Karunanidhi Interview in Anandha Vikadan


ஆனந்த விகடன்கலைஞரின் பேட்டி :

‘‘ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சிம்ரன் தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார். பாக்யராஜ் திடீரென தி.மு.க&வில் இணைகிறார். சினிமா கவர்ச்சி இல்லாமல் தமிழக அரசியல் இயங்க முடியாதா?’’

‘‘சிம்ரன் எங்கு பிறந்தார், வளர்ந்தார் என்பது பிரச்னை இல்லை. ஆனால், அவருக்குத் தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? அவர் வந்து திடீரென்று ஒரு கட்சிக்கு ஆதரவு திரட்டினால், அதற்குப் பெயர்தான் சினிமா கவர்ச்சி!

ஆனால், பாக்யராஜ் சினிமாக் காரர் மட்டுமல்ல. நல்ல சிந்தனை யாளர். பத்திரிகையாளர். அவரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல் கட்சிகளை நன்கு அறிந்தவர்.

சினிமாக்காரர்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருப்பது உண்மைதான். வழக் கறிஞர், மருத்துவர், பொறியாளர் என எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வரும்போது சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது. அதற்காக, பாக்யராஜும் சிம்ரனும் ஒன்றா என்ன?’’

‘‘வாய்ப்பு வழங்கப்பட்டவர்களிலும் தி.மு.க-வின் பழைய முகங்களே அதிகம் தெரிகிறார்கள். உதாரணமாக, சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் என ஒரே குடும்பத்தில் இருவருக்கும் சீட் வழங்கி இருக்கிறீர்களே?’’

‘‘தி.மு.க. போட்டியிடும் மொத்த இடங்களில் 88 இடங்களுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறோம். இதற்கு மேல் புதியவர்களை எப்படி வரவேற்பது? வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் அவருடைய மகன் ராஜாவுக்கும் சீட் வழங்கியிருப்பது விதிவிலக்கு. அவர்கள் அப்பா, மகன் என்பதால் அல்ல; வெற்றி வாய்ப்புள்ள கழக வேட்பாளர்கள் என்பதை மனதில்கொண்டே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.’’

முழுவதும் விகடன்.காமில் கிடைக்கிறது.

4 responses to “Karunanidhi Interview in Anandha Vikadan

  1. Unknown's avatar ஜெயக்குமார்

    கட்சி ஓட்டுப்பார்த்து, சாதி ஓட்டுப்பார்த்து, வெற்றிவாய்ப்பு பார்த்து தொகுதி தேர்ந்தெடுக்கும் கருணாநிதிக்கு இது எதுவுமே பார்க்காமல் மக்களை நம்பி நிற்கும் விஜயகாந்த் ஏவ்வளவோ மேல்.

  2. `சிம்ரனுக்கு என்ன தெரியும், தமிழ் நாட்டைப்பற்றி…?’

    அதுவல்ல பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகிற்கெல்லாம் சிம்ரனை நன்றாகத்தெரியும் என்ற ஒன்றும் போதும், அவர் இங்கு பிரச்சாரம் செய்வதற்கு.

  3. // கட்சி ஓட்டுப்பார்த்து, சாதி ஓட்டுப்பார்த்து, வெற்றிவாய்ப்பு பார்த்து தொகுதி தேர்ந்தெடுக்கும் //

    Jayalalitha Too!!

    Every Politician in India does this!!!

    This is what Politics all about in India!!

  4. ஆனால், பாக்யராஜ் சினிமாக் காரர் மட்டுமல்ல. நல்ல சிந்தனை யாளர். பத்திரிகையாளர். அவரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல் கட்சிகளை நன்கு அறிந்தவர்

    இந்த சிந்தனையாளரை முரசொலியில் விமர்சிக்கும் போது தெரியவில்லையா.

Sivabalan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.