Thanga Vettai


சுடுசோறு – இதன் இலக்கணக் குறிப்பு என்ன?

. பெயரெச்சம்
. வினைத்தொகை
. வினையெச்சம்
. வினைச்சொல்

தங்கவேட்டையில் நேற்று பாடலாசிரியர்களும், பின்னணிப் பாடகர்களும் கலந்துகொண்ட ரம்யா நிகழ்ச்சி. முதன்முதலில் தமிழ் அகராதி வெளியிட்டவர், ஒப்பிலக்கணம் கொடுத்தவர் போன்ற எம்.ஏ.த்தனமான கேள்விகளுக்கு நான் எளிதாக விடையளித்து, என்னுடைய இலக்கிய புலத்தை மனைவிக்கு ஃபிலிம் காட்டிக் கொண்டிருக்கையில், என்னை சறுக்கிவிட மேற்காணும் கேள்வி உதவியது.

உங்களுக்காவது சரியான பதில் தெரியுமா?

நிகழ்ச்சியில் இருதயா இந்தக் கேள்விக்கு நொடி கூட யோசிக்காமல் சரியான விடையை சொன்னார். திருமுருகாற்றுப்படையை எழுதியவர் திருவிளையாடியது போல் அரங்கினுள், எவராவது முன்கூட்டியே சொல்லி வைத்திருப்பார்களோ என்று பொறாமைப்படவைக்கும் அளவு instantaneous வேக பதில் கொடுத்தார்.

  • போன பிறப்பில் கேபி சுந்தராம்பாளாக இருந்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறார் ‘மன்மத ராசா’ மாலதி.
  • பிஜிஎம் இல்லாமலே ஹரீஷ் ராகவேந்திராவின் குரல் திரையிசைக்கு ஒப்பாக மிளிர்கிறது.
  • ‘நான் எழுதினதிலே எனக்குப் பிடிக்காத பாடல் என்று எந்தப் பாடலுமே கிடையாது’ என்று அசல் கலைஞனுக்குரிய பெருமிதத்துடன் ‘கொக்கோ கோலா ப்ரௌவுன் கலருடா (போடாங்கோ)’ போன்ற பாடல்களை எழுத்தாணிய கலைக்குமார் பகிர்ந்தார்.
  • ஸ்ரீலேகா பார்த்தசாரதி ஏன் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை? குறைந்தபட்சம் ‘த்ரிஷா’ போன்ற அக்கா நடிகைகளுக்குத் தங்கச்சியாகவாவது வேடம் கட்டலாமே…
  • விஜய் யேசுதாஸ் ஏன் இன்னும் ஹீரோ ஆகவில்லை? (கு.ப. சிம்பு போன்ற தம்பி நடிகர்களுக்கு அண்ணன் ஆ.வே.க.?)
  • மேட்ச் ஃபிக்ஸிங் நடத்தினால், தமிழ்மணத்தில் போலி நட்சத்திர வாக்களித்தால், தப்பிக்கிற மாதிரி தப்பு செய்யவேண்டும். தங்கவேட்டையை சுவாரசியமாக்க, இந்த மாதிரி celebrity போட்டிகளில் இரு அணிகளுக்கும் சம அளவில் வென்று வருவதை இன்னும் கொஞ்சம் இலை மறை கனியாக நடத்தலாம்.
  • தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் தங்கங்கள் மட்டுமாவது நேரத்தோடு உரியவர்களை சென்றடையுமா?

    | |

  • 6 responses to “Thanga Vettai

    1. Unknown's avatar கோவி.கண்ணன்

      வினைத்தொகை:-
      இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும். எளியவழி: (1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும் (2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும் (3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்:-

      (எ-கா)
      “சுடுசோறு” –
      சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
      சுட்ட சோறு (இறந்தகாலம்)
      சுடும் சோறு (எதிர்காலம்)

      http://www.pudhucherry.com/pages/gram4.html

    2. Unknown's avatar துபாய்வாசி

      கண்ணனை நானும் வழிமொழிகிறேன்.

      நீங்களும் தங்க வேட்டையைப் பத்தி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டா, என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் என்னத்த பத்தி எழுதறது?

    3. Unknown's avatar துபாய்வாசி

      இன்னொரு உதாரணம் சொல்ல மறந்துவிட்டேன். சோறுக்கு வேறு என்ன ஜோடி? ஊறுகாய் தான்.

    4. விடையைத் தெரிந்து கொண்ட பிறகு நானும் சப்பைக்கட்டு கட்டி (விளக்கி) சமாளித்து விட்டேன். (நான் கொடுத்த விடை – வினையெச்சம்).

      நன்றி கோவிகண்ணன்.

      —நீங்களும் தங்க வேட்டையைப் பத்தி எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டா—

      சன் டீவி புத்தாண்டு நிகழ்ச்சிகள் பார்த்தீர்களா?

    5. Unknown's avatar துபாய்வாசி

      புத்தாண்டு நிகழ்ச்சியில் வித்தியாசமாகத் தோன்றியது, கவியரங்கம் மட்டும் தான். ஆனால், அதிலும் மிகப்பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. கலைஞர் புகழரங்கம் என கவிப்பேரரசுக்கு யாரோ தலைப்பை தவறாக கொடுத்துவிட்டார்களோ என்னவோ? முழுதாக பார்க்குமளவுக்கு பொறுமை இல்லையே?

      சன்னில் ஷோபனா, ஜெயாவிலும் ஷோபனா, அப்புறம் லைலா என எல்லாவற்றையும் காப்பியடித்த ஜெயா கவியரங்கம் மட்டும் காப்பியடிக்கவில்லை. ஏன் என உங்களுக்குத் தெரியுமா?

    6. நான் பார்த்தவற்றுள் தேறியது:
      1. கவியரங்கம்

      2. ஹரிஹரன் பேட்டி (கே) – மனுசன் எம்புட்டு பாட்டு பாடிட்டாரு… கொஞ்ச நாள் பொறு தலைவா எல்லாம் மொஹாக் தாடியோடு பாடினார். வெறுமனே பாட்டுப் படிக்காமல், இன்னும் கொஞ்சம் ‘பின்னணி’ சம்பவங்கள் எல்லாம் சொல்லியிருக்கலாம்.

      3. மஹாலஷ்மி அய்யர் (கே) – பம்மால் என்றுதான் உச்சரித்தார்; சென்னையில் பிறந்தாலும் தமிழில் பேசாதவர்களுக்கு, மும்பையில் வளர்ந்தாலும் நல்ல தமிழில் உரையாடினார்.

      4. வேட்டையாடு விளையாடு ஒலிக்கோப்புகள் வெளியீடு – நிறைய கத்தரித்து விட்டதால் சுஜாதாவின் முழுப்பேச்சு கேட்கமுடியவில்லை. விவேக், பார்த்திபன், பாரதிராஜா வித்தியாசமாக இருந்தது.
      ———
      மகா திராபைகள்:
      1. விக்ரம் – ரெண்டு வார்த்தை… சாரி; ரெண்டெழுத்து உச்சரித்தார்; கெக்கபிக்க சிரிப்பு… நாலு சீன்

      2. விஜய் – கொடுமை… சின்னப் பசங்கள வைத்த்ஹு :-(((
      ————
      லைலாவின் மும்பை ஊர்சுற்றல் எப்படியிருக்கும் என்று முன்பே அனுமாணித்திருந்ததால் பார்க்கவில்லை.

    Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.