப்ப தற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே என் பழைய ஒளிப் படங்களை வாங்கி பார்த்து தான் தேர்ந்தெடுத்தனர். நான் 175 படங்களில் நடித்திருக் கிறேன். அந்தப் படங்களில் என் சொந்த வசனங்களை அதி கமாகப் பேசுவேன். ஆனால், பெரியார் படத்தில் பெரி யாரின் வசனத்தைத்தான் பேசு கிறேன். என் சொந்த வசனம் எதுவும் இல்லை. பெரியார் பேசியவற்றை டேப்பில் போட் டுப் பார்த்துதான் பேசுகிறேன். பெரியார் படத்தில் நான் பெரியார் வேடத்தில் ஒரு புது முக நடிகனாகத்தான் என்னை அறிமுகப்படுத்துகிறார்கள்.

    இயக்குநர் ஞானராஜசேகரன்
    கடந்த 10 ஆம் நாள் பெரியார் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. அடுத்த மாதம் 2 ஆம் நாளோடு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடையும். டிசம்பர் மாதத்திற்குள் படம் முழுமையாகத் தயாராகிவிடும். பொதுமக்களைச் சென்ற டையும் விதத்தில் படத்தை எடுத்திருக் கிறோம்.

  7. நாளைக்கே, அண்ணா படத்துக்கு பூஜை போட்டுவோம்.. கலைஞர் ஒரு 65, 70 இலட்சம் கொடுத்துடுவாரு…

    படமும் நம்ம சொந்த படமாயிடும்.. வர்ற வசூலும் நமக்குதான்..என்ன கருமம்டா இது…

    அரசு பணத்தை கலைஞர் எப்படி ஒரு தனி மனிதனுக்கு கொடுக்கலாம்.. 95 இலட்சம் கொடுத்தால், தமிழக அரசு தான் அப்படத்திம் உரிமையாளராக இருக்க வேண்டும்.

    படத்தின் வசூல் அனைத்தும் தமிழக அரசுக்கே சேர வேண்டும்…தனி மனிதன் பணம் சம்பாதிக்க அரசு ஏன் 95 இலட்சம் கொடுக்க வேண்டும்

  8. Unknown's avatar கோவி.கண்ணன்

    2 ரூவா அரிசியை 4 பேருதான் சாப்பிட்டால் தலைக்கு ரூவா 2 கட்டணமாக கொடுத்து கழிப்பிடம் செல்லவேண்டியிருக்கிறதா ? எஸ்வீசேகர் நல்ல கணக்கைத்தான் சொல்லியிருக்கிறார். :)))

  9. Unknown's avatar விடாதுகருப்பு

    நேத்து பெய்த மழையில் இன்னிக்கு முளைத்த காளான் எஸ்விசேகருக்கு பெரியாரைப்பற்றி என்ன தெரியும்?

  10. //////

    //மாநகராட்சி கழிப்பிடங்களில் ரூ. 2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கும் நிலையில் ரூ. 8 தேவைப்படுகிறது. ரூ. 2-க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுவிட்டு கழிப்பிடம் செல்ல ரூ. 8 செலவு செய்ய வேண்டியதிருக்கும். எனவே, இலவச கழிப்பிடம் தேவை.
    //

    நல்ல பாய்ண்டா இருக்கே. காமெடி ஆக்டர்ன்னு நினைச்சேன்.

    //////

    ம்…ம்…நல்ல பாயிண்ட் தான்.

சீனு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.