Alliance Victory == Alliance Ministry – Dinamani


கூட்டணி ஆட்சி கூடாதா?உதயை மு. வீரையன்

13-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிவிட்டது.

எப்படியாவது வெற்றியை அடைந்து விட வேண்டும்; வழிகளைப் பற்றிக் கவலையில்லை, வெற்றிக் கொண்டாட்டத்தின் பேரோசையில் எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் அடங்கிவிடும். குறுக்கு வழிகள் எல்லாம் இராஜதந்திரமாகி விடும்.

“”ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு; அது மெய்யாகி விடும்” என்ற கோயபல்சின் கூற்றே இன்றைய அரசியல்வாதிகளின் வேதவாக்கு; வாக்குறுதிகளே மக்கள் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. இதனால்தான் அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் கால வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா? எப்படியாவது ஏழைப் பாமர மக்களைக் கவர வேண்டும்; எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். ஆட்சியைப் பிடித்துவிட்டால் 5 ஆண்டுகள் அவகாசம் கிடைக்கிறது. அதிகாரமும் கிடைக்கிறது. யார் எதிர்த்துக் கேட்க முடியும்?

  • மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள்;
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு;
  • தமிழக நதிகளை இணைப்பது பற்றி ஆய்வு;
  • கிராமங்களில் கூட்டுப்பண்ணை;
  • பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புக் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்;
  • ரேஷனில் 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம்
    – இவை ஆளும் கட்சியின் வாக்குறுதி.

    எதிர்க்கட்சிகள் விட்டு விடுமா?

  • நிலமற்றவர்களுக்கு நிலம்,
  • ரூ. 2-க்கு ஒரு கிலோ தரமான அரிசி,
  • ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,
  • பெண்களுக்கு இலவசமாக சமையல் கேஸ் அடுப்பு,
  • விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

    – இவ்வாறு ஏராளமான அறிவிப்புகள்.

    “ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” என்பதை வைத்து இடதுசாரிகள் எழுப்பும் அரசியல் முழக்கம்.

    அரசியல் கட்சிகளின் அறிவிப்புகளில் இலவசங்களே பெரிதும் இடம்பெற்றுள்ளன. நிரந்தரமான நீண்டகாலத் திட்டங்கள் இடம்பெறவில்லை.

    “ஒருவருக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பதே மேல்” என்பது அயல்நாட்டுப் பழமொழி. தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் தலைவர்களுக்குத்தான் இது பொருந்துமே தவிர, அடுத்த தேர்தலைப் பற்றியே கவலைப்படும் அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாது.

    ……

    நாடு விடுதலையடைந்த பிறகு தேசிய கட்சிகளே கோலோச்சின. மாநிலக் கட்சிகள் முளைத்த பிறகு தேசிய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. அதுவரை தனித்துப் போட்டியிட்ட கட்சிகள் “கூட்டணி” காணத் தலைப்பட்டன. தற்போது கூட்டணியில்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை.

    எனவே கூட்டணி தவிர்க்க முடியாத தேவை. இந்நிலையில் கூட்டணி ஆட்சியும் காலத்தின் கட்டாயமாகி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயக்கமென்ன? கூட்டணியை விரும்பும் கட்சிகள் “கூட்டணி ஆட்சி” என்றால் முகம் சுளிப்பானேன்?

    இதுவரை தமிழகம் காணாதது கூட்டணி ஆட்சியே! அதையும் பார்த்து விட்டுப் போகட்டுமே! “கூட்டுயர்வே நாட்டுயர்வு’ என்று கூறுகிறோம். கூட்டணி ஆட்சி மட்டும் கூடாதா?

  • 2 responses to “Alliance Victory == Alliance Ministry – Dinamani

    1. //Alliance Victory == Alliance Ministry//

      Alliance Ministry???

      Well, the right word is “Coalition Government”. Alliance Ministry seems to be derived directly from Tamil and sounds…erm…not too good, to say the least.

    2. Thank you for the correction.

      மோசமான மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்காட்டு தேவைப்படும்போது பயன்படுத்துகிறேன் 🙂

    Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.