அ.தி.மு.க. 167 – தி.மு.க 67: கருத்து கணிப்பு


தி.மு.க. கூட்டணிக்கு 67 தொகுதி; அ.தி.மு.க. கூட்டணிக்கு 167 இடம் கிடைக்கும்: புதிய கருத்து கணிப்பில் தகவல்

தமிழக தேர்தல் நிலவரம் குறித்து மார்க்கெட்டிங் அண்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் (எம்.டி.ஆர்.எ.) என்ற அமைப்பு கடந்த மாதம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அ.தி.மு.க.வுடன், ம.தி.மு.க. சேர்ந்த பிறகு இந்த சர்வே நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யாரை விரும்பு கிறீர்கள் என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வர் பதவிக்கு விரும்புவதாக தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 39 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் அ.தி.மு.க. கூட்ட ணிக்கு 162 இடங்கள் முதல் 167 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு 62 முதல் 67 இடங்கள் வரை கிடைக்கும் என்று சர்வே முடிவு தெரிவிக்கிறது. இதர கட்சிகளுக்கு 7 முதல் 9 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப் பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியை விட அ.தி.மு.க. கூட்டணிக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைப்பது சர்வே மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி. மு.க., விடுதலை சிறுத்தைகள், ஐ.என்.டி.ï.சி. ஆகியவை சேர்ந்து இருப்பதால், அந்த கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்து இருப்பதாக சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்ததால் கூடுதலாக 16 தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சதவீத கணக்கில் பார்க்கும் போது அ.தி.மு.க. கூட்டணிக்கு 44.9 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணிக்கு 42.1 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இருந்த போது அந்த கூட்டணிக்கு 43.7 சதவீத ஓட்டுக்கள் கிடைப்பதாக இருந்தது. ம.தி.மு.க. விலகியதால் தி.மு.க. பலம் குறைந்து அ.தி.மு.க. கூட்டணி பலம் உயர்ந்துள்ளது.

ம.தி.மு.க. வின் 4.65 சத வீத வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் அந்த கூட்டணி மேலும் அமோக வெற்றியை பெறும். வைகோவின் தீவிர பிரசாரம் காரணமாக அ.தி.மு.க. கூட்டணிக்கு கூடுதல் இடங் கள் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் கிராமங்களில் அந்த கூட்டணிக்கு 50 சதவீத வாய்ப்பு அதிகரித்துள்ளது. வாக்காளர்களிடம் 45 சதவீதம் பேர் கூட்டணியை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் தொடங்கி உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆதரவு ஓட்டுக்களாக மாற வாய்ப்பு இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.

மதுரை, சேலம், ஈரோடு, தர்மபுரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் விஜயகாந்துக்கு சுமார் 10 சதவீத வாக்காளர்கள் ஆதரவு உள்ளது. விஜயகாந்த் கட்சி வேட்பாளர்கள் பிரிக்கும் ஓட்டு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் பாதிக்கும் என்று ஆய்வு சொல்கிறது.

விஜயகாந்த் கட்சிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்று 60 சதவீத வாக்காளர்கள் கூறி உள்ளனர். இதன் அடிப்படையில் கணிக்கும்போது விஜயகாந்த் கட்சிக்கு தமிழகம் முழுவதும் 3 சதவீத ஓட்டே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

courtesy: Maalaimalar

13 responses to “அ.தி.மு.க. 167 – தி.மு.க 67: கருத்து கணிப்பு

  1. Does the agency which carried out have an official site or something ? Are the survey results published in any page ?

    (Really sorry if i looked foolish by sending this comment 😉 )

  2. Daily Thanthi, Malaimalar … are Amma’s newspaper and that too this survey agency already proved that it was wrong in so many time.

    But still we can take some points in it.

    Does this survey carried out after DMK’s election manifesto?

    Why because, DMK promises (????) to cater all section of people. (Will they keep their promise?. That’s million Dollar question.)

    To me it will be a very close call in election result.

  3. Unknown's avatar சம்மட்டி

    இது கருத்துக் கணிப்பு அல்ல, திட்டமிட்ட கருத்து திணிப்பு

  4. கருத்துக்கணிப்பு எந்த அடிப்படையில் செய்யப் பட்டது – அதன் முறைமை என்ன என்று தெரியவில்லை. இருந்த போதும் இரண்டு விசயங்களைக் கவனித்தேன்.

    ஐ.என்.டி.யு.சி யின் சேர்ப்பால், கூட்டணிக்கு பலம் சேர்ந்திருக்கிறது என்று இந்தக் கருத்துக் கணிப்பு சொல்கிறது. வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்தவன் நான். அங்குதான்
    காளனின் பிரிவு மோதுகிறது. அந்தப் பகுதியில்
    காளனுக்கு பேராயக் கட்சியின் பலம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அவருக்குத் துளியும் தொகுதியில் மரியாதை கிடையாது.
    தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். அவருக்கு என்று வாக்களிக்க அவரின் உதவியாளார்கள், சில சங்கப் பிரதிநிதிகள் வருவார்கள். அவ்வளவுதான். திண்டிவனம் இராமமூர்த்தி, இராசேந்தர் போன்றோர்க்கு 2 இடம் கொடுத்திருந்தாலும் அதிமுகவிற்கு இதை விட அதிக பலன் கிடைத்திருக்கும்.

    இரண்டாவது, மதிமுகவின் சேர்ப்பால், கிராமப்புறங்களில் அதிமுக அணிக்கு ஆதரவு கூடியுள்ளதாக கணிப்பு சொல்கிறது.
    இது நகைப்புக்குரிய விசயம். கிராமப் புறத்தை விட நகர்ப்புற ஆதரவு அதிகம் கொண்ட திமுகவில் இருந்து பிரிந்து போன சிறுபிரிவான மதிமுகவினால் கிராமப் புறத்தில் ஆதரவு என்பது நகைச்சுவை.

    ஆக, இந்த இரண்டு சங்கதிகளையும் எண்ணிப் பார்க்கையில் இது கோயபல்சு வகையைச் சார்ந்த “பெட்டி”ச் செய்தி அளவிலேயே கருத முடிகிறது. அல்லது முட்டாள் கூட்டத்தின் மேதாவிலாசத்தில் எழுந்த கணிப்பு!

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

  5. colur tv issue has a negativ impact
    dmk will make such false promises in frustration
    in a previous occassion kalaignar compared himself to a dog
    in 1984 he promised that if he were elected,he will safely handover
    power to mgr on his return from states.people dont relish such announcements from such a matured leader

  6. Unknown's avatar முகமூடி

    // இது கோயபல்சு வகையைச் சார்ந்த “பெட்டி”ச் செய்தி அளவிலேயே கருத முடிகிறது. அல்லது முட்டாள் கூட்டத்தின் மேதாவிலாசத்தில் எழுந்த கணிப்பு! //
    இது மட்டுமல்ல, இதற்கு முன்பு 2006-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்கணிப்பு-1: DMK-191:: ADMK-43 அப்படீன்னு ஒருநபர் கருத்து கணிப்பு ஒன்று வந்ததே, அதை படித்த போதும் இப்படித்தான் தோன்றியது… ஆனால் சுருக்கமாக அதே சமயம் நிறைவாக சொல்ல இயலவில்லை.. வாக்கியம் அமைத்து கொடுத்ததற்கு நன்றி !!!

  7. தனி வலைப்பதிவர் சொன்னால் கருத்து வெளிப்பாடு; ஊடகம் சொன்னால் கருத்துத் திணிப்பா…

    தேர்தல் முடிந்தபிறகு யார் கூட்டணி வைப்பார்கள் என்று போட்டியிடுபவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டால் நல்லாயிருக்கும்.

  8. முகமூடி என்ற வலைப்பதிவர் எனது
    கணிப்பைப் மாலைமலரோடு ஒப்பிட்டுக்
    கருத்துக் கூறியுள்ளார். விளக்க வேண்டியது
    என் கடமை.

    நயனம் என்ற வலைச்சுவடில், நான் எழுதியது
    கருத்துக் கணிப்பல்ல. என்னது Forecast
    என்று சொல்லக் கூடிய முன்கணிப்பு. முற்றிலும் கடந்த தேர்தல் தரவுகளைக் கொண்டு, செய்யப் பட்ட Trend analysis அடிப்படையிலானது. It is purely
    based on extrapolation of the past trend & data. NOT based on sample ballot or opinion poll that are referred as கருத்துக் கணிப்பு. இதை என் கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன்.

    What Kumudham and Maalaimalar claim are opinion polls. Kumudham had circulated ballot papers and conducted it. Maalaimalar also of the same type and it has not explained what method it has adapted.

    I dont defend my analysis – nor claim expertise of it! it is just an exercise of mine. My analysis may
    go 100% wrong too!

    விளக்க வாய்ப்பமைத்ததற்கு நன்றி.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

  9. வணக்கம் நண்பர்களே

    இந்தப்பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு மாலைமலர் நடத்தியதல்ல. மாலைமலரால் ஏற்பாடு செய்யப்பட்டதுமல்ல. மார்க்கெட்டிங் அண்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் (எம்.டி.ஆர்.எ.) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு. இதே செய்தி நேற்றைய தினமணியிலும் வெளி வந்திருக்கிறது. மாலைமலரும் அதை வெளியிட்டிருக்கிறது அவ்வளவே.

    எனவே கருத்துக்கணிப்பை நடத்தியவர்களுடைய முன்முடிவாக தீர்மானிக்குமுன் தமிழகப் பெண்களுடன் பேசிப்பாருங்கள். அவர்களில் பெரும்பான்மையோர் ஜெயலலிதாவின் தீவிரமான, ஆவேசமான ஆதரவாளர்களாக மாறிப்போயிருப்பதை நானே நேரில் உணர்ந்திருக்கிறேன். அதற்கு சுய உதவிக்குழுக்கள் ஒரு மிக முக்கிய காரணம். இத்தகைய திட்டமிட்ட ஒரு மூளைச்சலவையை கூட்டணி பலம் மற்றும் புதிய அதிரடி தேர்தல் அறிக்கை போன்றவற்றால் எந்த அளவுக்கு திமுகவால் எதிர்வரும் நாட்களில் மாற்ற முடிகிறது என்பதைப் பொறுத்தே தேர்தல் திமுகவிற்கு சாதகமாக மாறுமா என்று கூறமுடியும்.

    நாக இளங்கோவன் அளித்த பழைய புள்ளி விவர அடிப்படை சரியானதே என்றாலும் இன்றைய மக்களின் மனநிலை முற்றிலும் வேறுவிதமானது. அரசியல் சார்பற்ற பொதுமக்களும் பெண்களும் தான் தேர்தல் முடிவை உண்மையாக நிர்ணயிக்கக்கூடியவர்கள். இதில் பெண்கள் தரப்பு நிச்சயமாக ஜெயலலிதாவிற்கு சாதகமாகத்தான் இருக்கிறது.

    சிலவிவரங்கள் தேர்தல் தள்ளுபடி
    http://valai.blogspirit.com

  10. Unknown's avatar வெங்காயம்

    //மார்க்கெட்டிங் அண்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் (எம்.டி.ஆர்.எ.)//

    இப்படி ஒரு நிறுவனம் இருப்பது எவருக்கும் இதற்கு முன்பு தெரியுமா?

    //தி.மு.க. கூட்டணிக்கு 42.1 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இருந்த போது அந்த கூட்டணிக்கு 43.7 சதவீத ஓட்டுக்கள் கிடைப்பதாக இருந்தது. ம.தி.மு.க. விலகியதால் தி.மு.க. பலம் குறைந்து அ.தி.மு.க. கூட்டணி பலம் உயர்ந்துள்ளது.//

    வை.கோ.வின் தாவலுக்கு முன் தி.மு.க. கூட்டணிக்கு 43.7 வாக்குகள் கிடைப்பதாக இருந்ததாம். அவரின் தாவலுக்குப் பின் 1.6 சதவீத வாக்குகள் மட்டுமே குறைந்து 42.1 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். 2001ல் 4.65 சதவீதம் பெற்றவரின் நிலை இப்போது 1.6 சதவீதம்தான் போலும். இந்த கணிப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் வை.கோ. பலவீனமடைந்து வருவதையே இது உணர்த்துகிறது. அல்லது அவரின் பெரும்பாலான தொண்டர்கள் (நாஞ்சில் மற்றும் எல்.ஜி.யை தவிர்த்து) செயலலிதாவுடன் உறவு கொள்வதை விரும்பவில்லை என்பதையே உணர்த்துகிறது.

    Boston Bala said…
    //தனி வலைப்பதிவர் சொன்னால் கருத்து வெளிப்பாடு; ஊடகம் சொன்னால் கருத்துத் திணிப்பா…//

    தனி வலைப்பதிவரின் வீச்சுக்கும் ஊடகத்தின் வீச்சுக்கும் வித்தியாசம் புரியாமல்தான் இருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனுமா?

  11. //கிராமப் புறத்தை விட நகர்ப்புற ஆதரவு அதிகம் கொண்ட திமுகவில் இருந்து பிரிந்து போன சிறுபிரிவான மதிமுகவினால் கிராமப் புறத்தில் ஆதரவு என்பது நகைச்சுவை.//

    இது நகைச்சுவையல்ல சிந்திக்க வேண்டிய விஷயம்.

    “தன்னைக் கைது செய்து கொடுமைப் படுத்திய ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டணி சேர வேண்டுமானால் கருணாநிதி அவரை என்ன பாடு படுத்தியிருக்க வேண்டும்?” இது ஒரு கிராமத்துப் பாட்டி கேட்ட கேள்வி.

  12. Unknown's avatar லக்கிலுக்

    //இது மட்டுமல்ல, இதற்கு முன்பு 2006-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்கணிப்பு-1: DMK-191:: ADMK-43 அப்படீன்னு ஒருநபர் கருத்து கணிப்பு ஒன்று வந்ததே, அதை படித்த போதும் இப்படித்தான் தோன்றியது… ஆனால் சுருக்கமாக அதே சமயம் நிறைவாக சொல்ல இயலவில்லை.. வாக்கியம் அமைத்து கொடுத்ததற்கு நன்றி !!!//

    முகமூடி கையில் ரெட்டை எலை பச்சை குத்திக்கொண்டு இருக்கிறீர்கள் தானே?

  13. Unknown's avatar Partha (பார்த்தா)

    வெங்காயம் said…
    //மார்க்கெட்டிங் அண்ட் டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் (எம்.டி.ஆர்.எ.)//

    இப்படி ஒரு நிறுவனம் இருப்பது எவருக்கும் இதற்கு முன்பு தெரியுமா?

    Why don’t you do a google on MDRA and check out the results before leaving your comments. That will stop you from showcasing your ignorance!

வலைஞன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.